Tuesday, March 1, 2011
எம்ப்ராய்டரி-2
இணையத்தில் உலவுகையில், எம்ப்ராய்டரி செய்யப்பட்ட வண்ணத்துப்பூச்சிகள் என்னை மிகவும் கவர்ந்தது.அதனால், இந்தமுறை பட்டாம்பூச்சியை தைத்துப்பார்க்கலாம் என்று இந்த டிஸைனைத் தேர்ந்தெடுத்தேன்.
பூவிற்கு வயலட் கலர் தைத்து முடித்து,நடுவிலும் இரண்டு அடுக்கு இதழ்களையும் டார்க் வயலட்டில் தைக்கலாம்னு அவுட்லைன் அந்தக்கலரில் தைத்திருந்தேன். அந்நேரம் எட்டிப்பார்த்த என்னவரிடம் அபிப்ராயம் கேட்க,அவர் சிவப்புக்கலரில் தைக்கச்சொன்னார்.எதுக்கு சம்பந்தம் இல்லாம சிவப்புன்னு கேட்டா,'சென்டர்ல இருப்பது இதயம்தானே? இதயம் சிவப்புக்கலரில்தானே இருக்கும்?'னு லாஜிக்கல் கொஸ்டின் கேட்டார். :) சரின்னு, இதயத்தையும் இரண்டு அடுக்கு இதழ்களும் சிவப்புக்கலரிலேயே பட்டன்ஹோல் தையலில் தைத்து முடித்தேன்.
பட்டாம்பூச்சிக்கும் மெய்ன் கலர் சிவப்பு,சிவப்புன்னா கான்ட்ராஸ்ட் மஞ்சள்..பூச்சியின் உடலுக்கு ஆரஞ்சு இப்படி எனக்குத் தோணிய நிறங்களில்,வண்ணத்துப்பூச்சியை முழுக்க ஸாட்டின் ஸ்டிச் செய்தேன். பார்க்க சிம்பிளா இருக்கு,ஆனா தைத்து முடிக்க ரொம்ப நேரமெடுக்கும் தையல் இது. 6 இழைகள் கொண்ட நூலில் ஒரு இழையை மட்டும் எடுத்து தைக்கணும். கொஞ்சம் ஏமாந்தாலும் தையல் டைரக்ஷன் மாறி, நாம் தைக்கும் ஷேப் மாறிப்போயிடும். ஆனால், செலவிடும் நேரத்துக்கு ஏற்ப,தைத்து முடித்ததும் பார்த்தா ரொம்ப அழகா இருக்கும். :)
அடுத்து இந்த குட்டிப்பூக்களை லாங் & ஷார்ட் ஸ்டிச்சில், பீச் கலர் -லைட் ஆரஞ்ச்-டார்க் ஆரஞ்ச் என்று 3 கலரில் தைத்தேன். இப்படி தைப்பது முதல் முறை என்பதால் கொஞ்சம் சுமாராதான் வந்தது. (ஆனால் என்னவருக்கு இந்த டிசைனிலேயே அந்தப்பூக்கள்தான் பிடித்ததாம்! :) )
பொதுவா 3 கலர் ஆல்டர்னேட் பண்ணறாங்க லாங் & ஷார்ட் ஸ்டிச்சுக்கு,எனக்கு அவ்ளோ பொறுமை இல்லாததால் இலைகளை 2 கலரிலேயே தைத்துட்டேன். அவுட்லைனை ஸ்ப்ளிட் ஸ்டிச்சில் தைத்துமுடித்து ஒரு இழை லைட் க்ரீனில் fill பண்ணணும்.முதலிலேயே இப்படி டைரக்ஷனல் ஸ்டிச்சஸ் போட்டுக்கொண்டால் ஈஸியா இருக்கும்.லைட் க்ரீன் முடிந்ததும் அதே போல டார்க் க்ரீனில் fill செய்து, நடுவில் 2 இழை டார்க் க்ரீன் நூலில் ஸ்டெம் ஸ்டிச் போட்டால் இலைகள் உருவாகிவிடும்.
பூவின் இரண்டு புறமும் தண்டுப்பகுதிக்கு சங்கிலித்தையல்- மற்ற குட்டிக்குட்டி டிட்-பிட்ஸுக்கு ஸாடின் ஸ்டிச்- பட்டாம்பூச்சியின் உணர்கொம்புகளுக்கு ஸ்ப்ளிட் ஸ்டிச் என்று முடித்தபோது "அப்பாடி"ன்னு இருந்தது! ஆனால் பைனல் அவுட்கம்-ஐப் பார்க்கும்பொழுது கிடைக்கும் சந்தோஷத்தில் எல்லா டயர்டும் காணாமப்போச்!
என்னவர் அவர் பங்குக்கு, இப்படி போட்டோ ப்ரேம்கள் வாங்கி ப்ரேம் செய்து கொடுத்தார். நான் செய்த எம்ப்ராய்டரி மேலே இருக்கும் ஒரிஜினலைப்போல ஓரளவுக்காவது இருக்கா? ;)
அதிர்ஷ்டவசமா, இந்த ஃபெல்ட் க்ளாத் சைஸுக்கேற்ற மாதிரி போட்டோ ப்ரேம்கள் கிடைத்தன.
சிவப்புக்கலர் எம்ப்ராய்டரியையும் மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். எப்படி இருக்கு இரண்டு ப்ரேமும்?!
NB: Right click and zoom the images for better & clear view of the stitches.
Subscribe to:
Post Comments (Atom)
Mahi, you are remembering my school days craft class... they looks so beautiful with elegant colors..
ReplyDeleteso beautiful mahima..
ReplyDeletealaga erukku..
அருமையான எம்பிராய்டரி.மிகவும் நேர்த்தியாக உள்ளது மகி.
ReplyDeleteWonderful,neenga oru kutti business start pannalaam,wonderful work,loved both the frames and the embroidery :)
ReplyDeleteநிஜமா ரொம்ப அழகாயிருக்கு மஹி... எப்படித்தன் இவ்வளவு பொறுமையோட எம்பிராய்டரி போடறீங்களோ... இந்த டிஸைனை முடிக்க எவ்வளவு நாளாச்சு?
ReplyDeleteசிம்ப்ளி சூப்பர்ப். ஒவ்வொரு தையலும் பார்த்துப் பார்த்துப் போட்டிருக்கிறீங்க மகி.
ReplyDeleteஎனக்கும் நாவல் பூக்களை விட அந்தக் குட்டிக் குட்டி ஆரஞ்சுப் பூக்கள் ரொம்பப் பிடிச்சு இருக்கு. இலைகள் ஷேட் பண்ணி இருக்கிற விதம் அழகு. ஸ்வீட்.
ஐடியா சொல்லி.. கூடவே பிரேம் பண்ணியும் கொடுத்த ஆளையும் பாராட்டணும். நீட்டா இருக்கு வேலை. பிஸ்னஸாவே பண்ணலாம் நீங்க.
இதோடு... க்றிஸ் பாராட்டையும் சேர்த்து அனுப்புறேன். அதையும் பிரேம் பண்ணி வச்சுக்கங்க. ;)
அன்புடன் இமா
Romba nalla erukku Mahi, enakku embridery romba theriyaathu so ungakitta kaththukalam pola!
ReplyDeletekurinjikathambam
மஹி ரொம்ப பொருமை உங்களுக்கு சூப்பரா இருக்கு ..
ReplyDeleteu are talented Mahi- keep up the good work !
ReplyDeleteவாவ், ரொம்ப ரொம்ப அழகா இருக்கு மகி! தேர்ந்தெடுத்த ஃபிரேம் கூட ரொம்ப நல்லா இருக்கு. நானும் உங்க கிட்ட இருந்து நிறைய தையல் வகைகளை கற்றுக்கொண்டு வருகிறேன், நன்றி தோழி.
ReplyDeleteமஹி எப்படி இருக்கிங்க. வாவ் சுப்பரப். கல்க்கிட்டிங்க. எனக்கும் உங்ககிட்டே இருந்து எம்ப்ராயிடர் கத்துககனு. பிகினிரஸ்க்கு எப்படி என்று ஒரு சின்ன பூவிலிருந்து சொல்லி கொடுத்தால் என்னை மாதிரி இருக்கிறவங்களுக்கு வசதியா இருக்கும்.எனக்கு எம்ப்ராயிரடியில் 0 தான் சுத்தமாக் தெரியாது ஆனால் நல்ல ரசிக்க மட்டும் தெரியும்.
ReplyDeleteஎன்னோடா விஜிஸ்கிர்யிசேசன்ஸுக்கு ஒரு டெஸ்ட் மெயில் அனுப்ப முடியுமா?
vijiscreations@gmail.com
மகி, இரண்டுமே அழகா இருக்கு. பூக்கள், வண்ணத்துப்பூச்சி தையல்கள் அழகா இருக்கு.
ReplyDeleteohhh neenga embroidary kuda pannuveengala.... kaila niraya thozhil vachu irukeenga pola.... supera iruku design....
ReplyDeleteஅமர்க்களமாக இருக்கு,தையல் ரொம்ப பொறுமைசாலிகளால் தான் இவ்வளவு அழகாக தைக்க முடியும்.ஃப்ரேமும் அழகு,இரண்டு ஒர்க்கும் ஒவ்வொரு விதத்தில் அழகு,பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி.
ReplyDeletewow...lovely choice of colours... simply amazing...:)
ReplyDelete(me little envy you know...:)
Both embroidery looks beautiful!!
ReplyDeleteநான் செய்த எம்ப்ராய்டரி மேலே இருக்கும் ஒரிஜினலைப்போல ஓரளவுக்காவது இருக்கா? ;)
ReplyDeleteஉங்களுக்கு ஏன் இந்த சந்தேகம் நிஜமா ரொம்பவே அழகா பன்னி இருக்கீங்க மகி..
frame மும் அழகா இருக்கு..
mahi rendu design num superb.ungalukku romba porumai mahi.ennoda mother in law vum avangaloda paarattugalai solla sonnaanga.
ReplyDeleteஒரிஜினலை விடவும் ப்ரமாதமா இருக்குப்பா!! அதுக்கு உங்க ஆத்துக்காரர் வாங்கின ப்ரேமும் அழகு கவிதை!! நீங்களும் உங்களவரும் அந்த எம்ப்ராய்டரியும் அதுக்கு பொறுத்தமான ப்ரேம் மாதிரி இருப்பேள்னு தோணர்து! வாழ்த்துக்கள்!..;)
ReplyDeleteசரஸ்,சிவா,ஸாதிகா அக்கா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ReplyDeleteராஜி,பிஸினஸ் ஆரம்பிச்சுடலாம்ங்கறீங்க?! ஆகட்டும்,செய்துடுவோம்! :) தேங்க்ஸ் ராஜி!
பானு,நான் இதை மட்டும் செய்யணும்னு சின்சியரா எல்லாம் செய்யலையே! திடீர்னு 2 மணிநேரம் கன்டினியஸா தைப்பேன்,அப்புறம் 2-3 நாள் திரும்பிக்கூட பாக்கமாட்டேன்..அப்படி இப்படி ஒரு மாசமாவது ஆகிருக்கும். :)
தோடா..பிஸினஸ் பண்ண சொல்லி இன்னொரு ஆளா?!:):) இமா,நீங்கள்லாம் வாங்கிக்கறோம்னு அஷ்யூரிட்டி குடுங்க,பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணிடலாம். திரு.இமாவுக்கும் என் நன்றிகள்!ரொம்ப சந்தோஷம் உங்க கருத்தைப்பார்த்து!
குறிஞ்சி,ரெம்ப ப்ளேட் போட்டுட்டேனோ ஸ்டிச்சஸ் பத்தி?!இல்ல சீரியஸாவேதான் சொல்லறீங்களா? ;) தேங்க்ஸ் குறிஞ்சி!
சாரு,ப்ரியா,தேங்ஸ்!!
ப்ரியா,ரொம்ப சந்தோஷம்பா! ப்ரேம் என்னவரின் செலக்ஷன்! சொல்லிடறேன் அவர்கிட்ட. :)
விஜி, உங்களுக்கு அன்னிக்கே மெய்ல் அனுப்பினேனே,இன்னும் நீங்க ரிப்ளை பண்ணல?!! வேற யார்கிட்டவாவது உங்க ஐடி இருக்கா சொல்லுங்க,மறுபடி மெய்ல் பண்ணறேன்.
ReplyDeleteதேங்க்ஸ் விஜி!
வானதி,உங்களுக்கும் குட்டிப்பூக்கள்தான் பிடிச்சதா? :) நன்றி வானதி!
அகிலா,ஆமாங்க..கைத்தொழில் ஒண்ணு இருந்தா எப்பவுமே நல்லதுதானே. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!
ஆசியாக்கா,/ரொம்ப பொறுமைசாலிகளால் தான்/ நீங்க சொல்வதென்னமோ உண்மைதான்..கடைசி ஆக ஆக எனக்கே கொஞ்சம் பொறுமை குறைஞ்சுபோச்.;) தேங்க்ஸ் ஆசியாக்கா!
தங்கமணி,டொரான்டோவில் புகையறது இங்கே இருமல் வருதே! ;) தேங்க்ஸ்ப்பா!
மேனகா,நன்றி!
மஹா,நீங்க சொன்னா சரிதான்.எனக்கென்னமோ 100% திருப்தி இல்ல. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ப்ரியா,உங்களுக்கும் உங்க மாமியாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! (ஒரே ப்ரியா-மயமா இருக்கு..இங்கயே பாருங்களேன், ப்ரியா ஸ்ரீராம்,ப்ரியா,ப்ரியாராம்!! :):) )
என்னது வரவர தக்குடு வரும்போது ஒரு பனிமலையே தூக்கிட்டு வந்துடறமாதிரி இருக்கே?! நிஜமாலுமே ரொம்ப சந்தோஷமா இருக்கு தக்குடு! அவர்கிட்டவும் உன் கமெண்ட்டைக் காட்டினேன். :)
தேங்க்யூ,தேங்க்யூ!!
அட்டகாசம் மகி! அந்த பட்டாம்பூச்சி செம!
ReplyDeleteSorry for the late.. ;)
Of course very nice embroidary work dear.
ReplyDeleteBut you got the appreciation from your husband via framming is so sweet.
viji
தேங்க்ஸ் பாலாஜி! :)
ReplyDeleteவிஜி மேடம்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! என் கணவர் சப்போர்ட் இருப்பதால்தான் இப்படி சந்தோஷமா தைக்க முடியுது. :)
அருமையான எம்பிராய்டரி....அட்டகாசம் மகி...
ReplyDelete