Friday, September 6, 2013

வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே...

வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே...
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே!..
ஒரு வெள்ளிக்கிழமை மாலை..
வானக் காதலன் மேகப்படுதாவை இறக்கி, 
பூமிப் பெண்ணைத் தீண்ட எத்தனித்த தருணம்! 
பூமிப் பெண்ணின் வெட்கச் சிவப்பு..
சூரியக்குழந்தையால் கடத்தப்பட்டு
வானில் கலந்ததோ?
~~~
செப்டம்பர் முதல் வாரத்தின்
இளங்காலை நேரத்தின் இதமான தென்றலைத்
தன் சூடான முகத்திலின்றும்
 பளிச்சென்று அடிக்கும் கோப கனலலைகளால்
சூடாக்கும் பகலவன்!
~~~
 நாள் முழுக்க பூமியை வறுத்தெடுத்த 
வெப்பத்தின் 
மொத்தச் சூட்டையும் 
தன்னுள் அமிழ்த்தி..
அக்கினிக் குஞ்சாய்
ஆரஞ்சுப் பழமாய் 
தகதகவென தண்ணீரில் 
அமிழும்  ஆகஸ்ட் மாதத்தின் ஆதவன்! 
:)
~~~
பதிவின் தலைப்பிற்கு உதவிய பாடல்..
வைரமுத்துவின் வரிகள், பரத்வாஜின் இசை, ஹரிஹரன் - சித்ரா இவர்களின் இனிய குரலில்!

முழுப்பதிவையும் சூரியனே குத்தகைக்கு எடுத்துக் கொண்டால் நிலாப்பெண்ணுக்குக் கோபம் வருமே! ;) 
ஆகஸ்ட்டின் முழுநிலவு..மேகங்களுடன் இயைந்து நடைபழகிய அழகைக் கேமராவில் சிறை பிடிக்க முயன்று..
மேகங்களற்ற முழு மதியை வெற்றிகரமாகச் சிறை பிடித்தோம். :) 
~~~
வெகு நேரம் வானில் பறந்துவிட்டோம், அப்படியே இறங்கி மண்ணுக்கு வாங்க! :) 
சோறு-பச்சைப் பயறு-முள்ளங்கி பொரியல்-பீன்ஸ் பொரியல்
பொதுவா தட்டில் இருக்க சாப்பாடு கலர் கலரா இருந்தா நல்லதுனு சொல்லுவாங்க. அதனால் முடிந்தவரை சிவப்பு, பச்சை, ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளைன்னு பலவண்ணங்கள் உள்ள காய்களை சமைத்து உண்ணுங்கள்! :) 
அனைவருக்கும் இனிய வார இறுதி! 
~~~
காய்கறி கடையில் காய்களுடன் கிடைக்கும் கறிவேப்பிலை போல, பதிவின் கொசுறு..காதல் மன்னன் படத்திலிருந்து இன்னுமிரு பாடல்கள்! 

பாடல் காட்சிகளை விடவும், இசையிலும் கவிதை வரிகளிலும் கவனம் செலுத்தி ரசிப்பது என் பழக்கம்! நேரமிருப்போர் 
"ஏன் பிறந்தேன் என்று நானிருந்தேன், உன்னைப் பார்த்தவுடன் உண்மை தானறிந்தேன்!
என் உயிரில் நீ பாதியென்று உன் கண்மணியில் நான் கண்டுகொண்டேன்.."
"மரபு வேலிக்குள் நீ இருக்க, மறக்க நினைக்கிறேன், முடியவில்லை!
இமயமலையென்று தெரிந்த பின்னும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை.."
என எஸ்.பி.பி.-யின் குரல் உருகுவதைக் கேட்கலாம், ரசிக்கலாம்! 
---------
"பத்துப் பேர்கள் மத்தியில் பளிச்சென்று உள்ளவன்..
அழுக்குச் சட்டை போட்டாலும் அழகாய்த் தோன்றும் ஆணழகன்"
;) :)
-----
இப்படி பாடலில் வரும் வரிகளை ரசிக்கலாம், கேட்கலாம், ! :)

18 comments:

  1. Romba azhagana pathivu akka... pakka romba kuzhumaiya iruku... kalakunga...

    ReplyDelete
  2. ஆகஸ்ட் மாதத்தின் ஆதவன்! //

    அற்புதமான படங்கள் இரண்டுமே மற்றவற்றை தட்டி முதல் இடம் எடுத்திட்டாங்க :))



    அந்த கலர்புல் தட்டு ..அருமை மகி ...நானும் இப்படிதான் கலர்புல் வெஜிஸ் உடன் உண்பேன்

    அப்புறம் ஹி ஹி :))) தேங்க்ஸ் தல பாட்டை போட்டதுக்கு :)

    ReplyDelete
  3. ஏஞ்சல் அக்கா, நீங்களேதான் ஃபர்ஸ்ட்! :) வாங்க, வாங்க! :)
    ~~
    விஜி, ரசித்துப் படித்து கருத்தும் தந்தமைக்கு மிக்க நன்றி! :)

    ReplyDelete
  4. அற்புதமான கவிவரிகளும் அழகான படங்களும்...
    மனசை அப்படியே அள்ளிக்கொண்டு போய்விட்டது மகி...

    உண்மையாகவே நல்ல கற்பனை வளமும் கவி எழுதும் ஆற்றலும் நிறையவே உங்களிடம் உள்ளது.

    இன்றைய பதிவில் அனைத்துமே சூப்பர்!

    இனிய நன்றிகளுடன் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மகி!

    கவி எழுதுவதைத் தொடர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்!

    ReplyDelete
  5. கவிதையானது உங்கள் வரிகள் மட்டுமல்ல போட்டோக்களும் தான் .
    வாழ்த்துக்கள்....தொடருங்கள்....

    ReplyDelete
  6. மேகத்தையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது ஆகஸ்ட் மாத ஆதவன் அழகு.அடுத்து தனி நிலா. படங்கள் எல்லாமே அழகா வந்திருக்கு.

    ஒரு பொரியல்...அதையே எவ்வளவு குறைத்து செய்தாலும் மீதமாகி விடுகிறது.அதிகமாப் போனால் வத்தல் அல்லது அப்பளம்.அவ்வளவுதான் எங்க வீட்டில்.இனி கலர்ஃபுல் தட்டுக்கு மாற வேண்டியதுதான்.

    ReplyDelete
  7. எல்லா படங்களும் அற்புதம்... பாடல்கள் அனைத்தும் மிகவும் பிடித்தவை...
    ரசனைக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  8. But I think that is not Raaja Sir, that is Bharadwaj

    BTW, Love your lunch plate :-)

    K

    ReplyDelete
  9. நோ கமண்ட்ஸ் மகி. பத்து தடவை படம் பார்த்து, படிச்சாச்சு. சூப்பர்.

    ReplyDelete
  10. ஆவ்வ்வ்வ் வானத்து அழகோ அழகு... வைரமுத்து அவர்களின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருது..

    வானமகள் நாணுகிறாள்..
    வேறு உடை பூணுகிறாள்..
    இது ஒரு பொன் மாலைப் பொழுது..

    கலர்கலரா சமையல்.. நல்லாயிருக்கு.. பக்கத்தில ஒரு முட்டையை முழுசா அவிச்சு வச்சிருக்கலாம்ம்:)) சரி சரி விடுங்க..:))

    ReplyDelete
  11. இம்முறை பாட்டாப் போட்டுக் கலக்கிட்டீங்க.. ஏன் இப்போ அதிகம் பாட்டாவே கேக்கிறீங்களோ?.. எங்கே ஜீனோவைக் காணம்.. அவரும் நிலாப் பார்க்க வந்திருப்பாரே?:)

    ReplyDelete
  12. @ஏஞ்சல் அக்கா, //அற்புதமான படங்கள் இரண்டுமே மற்றவற்றை தட்டி முதல் இடம் எடுத்திட்டாங்க :))// ம்ம்ம்....சரி, சரி! படங்களை எடுத்தவரிடம் சொல்லிடறேன்! கர்ர்ர்ர்ர்! :)
    ஐபோன் கேமராவில் (நான்) எடுத்த படங்களை விடவும் டி.எஸ்.எல்.ஆர். கேமராவில் (என்னவர்) எடுத்த படங்கள் பிரமாதமாக இருப்பது நிஜம்தான் அக்கா! ;) :)

    //இப்படிதான் கலர்புல் வெஜிஸ் உடன் உண்பேன் // வெரி குட்! சேம் பிஞ்ச்! :)

    //அப்புறம் ஹி ஹி :))) தேங்க்ஸ் தல பாட்டை போட்டதுக்கு :)// ஹாஹா!! இந்தப் படம் வந்த காலங்கள்ல இருந்த அஜீத்-ஐ பிடிக்கும். இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமே பிடிக்கும். என் அக்கா பையனும் தல-விசிறிதான்! :)))

    கருத்துக்கு நன்றி அக்கா!
    ~~
    @இளமதி,//கவி எழுதுவதைத் தொடர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்!// நீங்க இப்படியெல்லாம் ஏத்தி விடக்கூடாது, அப்புறம் இங்கே வரும் ஆத்கள் எல்லாம் பயந்து ஓடிருவாங்க! ;) :)

    நான் கவிதையென்று நினைத்து எழுதுவதில்லைங்க. ஒரு சில நேரங்களில் மனசு அமைதியாக சலனமற்ற குளமாக இருக்கையில் தானாக எழும் அலைகள் போல வந்து விழும் வார்த்தைகளை எழுத்திலும் வடித்து வைக்கிறேன். அது நன்றாக இருக்கிறது என்ற நட்புக்களின் கருத்துக்கள் மனதிற்கு இதமாக இருக்கிறது! நன்றி தோழி! :)

    படங்களையும் ரசித்தமைக்கு நன்றிகள். அவற்றில் பாதி என் கணவர் எடுத்தவை! அவரிடமும் சொல்லிவிடுகிறேன். :)
    நன்றி!
    ~~
    @ராஜி மேடம், //கவிதையானது உங்கள் வரிகள் மட்டுமல்ல போட்டோக்களும் தான் .// நீங்களுமா??! :) ஓகே, உங்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொள்கிறேன், நன்றி! :)
    ~~
    @தனபாலன் சார், உங்களுக்கும் பிடித்த பாடல்களா? மகிழ்ச்சியாக இருக்கு. ரசித்து கருத்துத் தந்தத்ற்கு நன்றி!
    ~~
    @சித்ராக்கா, நிலவும் ஆதவனும் என்னவர் கைவண்ணம்! அவரளவுக்கு கேமராவில் செட்டிங்க்ஸ் மாற்றி, மணிக்கணக்கா நின்று படமெடுக்க எனக்குப் பொறுமை-ஆர்வம் போதாது. போகிற போக்கில் கையில் இருக்கும் செல்ஃபோன் கேமராவில் சிறை பிடிக்கும் வானமே எனக்கு இலகுவாக இருக்கு! ;) :)

    காய்கள் நிறையச் சாப்பிடறதில்லையா?? கர்ர்ர்ர்ர்! அப்பளம்-வடகத்தை கட் பண்ணிட்டு வீட்டிலுள்ளவர்களுக்கு விதவிதமாய்ச் செய்து குடுங்க, மூச்சுக் காட்டாமச் சாப்பிடுவாங்கள்ல? ;) :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!
    ~~
    @அனானி "K", சுட்டிக் காட்டியமைக்கு நன்றிங்க! மாத்திட்டேன். :)
    லன்ச் ப்ளேட்டை ரசித்ததுக்கும் நன்றிகள்!
    ~~
    @இமா, தேங்க் யூ! :)
    ~~

    ReplyDelete
  13. Lovely pictures!these are my fave songs..

    ReplyDelete
  14. @அதிரா, //வானமகள் நாணுகிறாள்..
    வேறு உடை பூணுகிறாள்..
    இது ஒரு பொன் மாலைப் பொழுது..// இந்த வரிகளை ஏற்கனவே "ஒரு பொன் மாலைப் பொழுது.." பதிவில் உபயோகித்துவிட்டேன், அதனால் இந்த முறை இந்தப் பாடல்! :)

    // பக்கத்தில ஒரு முட்டையை முழுசா அவிச்சு வச்சிருக்கலாம்ம்:)) சரி சரி விடுங்க..:))// அவ்வளவுதானே? அடுத்த முறை அவிச்சு வைச்சிடறேன்! ;) இன்ஃபாக்ட், அப்படி படங்களும் இருக்கலாம், தேடிப்பார்க்கிறேன்.

    //ஏன் இப்போ அதிகம் பாட்டாவே கேக்கிறீங்களோ?..// போனவாரம் கோயிலுக்குப் போனோம், போகவர 2-3 மணி நேரங்கள் காரில் பாட்டுக்கேட்டுக்கொண்டே போன எபெக்ட்டு! ;)

    //எங்கே ஜீனோவைக் காணம்.. அவரும் நிலாப் பார்க்க வந்திருப்பாரே?:)// ஆமாமாம்..நானும் ஜீனோவும்தான் முதல்ல நிலாப் பார்த்தோம், பிறகு வீட்டுக்கு வந்து இவரையும் கிளப்பிட்டுப் போனோம். பிறகு ஒரு மணி நேரமாச்சு, நாங்க காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி-ந்னு பொறுமையிழந்து வீட்டுக்கு வந்துட்டோம். பிறகு அரைமணித் தியாலம் கழிச்சுத்தான் போட்டோகிராஃபர் வீட்டுக்கு வந்தார். அவ்வ்வ்வ்வ்! நிலாவைப் படம் பிடிக்கும் கண்களுக்கு 2 கால், 4 கால் மனுஷர் எல்லாம் கண்ணில் படுவோமா? அதனால நாங்கள்லாம் படத்திலை இல்லை அதிராவ்! :) [நீங்க ஒரு கேள்வி கேட்டா நான் ஒரு பக்கம் பதில் சொல்லுவேன்! ஹிஹிஹ்ஹி! ;)]

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிராவ்!
    ~~
    ரம்யா, உங்களுக்கும் பிடிச்ச பாடல்களா? சந்தோஷம்! நன்றிங்க!
    ~~

    ReplyDelete
  15. ஆஹா மகி சூப்பர் படங்கள்.வானும் மண்ணும் தான் கட்டிக் கொள்ளுமா என்ன? என் மனமும் உடலும் இறக்கை கட்டி பறக்கிறதே!

    ReplyDelete
  16. அத்தனை படங்களும் அழகு!

    ReplyDelete
  17. ஆசியாக்கா, //என் மனமும் உடலும் இறக்கை கட்டி பறக்கிறதே!// இதைப் படிக்கையில் எனக்கும் பறக்கிற மாதிரியே இருக்கு! :) நன்றிக்கா!
    ~~
    கே.பி.ஜனா, வருகைக்கும் ரசித்து கருத்துத் தந்ததுக்கும் நன்றிங்க!
    ~~

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails