~~~~~
கடாயில் எண்ணெய் காயவைத்து,சீரகம் தாளித்து, கொஞ்சம் முந்திரி- நீளமாக நறுக்கிய பனீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வச்சிருங்க.
ஒரு பெரிய வெங்காயம்-2 பச்சைமிளகாயைப் பெரிய துண்டுகளா நறுக்கி அதே எண்ணெயில் வதக்குங்க..
வெங்காயம்-மிளகாயை கடாயில் சேர்த்து கிளறினதும் மூடி வச்சிருங்க. 2-3 நிமிஷம் அப்படியே இருக்கட்டும்.
பெரிய துண்டுகளா நறுக்கிய 2 கேரட்-10 பீன்ஸ்-ப்ரோக்கலி பூக்கள் ஆறேழு ,நீளமாக நறுக்கிய பாதி கேப்ஸிகம் எல்லாத்தையும் கடாயில் சேர்த்து..
நறுக்கிய தக்காளி ஒன்றையும் சேர்த்து 2 நிமிஷம் மூடி வையுங்க. சமைக்கும் நேரம் முழுவதும் அடுப்பு அதிகமான சூட்டிலேயே இருக்கட்டும்.
தக்காளி கொஞ்சம் குழைந்ததும், பொரித்த பனீர்-முந்திரியை சேர்த்து கலந்து..
அரை ஸ்பூன் மல்லித்தூள்-அரை ஸ்பூன் சீரகத்தூள்-கால்ஸ்பூன் சோம்புத்தூள்-அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் ,உப்பு போடுங்க. (ஸ்பூன் சைஸை கவனிங்க. :)) அப்புறம் கொஞ்சமா தண்ணி தெளிச்சு, 2 நிமிஷம் வேகவிடுங்க.
ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் விழுதை சேர்த்து, ஒரு நிமிஷம் வதக்கி,
கொத்துமல்லி இலை-உலர் திராட்சை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிருங்க. க்ரேஸி கே ஷூ வெஜிடபிள்ஸ் தயார்.
காரசாரமா,திராட்சையின் இனிப்புடன் டேஸ்ட் சூப்பரா இருந்தது. நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்க.:)
நளபாகமா நடக்கட்டும் நடக்கட்டும்,அருமை.அருமை.
ReplyDeletePaakkave supera irukku..
ReplyDeletegreat,both the recipe and ur hubby cooking for you :)
ReplyDeleteமகி ஒரு பார்சல் ப்ளீஸ்!!!
ReplyDeleteகண்ணுக்கும் அழகாக வாய்க்கும் ருசியாக நன்றாக படிக்கவும்ஸ்வாரஸ்யமாக எல்லாம்சேர்ந்த ருசியான கலவை
ReplyDeletethough loaded with caories this looks very nice and rich
ReplyDeleteசூப்பரா இருக்கு மகி,சீக்கிரம் செய்து பார்க்கிறேன்...
ReplyDeletepaarkkave nallaa irukku mahi.super.
ReplyDeletemahi supera irukku ..
ReplyDeleteமஹி, நீங்க கஜூ வை எதுக்குள் போட்டுத் தந்தாலும் நான் கண்ணை மூடிட்டே சாப்பிடுவேன், நல்ல ரெசிப்பி.
ReplyDeleteஆமா... ஒரு சந்தேகம்... அது ஆருடைய கை?... கறண்டி பிடிக்கிற கையெல்லாம் இப்போ மாறிட்டேஏஏஏஏஏ வருது..... நாங்க ரொம்ப முன்னேறிட்டோம்:)))))(ஐ மீன் லேடீஸ்) ஆ... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:).
ஹாய் மஹி...,இப்படியல்லாவா இருக்கணும்.என்னடா இன்னைக்கு செய்யலாமுன்னு மண்டையை போட்டு பிச்சிக்கிட்டு இருக்கிறப்ப அவர்ட்ட போய் இன்னைக்கு ஒரு ஐடியா சொல்லுங்களேன் என கேட்டா... அம்மா தாயே நீயே ஏதாவது செய்யுமா... என்னை ஆளைவிடுன்னு எங்க வீட்டில சொல்லுவாங்க...
ReplyDeleteஆனால் அங்கே அண்ணன் சமைத்தே கொடுத்துட்டாராக்கும்.. அதுவும் அசத்தலான சமையல்.பார்க்கும் போதே சூப்பராக இருக்கு மஹி...
ட்ரை பண்ணி பார்த்திட வேண்டியதுதான்.
அண்ணனுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டை தெரிவித்திடுங்க (என் சார்பாக)சரியா...
வாழ்த்துக்கள்.
அன்புடன்,
அப்சரா.
ரொம்ப கொடுத்துவச்சவங்க நீங்க...இதே மாதிரி எல்லாம் அக்ஷ்தா பிறக்கும் முன் இவர் செய்வார்..இப்ப எல்லாம் கிச்சன் பக்கம் கூட வருவதில்லை...உங்களை பார்த்தால் ரொம்ப பொறாமையாக இருக்கு....சுத்தி போட்டுக்குங்க..
ReplyDelete// கொஞ்சம் முந்திரி- நீளமாக நறுக்கிய பனீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வச்சிருங்க.//
ReplyDeleteஇதுக்கு அண்ணாத்த அகராதியில பொன்னிறம் ன்னு பேரா? :)
மனசுல ஒரு "செப்" பில்டப்போட தான் சமச்சிருக்கார்.. சாப்பிட்டுப் பார்த்து தான் சொல்லோணும் :)
ஆசியாக்கா,உங்க கமெண்ட்டைப் பாத்துட்டு அவருக்கு ஒரே சிரிப்பு! ;) அத்தி பூத்தமாதிரிதான் நடக்குது இதெல்லாம்.நன்றி ஆசியாக்கா!
ReplyDeleteநன்றி காயத்ரி!
ராஜி,ஆமாம் எப்பவாவது இப்படி ஒரு ப்ரேக் கிடைச்சா நல்லதுதானே,நானும் அட்லீஸ்ட் ஒருநாளாவது நல்ல சாப்பாடு சாப்பிடலாம்.;)
சுகந்திக்கா,பார்சல் அனுப்பியாச்! :)
காமாட்சிமா,வருகைக்கும் அன்பான வார்த்தைகளுக்கும் நன்றி!
ஜெயஸ்ரீ,கொஞ்ச்ம் ரிச்சான சைட் டிஷ்தான் இது.ஆனா டேஸ்ட் சூப்பரா இருக்கும். நன்றிங்க!
மேனகா,செய்துபாத்து சொல்லுங்க! நன்றி!
ப்ரியா,தேங்க்ஸ்பா!
தேங்க்ஸ் சாரு!
அதிரா,/ஒரு சந்தேகம்... அது ஆருடைய கை?... /கர்ர்ர்ர்ர்ர்ர்ர்! முதல்லயே சொல்லிருக்கேனே,இது என் கணவரின் ரெசிப்பி,போட்டொ மட்டும்தான் நான் எடுத்திருக்கேன்னு.
நம்ம முன்னேறிட்டோம்தான்.நம்ம அம்மா காலத்தில எல்லாம் இப்படி நடந்திருக்குமா என்ன?!! :))))))) தேங்க்ஸ் அதிரா!!
அப்ஸரா,உங்க கருத்தை அவரே படிச்சுட்டார்,உங்களுக்கு நன்றியும் சொல்லச்சொன்னார்! :) நன்றி அப்ஸரா!
ReplyDeleteகீதா,/இதே மாதிரி எல்லாம் அக்ஷ்தா பிறக்கும் முன் இவர் செய்வார்../நீங்களே சொல்லிட்டீங்க,உங்களவர் செய்திருக்கார்னு!நான் போட்டோ எடுத்து போஸ்ட் பண்ணறேன்,நீங்க அதுமட்டும் செய்யல,அவ்ளோதானே?! ஹிஹி!!
தேங்க்ஸ் கீதா,வருகைக்கும் கருத்துக்கும்!
எல்போர்ட்..இன் த பஸ்,உனக்கு ஒழுங்கா கமெண்ட் போடத்தெரியாதா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!
---இது உங்கண்ணாத்தையின் ரிப்ளை!! :)
தானம் குடுக்கற மாட்டை பல்லைப் பிடிச்சுப் பாக்கிறமாதிரி ஏதோ ஒண்ணு-ரெண்டு முந்திரி கொஞ்சம் கலர் மாறினதுக்காக இப்புடியெல்லாம் ஓட்டக்கூடாது.அப்பறம் கிச்சன் பக்கமே வரமாட்டாரல்ல?!! ;) :)
ஆகா..உங்க ரங்க்ஸ் உங்களுக்கு போட்டியா சமையல் வலைப்பூ ஆரம்பிச்சுடப் போறார்... ;)...ஆனாலும் நீங்க அழகா போட்டோ எடுத்ததுனால தான் அவரோட சமையல் ருசியா இருக்கிறா மாதிரி தெரியுது... அப்படித்தானே மஹி? (ஏதோ நம்மால முடிஞ்சது ;))
ReplyDeleteகாய்கறிகளோட முந்திரிப் பருப்பு காம்பினேசனா? ரைட்டு! :)
ReplyDeleteமகி, உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்!
http://balajisaravana.blogspot.com/2011/03/blog-post_07.html
very nice recipe, looks great for chapati
ReplyDeleteபானு,அவருக்கு வலைப்பூ ஆரம்பிக்கிற அளவுக்கு பொறுமை-ஆர்வம் இல்லைங்க.அப்பப்ப எட்டிப்பார்க்கும் ஆசைக்கு இங்கேயே இப்படி போஸ்ட் போட்டுக்குவார்.:)
ReplyDeleteநீங்க ரெம்ப நல்லவிங்களா இருக்கீங்க,மெனிமெனிமெனி தேங்க்ஸ் பானு! ;)
பாலாஜி, இது வழக்கமா நாங்க போகும் Thai restaurant-ல அடிக்கடி சாப்பிடற டிஷ். அதே மாதிரி செய்ய ட்ரை பண்ணினார்.:)
தொடர்பதிவுதானெ..பாத்தேன்,எழுதறேன். நன்றி!
வேணி,தேங்க்ஸ்ப்பா!
வித்தியாசமாக உள்ளது மகி.
ReplyDeleteSweet + Sour + Spicy gravy...hmmm... அப்படியே கண்ணுல தண்ணி வருது... பின்ன, பசி நேரத்துல இப்படி வெறுப்பேத்தினா கண்ணுல தானே தண்ணி வரும்...:)
ReplyDeleteமகி - உங்ககிட்ட ஒரு ரெசிபி கேக்கணும்னு நெனச்சேன்ப்பா... நம்ம ஊர்ல ராகி களி செய்யறாப்ப அதுக்கு சைடு டிஷ் ஒண்ணு செய்வாங்க தெரியுமா... "காட்ட கொழம்பு" னு பேச்சு வழக்குல சொல்றது, சரியான பேரு தெரில... Do you know that recipe? தெரிஞ்சா போஸ்ட் பண்ணுங்க...அது சப்பாத்திக்கு கூட நல்ல சைடு டிஷ்...தேங்க்ஸ் மகி..:))
ஸாதிகாக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ReplyDeleteபுவனா,வெறுப்பேத்தினா கோவம்தான் வரும் எனக்கு.நீங்க கண்ணுல தண்ணி விடறீங்களே?!! கூல் டவுன் புவனா! :)
ராகி-களிக்கு சைட் டிஷா?? எங்க வீட்டில் களி செய்ததே அபூர்வம்.பருப்பை பச்சையா அரைத்து,முருங்கைக்கீரையெல்லாம் போட்டு களிக்கு குழம்பு செய்யறதுன்னு அம்மா சொல்லுவாங்க.நீங்ககேப்பது அதுவான்னு தெரிலையே! அம்மாகிட்டவேணா கேட்டு சொல்லறேன் புவனா.
Un plato vegetariano siempre es bello y lleno de vitaminas y además saludable,abrazos.
ReplyDelete