Tuesday, November 2, 2010

முறுக்கு,தட்ட முறுக்கு


முறுக்கு இல்லாத தீபாவளியா? :) நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை இல்லையா?

எங்க வீட்டில் முறுக்கு சுடுவது கொஞ்சம் கடினமான வேலை. பொதுவாகவே பச்சரிசி உபயோகிக்கவே மாட்டோம்..முறுக்கு சுடுவதும் புழுங்கல் அரிசியில்தான். அரிசியை ஊறவைத்து,கொஞ்சமாக தண்ணீர் விட்டு,(காரம் வேணும்னா,வரமிளகாயும் சேர்த்து) க்ரைண்டரில் நைஸாக அரைத்து எடுக்கணும். ஒரு படி அரிசிக்கு, கால்படி பொட்டுக்கடலை என்ற அளவில் பொட்டுக்கடலையை மிக்ஸியில்(உரலில் இடித்து சலித்தது கூட எனக்கு நினைவிருக்கு.அப்பல்லாம் வேடிக்கை பாக்கிற வயசு.:)) அரைத்து சலித்து எடுத்துக்கணும்.

அரைத்த அரிசிமாவு,பொ.கடலை மாவு,வெண்ணெய்,எள்ளு,சீரகம்,உப்பு கூடவே கொஞ்சம் காய்ஞ்ச எண்ணெய் சேர்த்து பிசைந்தா முறுக்குக்கு மாவு ரெடி. அக்காக்களின் பழைய தாவணி,அப்பாவின் பழைய வேஷ்டி எல்லாம் பீரோவில இருந்து அன்று வெளியேவரும். அவற்றை விரித்துப்போட்டு முறுக்குப்பிடியில் மாவைப்போட்டு ஒரு ஆள் பிழியப்பிழிய இன்னொரு ஆள் முறுக்கை பெரீய்ய இரும்பு வாணலியில் சுட்டு எடுப்பார்கள்.

அந்த முறுக்குப்பிடியை அழுத்திப் பிழிவது என்பது ஒரு பெரியவேலை! கை பெண்டு கழண்டுடும்.:) அதே மாதிரி எண்ணெய் பொங்காம இருக்க என்று கொய்யா இலை , கொஞ்சூண்டு புளி இதெல்லாமும் போடுவாங்க.

முதல்லயே கொஞ்சம் கடலைப்பருப்பு ஊறவைத்து இருப்பாங்க..பாதி முறுக்கு பிழிந்ததும், மாவுடன் ஊறிய கடலைப்பருப்பை சேர்த்து பிசைந்து கைமுறுக்கு,தட்டமுறுக்கு சுடுவாங்க. எங்கம்மா சுத்தும் கைமுறுக்கு பத்தி சொல்லியே ஆகணும்..அவ்வளவு அழகா சுத்துவாங்க. அந்த பக்குவம் எங்க பெரியக்காவுக்கு மட்டும் வந்திருக்கு..நானும் ஒரு சிலமுறை முயற்சித்தேன்.சரியா வரல்ல. :-|

ஃப்ளாஷ்பேக் ரொம்ப போகுது,இப்ப ப்ரெஸென்ட்டுக்கு வரலாம். இங்கே எனக்கு புழுங்கலரிசி கிடைப்பதே குதிரைக்கொம்பு..அப்படி வாங்கினாலும் முறுக்குக்கு அவ்வளவா நல்லா இருப்பதில்ல,அதனால ரெடிமேட் அரிசிமாவுலயே முறுக்கு சுட ஆரம்பிச்சிட்டேன். மிளகாய் மட்டும் தனியா அரைத்து போட்டு பிசைந்துடுவேன்.

தேவையான பொருட்கள்
அரிசிமாவு-2கப்
பொ.கடலை மாவு-1/2கப்
வரமிளகாய்-12(காரத்துக்கேற்ப)
வெண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
சீரகம்-1டேபிள்ஸ்பூன்
எள்ளு-1டேபிள்ஸ்பூன்
உப்பு
தண்ணீர்
எண்ணெய்

செய்முறை
மிளகாயை இரண்டுமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து,கொஞ்சமா தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துக்கொள்ளவும்.
தண்ணீர் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து, கொஞ்சம் தண்ணீர், 2டேபிள்ஸ்பூன் காய்ந்த(சூடான) எண்ணெய் விட்டு பிசைந்துகொள்ளவும்.
முறுக்கு அச்சில் மாவை போட்டு வட்டமாக பிழிந்து..

சூடான எண்ணெயில் முறுக்குகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

எண்ணெய் மிதமான சூட்டில் காய்ந்தால் போதும்,எல்லா முறுக்குகளும் சுட்டுஎடுக்கும் வரை தீயின் அளவை ஒரேமாதிரி வைக்கவும். முறுக்கு தயார்..காற்றுப்புகாத டப்பாக்களில் எடுத்துவைக்கவும்.
************
தட்டமுறுக்கு

மேலே குறிப்பிட்ட அதே அளவுகள் மாவுடன் 1மணி நேரம் ஊறவைத்த 2டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பையும் கலந்து பிசைந்துகொள்ளவும். (எள் தேவையில்லை)

சிறு உருண்டைகளாக எடுத்து,எண்ணெய் தடவிய ப்ளாஸ்டிக் பேப்பரில் வட்டமாகத் தட்டிக்கொள்ளவும்.
எண்ணெய் காயவைத்து பொரித்தெடுக்கவும்.மொறு-மொறு தட்ட முறுக்கு தயார்.
முறுக்கில் கடுகு இருக்குதா,மிளகு இருக்குதா என்று ஆராய்ச்சி செய்பவர்களுக்காக இன்னொரு டைட் க்ளோஸ்-அப்!! :)))))))))
எல்லாரும் முறுக்கு சாப்பிடுங்க. தீபாவளிக்கு இன்னும் முழுதா 2 நாட்கள் இருப்பதால் இப்பவே அட்வான்ஸ் வாழ்த்து சொல்லமாட்டேன்.:)

21 comments:

 1. சூப்பர் முறுக்கு!! நான் நாளைக்கு செய்யப்போறேன். இன்னிக்குதான் இனிப்பு செஞ்சு முடிச்சேன். முடிஞ்சா நாளைக்குள்ள பதிவு போட்டுடறேன்.

  ReplyDelete
 2. நாந்தான் முதல்ல!! எனக்கு முறுக்கு ஒரு பார்சல்!

  ReplyDelete
 3. :-) Murukku and thattai superb..nice clicks..

  ReplyDelete
 4. Rendavatha vandhu comment potta murukku tharamateenkala Mahi??

  ReplyDelete
 5. சுகந்திக்கா,நான் முறுக்கு அனுப்பிடறேன்,நீங்க இனிப்பு அனுப்பிடுங்க.எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்கலாம்.வேலை முடிஞ்சது!:)

  நித்து,முதலாவது-ரெண்டாவது எல்லாம் இல்ல,இங்கே வரும் எல்லாருக்கும் முறுக்கு உண்டு.

  வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சுகந்திக்கா&நித்து!

  ReplyDelete
 6. Murukkum super, Flash backum Super. Enjoy..

  ReplyDelete
 7. wow..perfect murukku...lovely conversation.. liked it..

  ReplyDelete
 8. பார்க்கவே ஆசையாக இருக்கு மகி.பார்சல் ப்ளீஸ்.பகிர்வுக்கு மிக்க நன்றி.என்னிடம் இங்கு முறுக்கு அச்சு இல்லையே ,இருந்தால் உடன் செய்து விடுவேன்.

  ReplyDelete
 9. தீபாவளி வருதே.முறுக்கு,தட்டை எல்லாம் அமர்க்களப்படுகின்றது.சும்மா சொல்லக்கூடாது மகி.உங்கள் கை வண்ணத்தில் உருவான முறுக்கு அவ்வளவு அழகாக சுற்றி எடுத்து இருக்கீங்க.

  ReplyDelete
 10. தீபாவளி வந்தாச்சு போல மகி . கல்யாணம் பண்ணி கொடுத்தது உங்க ஊர்ல தான் மகி. தீபாவளி வாழ்த்துக்கள் !!!

  ReplyDelete
 11. சூப்பரா இருக்கு மஹி முறுக்கு . இங்கேயும் ரெடி ஆகிட்டு இருக்கு, முறுக்கு இன்னைக்கு தான் . அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. Looks Perfect!
  தீபாவளி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 14. முறுக்கு, தட்டை முறுக்கு ரெண்டுமே நல்லா அழகா இருக்கு.எப்படிப்பா இந்த முறுக்கு இவ்வளோ அழகா வட்டமா செய்து இருக்கீங்க.செய்துபாக்கனும்னு ஆசையாதான் இருக்கு...என்னிடம் முறுக்கு குழாய்லாம் இல்லை.எனக்கும் அனுப்பி வையுங்க மகி.பார்சலில்.இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.முறுக்கெல்லாம் ரெடியாகுது சரி...தீபாவளிக்கு புதிய ட்ரெஸ்லாம் எடுதாச்சா???

  ReplyDelete
 15. முறுக்கு,தட்டை 2மே சூப்பர்ர் மகி!!இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 16. SUPER! ENAKKUM MURUKKU PARCEL PLEASE!

  NO MURUKKUPPIDI NOW.. WILL TRY AFTER FEW YEARS :)

  ReplyDelete
 17. ம். Y க்கு அனுப்பினா எனக்கும் அனுப்பணும் சொல்லீட்டேன். ;)

  விதம் விதமா முறுக்கி அசத்துறீங்க. இந்த அச்சுல குக்கி டிஸ்க்கும் இருக்கா?

  ReplyDelete
 18. தீபாவளி பலகாரங்கள் ஒரு பார்சல்...

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. super murukkus Mahi, reminds me back home. Happy Deepavali to you and your family.

  ReplyDelete
 20. கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails