இதையெல்லாம் ஒரு ரெசிப்பின்னு ப்ளாக்ல போடணுமான்னு ஒரு கேள்வி எழுவது(உங்களுக்கில்ல,எனக்குத்தான்,ஹிஹி!) ஆச்சரியமில்லை.
ஆனா (எனக்கில்ல,உங்களுக்கு) வேறவழியில்லை,என்சொய்! :)
MAGGI (தமிழ்-ல எழுதுனா மகி நூடுல்ஸுன்னு படிப்பீங்க,அதுக்குதான் இங்கிலீஷ்!;)) நூடுல்ஸ் எனக்கு அறிமுகமானது பக்கத்து வீட்டிலிருந்த ராஜண்ணா வீட்டில்தான்! பள்ளிப்பருவத்திலே இது மேல ஏற்பட்ட க்ரேஸ் இவ்வளவு நாளாகியும் இன்னும் குறையல. என்னவருக்கும் அப்படியே! இந்த நூடுல்ஸை செய்வது ரெம்ப ஈஸி..கொதிக்கறதண்ணில நூடுல்ஸ்&டேஸ்ட் மேக்கரை போட்டா 2 நிமிஷத்திலே ரெடியாகிரும்னுதான் கவர்ல போட்டிருப்பாங்க.ஆனா பாருங்க, அங்கங்கே கடுகு-உ.பருப்பு-க,பருப்பு (வெங்காயம்,ப.மிளகாய்,வெஜிடபிள்ஸ் இந்த மாதிரி "மானே, தேனே,பொன்மானே" இதெல்லாம் நீங்களே போட்டுக்கணும்.:)) இல்லாம ப்ளெய்ன் நூடுல்ஸை சாப்பிடுவதுங்கறது என்னாலே இமேஜின் பண்ணக்கூட முடியாது. (அவ்ளோ நீளம் என் நாக்கு!:P)
கொஞ்ச நாளுக்கு முன் இண்டியன் ஸ்டோர்ல ஆட்டா நூடுல்ஸ் வந்திருந்தது. அதைப் பார்த்ததுமே என்னவர் வாங்கிட்டு வந்து, அவரே செய்தார். நெட் ரிசல்ட் சூப்பரா இருந்தாலும், அவர் சிங்க்ல போட்டிருந்த பாத்திரங்கள், காலியாகியிருந்த எண்ணெய்க் கிண்ணம் இதையெல்லாம் பார்த்து இப்ப அவரை கிச்சனுக்குள்ள விடறதில்ல நானு! (அவர் எப்படி செய்தாருன்னு தெரிந்துக்க ஆசைப்பட்டா கமெண்ட்ல சொல்லுங்க,உங்களுக்காக இன்னொருநாள் சமைக்கசொல்லி(!!?!!) போஸ்ட் பண்ணறேன். எப்படி செஞ்சாலும் அவர் செய்த மாதிரி வரமாட்டேன்னுது..அவரும் கிச்சன் பக்கம் வரமாட்டேன்றாரு, எங்கே சான்ஸ் கிடைக்கும்ணு வெயிட் பண்ணிட்டிருக்கேன், ஒரு நாலஞ்சு பேராவது கேளுங்க,ப்ளீஸ்!! :))
இது நான் செய்யும் முறை..
காய்களை(ஒருகேரட்- நாலஞ்சு பீன்ஸ்-கொஞ்சம் ப்ரோக்கலி துண்டுகள்-ஒரு கைப்பிடி பச்சைப்பட்டாணி) கொஞ்சம் பெரிய துண்டுகளா நறுக்கி, லைட்டா உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணி தெளிச்சு மைக்ரோவேவ்-ல 2 நிமிஷம் வேகவைச்சுப்பேன். கடுகு-உ.பருப்பு-க.பருப்பு தாளிச்சு, நீளமா நறுக்கின ஒரு பெரியவெங்காயம், ஒரு பச்சைமிளகாய்,(preferably கலர்)கேப்ஸிகம்,கறிவேப்பிலை தாளிச்சு, வேகவைச்ச காய்கள், ஒரு பேக்கட் டேஸ்ட் மேக்கர் சேர்த்து 2 நிமிஷம் வதக்கி, 2 டம்ளர் தண்ணி ஊத்தி, இன்னொரு டேஸ்ட் மேக்கரையும் போட்டு கொதிக்க விட்டு, நூடுல்ஸை உடச்சு போட்டு 3 நிமிஷம் வேகவச்சு, கொத்துமல்லித்தழையப் போட்டு இறக்கினம்னா.....டின்னேஏஏஏர் ரெடி! :)இதுக்கு MAGGI -hot & sweet tomato chilli sauce வைத்து சாப்பிடுவது என்னவர் வழக்கம்,அதுக்காகவே சாஸ் வாங்கிட்டு வந்திருக்கோம்.எனக்கு சாஸெல்லாம் வேண்டாம்,அப்படியே சாப்பிடுவேன். அப்ப நீங்க?!
:))))))))))))
பி.கு. போஸ்ட்டுக்கு இடையில ஒரு ஸ்மைலிக்கு பக்கத்தில ப்ளாங்க்-ஆ இருக்கும்,அதை ஹைலைட் பண்ணி படியுங்க மக்கள்ஸ்!
எனக்கு கட்டாயம் இந்த நூடுல்ஸ் ரெசிபி வேணும்ம்ம். ;)
ReplyDeleteமகிஸ் கிச்சன். மகீஸ் ஸ்பேஸ், மகி நூடுல்ஸ், மகி சாஸ்... நீங்க உதைஞ்சு தெரிந்துகிட்ட பேரோட மகிமையே.. மகிமை.
ReplyDeleteஎனக்கு கட்டாயம் இந்த நூடுல்ஸ் ரெசிபி வேணும்ம்ம். ;) - இரண்டாம் முறை
ReplyDeleteஎனக்கு கட்டாயம் இந்த நூடுல்ஸ் ரெசிபி வேணும்ம்ம். ;) - மூன்றாம் முறை
ReplyDeleteஎனக்கு கட்டாயம் இந்த நூடுல்ஸ் ரெசிபி வேணும்ம்ம். ;) - 4ம் முறை
ReplyDeleteஎனக்கு கட்டாயம் இந்த நூடுல்ஸ் ரெசிபி வேணும்ம்ம். ;) - 5 ;)))))))
ReplyDeleteஎப்பவும் ”மேகி”க்கு பெஸ்ட் காம்பினேஷன் tomotto chilli sauce தான்!
ReplyDeleteரெசிபி வேணும்! ரெசிபி வேணும்! :)
எனக்கு இந்த ரெசிப்பி வேண்டாம்.. அந்த ரெசிப்பி தான் வேணும் :))
ReplyDeleteநூடுல்ஸை நான் வெஜ்ஜில செய்ததே இல்லை :-(
ReplyDelete//.எனக்கு சாஸெல்லாம் வேண்டாம்,அப்படியே சாப்பிடுவேன். அப்ப நீங்க?!
ReplyDelete:))))))))))))//எனக்கு சாஸ் என்ன வெஜிடபிளே தேவை இல்லை.கொதிக்கும் நீரில் நூடுல்ஸை போட்டு டேஸ்ட் மேக்கர் பொடியை போட்டால் சூப்பர் நூடுல்ஸ் நொடியில் ரெடியாகிடும்.
சூப்பி நூடுல்ஸ் உபயோகித்துப்பாருங்கள் மகி.சூப்பரா இருக்கும்.
noodle's look perfect dear....
ReplyDeletethe same thing happens here if I leave my hubby to cook.. Kitchen gone. but one thing I should admit, He cooks very welllllll :)
If we want to eat tastier food then forget abt. the kitchen.
மகி அருமையாக இருக்கு,ஆமா எங்க பார்த்தாலும் ப்ரோக்கோலியாக இருக்கே,இன்னும் வாங்கியது தீரலையா?!
ReplyDeleteenakku romba pidikkum aana avarukku pidikkathu. athanala veetula seivathe illai,so pls pass the plate.
ReplyDeleteமகி உங்களோட மேகி பார்க்க நல்லா இருக்கு. எனக்கும் காய் எல்லாம் போட்டு செய்து சாப்பிட்டா தான் புடிக்கும். இங்கயும் கொஞ்சம் நாக்கு நீளம் தான். உங்க ரெசிபி பார்த்தாச்சு. சீக்கரம் அருண் சார் எப்படி பன்னுவார்னும் சொல்லுங்க. அந்த ரெசிபி ஈஸியா இருந்தா ராம் கிட்ட ட்ரை பண்ண சொல்லுவேன்!!!!!!! :)
ReplyDeleteO.K. Mahi! I need the recipe...Now you have so many requests for the recipe. Ask your hubby now..
ReplyDeleteMahi i was in splits reading ur intro lines and hey the noodles look great- nothg to beat good old maggi
ReplyDeleteமகி ரெசிபி ப்ளீஸ்:-)))!!!
ReplyDeleteunga husband recipe ya post pannuga
ReplyDeleteennaku egg kuda serthu saapida pidikum
I can have noodles for breakfast,lunch and dinner:)Unga dh seidha noodles super a irukku..
ReplyDeleteஹாய் மஹி...,மேகி நூடுல்ஸ் பார்க்கும் போதே யம்மி யம்மி.....
ReplyDeleteநான் புரொக்கோலி சேர்த்து இதுவரை செய்ததில்லை.நல்லா இருக்கு....
ஆனாலும்ம்ம்ம்ம்..................
எனக்கு அண்ணன் எப்படி செய்தாங்கண்ணு தெரியணுமே?????
அந்த அசத்தலான குறிப்பை ஆவலோடு எதிர்ப்பார்க்குறோமுங்க...மஹி....
வாழ்த்துக்கள்...
அன்புடன்,
அப்சரா.
மகி நானும் என் பேத்திகளுக்கு என் மருமகள் சொல்லிய பிரகாரம் காய்களை மைக்ரோவேவில் வைத்தெடுத்து, நூடல்ஸை வேகவைத்து, ஸோயாஸாஸ் சேர்த்துக் கலந்து எண்ணெயில் வதக்கி ஸ்கூலுக்கு லன்ச் பேக் செய்து கொடுத்ததுமல்லாமல் படம் எடுத்து என் ப்ளாகில் போட வைத்திருந்தேன். என்னிது கொஞ்சம் கலர் சேஞ்ச். நீ சொன்ன காரணம்தான் நானும் யோசனை செய்தேன். ரொம்பவே நன்றாக இருக்கு உன்னுடய நூடல்ஸ். சொல்லுகிறேன் காமாட்சி
ReplyDeletelooking yummy, Mahi.
ReplyDelete@வானதி,நன்றி!
ReplyDelete@காமாட்சிமா,உங்க செய்முறையும் போஸ்ட் பண்ணுங்க.எங்களுக்கு சோயா சாஸ் அவ்வளவா பிடிக்காது.அதனால் வாங்கவே மாட்டேன். நன்றிமா!
@அப்ஸரா,என்னவருக்கு ப்ரோக்கலி ரொம்ப பிடித்த காயாகிட்டது.நல்லா இருக்கும்,செய்துபாருங்க.
@ரம்யா,என்னவர் செய்த ரெசிப்பி இன்னும் நான் போஸ்ட் பண்ணலையே.இது நான் செய்தது!:) கருத்துக்கு நன்றி!
@மஹா.நான் இதிலே எக் சேர்த்ததில்லை.நல்லா இருக்குமா? ட்ரை பண்ணி பார்க்கணும்.
தேங்க்ஸ்ப்பா!
@சுகந்திக்கா,நன்றி!
@ஹாஹ்ஹா! ப்ரியா,இப்படி எல்லாம் ட்விஸ்ட்டு போட்டாதானே இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்? அதுக்குதான் அப்படி ஒரு இன்ட்ரோ! ;) தேங்க்ஸ் ப்ரியா!
@காயத்ரி,தேங்க்ஸ் காயத்ரி!
@ப்ரியா,ராம் கிச்சனுக்கு வந்துருவார்ங்கறீங்க?! ம்ம்..இதுக்காகவே சீக்கிரம் போஸ்ட் பண்ணறேன். :)
@குறிஞ்சி,வீட்டில் மெய்ன் ஆளுக்கு பிடிக்கலைன்னா அந்த ஐட்டம் அவ்ளோதான்! ஊருக்கு போகும்போது சாப்பிட்டுக்கோங்க.எங்க வீட்டுல பொங்கல்-உளுந்துவடை எல்லாம் அந்த லிஸ்ட்! :P
தேங்ஸ் குறிஞ்சி!
@ஆசியாக்கா,வீட்டிலே வெங்காயம்-தக்காளி கூட ப்ரோக்கலி-கேப்ஸிகம் இரண்டும் சேர்ந்துட்டது.எப்பவுமே ஸ்டாக் இருக்கும்.:)
தேங்க்ஸ் ஆசியாக்கா!
@அருணா,கரெக்ட்டா சொன்னீங்க.இப்படி புலம்பிட்டே இருந்தாலும், அப்பப்ப அவங்க கையாலே சாப்பிடறதே தனி டேஸ்ட்டுதான். ;)
தேங்க்ஸ் அருணா!
@ஸாதிகாக்கா,இங்கே சூப்பி நூடுல்ஸ் கிடைக்கறமாதிரி தெரில.நீங்க சொல்வது மாதிரிதான் என்னவரும் சாப்பிட்டுட்டு இருந்தார்.நான் வந்து அவரையும் இப்படி மாத்திட்டேன்.ஹிஹி!
@ஜெய் அண்ணா,இந்த மாதிரி செய்து சாப்பிட்டு பாருங்க,சூப்பரா இருக்கும். வருகைக்கு நன்றி!
@எல்போர்ட்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
@பாலாஜி,நீங்களும் என்னவர் கட்சிதானா? :) கருத்துக்கு நன்றி பாலாஜி!
@இமா,ஒரு நிமிஷம் கன்ஃப்யூஸ் ஆகிட்டேன் உங்க கமென்ட்ஸ்-ஐ பாத்து..பை மிஸ்டேக் நிறையமுறை போஸ்ட் பண்ணிட்டீங்களோன்னு பாத்தா......... :)
நன்றி*5!!
மக்களே,உங்க கருத்துக்களை எல்லாம் அவர்கிட்டே காட்டி ரிக்வெஸ்ட்(!) பண்ணியிருக்கேன்.விரைவில் போஸ்ட் பண்ண முயற்சிக்கிறேன்.அனைவருக்கும் மீண்டுமொரு முறை நன்றி!
Noodlus........................
ReplyDeleteThey are just window shopping at Super markets in Chennai.
Here my children dumped so many things and asked me to prepare.One among them is noodules. O.K. Let me try my hand with this from your receipee.
viji