Tuesday, November 16, 2010

காலா ஜாமூன்

தேவையான பொருட்கள்
பால் பவுடர்(non-fat dry milk powder)-11/2கப்
மைதாமாவு(all purpose flour)-1/2கப்
பேக்கிங் சோடா-1/4ஸ்பூன்
பேக்கிங் பவுடர்-1/4ஸ்பூன்
பால்(half&half milk)-1/4கப்
சிவப்பு ஃபுட் கலர்-3 துளிகள்
சர்க்கரை-11/2கப்
ஏலக்காய்-3
நெய்-1டேபிள்ஸ்பூன்
எண்ணெய்-ஜாமூன்கள் பொரிக்க.

செய்முறை
மைதாவுடன் பேக்கிங்சோடா,பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து வைக்கவும். வெண்ணெயுடன் பால்பவுடரை சேர்த்து பிசைந்து,மைதாவையும் கலந்து அந்த கலவையில் மாவை பிசைந்ததும், சிறிது மாவுடன் சிவப்பு நிறம் சேர்த்து பிசைந்துகொள்ளவும்.(குலாப் ஜாமூன் மிக்ஸ் செய்முறையை படங்களுடன் காண இங்கே க்ளிக் செய்யவும்)

2டேபிள்ஸ்பூன் மாவை தனியே எடுத்து வைத்துவிட்டு, மீதமுள்ள கலவையில் ஹாஃப்&ஹாப் ஊற்றி பிசைந்து 10 நிமிடங்கள் மூடிவைக்கவும்.

தனியே வைத்த மாவுடன் சிவப்பு நிறம் கலந்து,பாலை தெளித்து பிசைந்து மூடிவைக்கவும்.

10 நிமிடங்கள் கழித்து வெள்ளை மாவில் சிறு உருண்டை எடுத்து, வட்டமாகத்தட்டி, சுண்டைக்காய் அளவு சிவப்பு நிற மாவை ஸ்டஃப் செய்யவும்.
ஸ்டஃப் செய்த மாவை நன்றாக உருட்டி வைக்கவும்.

எண்ணெய்+நெய் காயவைத்து ஜாமூன்களை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். எல்லா ஜாமூன்களையும் பொரித்தபின்னர், மீண்டும் ஒருமுறை எண்ணெயில் போட்டு, நல்ல கருப்பு நிறம் வரும்படி எடுக்கவும்.

ஜாமூன்கள் பொரிக்கும்போதே சர்க்கரையைப் பாகாக காய்ச்சி,ஏலக்காய்த்தூள் போட்டு தயாராக வைக்கவும். பொரித்த காலா ஜாமூன்களை சற்று சூடாக இருக்கும்போதே, இளம் சூடாக இருக்கும் பாகில் ஊறவிடவும்.
இரண்டு-மூன்று மணி நேரங்கள் ஊறியபின்னர், காலாஜாமூன்கள் ரெடி.

குறிப்பு
சர்க்கரைப்பாகு கொதிக்க ஆரம்பித்ததும் 6-7 நிமிடங்களில் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். ஜாமூன்கள் ஊறவைக்கையில் சூடு ஆறியிருந்தால்,லைட்டாக சூடாக்கிக் கொள்ளவும்.

முதல்முறை செய்தபோது பச்சைநிறம் ஸ்டஃப் பண்ணினேன்..அப்போது அதனை சுவைத்த சென்னை நண்பி ஒருவர் சென்னை அடையார் க்ராண்ட் ஸ்வீட்ஸ்ல சிவப்பு நிறம் ஸ்டஃப் பண்ணி செய்வாங்க என்று சொன்னதால், இந்த முறை சிவப்பு! :)
எது நல்லா இருக்கு? பச்சையா,சிவப்பா???

22 comments:

  1. சோ யம்மி மஹி.. எனக்கு சிவப்பு கலர் தான் பிடிச்சிருக்கு.. மாட்சிங்கா இருக்கு :)

    ReplyDelete
  2. கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரூஊஊஊ:)

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. அந்த மஞ்சள் ரோஜாவும் அழகா இருக்கு ள்:)

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  4. மகி ரெண்டையும் பார்சல் அனுப்பு. சாப்பிட்டு பாத்துட்டு சொல்றேன்:-)!
    சிவப்பு பார்க்க நல்லா இருக்குது.

    ReplyDelete
  5. wow... jamun's looks superb dear.... bookmarked urs....

    ReplyDelete
  6. //எது நல்லா இருக்கு? பச்சையா, சிவப்பா??? //

    கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரூஊஊஊ:)

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

    ReplyDelete
  7. ஹை..ஸ்வீட்டு...ஸ்வீட்டு... :-))

    ReplyDelete
  8. ரெண்டு கலருமே நல்லா இருக்கு மஹி...

    ReplyDelete
  9. parkave romba nalla erukku Mahi, red color than matchinga erukku.

    ReplyDelete
  10. வாவ்..சூப்பரான ஜாமூன்

    ReplyDelete
  11. Green and red both looks lovely. Kala jamuns look inviting..

    ReplyDelete
  12. Wow,the stuffing makes it look awesome,great job Mahi!

    ReplyDelete
  13. Very tempting kala jamuns...never made this before..thanks for the recipe..

    ReplyDelete
  14. very tempting jamun!! i like green colour....

    ReplyDelete
  15. @சந்தனா,மெஜாரிட்டி ரெட்கலருக்குக்குதான் கிடைச்சிருக்கு.இனி சிவப்பே ஸ்டஃப் பண்ணறேன்.:)

    @ஹைஷ் அண்ணா,வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! /கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரூஊஊஊ:)/எனக்கும் அப்படியே!! :) மஞ்சள்ரோஜாவை ரசித்தமைக்கும் நன்றி!

    @சுகந்திக்கா,அனுப்பிடறேன்.சாப்பிட்டுப்பார்த்து சொல்லுங்க.;)நன்றி!

    @ஜெய் அண்ணா,உங்களுக்கு மேலே சொன்ன கமெண்ட்டே ரிப்பீட்ட்ட்டு!:)

    @அகிலா,இண்டியன்ஸ்பைஸ் மேஜிக்,நன்றீங்க தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

    @ஸ்ரீவித்யா,நன்றிங்க!

    @சாரு,ரெண்டு கலருமே பிடிச்சிருக்கா?எடுத்துக்கோங்க! நன்றி சாரு!

    @குறிஞ்சி,உங்க வோட்டும் சிவப்புக்கா?ம்ம்..சரி,எனக்கும் சிவப்புதான் பிடிச்சிருக்கு.

    @ஸாதிகாக்கா,மிக்க நன்றி!

    @காயத்ரி,உங்களுக்கும் ரெண்டு கலரும் பிடிச்சிருக்கா? நன்றிங்க!

    @ராஜி,நித்து வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    @மேனகா,வானதி,கீதா நன்றிங்க! மேனகா உங்களுக்கு பச்சைகலர் பிடிச்சிருக்கா? எனக்கும் பச்சை ரொம்ப பிடிச்சிருந்தது.:)

    @குறிஞ்சி,விருதுக்கு மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  16. மிக நேர்த்தியான ஜாமுன்,ஆரஞ்ச் கலர் பார்ப்பதற்கு மிக்க அழகு.

    ReplyDelete
  17. அட! எப்படி மிஸ் பண்ணினேன்! அப்போ பார்த்திருந்தால் முயற்சி செய்து பார்த்திருப்பேன். இனி நோ வே! ஒன்று மட்டும் பார்சல் ப்ளீஸ். :-)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails