Saturday, May 8, 2010
கீரைப் பொரியல்
கீரைப் பொரியலுக்கு ஒரு போஸ்டிங்கான்னு பார்க்காதீங்க..:) ஒரு முன்கதையோட சொல்லப்போறேன்.
இந்த வாரம் கடைக்கு போயிருந்தப்போ இந்தக் கீரையைப் பார்த்தேன்.முருங்கை கீரை மாதிரியே இருந்தது.ஊர்ல இருந்து வந்த இந்த ரெண்டரை வருஷமா முருங்கைக் கீரைய கண்ணால கூட பார்க்கலை! கொஞ்சநாள் முந்தி பார்த்தப்ப எல்லாம் (அதாவதுங்க, நாங்க ரெண்டு வருஷம் முன்பு சில காலம் இருந்த இடத்துக்கே இப்ப மீண்டும் வந்திருக்கோம். :) ) இதை வாங்கலாமா,வேணாமான்னு டைலமா-லயே வாங்காம வந்திடுவேன்..இந்த முறை சுரிதார் போட்ட ஒரு அக்கா ( நாங்க இருந்தது இண்டியன் ஸ்டோர் இல்லை) இதை எடுத்துட்டு போனாங்க.அப்பவே வாங்கிடலாம்னு ஒரு தைரியம் வந்துடுச்சு.
"அங்கேயே நின்னு என்ன ஆராய்ச்சி பண்ணறே?"-ன்னு கேட்டுட்டே வந்த இவரிடம் கீரையைக் காட்டினேன்.இவருக்கும் தெரில...முருங்கை கீரை நல்லா வாசனையா இருக்குமேன்னு,இலைய எடுத்து முகர்ந்து பார்த்தால் ஒரு வாசமும் இல்லை. நாங்க இந்த ஆராய்ச்சி பண்ணும்போது, கூட வந்த நண்பர்கள் பில் போட்டுட்டு எங்களுக்காக வெயிட்டிங்! சரி, எப்படின்னாலும் சாப்பிடறமாதிரி:) இலையாத்தானே இருக்கும்னு தைரியமா வாங்கிட்டு வந்தாச்சு.
முருங்கைக் கீரை மாதிரியே இலைகளை மட்டும் எடுத்து செய்தேன்...சுவை அருமையா இருந்தது..அகத்திக் கீரை & முருங்கை கீரை ரெண்டோட டேஸ்ட்டும்தெரிஞ்சது. டேஸ்ட் சூப்பரா இருந்ததால சப்பாத்திக்கே வைச்சு சாப்ட்டுட்டோம்.
முருங்கை வாசம் இல்லாததால் இது 'முருங்கை'கீரை பொரியல் இல்ல..'ஏதோ ஒரு'கீரை பொரியல்-னுதான் பேர் வைச்சிருக்கேன். :)
தேவையான பொருட்கள்
கீரை -1 கட்டு
வெங்காயம் - பாதி
காய்ந்த மிளகாய் -4அல்லது காரத்துக்கேற்ப
தேங்காய்த் துருவல்-1 1/2ஸ்பூன்
கடுகு-1/2ஸ்பூன்
கடலைப்பருப்பு,உளுந்துப் பருப்பு-தலா 1/2ஸ்பூன்
உப்பு-சுவைக்கேற்ப
சர்க்கரை - ஒரு சிட்டிகை
செய்முறை
கீரையை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயத்தை நறுக்கிகொள்ளவும்.மிளகாயை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காய வைத்து கடுகு,க.பருப்பு,உ.பருப்பு தாளித்து, வெங்காயம்,மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் கீரையைச் சேர்க்கவும்.
ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து கிளறிவிட்டு, தண்ணீர் தெளித்து வேக விடவும்.
கீரை வெந்ததும் தேவையான உப்பு சேர்த்து கலக்கி தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும்.
இது சப்பாத்திக்கும் நன்றாக மேட்ச் ஆகும்..சாதத்துடனும் சாப்பிடலாம்.
குறிப்பு
சர்க்கரை சேர்ப்பதால் கீரையின் பசுமை மாறாம இருக்கும்னு ஒரு புத்தகத்தில படித்திருக்கேன்.கீரை வகைகள்னு இல்லை, பச்சை நிறத்தில இருக்கற காய்கறிகள் எல்லாத்துக்கும் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து சமைத்தால் நிறம் மாறாமல் இருக்குமாம்.
நான் வாங்கிய கீரையில் Malunggay -என்று எழுதிருந்தாங்க..அதுவும் இமா சொன்னமாதிரி முருங்கை குடும்பம்தான்..பிலிப்பைன்ஸ்ல இந்தப் பெயர்.(நான் வாங்கியது சைனீஸ் மார்க்கட்ல..:)) இமா,உங்கள் தகவலுக்கு நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)
nalla irukku.saththaana poriyal.
