பாலாஜி சரவண கணேஷ் சீதாராமன்...(அப்பாடி,பேரை சொல்லி முடிச்சுட்டேன் பாலாஜி,ஒரு கப் ஜில் வாட்டர் ப்ளீஸ்! :) ) ஒரு தொடர் பதிவுக்கு என்னை கூப்பிட்டிருக்கிறார். பெயரின் பின்னால் ஒரு குட்டிக்கதை வைத்திருக்கும் ஆட்களுக்கான ஸ்பெஷல் சுவாரசியமான தொடர்பதிவு,கோன் தோசை & கொள்ளுப்பொடிக்கப்புறம் தொடர்கிறது.-------------
எனக்கும் பொடிவகைகளுக்கும் அவ்வளவா ஒத்துவராது,அப்படி இருந்தும் இட்லிப்பொடி மட்டும் நான் வீட்டிலேயே அரைத்துக்கொள்வதும் உங்க எல்லாருக்குமே ஏற்கனவே தெரிந்தவிஷயம்தான். :) இந்த முறை பொடிக்கு வறுக்கும்போது கொள்ளு இட்லிப்பொடி அரைக்கலாம்னு ஒரு ஐடியா வந்ததால், வழக்கமாக வறுக்கும் பொருட்களுடன் 2 டேபிள்ஸ்பூன் கொள்ளையும் சேர்த்து வறுத்து அரைத்தேன். (அதென்ன வழக்கமா சேர்க்கறது..அளவு சொல்லக்கூடாதா என்பவர்கள் இங்கே க்ளிக்குங்க.)
கொள்ளு இட்லிப்பொடியில் எள்ளு போடுவாங்களான்னு டெக்னிகல் கேள்வி எல்லாம் கமெண்ட்டிலே கேட்டுடாதீங்கன்னு இப்பவே கேட்டுக்கொள்கிறேன். ஹிஹி!!
குறிஞ்சி கதம்பத்தில் கோன் தோசை பார்த்ததும் முயற்சித்துப்பார்த்த கோன் தோசையுடன் கொள்ளு இட்லிப்பொடி...(தோசை ரெசிப்பிக்கு இங்கே க்ளிக்குங்க)
~~~~~
இப்ப அந்த ஸ்வாரஸ்யமான தொடர் பதிவுக்கு வருவோம். வித்யாசமான புனைப்பெயர்கள் (உ.ம். சந்தனா,அதிரா,தக்குடு,என்றென்றும் 16)உள்ளவங்க அந்தப்பெயரைத் தேர்ந்தெடுத்ததுக்கான காரணத்தை விவரிக்க ஒரு வாய்ப்பாக இந்தத் தொடர் பதிவு இருக்கும். பாலாஜி மாதிரி 3 இன் 1 பேருள்ளவர்களுக்கும் இது நல்லதொரு வாய்ப்பு. என்னைப் பொறுத்தவரை இது தொடர்பாகச் சொல்வதற்கு ஒரே ஒரு விஷயம்தான் இருக்கு.என்னதுன்னா, மகேஸ்வரி என்ற இந்தப்பெயர் நானே செலக்ட் பண்ணிகிட்டதாக்கும்! :)
இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக :- பெயர்க்காரணம்
இடம்: எங்க வீடுதேன்.
பொருள்: மகேஸ்வரி - சிவனின் துணைவியார் பார்வதியின் பெயர்களில் ஒன்று என்பது மட்டுமே எனக்குத் தெரிந்த விளக்கம். பெயர்க்காரணம்னு கூகுளாண்டவர்கிட்ட கேட்டேன்,அவர் கொட்டிய தகவல் குவியல் இதோ.
விளக்கம்: வீட்டிலே கடைக்குட்டியான எனக்கு பேர் வைக்க ஒரு வித்யாசமான முறையை கையாண்டிருக்காங்க. என் அண்ணன்(பெரியம்மா பையன்,அவர் இப்பொழுது இல்லை.:( ) சொன்ன ஐடியாவின்படி, நிறையப் பெயர்களை சீட்டுகளில் எழுத்தி சுருட்டிப்போட்டு, என்னை எடுக்கவைத்தார்களாம். 3 மாசக்குழந்தைக்கு எப்படி பேரெல்லாம் செலக்ட் பண்ணத்தெரியும்,நீங்களே சொல்லுங்க??!! கையைக் காலை உதைக்கும்போது எந்த சீட்டில் என் கை பட்டதோ அதான் நான் தேர்ந்தெடுத்த பெயர்னு வைச்சிட்டாங்க. இப்படியாக எனக்கு நானே வைத்துக்கொண்டதுதான் இந்தப்பெயர்.
வீட்டில் எல்லாரும் மகி-ன்னு கூப்பிடுவாங்க. கல்யாணத்துக்குப் பத்திரிக்கை அடிக்கும்போது என்னவர் அதே போல அடித்துவிட்டார்.அப்ப இருந்தே கிட்டத்தட்ட மகி என்பதே என் அஃபிஷியல் நேம்(!!?) ஆகிவிட்டது. யு.எஸ். வந்து இந்த ஊர்மக்கள் என் பேரைக் கடித்துக்குதறுவது பொறுக்க மாட்டாம, பேரை சொன்னதுமே, நானே "கால் மீ மகி"ன்னு சொல்லிடுவேன்.
ஸ்கூல்ல படிக்கும்போதெல்லாம் நம்ம பெயர் மாடர்னா இல்லையேன்னு கொஞ்சம் வருத்தமா இருக்கும்,இப்பல்லாம் நினைத்தா சிரிப்பா இருக்கு. விவரம் தெரியாமல் செய்ததுதான்னாலும், நானே செலக்ட் பண்ணிகிட்ட பேர் இதுன்னு கொஞ்சம் பெருமையாத்தான் இருக்கு.:)
பெயர்களைப்பத்தி யோசிக்கும்போது ஞாபகம் வந்த சில நிகழ்வுகள்... கல்லூரியில் என்னுடன் படித்த ஒரு நண்பனின் பெயர் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடில..அவர் பெயர் 'இளங்கிளி'!!! முதலில் கொஞ்சம் சிரிப்பு வந்தாலும் போகப்போக பழகிட்டது. கிளி-ன்னுதான் கூப்பிடுவோம். :) பணிபுரிகையில் சக ஊழியர் ஒருவர் பெயர் 'செஞ்சுடர் வண்ணன்'.அவங்க தம்பி பெயர் 'கார்முகில் வண்ணன்'. சுத்தமான தமிழ்ப்பெயர்களைக் கேக்கும்போதே காதுக்கு இனிமையாத்தான் இருக்கு,இல்லையா? :)
இந்தத் தொடர் பதிவுக்கு யாரையெல்லாம் சிக்கவைக்கப்போறேன்னா....முன்னாலயே ஒரு நாலு பேர் பேரை சொல்லியிருக்கேன்.இன்னொருவரையும் சேர்த்து,
1.சந்தனா
2.அதிரா
3.தக்குடு
4.என்றென்றும் 16
5.குறிஞ்சி ------ ஐந்து பேராக இந்தத் பதிவைத் தொடருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்க புனைப்பெயருக்கான காரணத்தை சொல்லுங்க,அப்படியே உங்க சொந்தப்பேரையும் சொல்லிடுங்க.;)
நன்றி!
இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக :- பெயர்க்காரணம்
இடம்: எங்க வீடுதேன்.
பொருள்: மகேஸ்வரி - சிவனின் துணைவியார் பார்வதியின் பெயர்களில் ஒன்று என்பது மட்டுமே எனக்குத் தெரிந்த விளக்கம். பெயர்க்காரணம்னு கூகுளாண்டவர்கிட்ட கேட்டேன்,அவர் கொட்டிய தகவல் குவியல் இதோ.
விளக்கம்: வீட்டிலே கடைக்குட்டியான எனக்கு பேர் வைக்க ஒரு வித்யாசமான முறையை கையாண்டிருக்காங்க. என் அண்ணன்(பெரியம்மா பையன்,அவர் இப்பொழுது இல்லை.:( ) சொன்ன ஐடியாவின்படி, நிறையப் பெயர்களை சீட்டுகளில் எழுத்தி சுருட்டிப்போட்டு, என்னை எடுக்கவைத்தார்களாம். 3 மாசக்குழந்தைக்கு எப்படி பேரெல்லாம் செலக்ட் பண்ணத்தெரியும்,நீங்களே சொல்லுங்க??!! கையைக் காலை உதைக்கும்போது எந்த சீட்டில் என் கை பட்டதோ அதான் நான் தேர்ந்தெடுத்த பெயர்னு வைச்சிட்டாங்க. இப்படியாக எனக்கு நானே வைத்துக்கொண்டதுதான் இந்தப்பெயர்.
வீட்டில் எல்லாரும் மகி-ன்னு கூப்பிடுவாங்க. கல்யாணத்துக்குப் பத்திரிக்கை அடிக்கும்போது என்னவர் அதே போல அடித்துவிட்டார்.அப்ப இருந்தே கிட்டத்தட்ட மகி என்பதே என் அஃபிஷியல் நேம்(!!?) ஆகிவிட்டது. யு.எஸ். வந்து இந்த ஊர்மக்கள் என் பேரைக் கடித்துக்குதறுவது பொறுக்க மாட்டாம, பேரை சொன்னதுமே, நானே "கால் மீ மகி"ன்னு சொல்லிடுவேன்.
ஸ்கூல்ல படிக்கும்போதெல்லாம் நம்ம பெயர் மாடர்னா இல்லையேன்னு கொஞ்சம் வருத்தமா இருக்கும்,இப்பல்லாம் நினைத்தா சிரிப்பா இருக்கு. விவரம் தெரியாமல் செய்ததுதான்னாலும், நானே செலக்ட் பண்ணிகிட்ட பேர் இதுன்னு கொஞ்சம் பெருமையாத்தான் இருக்கு.:)
பெயர்களைப்பத்தி யோசிக்கும்போது ஞாபகம் வந்த சில நிகழ்வுகள்... கல்லூரியில் என்னுடன் படித்த ஒரு நண்பனின் பெயர் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடில..அவர் பெயர் 'இளங்கிளி'!!! முதலில் கொஞ்சம் சிரிப்பு வந்தாலும் போகப்போக பழகிட்டது. கிளி-ன்னுதான் கூப்பிடுவோம். :) பணிபுரிகையில் சக ஊழியர் ஒருவர் பெயர் 'செஞ்சுடர் வண்ணன்'.அவங்க தம்பி பெயர் 'கார்முகில் வண்ணன்'. சுத்தமான தமிழ்ப்பெயர்களைக் கேக்கும்போதே காதுக்கு இனிமையாத்தான் இருக்கு,இல்லையா? :)
இந்தத் தொடர் பதிவுக்கு யாரையெல்லாம் சிக்கவைக்கப்போறேன்னா....முன்னாலயே ஒரு நாலு பேர் பேரை சொல்லியிருக்கேன்.இன்னொருவரையும் சேர்த்து,
1.சந்தனா
2.அதிரா
3.தக்குடு
4.என்றென்றும் 16
5.குறிஞ்சி ------ ஐந்து பேராக இந்தத் பதிவைத் தொடருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்க புனைப்பெயருக்கான காரணத்தை சொல்லுங்க,அப்படியே உங்க சொந்தப்பேரையும் சொல்லிடுங்க.;)
நன்றி!
தோசை எனக்கா மகி? தனக்கு தானே பெயர் வைத்த மகி வாழ்க!!!
ReplyDelete//என்னை எடுக்கவைத்தார்களாம். 3 மாசக்குழந்தைக்கு எப்படி பேரெல்லாம் செலக்ட் பண்ணத்தெரியும்,நீங்களே சொல்லுங்க??!! //
ReplyDeleteமஞ்ச சீட்டா இருந்திருந்தா ஒரு வேளை தெரிஞ்சிருக்குமோ ??
////என்னை எடுக்கவைத்தார்களாம். 3 மாசக்குழந்தைக்கு எப்படி பேரெல்லாம் செலக்ட் பண்ணத்தெரியும்,நீங்களே சொல்லுங்க??!! //
ReplyDeleteஅது வரைக்கும் உங்களுக்கு பேரே வைக்கலையா
Perfect combo,love the Healthy podi...Awesome recipe...
ReplyDeleteசீட்டு போட்டு பெயர் எடுத்து சூட்டியது நல்லது தான் பெயர் புடிக்கலைன்னு சொன்னால் நீ தான் தேர்ந்தெடுத்தேன்னு சொல்ல நல்ல வசதி.
ReplyDeleteபெயர் சொல்ல கோன் தோசை கொள்ளூ பொடியா? அருமை.
அடா! தனக்குத்தானே பெயர் செலெக்ட் பண்ணுறது என்று கேள்விப்பட்டதே இல்லை. நல்ல பேராத்தான் செலெக்ட் பண்ணி இருக்கீங்க மகி.
ReplyDeleteகோன் தோசை அழகு. ;) எனக்குத் தானே! ;)
கோன் தோசை அழகு. ;) எனக்குத் தானே! ;)
ReplyDelete//
mahima enakuthaney thosai yarukum kidaithu...
hm mahima ungada peru nalla erukku..
ungal thoasaium...(sorry for late..and tanglish)
கோன் தோசை,கொள்ளுப்பொடி ஆஹா..சூப்பர் காம்பினேஷன்.வடிவாக வார்த்து அதை விட வடிவாக பிரஷண்டேஷன் பண்ணி உள்ளீர்கள் மகி.
ReplyDelete//அப்பாடி,பேரை சொல்லி முடிச்சுட்டேன் பாலாஜி,ஒரு கப் ஜில் வாட்டர் ப்ளீஸ்! :) //
ReplyDeleteவாட்டர் எதுக்கு கோக், பெப்சி, ஜிகர்தண்டா... எல்லாம் பார்சல் பண்ணிடுறேன்! :)
//வீட்டிலே கடைக்குட்டியான எனக்கு //
அப்போ எல்லாவிஷயத்திலையும் முதல் உரிமை உங்களுக்குத்தான.. ரைட்டு..
//இப்படியாக எனக்கு நானே வைத்துக்கொண்டதுதான் இந்தப்பெயர். //
இவ்வளவு இன்ட்ரஸ்டிங்கான மேட்டர் இருக்கு.. ஒண்ணுமே இல்லைன்னு சொன்னீங்களே மகி! இது தான் தன்னடக்கமா? மா? மா? ;)
//நானே செலக்ட் பண்ணிகிட்ட பேர் இதுன்னு கொஞ்சம் பெருமையாத்தான் இருக்கு.:) //
கண்டிப்பா.. இந்த மாதிரி யாருக்கு அமையும்?!
இதுல இன்னொரு ஸ்பெசல் பொடி தோசை வேறயா..ம்.ம்.. :))
தோசை பார்க்கவே சூப்பரா இருக்கு மஹி! என்னோட குறிப்பை பார்த்து செய்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது. தொடர் பதிவுல இப்படி மாட்டி விட்டுடீங்களே?
ReplyDeleteKurinjikathambam
குறிஞ்சி குடில்
இப்படியாக மகியின் தனக்குத் தானே பெயர் தேர்வு செய்த நிகழ்ச்சியை மனதில் கண்டு களிக்க சான்ஸ் கொடுத்த மகிக்கு என்ன கொடுக்கலாம். கொள்ளு தோசையும், எள்ளுப்பொடியும், சாப்பிட்டுவிட்டு நிறைந்த மனதுடன் ஆசிகளை அள்ளி அள்ளிக் கொடுக்கலாம் என்று சொல்லுகிறேன். அம்மா
ReplyDeleteperfect dosa mahi.
ReplyDeleteNice to read about u.Andha chitla the remaining 14 names enna irrundhuchunnu sollavae illai:))
மஹி கோன் தோசை கொள்ளு பொடி சூப்பர். ட்ரை பண்ணி பார்க்கறேன்.
ReplyDeleteநல்லா இருக்கு பெயர் புராணம் & ரெசிப்பி. ஆங்! லிஸ்ட்ல இருக்குற முதல் 2 பேரும் உண்மையான பெயரை சொல்லிப் போட்டு தான் மறு வேலை பார்ப்பாங்க!!!! அவ்வ்வ்வ்வ்.....
ReplyDeleteஎனக்கு சின்ன குழந்தையா இருக்கும் போது இப்படி எல்லாம் choice தரவேயில்லை. நீங்க அதிஷ்டசாலி தான்.
Nice combo. Dosa looks great and as usual very interesting post..
ReplyDeleteDosai looks so cute,my kids favorite shape :) I have to make this kollu podi,its good for health,I eat more podi than the main dish,so I have to make it healthy this way!
ReplyDeleteபொடியும், தோசையும் பார்கவே... சூப்பர்.. நானே எடுத்துக்கரேன் பா.. :)
ReplyDeleteபெயர் காரணம்... வெரி க்யூட் :-))
பொடி+தோசை சூப்பர்ர்!! பெயர்க்காரணமும் அருமை...
ReplyDeleteமஹி.. நீங்க தான் உங்க பேர எடுத்தீங்களா? ஐ மீன் உதைச்சு எடுத்தீங்களா? :)) அண்ணன் செம ஐடியா! குறைஞ்ச பட்சம் நீங்க அவங்கள திட்ட முடியாத மாதிரி செய்துட்டார்.. :)
ReplyDeleteபெயரையே சொல்ல இயலாத பொழுது, பெயர்க்கான காரணம் என்னன்னு சொல்ல மஹி? :)
//லிஸ்ட்ல இருக்குற முதல் 2 பேரும் உண்மையான பெயரை சொல்லிப் போட்டு தான் மறு வேலை பார்ப்பாங்க!!!! அவ்வ்வ்வ்வ்.//
ReplyDeleteகழுவுற தண்ணியில எப்பிடி நழுவறது.. அதீசு அதீசு.. சீக்கிரம் இங்க ஓடியாங்களேன்.. ரெண்டு பேருமா சேர்ந்து நழுவிடுவோம்.. :)
மஹி... உங்கட அட்ரசை, சந்து பிழையாத் தந்திட்டா... அதுதான் அங்கின இங்கின விசாரிச்சு வருவதுக்குள் கொஞ்சம் லேட்டாயிட்டுது.... ரொம்ப ரயேட்டா இருக்கு ஒரு கிளாஸ் கூஊஉல் லெமன் ஜூஸ் பிளீஸ்ஸ்ஸ்ஸ்.... உஸ் அப்பாடா இனி விஷயத்துக்கு வருவம்.
ReplyDelete//வித்யாசமான புனைப்பெயர்கள் (உ.ம். சந்தனா,அதிரா,தக்குடு,என்றென்றும் 16)உள்ளவங்க அந்தப்பெயரைத் தேர்ந்தெடுத்ததுக்கான காரணத்தை விவரிக்க ஒரு வாய்ப்பாக இந்தத் தொடர் பதிவு இருக்கும்/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் புனைப் பெயரென்ற பட்டியலில் என்னை எப்பூடி இணைத்தீங்கள்...?
நான் ஓடிப்போய் அம்மாவிடம் கேட்டேன் “அம்மா அம்மா என் பெயர் உண்மைப் பெயரோ புனைப்பெயரோ என, உடனே அம்மா சொன்னா இதிலென்ன சந்தேகம் ... எல்லாக் குழந்தையும் அ....ம்மா... ம்மாஆஅ என்றுதான் அழும், ஆனா நீ பிறக்கும்போதே... அ....திரா... அ... திரா என்றபடியே பிறந்தாய் அதனாலேயே அப்பெயரை வச்சுட்டோம் என...
இதுக்கு மேலயும் ஆரும் என் பெயரில சந்தேகப்படுவீங்களோ? நான் போகோணும் கெதியாச் சொல்லுங்க... அங்க இல்ஸ்ஸ் அ.கோ முட்டையோடு கட்டிலுக்கு கீழ காத்திட்டு இருக்கிறா.. பூஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்.
பின் குறிப்பு:
மஹி... என்னையும் தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி. ஆனா உண்மையில பெரிதாக எக் காரணமும் இல்லை... என் அப்பாவின் உறவு அம்மாவின் உறவு எல்லோரும் புடைசூழ இருந்து ஆளாழுக்கு ஒரு பெயர் சொன்னார்களாம்... அதில் பிடித்த பெயரை எனக்கு சூட்டினார்களாம்.... இதுதான் என் கதை இதுக்கு தலைப்பு வேண்டாமே...
அதீஸ், இப்படி பின் குறிப்பிலை 2 வரி எழுதினா நம்பிடுவோமாக்கும்????
ReplyDeletevanathy said...
ReplyDeleteஅதீஸ், இப்படி பின் குறிப்பிலை 2 வரி எழுதினா நம்பிடுவோமாக்கும்????
/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இனியும் ஆரும் நம்பாட்டில்... நான் தனியே போகமாட்டேன், எல்லோரையும் கூட்டிக்கொண்டுதான் தேம்ஸ்க்குப் போவேன் சாஆஆஆஆஆக்கிரதை:):).... ஏன் எதுக்கெண்டெல்லாம் ஆரும் கேய்க்கப்பூடாது...
/ஆங்! லிஸ்ட்ல இருக்குற முதல் 2 பேரும் உண்மையான பெயரை சொல்லிப் போட்டு தான் மறு வேலை பார்ப்பாங்க!!!! அவ்வ்வ்வ்வ்..... /கரெக்ட்டாச் சொன்னீங்க வானதி! எனக்கும் அந்த டவுட்டு இருந்தது.இருந்தாலும் தூண்டிலைப் போட்டுப்பாப்போம்னு போட்டேன்.2 மீனும் நழுவிடுச்சு,வழக்கம்போல!! :)
ReplyDeleteசந்தனா,அதிரா -கூப்பிட்ட 5 பேரின் பேரைத் தெரிஞ்சுக்கலாமேன்னு ஆர்வக்கோளாறுல சொன்னேன்.நீங்க எழுதியே ஆகணும்னு நான் கட்டாயப்படுத்தவில்லை.அதுக்கு மேல உங்கள் விருப்பம்.
ரெண்டு பேரும் நீளமா விளக்கம் தந்ததுக்கு நன்றி! ;)
சுகந்திக்கா,தோசை உங்களுக்கே! எடுத்துகோங்க,வாழ்த்துக்கு நன்றி! :)
ReplyDeleteஜெய் அண்ணா,/மஞ்ச சீட்டா இருந்திருந்தா ஒரு வேளை தெரிஞ்சிருக்குமோ ??/ ஹூம்,உங்களுக்கு தெரியுது,அவங்களுக்கு தெரிந்திருக்கலையே?!
குழந்தைக்கு 3 மாசம் ஆனதும்தான்,நாள்-நட்சத்திரம் பாத்து பேர் வைப்பாங்க.நல்லநாளோ,மாதமோ இல்லைன்னா, 5 மாசம்,7மாசம் வரையும் வெயிட் பண்ணி அதுக்குப்பிறகுதான் ஜெய்அண்ணா பேர் வைப்போம். :)
தேங்க்ஸ் ப்ரேமா!
ஆசியாக்கா,அதென்னமோ அப்படித்தான்,யாரையும்குறை சொல்லமுடியாது.:) நன்றி ஆசியாக்கா!
இமா,ரொம்பநன்றி இமா! தோசை அழகா இருக்குதா,சிவாவுக்கும் வேணுமாம்,என்ன செய்யலாம்?! ;)
சிவா,இமா கிட்டசொல்லிட்டு தோசையை எடுத்துக்குங்க.நன்றி!
ஸாதிகாக்கா,தேங்க்ஸ் ஸாதிகாக்கா!
ரொம்ப தாராளமனசு பாலாஜி உங்களுக்கு! பெப்ஸி நான் குடிக்கமாட்டேன்,ஜிகர்தண்டா இதுவரை டேஸ்ட் பண்ணினதில்ல,உங்க பார்சலுக்காக வெயிட்டிங்! :) ;)
ReplyDeleteகடைக்குட்டியா இருப்பதிலே சில அட்வான்டேஜஸ் இருக்கு,டிஸ்அட்வான்டேஜஸும் இருக்கு. :)
நீங்க சொன்னதுக்கா 4 வரில முடிக்கவேண்டிய விஷயத்தை நீட்டிமுழக்கி ஒரு பதிவாப் போட்டுட்டேன்,துணைக்கு தோசை & பொடி!! :)
நன்றிபாலாஜி!
ஜெயஸ்ரீ,மத்த பேரெல்லாம் மறந்துட்டாங்கங்க! நர்மதா-ன்னு ஒரு பேர் மட்டும் அம்மா மறக்காம வச்சிருக்காங்க,ஏனா அது அவங்க வைக்க நினைச்ச பேராம். :)
ப்ரியா,ட்ரை பண்ணி பாருங்க.தேங்க்ஸ் ப்ரியா!
வானதி,கண்ணு போடாதீங்க,வேணும்னா என் அதிர்ஷடத்தை கொஞ்சம் யு.பி.எஸ்.ல அனுப்பிவைக்கறேன். :)
காயத்ரி,தேங்க்ஸ்ங்க!
ராஜி,எனக்கு பொடி அவ்வளவா புடிக்காதுங்க,என்னவர் உங்களைமாதிரிதான் பொடிக்கு தோசை/இட்லி சாப்பிடுவார். நன்றி ராஜி!
ஆனந்தி,தோசை சாப்பிட்டதுக்கு தேங்க்ஸ் ஆனந்தி! பெயர்க்காரணம்தான் க்யூட்டா இருக்கா..என் பேர் க்யூட்டா இல்லையா? கர்ர்ர்ர்ர்ர்ர்!;)
மேனகா,தேங்க்ஸ் மேனகா!
/மஹி.. நீங்க தான் உங்க பேர எடுத்தீங்களா? ஐ மீன் உதைச்சு எடுத்தீங்களா? :))/ எப்படி எடுடத்தேனோ தெரியல சந்தனா! ஆகமொத்தம் எல்லாப்புகழும் எனக்கே-ஆக ஆகிட்டது. :)
ReplyDeleteசொல்லாத பேருக்கு பொல்லாத காரணம் சொன்னதுக்கு நன்றி! :)
/கிளாஸ் கூஊஉல் லெமன் ஜூஸ் பிளீஸ்ஸ்ஸ்ஸ்./அதிரா, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க,பாலாஜி அனுப்பின பார்சல் வந்தஉடனே கூஊஊஉல் பெப்ஸி தாரேன்.;)
தேடி அலைஞ்சு அட்ரஸ் கண்டுபிடித்து வந்ததுக்கு ரெம்ப டாங்க்ஸ்!
/நீ பிறக்கும்போதே... அ....திரா... அ... திரா என்றபடியே பிறந்தாய் அதனாலேயே அப்பெயரை வச்சுட்டோம் என...
/அடேங்கப்பா,சூஊப்பர் காரணம் போங்க!
தேங்க்ஸ் அதிரா! :)
வானதி,:)
அதிரா,:) :)
ஆஹா!! நான் சிக்கினேனா!! "மூக்கும் முழியுமா!!" series முடிஞ்சதும் எழுத முயற்சி பண்ணறேன் சரியா!!..:)
ReplyDelete//ஆனந்தி,தோசை சாப்பிட்டதுக்கு தேங்க்ஸ் ஆனந்தி! பெயர்க்காரணம்தான் க்யூட்டா இருக்கா..என் பேர் க்யூட்டா இல்லையா? கர்ர்ர்ர்ர்ர்ர்!;)//
ReplyDelete...அட என்னப்பா நீங்க.. உங்க பெயர்காரணம் தான் க்யூட்ட்ட்ட்ட்ட்ட்ட் சொன்னேன்.. ;-)
ஓகே. ;) சிவாக்குட்டிக்காக விட்டுக் கொடுக்கிறேன்.
ReplyDeleteஅட! //நர்மதா//வா!!
ஹாய் மஹி..,கோன் தோசையும்,பொடியும் சூப்பர்.
ReplyDeleteஉங்களுக்கு நீங்களே பெயர் செலக்ட் செய்திருக்கீங்களே...?யாருக்கு அமையும் இந்த சந்தர்ப்பம் சொல்லுங்க...உங்கள் பெற்றோர்க்கு எனது பாராட்டுக்கள்.பின்ன... அந்த குழந்தையிலேயே உங்க விருப்ப படி செய்யணும்னு நினைத்திருக்காங்களே...
சுருக்கமாக தொடர்பதிவு இருந்தாலும் ரசிக்கும்படி இருந்தது மஹி.
அன்புடன்,
அப்சரா.
super dosai, peyarkaaranam, supero super
ReplyDelete//மகேஸ்வரி என்ற இந்தப்பெயர் நானே செலக்ட் பண்ணிகிட்டதாக்கும்!//
ReplyDeleteஹொவ் லக்கி யு ஆர்? ஹ்ம்ம்...எனக்கு யாரும் இந்த வாய்ப்பை குடுக்கவே இல்ல போங்க...:))
//இப்படியாக எனக்கு நானே வைத்துக்கொண்டதுதான் இந்தப்பெயர்//
இதானா மேட்டர்...grrrrrrrrrrrrrrrrrrrrrrr....:)))
//"கால் மீ மகி"ன்னு சொல்லிடுவேன்//
அப்போ முக்கால்(3/4) மீ ஈஸ்வரி'யா? ஹி ஹி ஹி... சும்மா தோணுச்சு...:)))
//புனைப்பெயருக்கான காரணத்தை சொல்லுங்க//
ஹா ஹா ஹா...தக்குடுவுமா? சூப்பர் சூப்பர்..:)))
தக்குடு,தொடர்கிறேன் என்று கமிட் பண்ணியதுக்கு தேங்க்ஸ்! :)
ReplyDeleteஅப்ஸரா,தேங்க்ஸ்ப்பா!
ஆனந்தி,தேங்க்ஸ் ஆனந்தி!;)
புவனேஸ்வரி,//முக்கால்(3/4) மீ ஈஸ்வரி'யா? ஹி ஹி // நீங்க என்னா சொல்லவரீங்கன்னு எனக்கு மெய்யாலுமே புரில!
நீங்க இப்படி சொன்னதும்தான் இன்னொரு விஷயம் நினைவு வருது.எங்கக்கா பேர் ராஜேஸ்வரி. எம்.எஸ்.ஸி.ல கோ-எட் காலேஜ்ல சேர்ந்து,க்ளாஸ்ல அறிமுகப்படலம் நடக்கும்போது,என் ப்ரெண்ட் ஒருத்தர் 'உங்க வீட்டில நிறைய இன்கம்டாக்ஸ் கட்டுவீங்க போல இருக்கு? எல்லார் பேரும் 'வரி-வரி'-ன்னு முடியுதேன்னு கேட்டாங்க.:):)
கோன் தோசை ஐய்யா என் சின்ன பொன்னுக்கு ரொம்ப பிடித்த அயிட்டம். எப்ப்ப தோசை செய்தாலும் கோன் தோசை என்று கேட்டு நானும் செய்து குடுப்பது வழக்கம். இத பார்தததும் என் வீட்டு தோசை தான் நினைவுக்கு வருது என் வீட்டில் எல்லாருக்கும் பிடித்தது.
ReplyDeleteஉங்க பேர் செலக்ட் செய்தது அதுவும் நிங்க செய்ததை நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு மகி.