Tuesday, November 23, 2010

காரக்கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்தியெல்லாம் முடிந்து பலநாள் கழித்து இப்ப என்ன கொழுக்கட்டை ரெசிப்பின்னு பார்க்கறீங்களா? காரணம் கடைசியிலே சொல்லிருக்கேன்.:)
தேவையான பொருட்கள்
அரிசிமாவு-11/2கப்
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-3(காரத்துக்கேற்ப)
சிறிதாக நறுக்கிய தேங்காய்த்துண்டுகள்-1/4கப்
சிறிய கேரட்-1(விரும்பினால்)
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை-சிறிது
கடுகு-1/2ஸ்பூன்
க.பருப்பு,உ.பருப்பு-தலா ஒரு ஸ்பூன்
தேங்காயெண்ணெய்-1ஸ்பூன்
சமையல் எண்ணெய்-1ஸ்பூன்
தண்ணீர்-3/4கப்
உப்பு

செய்முறை
வெங்காயம்-மிளகாய்,கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும்.கேரட்டை காய்துருவியில் துருவிக்கொள்ளவும்.

கடாயில் சமையல் எண்ணெயை காயவைத்து, கடுகு-உ.பருப்பு-க.பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பாதி வதங்கியதும் துருவிய கேரட்(ஒரு கைப்பிடி பச்சைப்பட்டாணி மற்றும் விரும்பிய காய்களை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம்)சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி,தேங்காய்த்துண்டுகள் சேர்த்து கிளறி இறக்கி ஆறவைக்கவும்.
வதக்கி ஆறவைத்ததுடன் அரிசிமாவை சேர்த்து கலந்துகொள்ளவும்.
3/4கப் தண்ணீருடன் மீதி உப்பு-1ஸ்பூன் தேங்காயெண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்றாக கொதிவந்தவுடன் மாவுக்கலவையுடன் தண்ணீரை சேர்த்து ஸ்பூனால் நன்றாக கிளறி,பத்துநிமிடங்கள் மூடிவைத்துவிடவும்.
மாவு சற்றே ஆறியதும், சப்பாத்திமாவு பதத்துக்கு பிசையவும்.
பிசைந்த மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து
7-8 நிமிடங்கள் வேகவிடவும்.
சுவையான கொழுக்கட்டை ரெடி.இதிலே இந்த தேங்காய்த்துண்டுகள் ரொம்ப ருசியா இருக்கும்..செய்து சாப்பிட்டுப் பாருங்க.
(முன்குறிப்பாக வந்திருக்கவேண்டிய:))பின்குறிப்பு
எங்க வீட்டில் கொழுக்கட்டை புழுங்கல் அரிசியை ஊறவைத்து அரைத்து, வதக்கியவெங்காயம்-மிளகாய் கலவையுடன் அரைத்தமாவை சேர்த்து வதக்கி,ஆறவைத்து,கொழுக்கட்டைகளாகப் பிடித்து வேகவைப்பதுதான் வழக்கம். ஆனால் இந்த முறை ஊறவைத்து அரைக்க நேரமில்லாத காரணத்தால் இப்படி ரெடிமேட் அரிசிமாவில் செய்துபார்த்தேன்.நன்றாக இருந்தது.

அது ஏன் அரிசியை ஊறவைத்து அரைக்க நேரமில்லாம போனது என்றால்,ஒரு நாள் ஈவினிங்,டீ-டைம் ஸ்னாக்ஸுக்காக பச்சைப்பயறு சுண்டல் செய்திருந்தேன்..வழக்கம்போல என் கணவர் டின்னர் டைமுக்குதான் வீட்டுக்கு வந்தார்."சுண்டலும் கொழுக்கட்டையும்தானே காம்பினேஷன்,நீ ஏன் சுண்டல் மட்டும் செய்திருக்கே? கொழுக்கட்டையும் செய்,டின்னராவே சாப்பிட்டுடலாம்"என்று சொன்னார்..அவர் பேச்சுக்கு மறுபேச்சு ஏது?;) கொழுக்கட்டை செய்தாச்சு.

இந்த பச்சைப்பயறு சுண்டல் இருக்கே..அதுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தங்க..ஒரு நாளாவது சரியான பக்குவத்தில வேகவைக்க நினைக்கறேன்,நடக்க மாட்டேன்னுது..நிறைய பேர்கிட்ட டிப்ஸ் எல்லாம் வாங்கி வேகவைத்து பார்க்கிறேன்..ம்ஹும்! காஷியஸா 3 விசில்ல இறக்கி, குளிர்ந்த நீர் ஊற்றி ப்ரெஷரை போகவைத்து திறந்தா பயிறு முழுசு முழுசா முழிச்சிட்டு நிக்கும்..வெறுத்துப்போயி திருப்பி ஒரு விசில் வைச்சா,மசியலா ஆகிருக்கும்! ஊறவைத்து வேகவைத்துப் பார்த்துட்டேன்,வறுத்து வேகவைத்துப்பார்த்துட்டேன்,இன்னும் அந்த டெக்னிக்(!!??) புடிபடமாட்டேங்குது.

இந்த முறையும் அதே கதைதான்..முதநாள் வேகவச்சு,டென்ஷனாகி குக்கரோட ப்ரிட்ஜ்ல எடுத்து வச்சுட்டேன். அடுத்த நாள் பார்த்தப்ப குளிர்ல இறுகி கொஞ்சம் முழுபயிறா தெரிந்ததால் எடுத்து தாளிச்சா..அப்பவும் பழைய மாதிரியே ஆகிட்டது.பச்சைப்பயிறு ஷேப் இல்லைன்னாலும், டேஸ்ட் சூப்பரா இருந்தது. கேரட்,ஓமப்பொடி எல்லாம் போட்டு டெகரேட் பண்ணி சமாளிச்சுட்டம்ல? ஹிஹி!
ஹலோ..ஓடாதீங்க,நில்லுங்க!கொஞ்சம் சுண்டல் சாப்ட்டுட்டு போங்க..சாப்பிட்ட இரண்டு ஜீவன்களுமே(நாங்கதான்) நல்லா இருக்கு, நீங்களும் தைரியமா சாப்பிடலாம்..ஹலோ...ஹலோஓஓஓ!!!...:))))))))))

24 comments:

  1. super combination, kozhukkattai looks very nice, beautiful photos, great

    ReplyDelete
  2. நல்லா இருக்குது மகி!! பாசிப்பயறு குக்கர்ல வெக்காம பாத்திரத்துல தண்ணீர் கொதிக்க வைத்து வேக வைத்து பார். எந்த பதம் வேணுமோ அந்த பதத்துக்கு எடுத்து விடலாம். நானும் அரிசி மாவுல செஞ்சதில்ல. அடுத்த முறை செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. Kozhukattai pudhu vithama irukku..sundal and kozhukattai combo is new to me..

    ReplyDelete
  4. கொழுக்கட்டை சூப்பர்,சுண்டல் கேரட் துருவல்,ஓமப்பொடி எல்லாம் போட்டு அமர்க்களமாக இருக்கு.பாசிப்பயறை காலை ஊறவைத்து மாலை சும்மாவே பாத்திரத்தில் வேக வைத்தால் பத்தே நிமிடம் பஞ்சாய் வெந்து ஒற்றை ஒற்றையாய் இருக்கும்.அதுவும் பாத்திரத்தில் சீக்கிரமாக வேகனும்னால் ஒரு அரைஸ்பூன் நெய் போட்டு ,மூடி வேக வைத்தால் இன்னும் சீக்கிரம் வெந்து விடும்.மறந்து அடுப்பில் போட்டுவிட்டால் இங்கும் குழைந்து விடும்.சுண்டல் குழைந்தால் கொழுக்கட்டையாக அதையும் பிடித்து சாப்பிடவேண்டியது தான்.இனிப்பு,காரம் என்று சூப்பராக செய்திடலாம்.

    ReplyDelete
  5. @கருத்துக்கு நன்றி வேணி!

    @சுகந்திக்கா&ஆசியாக்கா தேங்க்ஸ் பார் தி டிப்ஸ்! இதுவரை பாத்திரத்திலே வேகவச்சதில்ல,இனி செய்துபார்க்கிறேன். சூப்பர் டிப்ஸ் குடுத்திருக்கீங்க,தேங்க்ஸ்!:):)

    @இமாவுக்கு ஒரு _()_ !

    ReplyDelete
  6. நித்து,சுண்டல்-கொழுக்கட்டை இவரோட பாட்டி ஊர் பஜனை கோயில்ல பிரசாதமா தருவாங்களாம்.:)

    செய்துபாருங்க,நல்ல காம்பினேஷன்!நன்றி நித்து!

    ReplyDelete
  7. சூப்பர்ப் மகி...நானும் அரிசி மாவில் தான் செய்வோன்...

    பச்சைபயிறினை நான் microwave பாத்திரல் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 15 - 20 நிமிடங்கள் வைப்பேன்...சூப்பராக தனி தனியாக இருக்கும்..செய்து பாருங்க...

    நான் எப்பொழுதுமே ஊறவைத்த பயறு வகைகளை பிரஸர் குக்கரில் மட்டும் போடவே மட்டேன்...1...அது குழைந்துவிடும்...இரண்டாவது, சில சமயம் தோல் எல்லாம் பருப்பில் இருந்து வெளியில் வந்துவிடும்...அதனால் எப்பொழுதும் பாத்திரத்தில் அல்லது Microwaveயில் தான் வேகவைப்பேன்...

    ReplyDelete
  8. supera erukku mahi, nanum arisi maavil seithathu ellai, seithu parknum pola ullathu.Entha weekend special euthunuthan ninaikiren!