ReplyDeleteWhat is in a name, keerai supera irukku. Enjoyed ur write-up:):)
ReplyDeleteஇது முருங்கைதான். ;) முருங்கையில் வாசனை இல்லாத கீரை இனமும் உண்டு.
ReplyDeleteஇது அமெரிக்காவில் காட்டு மரமாகப் பெரிதாக வளரும் என்று முன்பு ஒரு புத்தகத்தில் படித்து இருக்கிறேன். Ben oil - watch makers யூஸ் பண்ணுவாங்க, வேறு மெடிசினல் யூசஸ் கூட இருக்கு. horseradish tree என்று ஆங்கிலத்தில் சொல்லுவாங்க. கூகிள் பண்ணிப் பாருங்க.
இங்கு இது கிடைப்பதில்லை. ;(
ReplyDeleteஇதற்கு ஆங்கிலத்தில் என்ன பெயர் போட்டிருந்தாங்க மஹி? நானும் எங்கியானும் தேடிப் பார்க்கிறன்..
ReplyDeleteரீச்சர்.. நீங்க எந்தப் பாடத்துக்கு ரீச்சர்? இப்படி எல்லா பாடத்துலையும் புட்டுப்புட்டு வைக்கறீங்க தகவல்களை?? ஓக்கை முறைக்காதையுங்கோ.. :))
looks like moringa leaves...anyway... nice click for a delicious poriyal. Idly ready. sappida varalam mahi
ReplyDeleteமொத்தத்தில் ஒரு டிப்ஸோடு கீரை பொரியல் அருமையாக இருக்கு,அமரிக்க முருங்கைன்னு பேரு வச்சிட்டாப்போச்சு.
ReplyDeleteமுருங்கை கீரை மாதிரிதான் இருக்கு மகி,நல்லாயிருக்கு.சர்க்கரை சேர்த்து சமைப்பது பத்தி சொன்ன டிப்ஸ்க்கு நன்றி!!
ReplyDeleteஆஜர்
ReplyDeletelooking yummy, Mahi. I will look for this green next time.
ReplyDeletehi,mahi nanum try panna porean. nice recipe.
ReplyDeleteநன்றி அம்மு
ReplyDelete~~
நன்றி சிட்சாட்
~~
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி இமா..உங்களால இது என்ன கீரைன்னு தெளிவா தெரிஞ்சுகிட்டேன்! :)
~~
சந்தனா,நன்றி! ஆங்கிலப் பேரை சேர்த்திட்டேன்.
~~
நன்றி வேணி..சீக்கிரமா வந்துடறேன். :)
~~
நன்றி ஆசியாக்கா..உங்க வீட்டு முருங்கை மரம் மறுபடி வளருதா?
~~
நன்றி மேனகா! இது முருங்கைக் கீரைதான்னு சந்தேகமில்லாம தெரிஞ்சுடுச்சு.
~~
நன்றி கவுண்டரே
~~
வானதி,நன்றி! கட்டாயம் வாங்கி செய்து பாருங்க.
~~
பிரியா,நன்றி..செய்து பாருங்க.
மகிமா
ReplyDeleteசூப்பரா சமைக்க்றேல்
நேக்கும் பிடித்து இருக்கு
உங்கட சமையல் குறிப்பு பார்த்து தினம் தினம்
எங்கட ரூம் நண்பர்களை வைத்து
டெஸ்ட் பண்ணிவருகிறேன்.
எல்லாரும் ஆகா ஓஹோ பாராட்ரங்க
எல்லா புகழும் மகிபோய் சேரும்.
நன்றி
வாழ்க வளமுடன்
வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா
முருங்க்கீரை போல் தான் இருக்கு.
ReplyDeleteரூம் மேட்ஸ் எல்லாரும் பாராட்டறாங்களா? ரொம்ப சந்தோசம் சூர்யா..ரெசிப்பி நான் கொடுத்திருந்தாலும்,உங்க கைப்பக்குவம்னு ஒண்ணு இருக்கில்ல? எல்லாப் பாராட்டும் உங்களுக்கே!
ReplyDeleteஎன்னை "மகிமா"ன்னு கூப்பிடற ஒரே ஆள் எங்கண்ணா..அவரை ஞாபகப் படுத்திட்டீங்க! :)
வருகைக்கு,கருத்துக்கும் நன்றிங்க சூர்யா!
~~
ஆமாம் ஜலீலாக்கா..முருங்கை கீரைதான். நன்றி!