இது மத்ய பிரதேஷ் தோழி ஒருவர் கொண்டுவந்தது..சோளே-டிக்கி. உருளைக்கிழங்கிலே டிக்கி,கொண்டைக்கடலை(சோளே)யில் ஒரு க்ரேவி,ஸ்வீட் சட்னி,தயிர், சாட் மசாலா,நறுக்கிய வெங்காயம்,உப்பு-மிளகாய்த்தூள்,ஓமப்பொடி இப்படி எல்லாம் ரெடியா கொண்டுவந்தாங்க. ஒரு தட்டில 2 உருளைடிக்கியை வைத்து,மேலே சோளே மசாலா ஊற்றி, மிச்சம் இருக்கற ஐட்டமெல்லாம்,உங்க விருப்பப்படி தூவி சாப்பிட்டுக்கோங்க.:)
இனி எங்க வீட்டு கான்ட்ரிப்யூஷன்..ரெசிப்பிகளை காண அவற்றின் பெயர்களை க்ளிக் செய்யவும்.
இட்லி ஃப்ரை
(இது என் கணவர் கைவண்ணம். இட்லி நான் செய்ததுதான்.:),இதுக்கு ரெசிப்பி அவர்கிட்ட கேட்டு சீக்கிரம்(!) போஸ்ட் பண்ணறேன் )
(இது என் கணவர் கைவண்ணம். இட்லி நான் செய்ததுதான்.:),இதுக்கு ரெசிப்பி அவர்கிட்ட கேட்டு சீக்கிரம்(!) போஸ்ட் பண்ணறேன் )
இன்னும் ஒருவர் வெஜ் பிரியாணி-ரைத்தா, இன்னொருவர் ஒரு நார்த் இண்டியன் கறி(பேர் மறந்துட்டேன்) கொண்டுவந்தாங்க.அதுவும் கொஞ்சம் வேலைதான்..கடலை மாவை பிசைந்து,சப்பாத்தி போல தேய்த்து, கயிறு மாதிரி உருட்டி,கட் பண்ணி, கொதிக்கும் நீரில் போட்டு வேகவைக்கணுமாம்..அவை வெந்ததும், மேலே மிதக்குமாம். எடுத்து நமக்கு விருப்பமான க்ரேவியில சேர்த்து சமைக்கறதாம். (செய்முறையை கேட்டே டயர்ட் ஆகிட்டேன்,இதெல்லாம் நமக்கு வேணாம்ப்பா..இட்லி,சட்னி போதும்! என்ன சொல்றீங்க??:) )
படிச்சு டயர்ட் ஆகியிருப்பீங்க, இதோ ஒரு ஹெல்த்தி ஸ்னாக்...
வறுத்த வேர்க்கடலை+தேங்காய்+வெல்லம்...இந்த காம்பினேஷன் ரொம்ப நல்லா இருக்கும். இந்தமுறை இண்டியன் ஸ்டோர்ல வறுத்த வேர்க்கடலையைப் பார்த்தும், என்னவருக்கு இந்த ஸ்னாக் நினைவு வந்துடுச்சு.
சாப்பிட்டுப் பாருங்களேன்..டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும்,உடம்புக்கும் நல்லது..சாப்பிட்டு தெம்பா கமெண்ட்டை பதிவு செய்யுங்க.:) :)
Hope u enjoyed,wounderful menu...All dishes are very nice.
ReplyDeleteHope you had a lovely deepavali with variety dishes and a nice party..
ReplyDelete:-) appo Diwali sema kalakkalaa pochaa..nice dishes..ver kadalai & vellam sapduven but thenga serthathu illai..enimel athaiyum serthu sapdaren..
ReplyDeleteமகி, எல்லாமே சூப்பர். அண்ணாத்தையும் புதுசு புதுசா ஏதாச்சும் ( கடைசியில் இருக்கும் ரெசிப்பி ) கண்டு பிடிக்கிறார் போல.
ReplyDeleteம.பிரதேஷ் தோழி கொண்டுவந்த ஐட்டம் கண்ணைக்கட்டுதே.படங்களைப்பறிமாறியஉங்அக்ளௌக்கு நன்றி.கடைசியில் ஹெல்திஸ்னாக் என்ரதும் ஆஹா ..மகி சூப்பரான ரெஸிப்பி சொல்லப்போகிறார்ன்னு சுறு சுறுப்பாகி படிக்க ஆரம்பித்தால்......
ReplyDeletepaarthae vayiru neranjiduchu ... andha kalai recipeum superruu ..
ReplyDeleteமஹிக்கு இதே வேலையா போச்சு படத்தை காமிச்சே டென்சன் ஆக்குறது . சூப்பரா இருக்கு உங்கள் தீபாவளி விருந்து . கடலை , வெல்லம் வச்சு சாப்பிட்டு இருக்கேன் , தேங்காய் சேர்த்து டிரை பண்ணுகிறேன்.
ReplyDeleteஅ.கோ.மு அப்படின்னா என்ன
ReplyDeleteEnna mahi super deepavali kondattam pola...
ReplyDeleteமகி படத்தை காட்டியே நாவில் நீர் ஊற வைக்கிறிங்க...
ReplyDeleteஅடுத்த பாட்லக்குக்கு நானும் வரேன். பாட் நான் கொண்டு வரேன், நிரப்பித் தரணும் நீங்க.
ReplyDeleteமகி பாட்லக் பார்ட்டி நல்லா இருக்கு.என்ன புதுட்சா இட்லி ஃப்ரை செய்துட்டீங்க?ம்ம் எப்பவும் இட்லியைவிட இது வித்தியாசமாகவும் இருக்கு.அந்த கடலைமாவு டிஷ் செய்யுர விதம் கஷ்டம்கிரதால போட்டோகூட எடுக்கலையா நீங்க....சரி விடுங்க.அ கோ முனா என்னப்பா?அவகோடா முள்ளங்கி சப்பாத்தியா??
ReplyDeleteபடங்கள் அசத்தலா இருக்கு..நாவில் நீர் ஊறுது..
ReplyDeleteமகி...சூப்பர்ப்...அருமையாக இருக்கு...அடிக்கடி இப்படி நிறைய சாப்பாட்டினை காட்டி எங்க டயட்டிங்க கைவிட வச்சுடுவிங்க போல...
ReplyDelete//(இது என் கணவர் கைவண்ணம். இட்லி நான் செய்ததுதான்.:) )//
ReplyDelete//இந்தமுறை இண்டியன் ஸ்டோர்ல வறுத்த வேர்க்கடலையைப் பார்த்தும், என்னவருக்கு இந்த ஸ்னாக் நினைவு வந்துடுச்சு.//
ஒரு கிலோ ஜிலேபியை தனியா ஒத்த ஆளா சாப்பிட்ட மாதிரி சந்தோஷமா இருக்கு மனசு இன்னைக்கு .முதல் முறையா ஒரு உண்மையை ஒத்துகிட்டீங்க . அதே மாதிரி எல்லா பதிவுலையும் சொன்னா எவ்வளவு சந்தோஷமா இருக்கும் :-))))
@@@ vanathy
ReplyDeleteமகி, எல்லாமே சூப்பர். அண்ணாத்தையும் புதுசு புதுசா ஏதாச்சும் ( கடைசியில் இருக்கும் ரெசிப்பி ) கண்டு பிடிக்கிறார் போல.//
ஹி..ஹி... பாவம் அவரும் எவ்வளவு நாள்தான் இவங்க செய்யும் கேக்கையே சாப்பிடுவர் ,..!! :-))
@@@ சாருஸ்ரீராஜ் said...
ReplyDeleteஅ.கோ.மு அப்படின்னா என்ன //
சாருக்கா அவ்வள்வு அப்பாவியா நீங்க ..!! நான் மீதி 90 தர வேண்டி இருப்பதால அவங்க 3 மாசமா கானோம் :-( தேடி கண்டு பிடிப்பவருக்கு 105 அ.கோ.மு தரப்படும் ஹி..ஹி..
//அடுத்த பாட்லக்குக்கு நானும் வரேன். பாட் நான் கொண்டு வரேன், நிரப்பித் தரணும் நீங்க.//
ReplyDeleteமாமீ என்னை மறந்துறாதீங்க ..!! :-))
நீங்க அண்டா கொண்டு போங்க, தல.
ReplyDeleteப்ரேமா & காயத்ரி, பாட்லக் நல்லா இருந்தது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ReplyDeleteநித்து,சாப்பிட்டு பாருங்க.ப்ரோஸன் தேங்கா இல்ல,ப்ரெஷ் தேங்காய்,ஓக்கேவா? :)
வானதி,இந்த கடலை போடறது ஊர்ல எல்லாம் ரொம்ப பேமஸ்.இவருக்கு கரெக்ட்டா நினைவு வந்துடுச்சு.:)
ஸாதிகாக்கா,ஆமாம்.எல்லாப்பொருட்களையும் எடுத்து வச்சதுமே,டேபிள் புல் ஆகிடுச்சு.:)
/டைசியில் ஹெல்திஸ்னாக் என்ரதும் ஆஹா ..மகி சூப்பரான ரெஸிப்பி சொல்லப்போகிறார்ன்னு சுறு சுறுப்பாகி படிக்க ஆரம்பித்தால்....../ஹிஹி! அப்படியே ஆப் ஆகிட்டீங்க? ரொம்ப சூப்பரான ரெசிப்ப்யா சொல்லிட்டேனோ???
பவித்ரா,நீங்களும் கடலை ரசிகையா??:) நன்றிங்க.
சாரு,டென்ஷன் ஆகாதீங்க,உடம்புக்கு நல்லதில்ல.;) /அ.கோ.மு அப்படின்னா என்ன/ இதுக்கு ஜெய் அண்ணா பதில் சொல்லிருக்கார்..இந்நேரம் நீங்களே கண்டுபிடிச்சிருப்பீங்க.:)
அ.கோ.மு.=அவித்த கோழி முட்டை.
ஹிஹிஹிஹி
குறிஞ்சி,பாயிஸா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
இமா,தாராளமா வாங்க..நல்ல அழகான டிஸைனர் பாட் கொண்டுவாங்க.:)
/அவகோடா முள்ளங்கி சப்பாத்தியா??/கொயினி!!!!இப்பூடி அநியாயத்துக்கும் அப்பாவியா இருக்கீங்களே! அது வேற ஒண்ணுமில்ல,பாயில்ட் எக்தான்.
ReplyDeleteகடலைமாவு டிஷ் பேரை 2-3 முறை கேட்டேன்,ஆனா மனசில நிக்கல.:) அவங்க கொஞ்சம் லேட்டா வந்தாங்க,அதனாலதான் போட்டோவும் எடுக்கல.
மேனகா,கீதா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! உங்க ப்ளாகெல்லாம் பாத்துதான் டயட் சமையலே ஆரம்பிக்கலாம்னு ஐடியால இருக்கேன்.:)
ஜெய் அண்ணா,வாங்க!/ஒரு கிலோ ஜிலேபியை தனியா ஒத்த ஆளா சாப்பிட்ட மாதிரி சந்தோஷமா இருக்கு மனசு இன்னைக்கு/அதுசரி,ஒரு கிலோவை ஒண்னா சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதீங்க.:)
அமைதியா இட்லி-ஃப்ரைன்னு மட்டும்தான் போட்டிருந்தேன்.உங்க மாம்ஸு-தான் 'ஏன் நான் செஞ்சதுன்னு போடல?'ன்னு கேட்டு போடவைச்சார்.
அடுத்த பாட்லக்குக்கு மாமியும் மருமகனும் பாத்திரபண்டங்களோடு வரீங்களா?? ;) ;)
நன்றி ஜெய் அண்ணா,வருகைக்கும் கருத்துக்கும்.
p.s.ஒரு கிலோ ஜிலேபின்னு சொல்லி ஆசைய தூண்டிவிட்டுட்டீங்களே! ஒரு கால்கிலோவாவது எனக்கு குடுத்திருங்க.:)
தீபாவளி க்கு பண்ணுன ஸ்நாக்ஸ் எல்லாம் என்ன நிலைமையில இருக்கு? மோட்சம் பெற்றாச்சா?
ReplyDeleteஇதுல ஒரு ஐட்டம் கூட பிடிக்கல :) (ச்சே ச்சே இந்தப் பழம் புளிக்கும்)
//நீங்க அண்டா கொண்டு போங்க, தல. // தண்ணி கொதிக்க வைக்கவா? ;) மறக்கல மருமகனே. இந்தக்கா டபுள் ஸ்மைலி போட்டிருக்காங்க, பார்த்தீங்களா? ;)
ReplyDelete//கடலை போடறது ஊர்ல எல்லாம் ரொம்ப பேமஸ்.// அப்ப பக்கத்துல இருந்தா கண்டுக்க மாட்டாங்க என்கிறீங்க. ம். :)
//டிஸைனர் பாட்// மஞ்சள் ரோஸ் பெய்ண்ட் பண்ணிக் கொண்டு வரேன். :)
//அவகோடா முள்ளங்கி சப்பாத்தி// எப்ப ரெசிபி போடுறீங்க?
Ahaa,paarkum podhe pasikudhe!! Idly fry sounds great! Supera enjoy panneerpeenga yellarum! :)
ReplyDelete//அடுத்த பாட்லக்குக்கு மாமியும் மருமகனும் பாத்திரபண்டங்களோடு வரீங்களா?? ;) ;) //
ReplyDelete//மறக்கல மருமகனே. இந்தக்கா டபுள் ஸ்மைலி போட்டிருக்காங்க, பார்த்தீங்களா? ;)//
அதானே..!! ரெண்டு பேருக்கும் சேர்த்தா இல்லை ஓவர் காமெடியா . எதுக்கும் ஒரு காலி கண்டெய்னர் கொண்டு போயிடலாம் :-))))))))))))))
நல்ல பாட்லக். நாங்களும் இப்படித்தான் தீபாவளி கொண்டாடினோம்.
ReplyDeleteகடலை, வெல்லம், தேங்காய் எனக்கும் ரொம்ப பிடித்த காம்பினேஷன்.
////நீங்க அண்டா கொண்டு போங்க, தல. // தண்ணி கொதிக்க வைக்கவா? ;)//
ReplyDeleteஅண்டாவை நினைவு காட்டியதால் கூடிய விரைவில் ஒரு சமையல் பதிவை எதிர் பார்க்கலாம்..!! ! :-))
Yummy platter,hope you had lots of fun...
ReplyDeletesimplehomefood.com
சந்தனா,ஸ்னாக்ஸ் எல்லாம் இருக்கு.பத்திரமா எடுத்து வைச்சிருக்கேன்,லேட் கமர்ஸுக்கு குடுக்கறதுக்காக.:) இப்பவும் ஒரு ஐட்டமும் புடிக்கலையா??;)
ReplyDelete/இந்தக்கா டபுள் ஸ்மைலி போட்டிருக்காங்க,/எ.கொ.இ.இ.? நான் உங்களுக்கு அக்காஆஆஆஆவாஆஆஆஆஆ? இதை என்னான்னு கேக்க ஆளில்லையா?அவ்வ்வ்வ்!
நீங்களும்,உங்க மருமகனும் வர பாட்லக்ல அ.கொ.மு.சப்பாத்திதான்.:)))))))))))
//பாத்திரபண்டங்களோடு வரீங்களா??// இல்ல... கண்டெய்னர். கொள்கலன் ;)))
ReplyDelete//அவ்வ்வ்வ்// ஒரு வாக்சீன் கண்டு பிடிக்கணும் இந்த வியாதிக்கு. ;)
//அ.கொ.மு// கொக்கு முட்டையா? ;) வேணாம். சின்னதா இருக்கும். ;)
akka
ReplyDeleteenathu deepavalai vaalthukkal
konjam late=aga
ellam sweetum enakuthan...
Very nice dishes .
ReplyDelete