    ReplyDelete
  9. இந்த மெத்தட்ல கொழுக்கட்டை செய்தது இல்லை , பார்கும் போதே சூப்பரா இருக்கு டிரை பண்ணிடுவோம். பயிறு வகைகளை நானும் தனியா பாத்திரத்தில் போட்டு தான் வேக வைப்பேன்.

    ReplyDelete
  10. Kozhukkattai looks colourful and yummy. Even I boil the green gram to prepare sundal. Never pressure cooked it.

    ReplyDelete
  11. காய்வகைகள் எல்லாம் போட்டு நல்ல சத்தான கொழுக்கட்டையை காட்டிவிட்டீர்கள் மகி.

    ReplyDelete
  12. நல்ல சத்தான ஒரு ரெசிப்பி.

    ReplyDelete
  13. Dear,I am happy to share the versatile blogger award with you .Please collect it from my blog.Please pass it on.

    ReplyDelete
  14. சத்தான கொழுக்கட்டை..பயிறு வகைகளை எப்போழுதும் குக்கரில் போட்டு வேகவைக்ககூடாது மகி.பாத்திரத்தில் போட்டு வேகவைத்தால் 15- 20 நிமிடங்களில் வெந்து உதிரியாக இருக்கும்..

    ReplyDelete
  15. Super idea Mahi,make with lentils,this sounds very nice,looks colorful too!

    ReplyDelete
  16. மகி, நல்லா இருக்கு. எங்க ஊர்லை கொழுக்கட்டைன்னாலே இனிப்பு தான். இது வித்யாசமா இருக்கு.

    ReplyDelete
  17. //எங்க ஊர்//லயும் //கொழுக்கட்டைன்னாலே இனிப்பு தான்.// ;)

    ReplyDelete
  18. ஹாய் மகி...காரக்கொழுக்கட்டை ரெஸிபி நல்லாருக்கு...ட்ரை பண்றேன்..கொழுக்கட்டை-பயறு காம்பினேஷன் இப்பதான் கேள்விப்படறேன்..உங்க வெந்தய தோசை நல்லா வந்தது. நன்றி.

    Enrenrum16

    ReplyDelete
  19. what a yummy kozhukattai.... simply superb.....

    ReplyDelete
  20. @கீதா,தகவலுக்கு நன்றிங்க.அடுத்த முறை பாலோ பண்ணிடறேன்.

    @குறிஞ்சி,நன்றிங்க.வீகெண்ட்ல செய்துபார்த்தீங்களா?:)

    /பயிறு வகைகளை நானும் தனியா பாத்திரத்தில் போட்டு தான் வேக வைப்பேன்./
    /I boil the green gram to prepare sundal. Never pressure cooked it./
    /பாத்திரத்தில் போட்டு வேகவைத்தால் 15- 20 நிமிடங்களில் வெந்து உதிரியாக இருக்கும்../
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!நான் மட்டும்தான் அப்ப குக்கர்ல போட்டு சொதப்பிட்டு இருந்திருக்கேன் போல!!எனிவேஸ்,its better late than never!இனி நானும் அப்படியே செய்யறேன்.நன்றி சாரு,காயத்ரி,மேனகா!

    @ஸாதிக்காக்கா,லஷ்மிஅம்மா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    @இண்டியன் ஸ்பைஸ்மேஜிக்,விருதுக்கு மிக்க நன்றிங்க!சீக்கிரம் வந்து வாங்கிக்கறேன்.

    @ஆமாம் ராஜி,கலர்புல் கொழுக்கட்டைதான்,பச்சைப்பட்டாணி சேர்த்திருந்தா இன்னும் கலர்புல்லா இருக்கும்.என் கணவருக்கு பிடிக்காது,அதனால் நான் சேர்க்கல.நன்றிங்க!

    வானதி,இமா,எங்க ஊர்ல கொழுக்கட்டைல இனிப்பு-காரம் ரெண்டுமே செய்வோம்.செய்து பாருங்க.நன்றி!

    @என்றென்றும் 16,கொழுக்கட்டை-சுண்டல் இது விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் காம்பினேஷன்ங்க.செய்து பாருங்க.நன்றி!

    @அகிலா,நன்றிங்க!

    @தயாநிதி சார்,பாராட்டுக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  21. First time on your site - These look very involved and delicious... Would like to try it out...
    When you find the time, do drop by my space
    http://priyasnowserving.blogspot.com/

    ReplyDelete
  22. Wish I knew more Tamil to follow you site - Does your site have a translation option? ty~

    ReplyDelete
  23. செய்ததைச் சொல்லுவதைவிட சொல்லியதைச் செய்து காட்டி நிரைகளைச் சொல்லி,படிக்க ஸ்வாரஸ்யமான,மனதில் பதியும்படியான.எழுத்து நடைக்கும் ஒரு சபாஷ் சொல்லுகிரேன்.கூடவே பைனாப்பில் கேஸரிக்கும். உங்கள்ப்ளாக் மூலம் இன்னும் அதிகம் மற்றவர்களையும் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.தொடருவேன்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails