Wednesday, March 23, 2011

பாடல்கள் தொகுப்பு-3


அந்தக்காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை பெண்களை வர்ணித்து வந்த பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல்கள் இந்த நான்கும். காலங்களில் அவள் வசந்தம்...இந்தப்பாடலில் P.B.ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரலும்,பாடல் வரிகளும் என்னை மிகவும் கவர்ந்தது.



அபூர்வ ராகங்கள்..இடியாப்ப சிக்கலான ஒரு கதையை அழகாக படம்பிடித்திருப்பார் K.பாலசந்தர். எல்லாப் பாடல்களும் நன்றாக இருக்கும்.



கொஞ்சம் லேட்டஸ்ட்டா வந்த பாடல்களில் இரண்டுமே பிரபு படங்களாவே இருக்கு. ரம்பாவா இது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு இந்தப்பாடலில் இருப்பாங்க..பானுப்பிரியாவும் அழகா இருப்பாங்க..பாடல்வரிகளும் அழகா இருக்கும். :)


நதியா-வை பூவே பூச்சூடவா படத்திலிருந்தே எனக்கு மிகவும் பிடிக்கும்..இந்தப்பாட்டில் புடவையில் மிக அழகா இருப்பாங்க,மீனாவை (இந்தப்பாடலில்) அவ்வளவாப் பிடிக்காது. S.P.B.குரலில் இன்னொரு இனிமையான பாட்டு!


~~~~~
நிழல்கள் படத்தில் பூங்கதவே,தாழ் திறவாய்...ஹீரோயின்(பேர் தெரியவில்லை) ஹோம்லியா அழகா இருப்பாங்க..இசையும் நன்றாக இருக்கும்.



ரெட்டைவால் குருவி படத்தில் ராஜ ராஜ சோழன் நான்..நானும் என்னவரும் ரசித்துக் கேட்கும் பாடல். பாடல் வரிகள் கிட்டத்தட்ட மனப்பாடம்னே சொல்லலாம். யூ ட்யூப் லிங்க் எடுத்து வைத்திருந்தேன்,வொர்க் ஆகல இப்போ..மறுபடி தேடியதில் கிடைத்தது இது..



பகல் நிலவு படத்தில் இந்தப்பாடல் ரொம்ப நல்லா இருக்கும்..ரேவதி-முரளி, அழகான லொகேஷன் எல்லாத்தையும் விட இளையராஜா-ஜானகி இருவரின் குரலும் கலந்து கலந்து வருவது எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும். :)
பூ மாலையே..தோள் சேரவா...

இதுவரை நான் ரசித்த பாடல்களின் தொகுப்பு இங்கே.

16 comments:

  1. அருமையான தொகுப்பு,ரொம்ப பிடித்தது ரெட்டை வால் குருவி படத்தில் வரும் பாடல்..

    ReplyDelete
  2. தொகுப்பு அருமை...
    பூங்கதவே .. மிகவும் பிடிக்கும் எனக்கு..

    ReplyDelete
  3. பூங்கதவே .. மிகவும் பிடிக்கும் எனக்கு...enakum enakum pidikum..

    ReplyDelete
  4. Super ever green collections Mahi, that too first song & fifth song is my all time favorite.. thanks for video link too

    Special thanks for your wishes Dear..

    ReplyDelete
  5. எல்லாமே எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்...ரெட்டைவால் குருவி பட பாடல் அனைத்துமே எனக்கு மிகவும் பிடிக்கும்...

    ReplyDelete
  6. அனைத்து பாடல்களும் எனக்கும் பிடித்தவை ரொம்ப நல்லா இருக்கு மஹி

    ReplyDelete
  7. அருமை.இனிமை நிறைந்த பாடல்கள்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. மிகவும் அருமையான பாடல் கலெக்‌ஷன்ஸ்.

    ReplyDelete
  9. அனைத்தும் ரசித்த பாடல்கள்.பகிர்வுக்கு மகிழ்ச்சி மகி.

    ReplyDelete
  10. எல்லா பாடல்களும் எனக்கும் ரெம்ப பிடித்தவை தான் மகி... "என்னவென்று சொல்வதம்மா" ரெம்ப ரெம்ப பிடிக்கும்... நதியா ரெம்ப நாள் கழிச்சு ரீ-என்ட்ரி ஆனா படம்'னோ என்னமோ... அழகான வரிகளும் கூட...thanks for sharing...:)

    ReplyDelete
  11. I like the kalangallil aval vasantham......
    Jemini sirs acting was very nice in that film.
    Thanks sitting at USA you made me enjoyg melodies
    songs.
    viji

    ReplyDelete
  12. very nice songs, Mahi. Good selections.

    ReplyDelete
  13. ம்... எல்லா பாட்டுமே எனக்கும் பிடிசா பாட்டுக்கள்தான் ..செலக்ட் செய்து போட்டிருக்கீங்க..!! சூப்பர் :-))

    ReplyDelete
  14. 7 paadalgalum arumai..

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails