கடந்த பதிவில் பர்ட் ஃபீடர் பற்றி சொல்லியிருந்தேன், வீட்டுக்குள் சில அடித் தொலைவில் நான் கேமராவுடன் அமர்ந்திருந்தாலும் கவலையில்லாமல் தம்பாட்டிற்கு வந்து ப்ரேக்ஃபாஸ்ட், லன்ச்,ஈவினிங் ஸ்னாக் என்று சாப்பிட்டுவிட்டுச் செல்கிறார்கள் இந்த ஹவுஸ் மார்ட்டின் பறவைகள்..சில நாட்கள் கண்ணாடிக்தவுக்குப் பின்னால் இருந்த நான், கதவையும் திறந்து வைத்தே படமெடுத்தாலும் கண்டுகொள்ளாமல் தேமேன்னு வந்து சாப்பிட்டுவிட்டுச் செல்லும் எங்கள் வீட்டுப்பறவைகளுக்காக இந்தப் பதிவு...
இவர் முதன் முதலில் வந்த பறவையார், வீடியோ எடுக்க முடியுமா என்ற பதற்றத்திலேயே எடுத்தேன். ஒரு பெரிய உணவுத் துணுக்கை விழுங்கியதும் விக்கிக் கொள்ள, விடுவிடுவென்று சுவற்றோரம் போகிறார். அங்கே அலகை அப்படி இப்படித் திருப்பிக் கூர் தீட்டிக்கொண்டு பறந்துவிட்டார்....
தனியே தண்ணீரும் வைக்கவேண்டுமோ என்று சீரியஸாக யோசிக்கத் தொடங்கியிருந்தேன் அப்பொழுது!! பிறகு கீழ்வீட்டில் பறவைகளுக்குத் தண்ணீர் வைச்சிருக்காங்க என்று தெரிந்துவிட்டது. :))
அடுத்த வீடியோவில், தத்தித் தத்தி நடைபயின்று வரும் பறவையார்..நாலடி தள்ளி கேமராவுடன் நான்! அவ்வப்பொழுது தலையைத் திருப்பி காமராவைப் பார்ப்பதில் இருந்து தான் காமெராவில் சிறைபிடிக்கப் படுகிறோம் என்பது தெரிந்திருக்கிறது பறவையாருக்கு என்றே நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க??
பறவைகள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒரு விதம்! :) சிலர் குண்டுப் பூசணிக்காய்களாக, சிலர் ஒல்லியாக, உயரமாக, சிலர் சாந்தமாக, சிலர் கோபமாக, சிலர் அவசரமாக, சிலர் அழகாய் நிதானமாக அன்னநடை பயின்றபடி...என்று வந்து கொத்தித் தின்று பறந்துகொண்டே இருக்கிறார்கள்...
தினமும் இதையே சாப்பிட்டால் போரடிக்குமாம், அதனால் அடுத்து இவர்களுக்கு இட்லி-தோசை-சட்னி எல்லாம் ரெடிபண்ணித் தரவேண்டும் என்று ஐடியா குடுக்கிறார் என்னவர். இவங்களுக்கு ரொட்டித் துண்டு குடுத்தாலே ஸ்டைலாக அந்தப் பக்கம் இழுத்துத் தள்ளிவிட்டு அவர்களுக்கான ஸ்பெஷல் உணவை மட்டுமே கொத்தறாங்க, இதிலே இ-தோ-ச- எல்லாமும் வேறா? அவ்வ்வ்வ்...அனேகமாக அது தென்னிந்தியப் பறவைகளுக்கு மட்டுமே பிடிக்கும்என்று நினைக்கிறேன். அமெரிக்கப் பறவைகள் peanut butter snack-தான் சாப்பிடறாங்க! :D
பறவைகளுக்கு ஸ்னாக்ஸ் கொடுத்துவிட்டு, இந்தப் பதிவைப் படித்த உங்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் அனுப்பினால் எப்படி? ;) இந்தாங்க, "ஐடியா வடை" & காஃபி! காஃபி பதமான சூடில் இருக்கிறது, ஆறுமுன் குடிச்சிருங்க :~
மசால் வடை , உளுந்துவடை கேள்விப்பட்டிருக்கோம், அதென்ன ஐடியா வடை?-என்று புருவம் தூக்கும் ஆட்களுக்காக ஒரு quick recipe! ;)
தால் மக்னி செய்யலாம் என்று கருப்பு உளுந்து-க.பருப்பு-black eyed peas ஊறவைத்து சமைக்கப் போகையில் "தக்காளி, காலி!" என்று தெரியவந்தால் என்ன செய்வது?! பருப்பை வடித்து இஞ்சி-பூண்டு-சோம்பு-வரமிளகாய் சேர்த்து கொறகொறன்னு அரைச்சு, வெங்காயம் நறுக்கிப் போட்டு,உப்பும் போட்டு வடையாத் தட்டிப் பொரிச்சு எடுக்கவேண்டியதுதான்! ஹிஹிஹி...நன்றி!
ஐடியா வடை பெயரைப்போல் வடையும் சூப்பர்.பறவையம்மா பகிர்வும் காணொளிக்காட்சியும் அருமையோ அருமை.
ReplyDeleteromba nalla iruku paravaigalai patri:) lovely fotos and clicks:) njoyed it!!
ReplyDeleteபறவை கொத்தி கொத்தி சாப்பிடும் பொழுது நமக்கும் கொரிக்க ஏதாவது இருந்தால் நல்லாயிருக்கும் என்று நினைக்கும் பொழுது ஐடியா வடை காத்திருக்கு.அடுத்த தடவை மறக்காமல் தண்ணீர் வைங்க.உங்க வீட்டில் இட்லி,தோசையோடு டீ,காபி வைச்சாலும் வைப்பீங்க,கோவைக் காரங்களாச்சே! விருந்துபசாரம் பலமாகத்தான் இருக்கும்.
ReplyDeleteபடங்களும் பகிர்வும் நல்லா இருக்கு. எங்க வீட்டு ஜன்னலுக்கு வரும் பறவைகள் சாதம் வைத்தால் திரும்பிகூட பாக்க மாட்டாங்க டிபன் ஐட்டம்தான் சாப்பிடுவாங்க. சப்பாத்தின்னா ரொம்ப இஷ்டமா சாப்பிடுவாங்க.
ReplyDelete//பறவைகள் சாதம் வைத்தால் திரும்பிகூட பாக்க மாட்டாங்க டிபன் ஐட்டம்தான் சாப்பிடுவாங்க. சப்பாத்தின்னா ரொம்ப இஷ்டமா சாப்பிடுவாங்க. //லஷ்மிம்மா,பம்பாய் பறவைகள் சப்பாத்தி சாப்பிடுவது கரெக்ட்டுத்தானே?!? பறவைகள் அநியாயத்துக்கு ஒவ்வொரு ஊரிலும் மனிதர்களின் உணவுக்கு என்னமா அடாப்ட் ஆகிருக்கு பாருங்க! :)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா!
---
ஆசியாக்கா, தண்ணீர் வைக்க தட்டு ஒண்ணு கண்டுபுடிச்சதும் தண்ணீரும் வைச்சிருவேன்.:) ப்ரெட்டே சாப்பிடாத ஆட்கள் டீ-காபில்லாம் குடிப்பாங்களா? ஸ்டார்பக்ஸ் காஃபி வேணா வாங்கி வைச்சுப்பாக்கலாம்! ஹாஹ்ஹா! ;)
நன்றி ஆசியாக்கா!
---
வித்யா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! மிக்க மகிழ்ச்சி!
---
ஸாதிகாக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! காணொளில ஏதாவது பாட்டு சேர்க்கலாமான்னு நினைச்சேன்,ஆனாலும் அப்படியே விட்டுட்டேன்! உங்க கருத்தைப் பார்த்து ரொம்ப சந்தோஷம் ஸாதிகாக்கா!
---
டாக்டர் ஐயா,அதிகாலையில் வந்து ரசித்தமைக்கு மிக்க நன்றிங்க.
---
என்னைப் போலவே ஒருவர். ;)
ReplyDeleteயாராச்சும் டிஷ்யூ ப்ளீஸ்.
முதலாம் பந்தி இமாதானே எழுதிக் கொடுத்தேன்! ம். ;)
ReplyDelete//காமெராவில் சிறைபிடிக்கப் படுகிறோம் என்பது தெரிந்திருக்கிறது பறவையாருக்கு// நிச்சயம். மகிக்கு மிச்சம் வைக்கப்படாது என்று பரபரன்னு சாப்பிடுது பாவம். ;)
//பறவைகள் பலவிதம்....// எங்களை மாதிரி. ;) ரசித்தேன்.
//இட்லி-தோசை-சட்னி எல்லாம் ரெடிபண்ணித் தரவேண்டும் என்று ஐடியா குடுக்கிறார் என்னவர்.// அதான் எனக்குத் தெரியுமே. சொல்லணுமா! ;)
அடுத்த தடவை காமராவுக்கு சமீபமா வந்து சொல்லுங்க திரு. மகி, மாக்சிமம் வால்யூம் வைச்சும் இன்டரப்ட் ஆன ஸ்கைப் அக்கவுண்ட்ல கேக்கறாப்ல இருக்கு. பறைவைக்கு ஐஸ்க்ரீம் பிடிக்கும்னு மகிட்ட சொல்லுங்க! ;)
காஃபி & ஐடியா வடைக்கு நன்றி. சூ..ப்பர்.
ReplyDeleteபடங்களும் பகிர்வும் சூப்பர்!!!
ReplyDelete:)))))))))))))
ReplyDeleteநோ !!!நோ !! இருவர் .
மகி குருவி அழகா இருக்கு .எதையும் ரசித்து செய்றீங்க .
கருப்பு உளுந்து வடை பார்த்ததும் நினைவு வந்தது .அம்மா எப்பவும் கருப்பு உளுந்தில் மிளகு சேர்த்து செய்வாங்க .ஐடியா வடை சூப்பர்ஐடியா :))))))))))))) .
எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டில் பறவைகளுக்கு சாப்பாடு, தண்ணீர் எல்லாம் வைப்பார்கள். சம்மர் டைம் புல்லுக்கு தண்ணி விடும்போது எங்க கார்டனில் பறவைகள் வந்து கும்மாளம் போடுவார்கள். என் மகளுக்கு பறவைகளைக் கண்டாலே கொண்டாட்டம். ரெட் கலரில் இருக்கும் பறவைக்கு Fat Albert என்று பெயர் வைத்திருக்கிறா. அவ்வளவு சூப்பரா இருக்கும் அந்தப் பறவை. கறுப்பு கலரில் இருக்கும் இன்னொரு பறவை, நாங்கள் பைப்பினை திறந்தால் எங்களை வீட்டுக்குள் விரட்டுவதில் குறியாக இருக்கும். நாங்கள் வீட்டினுள் போன பிறகு தான் ஜோடியாக குளிப்பார்கள்.
ReplyDeleteநல்ல பதிவு, மகி.
மகி,
ReplyDeleteபடங்கள்,வீடியோ எல்லாம் நல்லா வந்திருக்கு.நாள் முழுவதும் அவர்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.நேரம் போவதே தெரியாது.
nalla post, super vadai..
ReplyDeleteNice post Mahi.There are couple of birds that come around 7.30 am every day to our garden and eat the little insects and garden worms. They will eat bread crumbs but we have not given them anything else worried that something might happen.
ReplyDeleteIdea vadai is a good one. BTW did you give tissue to Imaa:))
ReplyDelete//ஆனால் நான் வெளியுலகை எந்த அளவுக்கு நேசிக்கிறேனோ, அதை விடவும் வீட்டினுள் இருப்பதை விரும்பும் வீட்டுப் பறவை! :))//
ReplyDeleteஎன் நிலைமையும் இதேதான், என்னதான் சொர்க்கமெனினும் வீட்டுக்கு வந்தால்தான் ஒரு நிம்மதி, திருப்தி.
வீட்டுக்கு வந்து போகும் சிட்டுக்களோடு நேரம் போவது தெரியாமல் மினக்கெடலாம். இது குருவியா? கிளியா? பெரிசா இருக்கிறாரே?:).
ReplyDeleteஐடியா வடையை வேளைக்குச் சொல்லியிருந்தால் கனடாவில தேடிக் கண்டு பிடிச்சிருப்பேனே:))..
//கனடாவில தேடிக் கண்டு பிடிச்சிருப்பேனே:))..//
ReplyDeleteமுதலில் பாக்ல வைச்ச அண்டாடிக்க ஸ்வீட்ட தேடி எங்களுக்கு கொடுங்க :}}}}}}}}}}}}}]
/இமா said...என்னைப் போலவே ஒருவர். ;)
ReplyDeleteயாராச்சும் டிஷ்யூ ப்ளீஸ்./ /BTW did you give tissue to Imaa:))/ இமா, நான் அனுப்பிய டிஷ்யூ பாக்ஸ் வந்து சேர்ந்ததா? வந்ததும் கிரிஜாகிட்ட சொல்லிருங்க. :)
/முதலாம் பந்தி இமாதானே எழுதிக் கொடுத்தேன்!/ :) நட்பு வட்டத்தில் பலரும் என்னைப் போலதான் என்று தெரியும்போது சந்தோஷமா இருக்கு.அதிராவும் அதையே சொல்லிருக்காங்க பாருங்க! ஆனா "பந்தி"-யிலே ந்-க்கு பதிலாக த்-போடுவதுதான் தமிழகப் பழக்கம்.
பந்தி-என்றால் விருந்து பரிமாறப்படுவது இமா! உங்கட ஊரிலே பந்திக்கு நீங்க சொல்லும் அர்த்தம் மட்டும்தானோ?
நீங்க திரு.மகி-க்கு சொல்லிய கருத்துக்களை மகியே அவர்கிட்ட சொல்லிட்டேன். /ஐஸ்க்ரீம் பிடிக்கும்னு மகிட்ட சொல்லுங்க! ;)/ கிவி-பறவைகள்தானே நீங்க சொல்லும் பறவை? அது அமேஏஏஏரிக்கா இப்போதைக்கு வராதாம்,வரும்போது ஐஸ்க்ரீம் கட்டாயம் உண்டு,அதுவும் ஹோம் மேட் ஐஸ்கிரீம்! :)))
நன்றி இமா!
~~
ப்ரியா,நன்றிங்க!
~~
//நோ !!!நோ !! இருவர்.// ஏஞ்சல் அக்கா, போஸ்டுக்கு இருவர் என்று டைட்டில் வைக்கச் சொல்றீங்களா??
கருப்பு உளுந்து நான் முதல்முறை வாங்கி, முதல் முதலா இப்படி ஒரு வடையும் செய்தேன். மிளகு சேர்க்க நினைவு வரலை,அடுத்த முறை செய்துபார்க்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!
~~
வானதி ரெட் பறவைகள் இங்கே பறக்கும், ஆனா வீட்டுக்கு வந்து உணவு எடுக்காது. உங்க வீட்டில பறவைகள் ஜலக்கிரீடை வேற செய்வாங்களா? அழகா இருக்குமில்ல பார்க்க? :)
நீங்களும் ஃபீடர் வாங்கி வையுங்க வானதி, குட்டீஸ் நல்லா என்ஜாய் பண்ணுவாங்க! Fat albert உங்க பொண்ணுக்கு க்ளோஸ் ப்ரென்ட் ஆகிருவார்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
சித்ரா அக்கா,ஆமாம், பொழுது போவதே தெரியலைதான்! :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
ஹேமா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
/we have not given them anything else worried that something might happen./நல்ல வேளை, கவலைப் பட்டீங்க போங்க!! இல்லைன்னா.....என்ன ஆகியிருக்கும்? உங்க இட்லி ஃப்ரை,ஃபிஷ் ப்ரை, கொக்ககோலா கொழம்பு, பேபி கார்ன்-க்ராண்ட்மா கார்ன்...இதெல்லாம் சாப்புட்டு, பறவைகள் பரிணாம வளர்ச்சியடைந்து உங்களோட ஆஃபீஸ் வந்து வேலை பார்த்துட்டு இருந்தாலும் இருந்திருக்கும்!;)))))) இயற்கையைக் காப்பாத்தினதுக்கு இந்த ஒட்டு மொத்த உலகத்தின் சார்பா நான் உங்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன் கிரிஜா!! தாங்க்கியூ!! :D :D
ஜோக்ஸ் அபார்ட்,கரெக்ட்டா 7.30க்கு வருவாங்கனு டைம் எல்லாம் நோட் பண்ணிருக்கீங்க,பறவைகளுக்குன்னே உணவுகள் விற்கறாங்க,அதை வாங்கி குடுங்க.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரிஜா!
~~
//சொர்க்கமெனினும் வீட்டுக்கு வந்தால்தான் ஒரு நிம்மதி, திருப்தி.// சேம் பிஞ்ச் அதிரா! :)
/ஐடியா வடையை வேளைக்குச் சொல்லியிருந்தால்/ வேளை மாறி, இடைவேளையில் பப்ளிஷ் பண்ணிட்டனோ?? பரவால்லை, நீங்க பிரித்தானியாவில் தேடிக் கண்டு புடிங்க. மொதல்ல அண்டாட்டிக்கா ஐஸ் இனிப்பை தேடிக் கண்டுபுடிச்சு எங்களுக்கு குடுங்க, வெல் said ஏஞ்சல் அக்கா! :);)
~~
//இயற்கையைக் காப்பாத்தினதுக்கு இந்த ஒட்டு மொத்த உலகத்தின் சார்பா நான் உங்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன் கிரிஜா!! தாங்க்கியூ!! :D :D //
ReplyDeletePlease don't mention munname solli irukken ennaiya remba pukazhnathaa enakku shyaa varuthu :)) intha paazhaa pona computer il tamizhla type panna vara maattenguthu. Seekirame ithukku oru vazhi pannittu varen
//முதலில் பாக்ல வைச்ச அண்டாடிக்க ஸ்வீட்ட தேடி எங்களுக்கு கொடுங்க :}}}}}}}}}}}}}]//
ReplyDeleteI agree with you Anju. Mudhalle sweet please poos!
//Please don't mention munname solli irukken// :)))) ஒரு நாலு நல்ல வார்த்தை சொல்லலாமுன்னா விடமாட்டேன்றீங்களே?! ;)
ReplyDelete//ennaiya remba pukazhnathaa enakku shyaa varuthu :))// ரொம்ப ஷை வந்து நீங்க செக்கச்செவேர்னு ஆகிட்டதா கேள்விப்பட்டேன். சரி, இனிமே மென்ஷன் பண்ணலை, கலர் மாறி ஐரோப்-வாசிகளை பயமுறுத்தாதீங்க! ;))
பூஸ் இப்புடி அப்புடின்னு பொட்டியெல்லாம் பிரிச்சு ஸ்வீட்ட எடுக்கறதுக்குள்ள ஐஸ் ச்வீட் எல்லாம், கரைஞ்சு உருகி, ஆவியும் ஆகிரப்போகுது,நமக்கு பட்டைநாமம் சாத்தப் போறாங்கோஓஓஓ! :)))
/இது குருவியா? கிளியா? பெரிசா இருக்கிறாரே?:)./அதிரா இது ஹவுஸ் மார்ட்டின் என்ற பறவைன்னு சொல்றாங்க,எனக்கு சரியாத் தெரியலை. லிங்க் குடுத்திருக்கிறேனில்ல,டைமிருந்தா க்ளிக்கிப் பாருங்கோ.
ReplyDeleteவிக்கிபீடியாவில் போட்டிருக்க ஹவுஸ் மார்ட்டின் போட்டோ எங்க வீட்டுகுருவி மாதிரியே இல்லை..வேறமாதிரி இருக்குது..அவ்வ்வ்வ்வ்வ்!