Tuesday, August 3, 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே..

சமீபத்தில், சிலநாட்களாக சட்னி அரைக்கும்போது, மிக்ஸியில் ஏதேதோ வினோத சப்தங்கள் வர,என்னகாரணம் என்று மண்டையை உடைத்து யோசித்துக்கொண்டிருந்தேன். ரசத்துக்கு புளி கரைக்கையில்தான் அந்த சத்தத்திற்கு என்ன காரணம் என்று தெரிந்தது. கடையில் வாங்கிவந்த புளியில் பாதிக்குப்பாதி புளியங்கொட்டைகள்!! அடுத்தமுறை புளி வாங்கிய உடனே பிரித்து சுத்தம் செய்தபோது...நீங்களே பாருங்களேன்!

குப்பையில் போடும் புளியங்கொட்டைகளுக்கு காசு கொடுத்து வாங்கிவருகிறோமா என்று அங்கலாய்ப்பாய் இருந்தது.(இத்தனை சிரமம் எதுக்கு? புளி பேஸ்ட் வாங்கிக்கலாமில்ல-ன்னு கேட்பீங்க.அதென்னமோ புளி பேஸ்ட்டின் கருப்பு நிறம் எனக்கு பிடிப்பதில்லை.) இந்த வேலை செய்கையில் மனம் பழையநினைவுகளை அசைபோட ஆரம்பித்துவிட்டது.
ஊரிலே எங்கள் வீட்டுப்பக்கம் புளியமரங்கள் அதிகம்..சாய்பாபா கோயிலில் துவங்கி, மேட்டுப்பாளையம் சாலையில் இருமருங்கிலும் பெரியபெரிய புளியமரங்கள் இருக்கும்.

பேருந்து நிறுத்ததில் இறங்கி எங்கள் வீடு சென்று சேரும்வரை உள்ள சாலையும் புளியமரங்களுடையதுதான். கோடைக்காலத்தில் வெயிலின் கொடுமை தெரியாமல் குளுமையான தென்றலுடன், கண்ணுக்கு குளிர்ச்சியான பச்சைப்பசேல் என்ற இலைகளுடன் இருக்கும் அந்த மரங்களைப் பார்க்கவே நன்றாக இருக்கும்.

ஆரப்பப்பள்ளியில் படிக்கையில், புளியம்பழம் காய்க்கும் காலங்களில் பொழுது நன்றாகப்போகும்.புளியங்காய் பொறுக்கப்போகிறோம் என்று மரத்தடியிலேயே சுற்றுவோம்..புளியை ஏலம் எடுத்தவர்கள் வந்து புளியமரங்களிலிருந்து அவற்றை பறிக்கையில், எங்க வீட்டுப்பக்கம் பெரும்பாலனவர்கள் அவர்களே நல்ல புளியங்காயா(பழந்தாங்க,ஆனா புளியாங்காய்னு சொல்லியே பழகிடுச்சு.:) ) பார்த்து பொறுக்கி ஐந்து மனு,பத்துமனு(இந்த'னு'வா, இல்ல இந்த 'ணு'வான்னு கொஞ்சம் டவுட்டா இருக்கு..இந்த அளவெல்லாம் இப்ப இருக்கான்னு கூடத் தெரில) இப்படி வாங்கிப்பாங்க.

புளியங்காய் அறுவடைக்காலங்களில் ரோட்டில் நடப்பதே கொஞ்சம் வேடிக்கையா இருக்கும். ஆட்கள் மரத்துமேலே ஏறி புளியங்கிளைகளை பெரிய கொக்கி வைத்து உலுக்குவாங்க..கீழே பெண்கள் தென்னை ஓலையின் நுனியை வைத்துக்கொண்டு, ரோட்டில் விழும் புளியங்காய்களை ஓரமா ஒதுக்குவாங்க. கவனமா பார்த்து நடக்கணும்..இல்லைன்னா மேலே இருந்து விழும் புளியங்காய்களில் அடி வாங்கவேண்டியதுதான்! :):)

ஒவ்வொரு மரத்துக்கும் குறைந்தது 70-80 வயதாவது இருக்கும்.வெயிலின் கொடுமை தெரியாமல் நிழல்குடை பிடிக்கும்..மரங்களின் பசிய இலைகள் கண்ணுக்கு விருந்தளிக்கும்.மரத்தின் பட்டை,மற்றும் காய்ந்துவிழும் குச்சிகள் அடுப்பெரிக்க உதவும். புளியங்காய்கள் நமது உணவுக்கு உதவும்.புளியம்பூக்களைக்கூடப் பறித்து சட்னி அரைத்திருக்கோம்..புளியம் பிஞ்சுகளையும் பறித்து பச்சைமிளகாய்,உப்பு சேர்த்து அம்மியில் அரைத்து சுவைத்தால்..ஆஹா!! அருமையா இருக்கும்.

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கையிலேயே மேட்டுப்பாளையம் சாலையை அகலப்படுத்துகிறோம் பேர்வழி என்று சாய்பாபா கோயிலில் இருந்து புளியமரங்களை வெட்ட ஆரம்பித்தார்கள்.வெட்டப்படும் மரங்களைப் பார்க்கையில் ரத்தக்கண்ணீர் வராத குறைதான்.:( வெறிச்சென்று இருக்கும் சாலையைப் பார்க்கையில் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கும்.

இதுமுடிந்து, சிலவருஷங்கள் அமைதியாக இருந்தாங்க..இப்ப செம்மொழி மாநாடு நடத்துகிறோம் பேர்வழி என்று ஏர்போர்ட்,அவினாசி ரோடு,கொடீசியா பக்கமிருந்த மரங்களனைத்தையும் வெட்டிட்டாங்களாம். அந்தசமயத்தில் கோவைக்கு சென்றிருந்த ஒரு சென்னைக்கார நண்பர் ஒரு சந்தோஷமான,பெருமையான குரலில் சொன்னார், "கோயமுத்தூரே மாறிப்போச்சுங்க மகி!சென்னை மாதிரியே பண்ணிருக்காங்க" என்று. எனக்கு அந்தப்பெருமையையும் சந்தோஷத்தையும் முற்றிலுமாக அனுபவிக்கவோ,பகிர்ந்துகொள்ளவோ இயலவில்லை.

மாநாடு முடிந்துவிட்டது..இப்பொழுது, மேட்டுப்பாளையம் சாலையை நான்குவழிச் சாலையாக மாற்றுகிறோம் என்று, மிச்சம் மீதியிருந்த மரங்களையும் வெட்டுகிறார்களாம். :(:(:( ஊருக்கு பேசுகையில்,நம்ம வீட்டருகில் இருக்கும் மரங்களை வெட்டிக்கொண்டிருக்காங்க என்ற செய்திகள் காதில் விழுகையில் மிகவும் வலிக்கிறது..நான் சிறுவயதில் ரசித்து,அனுபவித்த காட்சிகள் எல்லாம் இனி என் மனதில் மட்டும்தானே?

சாலைகளை அகலப்படுத்துகிறோம்..நான்குவழிச்சாலை அமைக்கிறோம், புறவழிச்சாலை அமைக்கிறோம்,கோவை நகரம் டெவலப் ஆகிறது.. என்று எத்தனையோ காரணங்களிருந்தாலும், அத்தனை வயதான மரங்களை வெட்டுவதை என்னால் தாங்கவே முடியவில்லை. அடுத்த முறை ஊருக்குச் செல்கையில்,மொட்டையாக இருக்கும் சாலைகளைக் கடந்துதான் செல்லவேண்டும் என்ற நினைவே கசப்பாய் இருக்கிறது.:(

25 comments:

  1. புளியங்கொட்டைகளத் தீட்டி, அதுகள உருட்டிப் போட்டுத் தான் எங்கூருல தாயக்கரம் விளையாடுவாங்க :))

    நல்லா இருக்கு பார்க்கறதுக்கே.. ம்ம்..

    சென்னை மாதிரியா.. வேண்டாம் :(( ஏற்கனவே கோயம்பத்தூர் சிட்டி அப்பிடித்தான் இருக்கு.. இப்போ எல்லைகளிலும் கை வைக்கறாங்க :(

    பி.கு - நீங்க சொல்லியிருக்கற எந்த எடமுமே எனக்குத் தெரியாது.

    ReplyDelete
  2. உங்க வீட்டுக்குப்போகும் வழியில் உள்ள மரங்கள் இன்னும் கொஞ்ச நாள் பிழைக்கும். மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்த மரங்கள் எல்லாம் இனி நம் நினைவுகளில் மட்டுமே.

    அமெரிக்காவிலுமா புளியில் கொட்டையோடு விற்கிறார்கள்?

    ReplyDelete
  3. மலரும் நினைவுகள் ரொம்ப நல்லா இருக்கு மஹி...

    ReplyDelete
  4. எங்கூர்ல...
    ம்ஹும்.. எங்க வீட்ல...
    இலையை அவிச்சு செபா கால் கழுவுவாங்க. இதுக்காகவே மரம் வளர்த்தோம். எனக்கு பூவை, குருத்தை அப்படியே சாப்பிடப் பிடிக்கும். பூக்கள் அழகு இல்லையா? அதன் நிறமும் எனக்குப் பிடிக்கும். பிறகு... எங்க முயல்களுக்கும் ஆமைகளுக்கும் பிடித்த உணவு. ;) பட்டையைக் கூட விடமாட்டாங்க.

    ReplyDelete
  5. மொக்கை போடலாமுன்னு வந்தா மனசை நோகடிச்சிட்டீங்களே..அவ்வ்வ்வ்

    ReplyDelete
  6. //புளியங்கொட்டைகளத் தீட்டி, அதுகள உருட்டிப் போட்டுத் தான் எங்கூருல தாயக்கரம் விளையாடுவாங்க :))//

    எனக்கும் இந்த பல்லாங்குழி விளையாட்டு ரொம்ப பிடிக்கும் . அதே போல பாதி வெட்டி பிளாக் அண்ட் வொயிட் விளையாடவும் பிடிக்கும் ஆனா இப்ப இந்த விளையாட்டு இடத்தில டீவி கேம்ஸ் வந்துடுச்சி..

    ReplyDelete
  7. இது எடையில செய்யுற மோசம் அப்ப ஒரு கிலோ புளியில கால் கிலோ புளிங்கொட்டைதான் இருக்கும்...

    ReplyDelete
  8. அதூஊஊ தாயக்கரம்.. எப்பிடிச் விளக்கறது? கட்டைய உருட்டி காய்கள கட்டத்துல நகர்த்தி ஆடுவாங்க இல்லையா.. அது மாதிரி.. பல்லாங்குழி வேற :)

    அதென்ன ப்ளாக் அண்ட் வைட்? ப்ரவுன் அண்ட் வைட் தான சரியா வரும்? :))))

    ReplyDelete
  9. என் அம்மா கூட சொல்லுவாங்க, அவங்க புளியம் பூ,பிஞ்சு எதையும் விட்டு வைக்க மாட்டாங்களாம். நல்ல பதிவு மஹி :) நீங்க mixie ல புளி கறைபீங்களா...நான் இன்னும் பழைய வழி தான். முதல்ல நான் mixie போச்சேன்னு வருத்த படரிங்கலோன்னு நெனச்சேன் ...அனா ஒரு touching போஸ்ட்! ன் or ண் தெரிலன்னு போட்ருகளே , எனக்கும் இதே சந்தேகம் இப்பவும் வரும் :P

    ReplyDelete
  10. மஹி ரொம்ப உபயோகமான பதிவு..

    ReplyDelete
  11. மகி மொக்கையோன்னு நினைச்சு வந்தேன். மனசு கனமாயிடுச்சு. பொள்ளாச்சி ரோட்டுலயும் புளிய மரமா இருந்தது. இப்ப இருக்கான்னு தெரியல.
    பிஞ்சு புளியங்காயில உப்பு பச்சை மிளகாய் சேர்த்து....... ஆஹா எச்சி ஊறுது மகி!!!!!!!!!!!!

    ReplyDelete
  12. நானும் மொக்கை பதிவுன்னு தான் நினைத்தேன்..ஆனா படித்ததும் மனம் வலித்தது...

    ReplyDelete
  13. ஸ்ஸ்ஸ்.. அருமையான பதிவுமகி.உங்கள் ஊர் சாலையில் வரிசையாக உள்ள புளியமரங்கள் அழகோ அழகு!

    ReplyDelete
  14. //அதென்ன ப்ளாக் அண்ட் வைட்? ப்ரவுன் அண்ட் வைட் தான சரியா வரும்? :))))//

    ஹலோ பேர்ல எல் போர்ட வச்சிகிட்டு இப்பிடி குறுக்கு கேள்வி கேக்கபிடாது. அப்புறம் நா அழுதுடுவேன்....

    :-))

    ReplyDelete
  15. ஆ.. மகி, உங்கள் ஊர் ரோட்டும் புளியமரங்களும் சூப்பரோ சூப்பர்.

    இங்கு சைனாப் புளியம்பழம் கோதுடன் கிடைக்கிறதே.. இனிப்பாக சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம்.

    புளியிலும் இருவகையும் கிடைக்கிறதே மகி, விதையுள்ளது, விதை நீக்கியதென.
    புளி பேஸ்ட் எனக்கும் பிடிப்பதில்லை.

    ReplyDelete
  16. ennathu coimbatore chennai maathiri aakiruchhaaaaaaaa so sad

    ReplyDelete
  17. @சந்தனா~> இடம் எதுவா இருந்தா என்ன,வெட்டுப்படுவது மரங்கள்தானே? தம்பிகிட்ட கேட்டுப்பாரு,இந்த இடமெல்லாம் எங்கிருக்குன்னு சொல்லுவாரு.
    நன்றி சந்தனா!

    @டாக்டர் ஐயா~> வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.ஹூம்,அந்த மரங்களுக்கும் ஆயுசு இன்னும் சிலவருஷங்கள்தானே?
    /அமெரிக்காவிலுமா புளியில் கொட்டையோடு விற்கிறார்கள்?/அந்தக் கொடுமைய ஏன் கேட்கறீங்க?:) ஒருசில சமயம் பேக்கட்டுல ஒற்றைப்படைல இருக்கும்..சிலசமயம் இப்படி.

    @சாரு~>/மலரும் நினைவுகள்/நல்லாதானிருக்கு சாரு..ஆனால் இனி எபோழுதும் நினைவுகளில் மட்டுமே இருக்கெ.நிஜம்தான் கொஞ்சம் கசப்பா இருக்கு.
    நன்றிங்க!

    @இமா~>என்ன செய்ய இமா? மனசு கேட்காம இப்படி புலம்பிட்டு,டேக் லைஃப் ஏஸ் இட் கம்ஸ்-னு சந்தனா சொன்னமாதிரி போயிட்டு இருக்க வேண்டியதுதான்.வேற வழி?

    @ஜெய்லானி~>ஜெய் அண்ணா,எப்பவுமே மொக்கை போடமுடியாதுல்ல?:)
    பல்லாங்குழி பற்றிய உங்கள் பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்.:) கலப்படம்? நோ கமெண்ட்ஸ். :-|

    @ராஜி~>/நீங்க mixie ல புளி கரைப்பீங்களா../இல்லைங்க..குழப்பிட்டேன் போல உங்கள! :)
    சட்னிக்கு புளிய அப்படியே சேர்ப்பேன்.ரசத்துக்கு கையால கரைக்கும்போதுதான் இந்த புளியங்கொட்டைகளைக் கண்டுபிடிச்சேன்.
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க ராஜி!

    ReplyDelete
  18. @தேனம்மைலக்ஷ்மணன்~>உங்க கவிதகள் விகடன்ல நிறைய படித்திருக்கேன் தேனக்கா! முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    @தெய்வசுகந்தி~>சுகந்திக்கா,அந்த ரெண்டாவது போட்டொ உங்கூர்தான்.ஆனைமலை ரோடு.இப்ப எப்படியிருக்கோ தெரில.கருத்துக்கு நன்றிங்க!

    @மேனகா~>உண்மையில் அந்த கலப்படப்புளி போட்டோ மொக்கை பதிவா போடலாம்னுதான் எடுத்தேன் மேனகா! ஆனா,இப்படி ஒரு சோகப்பதிவா வந்துவிட்டது.நன்றி!

    @ஸாதிகா~>வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அக்கா!

    @அதிரா~>இங்க இண்டியன்ஸ்டோர்ல மட்டும்தான் அதிரா நான் புளிவாங்குவேன்.சைனா புளி இப்பதான் கேள்விப்படறேன்.இனிப்பா இருக்கும்னு சொல்லறீங்க,சமையலுக்கு யூஸ் பண்ணலாமா அத

    இங்கே எல்லாம் விதை நீக்கப்பட்ட புளிதான்.அதுவே சிலசமயம் இப்படியிருக்கு!
    நன்றி அதிரா!

    @ஆமாம் வேணி.கொடீசியா,அவினாசி ரோடு,ஏர்போர்ட் ரோடு எல்லாமே மாறிப்போயிருக்கும்னுதான் நினைக்கிறேன்.
    நன்றி வேணி!

    தாயக்கரம்,பல்லாங்குழி,ப்ளாக்&ஒயிட் இப்படிப் பலவிளையாட்டுகள் மெதுவா வெளியே வருது..எல்லாரும், சிறுவயதில் விளையாடிய விளையாட்டுக்களை தனிப்பதிவா போடுங்களேன்!:):):)

    ReplyDelete
  19. மகி, நல்ல பதிவு. எனக்கு மரங்களை வெட்டுபவர்களை கண்டால் ஆத்திரமாக வரும். என்ன செய்வது சும்மா சிவனேன்னு பார்த்திட்டு போக வேண்டியது தான்.

    ReplyDelete
  20. நானும் கூட பாவம் மகியுடைய மிக்ஸி அவுட் ஆகிட்டதோ என்று நினைத்து கொண்டே படித்தேன்...அப்படா..மிக்ஸிக்கு ஒன்றும் ஆகவில்லை...நானும் இதே பிராண்ட் புளி தான் வாங்குவேன்...நல்ல வேளை இவ்வளவு புளியங்கொட்டை வருவதில்லை...ஆனாலும் கலப்படம் இல்லாமல் வராது...3 - 4 வரும்...நல்ல பதிவு...

    ReplyDelete
  21. வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி வானதி&கீதா!

    ReplyDelete
  22. //சாய்பாபா கோயிலில் துவங்கி, மேட்டுப்பாளையம் சாலையில் இருமருங்கிலும் பெரியபெரிய புளியமரங்கள் இருக்கும்//
    ஹும்... அநியாயத்துக்கு ஊர் ஞாபகத்த இழுத்து விட்டுடீங்க மகி... ஆனா இப்போ மேட்டுபாளையம் ரோடு மரம் எல்லாம் வெட்டிட்டு இருக்காங்களாம் ரோடு பெருசு பண்றதுக்கு... கேட்டதும் ரெம்ப கஷ்டமா இருந்தது... இனிமே இதை போட்டோல தான் பாக்கணும்...நானும் புளியங்கா அடிச்சு இருக்கேன்.. அதெல்லாம் ஒரு வசந்த காலம்...ஹும்...

    ReplyDelete
  23. Mahi - Are you from Coimbatore?

    ReplyDelete
  24. @புவனா,ஆமாங்க..இன்னேரம் எல்லா மரமும் வெட்டிருப்பாங்க. :-|

    @மஹேஸ்,ஆமாங்க.நான் கோவைதான்.நீங்களுமா?:)

    ReplyDelete
  25. Yes Mahi, me too. Just got back from there last thursday. They chopped off so many trees for 'Ulaga tamil manadu' but I have to say that the road from airport to Trichy road is pretty good.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails