பெண்எழுத்து-தொடர்பதிவுக்கு வானதி அழைத்திருந்தார்கள். அழைப்புக்கு நன்றி வானதி!
இதுவரை இந்தப்பதிவை எழுதியவர்கள் அனைவரும் நிறையக் கருத்துக்களை சொல்லிவிட்ட காரணத்தாலும், அடிக்கடி காலியாகிவிடும் என் மேல்மாடி இப்பவும் காலியாக இருப்பதாலும்..ஏதோ எனக்கு மனதில் தோன்றிய கருத்துக்களை எழுதுகிறேன். முதலாவதாக, நான் எழுத்துக்களை/பதிவர்களை பாலினவேறுபாட்டில் பார்ப்பதில்லை..எனக்குப் பிடித்த எழுத்துக்கள் எங்கிருந்தாலும் தேடிச்சென்று படிப்பேன். அதுபோலவே எனக்கு மனதில் தோன்றியதை இங்கே எழுதுவேன்.நான் எழுதுவது யார் மனத்தையும் புண்படுத்தாமல்,வருத்தப்படுத்தா
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் நல்ல கருத்துக்களை எழுதவேண்டும்..நமது பதிவுகள் படிப்பவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்,அறிவுரை கூறவேண்டும்,வழிநடத்தவேண்டும்.
இதையே தான் எல்லார் எழுத்துக்களிலும் எதிர்பார்க்கிறேன்,அது ஆணாகஇருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி. பெண்கள் ஒரு எல்லைக்கோட்டுக்குள் எழுதவேண்டும்,ஆண்கள் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பது எனக்கு உடன்பாடில்லை..யாராக இருந்தாலும் நாகரீகமாக எழுதவேண்டும்,அவ்வளவுதான்! இது என் எதிர்பார்ப்பு.எதிர்பார்ப்புக்கு அளவுகள் இருக்கின்றதா என்ன?!
புத்தம் புது பூமி வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்..
தங்க மழை பெய்ய வேண்டும்..
தமிழில் குயில் பாட வேண்டும்!
சொந்த ஆகாயம் வேண்டும்..
ஜோடி நிலவொன்று வேண்டும்..
நெற்றி வேர்க்கின்ற போது- அந்த
நிலவில் மழை பெய்ய வேண்டும்!
வண்ண விண்மீன்கள் வேண்டும்..
மலர்கள் வாய் பேச வேண்டும்..
வண்டு உட்காரும் பூ மேலே – நான்
வந்து உட்காரும் வரம் வேண்டும்!
கடவுளே, கொஞ்சம் வழிவிடு..- உன்
அருகிலே ஒரு இடம் கொடு..
புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு..
பூமியில் சில மாறுதல் தனை வர விடு!
யுத்தம் காணாத பூமி – ஒரு
சத்தம் இல்லாமல் வேண்டும்.
மரணம் காணாத மனித இனம் – இந்த
மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்!
பஞ்சம் பசி போக்க வேண்டும்..
பாலைவனம் பூக்க வேண்டும்..
சாந்தி,சாந்தி என்ற சங்கீதம் – சுகம்
ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்!
போனவை அட,போகட்டும்..
வந்தவை இனி வாழட்டும்..
தேசத்தின் எல்லைக் கோடுகள்..அவை தீரட்டும்..
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்!
வைரமுத்து அவர்களின் இந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அது போலத்தான் என் எதிர்பார்ப்பும்! இன்று இல்லாவிட்டாலும் ஒருநாள் என் எதிர்பார்ப்பு நிறைவேறும் என்று நம்புகிறேன். கடைசியாக ஒன்றே ஒன்று..நீங்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்,
"You are responsible for What You Are!!!!!!"
~~~~
வழக்கம்போல பொறுமையாக இதைப்படித்தமைக்கு என் நன்றிகள்!
மேத்தி புலாவ்-சப்பாத்தி-ஸ்பினாச்,பாசி
மகி சூப்பர்.அழகாக அருமையாக சொல்லிட்டீங்க,எனக்கு தானே அந்த ப்லேட்? அந்தப் பழம் மட்டும் எனக்கு வேணும்..அசத்தலான பரிமாறல்.
ReplyDeleteமஹி அழகா, அருமையா சொல்லி இருக்கீங்க. உங்க பதிவை எப்போ படிச்சாலும் நாங்க ஆச்சர்யம் தான் அடைவோம். மஹி எப்படி இப்படி எழுதராங்கனு. நீங்க எதை சொன்னாலும் அதை அழகா சொல்லறீங்க மஹி. உங்க எழுத்து நடை அருமை.
ReplyDeleteஇந்த பாடல் வரிகள் எனக்கும் பிடித்த வரிகள் மஹி.
ReplyDeleteNice Mahi!
ReplyDeleteப்ரெசென்ட் டீச்சர் ...:)
ReplyDeleteமேத்தி புலாவ்-சப்பாத்தி-ஸ்பினாச்,பாசிப்பருப்பு பொரியல்-சோயாபீன்ஸ் குருமா-ஆரஞ்சுப் பழம்....சாப்பிட்டுட்டு போங்க! :)...
ReplyDeleteகண்டிப்பா சாப்டுதான் போவோம் ....
நிச்சயம் உங்கள் பதிவு
ReplyDeleteபுன்னகை மட்டும் அன்றி
மனதிருக்கு நிறைவையும்
தந்து இருக்கின்றது...
சூப்பர்ப் ம் மகி...கண்டிப்பாக உங்க பதிவுகள் அனைத்துமே அருமை....
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்த பாடல்...வரிகளுக்கு நன்றி..
கடைசி படம் கலக்கிட்டிங்க...இப்படி எல்லாம் ஆசையினை காட்ட கூடாது....
சூப்பரா, உங்க கருத்தை சொல்லி ருக்கீங்க.
ReplyDeleteshort and sweet solliteenga mahi..
ReplyDeletesaapadu super....
உங்க கருத்தை தெளிவா சொல்லிருக்கீங்க..கடைசி படம் அருமை!!
ReplyDeleteஹாய் மஹி வழக்கம்போல் உங்களுக்கே உரிய பாணியில் பெண் எழுத்து பற்றி சூப்பராக சொல்லிட்டீங்க...
ReplyDeleteஅது மட்டுமா..?அசத்தலான சாப்பாடு வேறு...(கண்ணால் காண்பதற்க்கு மட்டுமேவா...????)))
சரி இந்த அசத்தலான பாட்டுடன் கூடிய அழகிய எழுத்துக்கு என்னால் முடிந்தது ஒரு நினைவு சான்றிதழ்...முடிந்த போது என் இல்லம் வந்து சிரமம் பாராமல் பெற்றுக் கொள்ளுங்கள் சரியா மஹி...
நன்றி.
அன்புடன்,
அப்சரா.
I love to read your posts, you are really a great writer apart from cooking, it's not a joke......seriously, delicious food, yummy
ReplyDeleteThat's my fav song too.........
ReplyDeleteVery well said Mahi.
ReplyDeleteI verymuch like the song puthampudu...
The photo made me feel hungry.
viji
நல்லா எழுதியிருக்கீங்க, மகி. வார்த்தைகளை அழகா தொகுத்து, அழகான எழுத்து நடை.
ReplyDeleteஎங்கள் மகி எதைச் செய்தாலும், எழுதினாலும் அசத்தலாகததானிருக்கும். நினைத்துக் கொண்டேன் வந்திருக்கும்
ReplyDeleteசென்னையிலிருந்து. பாராட்டும் காமாட்சிமா சென்னை
// நான் எழுத்துக்களை/பதிவர்களை பாலினவேறுபாட்டில் பார்ப்பதில்லை..எனக்குப் பிடித்த எழுத்துக்கள் எங்கிருந்தாலும் தேடிச்சென்று படிப்பேன். அதுபோலவே எனக்கு மனதில் தோன்றியதை இங்கே எழுதுவேன்//
ReplyDeleteநல்ல பாலிசி.. நானும் இப்படித் தான்..
//அட்லீஸ்ட் ஒரு சின்னப்புன்னகையுடனாவது என் பதிவைக் கடந்து சென்றால் மகிழ்ச்சி.//
:)
இது என்ன மாதிரியான தொடர்பதிவுன்னு புரியல மகி.. வானதி ப்ளாக்ல எட்டிப் பாத்துக்கறேன்..
ஆசியாக்கா,ப்ளேட் முழுக்க வேணும்னு சொல்லிட்டு பழம் மட்டும் போதும்ங்கறீங்க?! :)
ReplyDeleteநன்றி ஆசியாக்கா!
ப்ரியா,இந்தப்பாட்டு உங்களுக்கும் பிடிக்குமா? எனக்கும் பலபாடல்களில் (இசையை விட) பாடல்வரிகள் மிகவும் பிடிக்கும். தேங்க்ஸ் ப்ரியா!
தேங்க்ஸ் குறிஞ்சி!
சிவா,அன்பான கருத்துக்கு மிக்க நன்றி!
கீதா,தேங்க்ஸ் கீதா! ஒருநாள் டின்னருக்கு அந்தப்ளேட் என்னவர் அரேஞ்ச் பண்ணித் தந்தது.எனக்கு ஓரளவுக்கு சமைப்பேன்,ஆனா பொறுமையா இப்படி அடுக்கிவைத்து ப்ரெசன்ட் பண்ணுவதுக்கு வராது. :)
லஷ்மிமா,நன்றிமா!
மஹா,தேங்க்ஸ்! :)
ReplyDeleteமேனகா,நன்றி!
அப்ஸரா,நினைவு சான்றிதழுக்கு மனமார்ந்த நன்றி! பெற்றுக்கொண்டேன். :)
/it's not a joke......seriously,/வேணி,இப்பதான் நீங்க ஜோக் பண்ணறீங்களோன்னு டவுட்டே வருது! ஏனா போஸ்ட்ல பாதி வைரமுத்து கவிதை போட்டு ஃபில் பண்ணிருக்கேன்.ஹிஹி! (just kidding! :) )
ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க கருத்தைப்பார்த்து,நன்றி வேணி!
விஜி மேடம்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
வானதி,நன்றி வானதி! எனக்கு சீரியஸ் விஷயங்கள் எழுதுவது அவ்வளவா வராது,(சந்து கமெண்ட்டைப் பார்த்தா உங்களுக்கே புரியும்.:)) இருந்தாலும் ஏதோ எழுதிட்டேன்.;)
காமாட்சிமா,சென்னைல இருக்கீங்களா? சிரமம் பார்க்காமல் கருத்துக்களை எழுதுவதுக்கு மிக்க நன்றிமா!
//:)// இதுக்குப் பேரு சின்னப்புன்னகைன்னு புரிந்துக்கறேன்.தேங்க்ஸ் சந்தனா!
/இது என்ன மாதிரியான தொடர்பதிவுன்னு புரியல மகி../என்ன எழுதிருக்கேன்னு புரிலையா? ஆஹா..அப்ப நானும் பின் நவீனத்துவ கதைகள் எழுத ஆரம்பிக்கலாம் போல இருக்கே? ;)