Tuesday, December 9, 2014

ஓட்ஸ் கஞ்சி

தேவையான பொருட்கள்
ரோல்ட் ஓட்ஸ் (Rolled oats/Old fashioned Oats)-1/2கப்
கேரட்- சிறியதாக 1
பீன்ஸ் - 2
பச்சைப் பட்டாணி - 1கைப்பிடி
நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 1
கறிவேப்பிலை
சாம்பார் பொடி-1/2டீஸ்பூன் (காரத்துக்கேற்ப)
சீரகம்-1/2டீஸ்பூன்
கடுகு-1/4டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
தண்ணீர் - 21/2கப்
செய்முறை
வெங்காயம், பச்சைமிளகாய், கேரட்-பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, கேரட்-பீன்ஸ் -பச்சைப்பட்டாணி, சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து 21/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்கு கொதி வந்ததும் ஓட்ஸை கொட்டி கிளறிவிடவும்.
மிதமான தீயில் சுமார் 5 நிமிடங்களில் ஓட்ஸ் வெந்துவிடும்.
கஞ்சியை அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து இளம் சூட்டில் (அதாங்க..serve warm!! :)) பரிமாறவும்.
குறிப்பு
கஞ்சி அடுப்பிலிருந்து இறக்கும் போது கொஞ்சம் தண்ணீர் போல தெரிந்தாலும் ஆறும்போது கெட்டியாகி கஞ்சி பதம் வந்துவிடும். மிகவும் ஆறவிட்டால் கஞ்சி "களி" ஆகும் அபாயம் உள்ளது, அதனால பாத்து பதமான சூட்டில பரிமாறுங்கோ! :)
quick cooking oats என்றால் தண்ணீர் அளவு குறைத்துக்கொள்ளவும். விரைவாகவும் வெந்துவிடும்.

10 comments:

  1. வணக்கம்
    சுவையான உணவு பற்றிய அறிமுகம் செய்முறை விளக்கம் எல்லாம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    கவியதையாக என்பக்கம் வாருங்கள் அன்போடு

    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எப்போது மலரும்…………….:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வா..வ் ஓட்ஸ் ல் எதுவானாலும் எனக்கு பிடிக்கும். ஓட்ஸ் கஞ்சி நல்லா இருக்கு. குளிருக்கு மிதமான சூட்டில் சாப்பிட சூப்பரா இருக்கும். நன்றி மகி பகிர்வுக்கு.

    ReplyDelete
  3. நல்ல சத்தான ஓட்ஸ், வெஜிடெபல் கலர்புல் உணவு.

    ReplyDelete
  4. காய்ச்சிட வேண்டியதுதான்ன்.. நான் அடிக்கடி செய்வது வரகு கஞ்சிதான்..

    ReplyDelete
  5. சத்தான சுவையான ஓட்ஸ்கஞ்சி...அருமை..

    ReplyDelete
  6. இவ்வளவு காய்கறிகள் சேர்த்து கஞ்சா !!!! சத்துள்ள கஞ்சி, வித்தியாசமா இருக்கு மகி.

    எங்கள் ஊர் பக்க‌ம் 'கஞ்சி'ன்னாலே அரிசியைக் கொஞ்ச நேரம் கூடுதலாக வேகவைத்து(பாத்திரத்தில்), தண்ணீர் & உப்பு சேர்த்து சாப்பிடுவார்கள்.

    ReplyDelete
  7. கருத்துக்கள் தந்த அனைவருக்கும் இனிய நன்றிகள்! :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails