Wednesday, July 3, 2013

குடலை இட்லி

தேவையான பொருட்கள் 
இட்லி அரிசி/புழுங்கல் அரிசி -1கப்
பாசிப்பருப்பு -1/4கப்[தோலில்லாத உடைத்த மஞ்சள் நிற பச்சைப் பயறு]
உருட்டு உளுந்து-1/4கப்
உப்பு
நெய்-1/2டேபிள்ஸ்பூன்
மிளகு-7
சீரகம்-1டீஸ்பூன்
பச்சைமிளகாய்-1
இஞ்சி-சிறுதுண்டு
கறிவேப்பிலை 
பெருங்காயத்தூள்-1/8டீஸ்பூன்

குறிப்பு: இது திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள் வலைப்பூவில் பார்த்து செய்தது. ரெசிப்பியில் ஒரு கப் அரிசி, ஒரு கப் பாசிப் பருப்பு, ஒரு கப் உளுந்து என்ற அளவில் கொடுத்திருந்தார். நான் பருப்பு அளவுகளை குறைத்து செய்தேன், இட்லி நன்றாகவே இருந்தது. 

செய்முறை
அரிசி-உளுந்து-பாசிப்பருப்பை நன்றாக களைந்து, அரிசி-உளுந்தை ஒன்றாகவும், பாசிப்பருப்பைத் தனியாகவும் ஆறு மணி நேரங்கள் ஊறவைக்கவும்.

அரிசி உளுந்தை கிரைண்டரில் அரைக்கவும். முக்கால் பாகம் அரைபட்டதும் பாசிப்பருப்பையும் சேர்த்து  அரைத்தெடுக்கவும். தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்து புளிக்க வைக்கவும்.
பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கவும். 
மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும். 
நெய் காயவைத்து இவற்றை எல்லாம் வறுத்து (தேவையான அளவு மாவைத் தனியாக எடுத்து) மாவில் கலந்துகொள்ளவும். 
இட்லிப் பாத்திரத்தில்  இட்லிகளை ஊற்றி வைத்து..
வேகவைத்தெடுக்கவும்.
சுவையான குடலை இட்லிகள் தயார். விருப்பமான சட்னி / சாம்பாருடன் ருசிக்கலாம். 
மீதமான ஒரு கரண்டி மாவை தாளிப்புக் கரண்டியில் தோசையாக செய்தேன், மொறு மொறு என்று சூப்பராக இருந்துச்சு! :) 

19 comments:

 1. மொறு மொறு தோசை என்றால் அதையும் செய்து விட வேண்டியது தான்...

  நன்றி...

  ReplyDelete
 2. my google transliterator is not working .hence, iam writing in english. Your idlis look very yummy. Ithink I should try this. i have not added greengram dal so far. let me try this and I shall get back to you ,iF i have any doubts.
  Thanks mahi for your mouth watering post.

  ReplyDelete
 3. மிருதுவான இட்லி. அதுவும் துணி போட்டு செய்யுரதுன்னா இன்னும் சூப்பர்தான் மகி.. அந்த தோசை மொறுமொறுப்பா நல்லா இருக்கே.. இந்த டூ இன் ஒன் ஞாபகமா செய்து பார்க்கணும்.. // [தோலில்லாத உடைத்த மஞ்சள் நிற பச்சைப் பயறு]// மகி...தோலை எடுத்துட்டா அது பருப்பு. தோலோட இருந்தா அது பயறு..:)

  ReplyDelete
 4. குடலை இட்லி நன்றாக இருக்கு.செய்துபார்க்கிறேன் மகி. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 5. நானும் புக்மார்க் செய்து வைத்திருக்கேன்,இட்லி நல்லா புஸ்புஸ்னு இருக்கு மகி!!

  ReplyDelete
 6. நானும் புக்மார்க்ட்.
  மனோ அக்கா போஸ்ட்டில் பார்த்திருக்கிறேன். ஆனாலும் இப்போ கட்டாயம் ட்ரை பண்ணத் தோன்றுகிறது.

  ReplyDelete
 7. இட்லில இப்ப்டீல்லாம் இருக்கா? அதில தோசை வேறே... அட, சொல்லவே இல்லியே யாரும்? பண்ணிப் பார்த்துட வேண்டியதுதான்!

  ReplyDelete
 8. ம். பார்கவே வழமைபோல் கண்ணைப் பிடுங்குகிறது மகி!
  வயிறும் ஓவென அலறுகிறது. இப்படியெல்லாம் செய்து சாப்பிட்டு எத்தனை நாட்களாகி ச்சே சே... மாதங்களாகிவிட்டது.

  செய்து பார்த்திடத்தான் வேண்டும். அருமை.
  பகிர்விற்கு நன்றி மகி!

  ReplyDelete
 9. குடலை இட்லி புஸுபுஸுன்னு சூப்பரா இருக்கு. கடைசியில் மெத்துன்னு ஒரு தோசை இன்னும் சூப்பரா இருக்கு.பகிர்வுக்கு நன்றி மகி.

  எல்லோருடைய இட்லியிலும் சேர்க்கும் உளுந்துதான் எனக்கு பிரச்சினையா இருக்கு.

  அப்போல்லாம் ஃப்ரிட்ஜ் இல்லாத சமயங்களில் இட்லி மாவு மீதமாச்சுன்னா புளிப்பு தெரியாம இருக்க அதில் இப்படித்தான் தாளித்துக்கொட்டி எங்கம்மா இட்லி & தோசை செய்வாங்க.எதுவுமே தொட்டுக்காம அப்படியே சாப்பிடலாம்.சமயங்களில் எனக்கு மட்டும் இதை செய்வேன்.

  ReplyDelete
 10. New kind of idli, bookmarked it..

  ReplyDelete
 11. @ராதாராணி, //[தோலில்லாத உடைத்த மஞ்சள் நிற பச்சைப் பயறு]// மகி...தோலை எடுத்துட்டா அது பருப்பு. தோலோட இருந்தா அது பயறு..:)// :))) விளக்கத்துக்கு நன்றிங்க! :)

  சரியாப் பாருங்க, நான் பாசிப்பருப்புன்னுதான் முதல்ல டைப் பண்ணியிருக்கேன், ஆனால் அதுக்கு பச்சைப்பருப்பு, சிறுபருப்பு, க்ரீன் க்ராம், மூங் தால் இப்படி பலபெயர்கள் இருப்பதால் மனோ மேடம் ப்ளாகில் பார்த்தப்ப எனக்கு கொஞ்சம் குழப்பமாகிருச்சு. அதன் பிரதிபலிப்புதான் அந்த //[தோலில்லாத உடைத்த மஞ்சள் நிற பச்சைப் பயறு]// என்ற விளக்கம் !! ஹிஹ்...ஹிஹி! :)))

  கருத்துக்கு நன்றீங்க, கட்டாயம் செய்து பாருங்க. நன்றி!

  ReplyDelete
 12. குடலை இட்லி கேள்விப்பட்டதே இல்லை.பகிர்வுக்கு நன்றி மகி

  ReplyDelete
 13. தனபாலன் சார், இப்படி தாளிப்பு கரண்டியில் தோசை செய்து சாப்பிட்டுப் பாருங்க, ரொம்ப அருமையா இருக்கும்! :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
  ~~
  //my google transliterator is not working .hence, iam writing in english.// பரவாயில்ல ராஜி மேடம்! நோ ப்ராப்ளம்! இங்கிலீஷ் is better than தங்கிலீஷ்! :) இட்லி செய்து பாருங்க, வழக்கமா செய்யறதுக்கு இது கொஞ்சம் வித்யாசமா நல்லா இருக்கும். சந்தேகம்னா சொல்லுங்க, முடிந்த அளவு ஹெல்ப் பண்ணிடறேன்!
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  ~~
  அம்முலு, செய்து பாருங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  ~~
  மேனகா, நன்றி! :)
  ~~

  இமா, நன்றி! :)
  ~~
  ஜனா சார், ரெசிப்பி புதுசா இருக்கவும்தான் நானும் உடனே செய்து பார்த்தேன். உங்களுக்கும் உதவினால் சந்தோஷம்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!
  ~~
  இளமதி, வயிறு "ஓ" போடுதுன்னா கட்டாயம் செய்து சாப்பிட்டிரணும். இந்த வீகெண்ட் செய்துருங்க. :)
  மீரா எப்படி இருக்காங்க? பலநாளாச்சு..வளர்ந்துட்டாளா? :)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
  ~~
  வானதி, செய்து பாருங்க. விடுமுறை எல்லாம் எப்படி போகுது? ப்ளாக் அப்டேட் பண்ண டைம் கிடைக்கலையா?! :)
  நன்றி வானதி!
  ~~
  //எல்லோருடைய இட்லியிலும் சேர்க்கும் உளுந்துதான் எனக்கு பிரச்சினையா இருக்கு. // சித்ராக்கா என்ன சொல்றீங்க? புரிலை!!
  //இட்லி மாவு மீதமாச்சுன்னா புளிப்பு தெரியாம இருக்க அதில் இப்படித்தான் தாளித்துக்கொட்டி எங்கம்மா இட்லி & தோசை செய்வாங்க.// சேம் பின்ச்! எங்க வீட்டிலும் செய்வாங்க. அப்படியே சாப்பிடுவோம்! :)
  இந்த ரெசிப்பியை டிரை பண்ணிப் பாருங்க. நல்லா இருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  ~~
  ஹேமா, செய்து பாருங்க. நன்றி!
  ~~
  ஸாதிகாக்கா, பேரே அட்ராக்டிவ்-ஆ இருக்கில்ல? :) செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி!
  ~~

  ReplyDelete
 14. செய்முறை சுலபமாக இருக்கிறது, மகி. நானும் நிச்சயம் செய்து பார்க்கிறேன்.
  சில கேள்விகள்:
  மாவு நைசாக அரைக்கணுமா?
  குளிர் பெட்டியில் இரண்டு நாட்கள் வைக்கலாமா? இல்லை ஒருமுறை இட்லி செய்துவிட்டால் தோசைதானா?

  ReplyDelete
 15. kudalai idli name pudhusaa irukkunga.. peyarkaaranam sollamudiyuma ? idli superaa irukkunga. Seythu parkanum.thanks.

  ReplyDelete
 16. @ரஞ்சனி மேடம்,
  //மாவு நைசாக அரைக்கணுமா?// அரிசி-உளுந்தை நல்லா நைஸாக அரைச்சுட்டு பாசிப்பருப்பை சேர்த்து கொறகொறன்னு அரைச்சால் நல்லா இருக்கும்.
  //குளிர் பெட்டியில் இரண்டு நாட்கள் வைக்கலாமா?// தாராளமா வைக்கலாம்!
  //ஒருமுறை இட்லி செய்துவிட்டால் தோசைதானா?// இது எனக்கு ஒரு க்ரிட்டிகல் கேள்வி! ;) மாவு பொங்கிய அன்றுதான் இட்லி செய்தேன், சூப்பரா வந்து. பிறகு ஃப்ரிட்ஜில் வைத்தேன், அடுத்த முறை இட்லி செய்யலாம் என செய்தேன், என்னவர் "இட்லி கொஞ்சம் ஹார்டாக தெரியுதே!" என்றார்! ;)))) அதனால் ஃப்ரிட்ஜில் வைச்சதும் தோசையாக வார்ப்பது பெஸ்ட் என நினைக்கிறேன்.
  செய்து பார்த்துட்டு சொல்லுங்க! நன்றி!
  ~~
  //kudalai idli name pudhusaa irukkunga.peyarkaaranam sollamudiyuma ? // பெயர்க்காரணம் தெரியலைங்க கொயினி! பொதுவா குடலை என்பது மந்தாரை இலைகளில் செய்யப்படும் தொன்னை என நினைக்கிறேன். இந்த இட்லிக்கும் தொன்னை/குடலைக்கும் ஒரு தொடர்பும் இல்லை, ஆனா ஏன் இந்தப் பெயர் எனவும் எனக்குத் தெரியவில்லை! இட்லி செய்து பாருங்க. நன்றி!
  ~~

  ReplyDelete
 17. 4 கப் (குவிச்சு) அரிசிக்கு 1/4 கப் உளுந்துதான் போடுறேன்.இதுக்கே இட்லி ஸ்பான்ஞ் மாதிரி அவ்ளோ சாஃப்டா இருக்கும்.நீங்க‌ எல்லோரும் இவ்ளோ அதிகமா சேர்க்கறீங்களே,அதனால சொன்னேன்.ஒரு தடவ எங்க அளவுப்படி செஞ்சு பாருங்க மகி.நல்லா வந்தால் தொடரலாமே!

  ReplyDelete
 18. இட்லி சூப்பர்,செய்முறை விளக்கம் அருமை.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails