Thursday, August 5, 2010

அப்பம்

தேவையானபொருட்கள்
பச்சரிசிமாவு-2கப்
வெல்லம்-11/2 கப்(சுவைக்கேற்ப)
ஏலக்காய்-3
கனிந்த வாழைப்பழம்-1
பேக்கிங் சோடா-1சிட்டிகை
பால்-1/4கப்

செய்முறை
வெல்லத்தை கால்கப் தண்ணீர் விட்டு பாகாக காய்ச்சிக்கொள்ளவும்.

மாவுடன் பேக்கிங் சோடா கலந்து,ஏலக்காயைத் தட்டிப்போட்டு, இளம்சூடான பாகையும் சிறிது,சிறிதாக ஊற்றி கலந்து வைக்கவும்.

வாழைப்பழத்துடன் பால் சேர்த்து எலக்ட்ரிக் பீட்டரால் நன்றாக கலந்து,அரிசிமாவுக்கலவையுடன் கலக்கவும்.
பணியாரக்கல்லில் ஒரொரு குழியிலும் கால் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிதமானசூட்டில் காயவைத்து,குழியின் முக்கால்பாகம் அளவுக்கு மாவை ஊற்றி பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

சுவையான அப்பம் ரெடி!

குறிப்பு
பொடியாக நறுக்கிய தேங்காயை, சிறிது நெய்யில் வறுத்து மாவுடன் சேர்க்கலாம்.இன்னும் சுவையாக இருக்கும்.
அப்பம் சுட்டுவைத்து மறுநாள் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

26 comments:

  1. Romba arumaiya irruku mahi,perfect.pls send few.

    ReplyDelete
  2. இதுவா அப்பம்!!

    இதுக்கு செபா வேற வாயில் நுழையாத பேர் சொல்லுவாங்க. கேட்டுக் கொண்டு வாறன் பொறுங்கோ.

    ம்... ப்ரூதர்!!

    ReplyDelete
  3. என்னது..ப்ரதரா?:) இமா,சில நாளாவே நீங்க எங்களைப்போன்ற அப்பாவிகளுக்கு புரியாதமாதிரியேதான் பேசீட்டு இருக்கீங்க.கர்ர்ர்ர்ர்!

    எங்க ஊர்ல இதுக்குப்பேருதான் அப்பம்,ஆனா வாழைப்பழம் சேர்க்கமாட்டாங்க.எனக்கு மாவு கொஞ்சம் கெட்டியா இருந்ததுன்னு நான் பாலும்,பழமும்:) சேர்த்தேன்.டேஸ்ட் சூப்பரா இருந்தது.

    அப்பம்-ப்ரூதர்,எதுவானாலும் சரி..விடுங்க,பேரு வாயில நுழையாட்டா என்ன?பண்டம் நுழைஞ்சா சரி.ஹிஹி!

    ReplyDelete
  4. நன்றிங்க ப்ரேமா.நான் காரக்குழம்பை பார்த்துட்டு இங்க வந்தேன்,நீங்களும் பின்னாடியே வந்துட்டீங்க. :)

    ReplyDelete
  5. மஹி அப்பம் சூப்பரா இருக்கு. வழக்கம் போல போட்டோஸ் கலக்கல்.

    ReplyDelete
  6. அருமையான அப்பம் மஹி! புகைப்படமும் அருமை! அதன் பொன்னிறம் உடனேயே செய்து பார்க்கத் தூண்டுகிறது!!

    ReplyDelete
  7. romba nalla irukku mahi, my mom used to make something like this, i will ask her the exact recipe. superb, will try sometime

    ReplyDelete
  8. //அப்பம் சுட்டுவைத்து மறுநாள் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். //


    ஐயோஓஓஓஓஓஓ. ஒருத்தங்க என்னை பட்டினி போட்டு கொல்றாங்களேஏஏஏஏ



    அப்ப நாளைக்கு வரை பட்டினிதானா..


    உங்க மாம்ஸ பார்த்தா எனக்கு ஒரே பாவமா இருக்கு ....அவ்வ்வ்வ்

    ReplyDelete
  9. //வாயில நுழையாட்டா என்ன?பண்டம் நுழைஞ்சா சரி.ஹிஹி!//


    இதை பிச்சி சாப்பிடனுமா இல்லை சுத்தியயால உடைச்சி சாப்பிடனுமா..ஹி..ஹி...

    ReplyDelete
  10. பொன்னிறமான சூப்பர்ர் அப்பம்...

    ReplyDelete
  11. சூப்பர்.... கண்ணே எடுக்க முடியல உங்க அப்பத்த விட்டு ... சூப்பர்... எளிமையாவும் இருக்கு... செய்து பாக்குறேன்... ரெம்ப நன்றிங்க மகி

    உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன்... நன்றிங்க
    http://appavithangamani.blogspot.com/2010/08/blog-post_06.html

    ReplyDelete
  12. அப்பம் அழகாக சுட்டு அழகாக பிரஷந்தேஷன் பண்ணி இருக்கின்றீர்கள் மகி.

    ReplyDelete
  13. அழகாக இருக்கின்றது...அப்படியே எடுத்து கொள்கிறேன்...டாப் டக்கர்...

    ReplyDelete
  14. சூப்பர் மஹி். இங்கு ரீவியில் காட்டினார்கள், நான் முடிவில்தான் பார்த்தேன், குண்டுத்தோசையாக்கும் என நினைத்தேன்.... அது இதுதான். என்பக்கத்தில் உங்கள் வலை இணைக்கவேண்டும், இல்லாததால உங்கள் புதுப் பதிவு கண்டுபிடிக்கமுடிவதில்லை:((.

    ReplyDelete
  15. பணியாரக் கல்லுக்கு என்ன தடவனும்? நெய்யா இல்ல எண்ணையா?

    அப்புறம்.. இந்த மாதிரி மைதா மால எங்க வீட்டுல செய்வாங்க - எண்ணெயில பொரிச்சு.. அதுக்குப் பேரு கச்சாயம்..

    ReplyDelete
  16. மகி, நல்லா இருக்கு. படங்கள் அழகா இருக்கு. பணியாரக் கல் இந்தியாவில் வாங்கியதா? அல்லது இங்கு இந்தியன் கடைகளில் கிடைக்குமா?

    ReplyDelete
  17. //பணியாரக் கல்லுக்கு என்ன தடவனும்? நெய்யா இல்ல எண்ணையா?//

    கொஞ்சம் டெட்டால் தடவினா நல்ல வாசமா இருக்கும் .ஆஹா.....

    ஆரோக்கியம் கூட..டொட்டடோய்ங்.

    ReplyDelete
  18. அப்பம் நல்ல கலர்ஃபுல்லா இருக்கு. பார்க்கும் போதே சாப்பிட தோனுது

    ReplyDelete
  19. ஆஹா,எனக்கு எப்பொழுதும் பிடித்த பலகாரம் :) நல்லா வந்துருக்கு!

    ReplyDelete
  20. @சாரு,வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!

    @மனோ மேடம்,வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி!

    @வேணி,கட்டாயம் செய்துபாருங்க.நன்றி!

    @ஜெய் அண்ணா,/ஒருத்தங்க என்னை பட்டினி போட்டு கொல்றாங்களேஏஏஏஏ/இது ஸ்வீட்,சாப்பாடு இல்ல.சாப்பாடு மாதிரி இனிப்பை மூணு நேரமும் சாப்புடுவீங்களோ?;)

    /உங்க மாம்ஸ பார்த்தா எனக்கு ஒரே பாவமா இருக்கு ....அவ்வ்வ்வ்/என்னைப் பார்த்து யாரும் பாவப்படமாட்றாங்களே!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    /இதை பிச்சி சாப்பிடனுமா இல்லை சுத்தியயால உடைச்சி சாப்பிடனுமா..ஹி..ஹி.../ஹிஹிஹி,சுத்திக்கெல்லாம் இது அசையாதுங்கோ.பாறை வெட்டற வெடிமருந்து கிடைச்சா எடுத்துட்டு வாங்க.ஒடச்சி,ஒடச்சி சாப்புடலாம்.கர்ர்ர்ர்ர்ர்!

    @நன்றி மேனகா!

    @புவனா,உங்க தொடர்பதிவை அன்னிக்கே பாத்துட்டேன்.தொடர்கிறேன்(எப்பன்னு கேக்கக்கூடாது:)
    செஞ்சு பாருங்க புவனா! நன்றிங்க.

    @ஸாதிகாக்கா,மிக்க நன்றி!

    @கீதா,தாராளமா எடுத்துக்கோங்க.நன்றி!

    @அதிரா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. இமா என்னவோ பேரு சொல்லறாங்களே,அது நிஜம்தானா?:)

    ReplyDelete
  21. /பணியாரக் கல்லுக்கு என்ன தடவனும்? நெய்யா இல்ல எண்ணையா?/

    /கொஞ்சம் டெட்டால் தடவினா நல்ல வாசமா இருக்கும் .ஆஹா.....

    ஆரோக்கியம் கூட..டொட்டடோய்ங்./

    சந்தனா,உன் கேள்விக்கு மீசிக்கோட பதில் வந்திருக்கு!:)))))) ஜெய் அண்ணா,எப்படி இப்படிலாம்? சனிக்கிழமை காலைல கிளம்பற அவசரத்துல படிச்சி,சிரிச்சு,சிரிச்சு,கண்ணுல தண்ணியே வந்துடுச்சு.உங்க மாம்ஸும் நல்லா சிரிச்சாரு!:)

    எண்ணெய் தடவறத டைப்பண்ண மறந்துட்டேன்.ஞாபகப்படுதியதுக்கு நன்றி சந்தனா! பதிவுல திருத்திட்டேன்.
    /அதுக்குப் பேரு கச்சாயம்../ம்ம்..நாங்களும் பழக் கச்சாயம்
    செய்வோம்.மைதா,ரவை,வாழைப்பழம்,சர்க்கரை,ஏலக்காய்ப்பொடி சேர்த்து கரைத்து 2மணி நேரம் வைத்து,எண்ணெயில பொரிப்பாங்க.ரொம்ப நல்லா இருக்கும்.:P:P

    @வானதி,நன்றிங்க.
    இந்த கல் இங்கே அமெரிக்கன் கடைல வாங்கியதுதான்..பேக்கிங் செக்ஷன்ல "pancake puff pan"-என்று கிடைக்குது.நம்ம ஊர்ல கிடைக்கும் நான்ஸ்டிக் பணியாரக்கல் போல நல்லா இருக்கு.கடையின் பேரு நினைவுவந்தால் சொல்லறேன்.

    @ஆசியாக்கா,விருதுக்கு நன்றி! கொஞ்சம் லேட்டா சொல்லறேன்,அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.:)

    @சுகந்திக்கா,நன்றிங்க!

    @ராஜி,வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  22. அப்பம் சூப்பர்பா இருக்கு மகி...னல்லா சிவந்து கருகாம பார்க்கும்போதெ அதோட சுவை நாக்கிர்கு தெரியுது போங்க....வெறுப்பேத்துரீங்க.....உங்களோட ப்ளாகெல்லாம் பார்த்துட்டு நான் ஒரு லிஸ்ட் போட்டு வெச்சிருக்கேன்.குழிப்பணியாரக்கல்,இடியாப்ப குழாய்,சந்தகை குழாய் இப்படி இன்னும் சில அடுத்த வருஷம் ஊருக்கு போனா வாங்கி வரனும்னு......என்னோட ஆத்துக்காரர்தான் முறைத்துக்கொண்டு இருக்கிரார்.....

    நன்றி மகி.

    ReplyDelete
  23. ஷாந்தி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    கொயினி,ஷாப்பிங் லிஸ்ட் போட்டாச்சா?சூப்பர்!!:)
    ஆத்துக்காரர்களுக்கு வேலையே அதுதானே..அவங்க முறைக்கிற வேலய பாக்கட்டும்.நாம,நம்ம ஷாப்பிங் லிஸ்ட்-ஐ நீளமாக்கற வேலையப்பாப்போம்.:)

    ReplyDelete
  24. //இமா என்னவோ பேரு சொல்லறாங்களே,அது நிஜம்தானா?:) // அது அதிராவுக்கு தெரியாது மகி. (ம்.. நாலு வருஷம் கழிச்சு வந்து ஒரு பதில்! தேவையா இது!! ;) மட்டக்களப்பார் யாராவது இருந்தால் கேளுங்க. போச்சுக்கீஸ் ஸ்டைல் க்றிஸ்மஸ் ஸ்பெஷல் இது.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails