Saturday, February 27, 2010

பூ போல இட்லி,புதினா சட்னி-நிறைவுப் பகுதி

பூ போல இட்லி- புதினா சட்னி தொடர்கிறது..தொடர்கிறது!! (நீங்க தப்பிக்க முடியாது..படிச்சேதான் ஆகணும்! )

முதல்பதிவில பேக்ட் இட்லி பத்தி பேசிட்டு இருந்தமில்ல? அப்படி ஆகாமல், மாவை புளிக்க வைக்க நீங்க சமைக்கும் பொழுது பக்கத்து ஸ்டவ் டாப்ல அல்லது குக்கிங் ரேஞ்ச்ல வைச்சிங்கன்னாலும் ஓகே தான்.இது கொஞ்சம் ரிஸ்க் ப்ரீ!! :)

அதுக்கு முன்னால இதுவரை நாம செஞ்ச முயற்சிகள் கரெக்ட் டைரக்ஷன்லதான் வந்திருக்கான்னு செக் பண்ணிடுவோம். மாவு இருக்கிற பாத்திரத்த கையால தூக்கிப் பாருங்க..வெயிட்டே இல்லாம இருக்கும்..மாவு நல்லா பொங்கியிருக்குங்கரதுக்கு இது ஒரு அடையாளம்.

இன்னொரு சின்ன கிண்ணத்துல கொஞ்சம் தண்ணி (பச்சைத் தண்ணி..பாத்திரம் கழுவற அவசரத்துல சின்க்- வர சுடுதண்ணி புடிச்சிரக் கூடாது) எடுத்து, இந்த மாவுல இருந்து ஒரு டிராப் எடுத்து கப்ல இருக்கற தண்ணில போடுங்க...மாவு
 • தண்ணிக்குள்ள போயி செட்டில் ஆயிடுச்சுன்னா..கேஸ் 1
 • தண்ணிக்குள்ள போயி நிதானமா மேல வந்து மிதந்தா..கேஸ்2
 • தண்ணிக்குள்ள போன ஸ்பீடுல மேல வந்து மிதந்தா..கேஸ்3
இப்போ நிதானமா ஒரொரு கேசா பாப்போம்..

கேஸ் 1 இந்த நிலைக்கு ரெண்டு காரணங்கள்..ஒண்ணு நீங்க அரிசி உளுந்து வெந்தயம் ரேஷியோ கரெக்டா போடல, உளுந்து குறைவா போட்டிருப்பிங்க. அடுத்த காரணம், இன்னும் மாவு சரியா பொங்கல..மாவு சரியா புளிக்கலைன்னா இன்னும் ஒரு ஏழெட்டு மணி நேரம் வைச்சு மறுபடியும் டெஸ்ட் பண்ணிப்பாருங்க.
முதல் காரணத்துக்கு இப்ப ஒண்ணும் பண்ண முடியாது...கமுக்கமா தோசை,இல்ல பணியாரமா ஊத்திருங்க.

கேஸ்2 உங்க இட்லி மாவு பர்பெக்ட்டா இருக்கு..தைரியமா இட்லி ஊத்தலாம்..கண்டிப்பா பூப்போல இட்லி வரும்.


கேஸ் 3 உளுந்து அதிகமா போட்டு அரைச்சிருக்கிங்க..இப்ப அதையும் சரி பண்ண முடியாது..இந்த கேஸ்ல இட்லி ஊத்தலாம், ஆனா இட்லியே தோசை மாதிரி(!!) வரும். பேசாம தோசையே சுட்டுடுங்க.

இன்னொரு விஷயம் என்னன்னா..இட்லி தட்டு இட்லி ஊத்தி வைக்கறது..முதல்ல நான் இட்லிதட்டுகெல்லாம் நல்லா ஆயில் மசாஜ் பண்ணி(!!!) அப்புறமா தான் இட்லி ஊத்துவேன். எனக்கு சுத்தமா புடிக்காத வேலை அது..ஆனா வேற வழி இல்லையே.இப்படி இருக்கும்போது, அருப்புக் கோட்டைக்கார அக்கா ஒருத்தங்க(அவங்க இருப்பது MASS -ல) ஒரு நாள் போன்ல ப்ளேட் போடும்போது பேச்சு வாக்குல, "நான் இட்லித் தட்டுக்கு எண்ணெய் தடவ மாட்டேன்..தண்ணில லசிட்டு, அந்த ஈரம் இருக்கும் போதே ஊத்திடுவேன்" னு சொன்னாங்க..அடுத்த முறை நானும் அதையே பாலோ பண்ணேன்..சூப்பரா இட்லி வந்தது..அதிலிருந்து இட்லித்தட்டுக்கு நோ ஆயில் மசாஜ்.

நீங்க ஆயில் மசாஜ் பண்ணாலும், பண்ணாட்டியும் குக்கர்ல இருந்து இட்லிய எடுத்து அஞ்சாறு நிமிஷம் ஆற வைக்கணும். இட்லித் தட்டு கம்ப்ளீட்டா ஆறினதும்தான் இட்லிய எடுக்கணும்.அவசரப்பட்டு எடுத்தம்னா அம்பேல்..இட்லி தட்டை விட்டு முழுசா வராது..நீங்க இவ்வளவு அரும்பாடு பட்ட செஞ்ச இட்லி டைரக்ட்டா சூர்யவம்சம் இட்லி-உப்புமா ஆயிடும்..ஸோ, ஜாக்கிரதையா..பொறுமையா எடுங்க..பொறுத்தார் பூமி ஆள்வார்னு பழமொழியே இருக்கில்ல?

அடுத்து தோசை ஊத்துவோமா? :)

நான் திருமணமாகி பெங்களூருக்கு வரும்போதே என் கணவர் கிச்சன் சாமானெல்லாம் வாங்கி செட் பண்ணி தனியே(!!) தனிக்குடித்தனம் நடத்திட்டு இருந்தார். இவர் வாங்கி வைச்சிருந்த தோசைக்கல்ல பத்தி சும்மா சொல்லக் கூடாது..சூப்பரான தோசைக்கல்..பேப்பர் ரோஸ்ட் மாதிரியே மெல்லிசா தோசை ஊத்தலாம் அதுல..என்ன ஒரே பிரச்சனைன்னா ஹேண்டில் உடைஞ்சுடுச்சு..அதனால இப்ப சப்பாத்தி போட யூஸ் பண்ணிட்டு இருக்கேன்.

புதுசா வாங்கிவந்த தோசைக்கல்ல செலக்ட் பண்ணதும் இவர்தான்..இந்த புது தோசைக்கல் இருக்கே, அதுக்கு எஜமான விசுவாசம் ரொம்ப அதிகங்க..தோசை சுட ஆரம்பிச்சா, சூப்பரா மொறு-மொறுன்னு வரும்..ஆனா கரெக்ட்டா "எனக்கு போதும்"-னு இவர் சொல்லறது அதுக்கு எப்படித்தான் காது கேக்குமோ தெரில, அதுக்கப்புறம் ஒரு தோசை கூட சரியா வராது. :(

கல்லு ரொம்ப சூடாகிருக்கும்னு ஹீட்-ஐ குறைப்பேன்..தண்ணிய தெளிப்பேன்..வெங்காயத்த கட் பண்ணி தேய்ப்பேன்..நீ என்ன வேணா பண்ணு,நான் இப்படித்தான்னு (என்னை மாதிரியே) பிடிவாதம் பிடிக்கும். ஊத்தப்பமா ஊத்தினாலும் கல்ல விட்டு வராது..அப்பப்போ தோசைய கல்லுல இருந்து பிரிக்கவே முடியாது..இவர்தான் வந்து ஹெல்ப் பண்ணுவார்.

"கல்லுல இருந்த தோசை நேரா என் ப்ளேட்டுக்கு வரணும்.அதுக்கப்புறம் அடுத்த தோசைய ஊத்துங்க"ன்னு அம்மாவ நான் பண்ண கொடுமைய எல்லாம் நெனச்சுகிட்டே, பிஞ்சு பிஞ்சு வந்த தோசையெல்லாம் 'எப்படியும் பிச்சுத்தானே சாபிடப்போறோம்'னு மனசத் தேத்திக்கிட்டு நான் சாப்பிடுவேன்.

இந்த வம்பு புடிச்ச தோசைக்கல்லுல அடுத்து ஒரு முறை சப்பாத்தி சுட்டுட்டம்னா சரியாயிடும்..அதுவும் அவங்க மாஸ்டர் சாப்ட்டு முடிக்கற வரைதான்..ஸோ, யாராவது வீட்டுக்கு வந்தா பழைய தோசைக்கல்லுல தான் தோசை. என்ன இருந்தாலும் ஓல்ட் இஸ் கோல்ட்தாங்க!

இப்படியாக நான் சமைத்த இட்லி, தோசை எல்லாம்தான் அங்கங்கே போட்டோல இருக்கறது. காமெடியா எழுதிருந்தாலும் இங்கே சொல்லப்பட்டிருப்பதெல்லாம் சொந்த அனுபவம்.

கண்ணில் ரத்தக்கண்ணீர் வந்த போதும்..விடாமல் இந்தப்பதிவைப் படித்துமுடித்த அன்புள்ளங்களுக்கு நன்றி, நன்றி!!!

இன்னும் மொக்கை முடியல..இங்கயும் வந்து பாருங்க. :) :)

19 comments:

 1. தோசை... ஆசையா இருக்கிறது.

  பேசாமல் உப்பேரிப்பாளையம் வந்து ரூம் போடலாம் என்று நினைக்கிறேன். என்ன சொன்னாலும் டீச்சர் டீச்சர்தான்.

  ReplyDelete
 2. மகி, இது தொடராக வருகிறதா?? அடுத்த தொடர் எப்போது?.
  இருந்தாலும் உங்கள் தோசைக்கல்லுக்கு இவ்வளவு நெஞ்சழுத்தம் கூடாது.

  ReplyDelete
 3. AAAaaahaaaaaaaaaa, idhu enna dosai? super a irukku. Loved the color of ur dosa and enjoyed each and every word of ur writing. You should write more often :):)

  Chitchat
  http://chitchatcrossroads.blogspot.com/

  ReplyDelete
 4. //idhu enna dosai?//
  சீ(சி)ரியல் தோசை. ;D

  ReplyDelete
 5. ஹா ஹா.. உங்க நகைச்சுவையை ரொம்பவே ரசிச்சேன் மஹி.. நல்ல டிப்ஸ் கொடுத்திருக்கீங்க.. பாக்கரேன்..

  //நீங்க தப்பிக்க முடியாது..படிச்சேதான் ஆகணும்// :))

  தப்பு தப்பு பழமொழி தப்பு.. இங்க சொல்ல வேண்டியது - ஆக்கப் பொறுத்தவ ஆறப் பொறுக்கனும் :))

  வானதியும் புனிதாவும் போட்டுத் தாக்கறாங்க :))

  ReplyDelete
 6. மகி இட்லிக்கு இங்கு பெரிய ஆராய்ச்சியே நடந்துட்டுது போல. நல்ல விளக்கம்

  ReplyDelete
 7. மஹி, இப்பத்தான் நானும் இதையும், முந்தின பகுதியையும் பார்த்தேன். டிப்ஸ்களைவிட சிரிப்ஸ்தான் தூக்கல்!! ரசிச்சி சிரிச்சேன்.

  நான் செய்யும் முறையும் இதை ஒத்ததுதான். தினமும்(!!) காலை டிஃபன் இட்லிதான் என்பதால், என் வீட்டிலும் இட்லி மாவு ஆல்வேஸ் பிரஸண்ட்.

  அப்புறம் இன்னொரு விஷயம், நான் அரிசி, உளுந்து, வெந்தயம் எல்லாம் ஒண்ணா சேத்து ஒரே பாத்திரத்தில் ஊறப்போட்டு, அரைச்சிடுவேன்... தனித்தனியா ஊறப்போட்டு, தனித்தனியா அரைச்சு... ஓ, இட்ஸ் ஸோ போரிங் யார்!! (பீட்டர்தான்...) ;-)))

  ReplyDelete
 8. மஹி உங்க இட்லி தோசை எல்லாம் சூப்பர் , பரவாயில்லை அறுப்பு அக்காவும் ஒரு உபயோகமான குறிப்பு தான் கொடுத்து இருக்காங்க , இனிமேல் தோசை முதல நீங்க சாப்பிட்டு பிறகு அண்ணனுக்கு வைங்க
  அது ஒரு கனாகாலம் மஹி , தோசையா இருக்கட்டும் இட்லியா இருக்கட்டும் அப்படியே அடுப்பில இருந்து கொட்டணும் அப்ப தான் உள்ளார போகும் இப்ப ம்ம்ம்ம் வேற வழி கிடையாது . இப்ப என் பெரிய பொண்ணு என்ன மாதிரி அப்ப்டியே கொதிக்கணும் , அதுக்கு அவுங்க அப்பா அப்படியே அம்மா மாதிரி நாக்கு நீளம் அப்ப்டின்னு கமெண்ட் வேற .
  நல்ல நகைசுவையா எழுதி இருக்கிங்க சிரிச்சுகிடே இருக்கேன் பக்கத்தில் இருக்குறவுங்க தப்பா நினைச்சுக்க போறாங்க

  ReplyDelete
 9. மஹி இட்லி செய்யருதுல இவ்வளோ விஷயமா எப்படி இதையெல்லாம் பொறுமையா கவனிச்சீங்கப்பா....கேஸ்1,கேஸ்2,கேஸ்3.....இந்த விஷயமெல்லாம் எனக்கு இப்போதான் தெரியும் நீங்க இதுல பிஎச்டி முடிச்சிருப்பீங்க போல....சூப்பர்ப்.
  இருந்தாலும் அந்த தோசைக்கல்லுக்கு எஜமான விசுவாசம் மட்டும் இருந்தால் போதாது மஹி...எஜமானியம்மாதானே நம்மை கவனிக்கிராங்கனு தோணுரமாதிரி ஒரு நல்ல சூடு வையுங்க...//"கல்லுல இருந்த தோசை நேரா என் ப்ளேட்டுக்கு வரணும்.அதுக்கப்புறம் அடுத்த தோசைய ஊத்துங்க"ன்னு அம்மாவ நான் பண்ண கொடுமைய எல்லாம் நெனச்சுகிட்டே//இதுதான் முன்செய்த பாவம் பின் வந்து விளையும்ங்கிரது....இப்போதான் நமக்கெல்லாம் அம்மாவின் அருமை புரிய வருது....//பிஞ்சு பிஞ்சு வந்த தோசையெல்லாம் 'எப்படியும் பிச்சுத்தானே சாபிடப்போறோம்'னு மனசத் தேத்திக்கிட்டு நான் சாப்பிடுவேன்//சோ சோ ரொம்ப பாவம் மஹி நீங்க...சரி இனிமே முதலில் ஊற்றும் தோசைஅகளை நீங்க சாப்பிட்டுட்டு அப்புரம் எஜமானருக்கு கொடுங்கள்.....படத்தில் இட்லியும் தோசையும் சூப்பர்பா இருக்கு..தோசை பார்க்கவே நல்ல மொறு மொறுனு இருக்கு மஹி நாங்க சொன்ன டிப்ஸை நியாபகம் வைத்து அடுத்த முறை முதல் தோசையை நீங்க சாப்பிடுங்க.....

  koini.

  ReplyDelete
 10. புனிதா, யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்!

  /மகி, இது தொடராக வருகிறதா?? அடுத்த தொடர் எப்போது?/ இதுக்காகவே ஹெடிங்-ஐ மாத்திட்டேன்..பாத்தீங்களா வானதி?:)

  /idhu enna dosai? / சாதா தோசைதாங்க சிட்சாட்..ரசித்துப் படித்து கருத்தும் சொன்னதுக்கு நன்றி!

  /வானதியும் புனிதாவும் போட்டுத் தாக்கறாங்க :))/ஆமாம் சந்தனா..பதிவுக்கேத்த மாதிரி மேட்சிங் நகைச்சுவையாவே போட்டுத் தாக்கறாங்க!!

  மிசஸ்.ஹூசைன்,வாங்க,வாங்க!!நல்வரவு.
  உங்க டிப்சும் நல்லா இருக்கே..நேரமில்லாதவங்க எல்லாருக்கும் யூஸ்புல்லா இருக்கும்.

  சாரு..எல்லா வீட்டுலயும் இதே கதைதானா? :) :)

  கொய்னி, எல்லாம் அப்பப்ப புத்தகங்களில் படித்த டிப்ஸ் தான்..எல்லாத்தையும் ஒண்ணா குடுக்கவும், நான் நிறைய சொல்லிட்ட மாதிரி உங்களுக்கு தோணுது.

  நீங்க சொன்ன டிப்ஸ்-ஐ பாலோ பண்ணறது கொஞ்சம் கஷ்டம் சாரு&கொய்னி!! ஏன்னா, நான் சாப்ட்டேன்னா, அதுக்கப்புறம் கிச்சனுக்கு ஒரு ஒருமணி நேரம் போகமாட்டேன்..ஹி,ஹி!!

  வருகை தந்து சிரித்து மகிழ்ந்து கருத்தும் சொன்னதற்கு நன்றி புனிதா,வானதி,சிட்சாட்,இமா,சந்தனா,ஜலீலாக்கா,மிசஸ்.ஹூசைன்,சாரு மற்றும் கொய்னி!

  ReplyDelete
 11. மஹி இன்னைக்கு வீட்ல காலை தோசை ஊத்தும் போது சிரிப்பு தாங்கலை ,எங்க வீட்ல காலைலே உனக்கு என்ன ஆச்சு அப்ப்டினுட்டு போறாங்க. இங்க செண்டருக்கு வர டீச்சர் சொல்லுவாங்க உங்களுக்கு எல்லாம் மொறு மொறு தோசை வேணும்னா கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க நான் சாப்பிட்ட பிறகு ஊத்து தறேனு , நான் உங்களை மாதிரி தான் சாப்பிட்டா நாம அவ்வளவு தான்

  ReplyDelete
 12. எப்படியோ எல்லாரையும் தனியா சிரிக்க வைச்சுட்டேன்..காமெடி சூப்பர் சாரு! :D :D

  ReplyDelete
 13. மகி சூப்பர் டிப்ஸ்... நான் மிக்ஸியில் தான் இட்லிக்கு அரைப்பேன், எப்போதும் அணுகுண்டு தான். உங்க கேஸ் 1,2,3 யூஸ்புல்லா இருக்கும் எனக்கு. நன்றி.

  ReplyDelete
 14. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க ஷாலினி!

  ReplyDelete
 15. mahima

  supera erukku idle thosai..

  nan 12 idle sapduven..eppadi alagai supera tastea erunthal ennaikoodum..

  enta size thosai 10than sapduven..
  emputu nall achu inta idle thosai ellam sapitu..

  hm epovey pasiku..

  nandri mahima.

  ReplyDelete
 16. Adaeyyy yappaa... Mahi naan innum vaasikavae thodangala.... idly dosai patri ithana posts!!! Kandippa anaithayum read panni comment poduven. Mahi..en blog vandhadhuku romba romba romba nandri. :) Innum niraiya eludhuven seekiram.

  ReplyDelete
 17. Idly mokkai-ai kadaisi read panniten mahi. :D :D :D lol. Unmailae ennavida nalla mokka podureenga. Andha mokkai nallavum irukku :D Naan en 'about us' page la Tamil la eludhuven-nu solli 6 months ku mela aachu. Adhuku velai mella mella nadakkudhu. Unga blog paathutenla, ini velai soodu pidikum. Ungaladhu blog, ungaladhu writing arumai arumai arumai.......

  ReplyDelete
 18. மீனாக்ஷி, வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி! :)

  சீக்கிரம் உங்க ப்ளாகிலும் தமிழில் எழுத ஆரம்பிங்க. சப்போர்ட்டுக்கு நிறைய ஆட்கள்இருக்கிறோம். நேரம் கிடைக்கையில் வந்து போங்க, நிறைய மொக்கைகள் ப்ளாக் முழுக்க நிறைஞ்சு கிடக்குது! :)))

  ReplyDelete
 19. kandippa varuven mahi. Actual-a pidithadhae mokkai kaagadhan. Enaku neenga eludharadha padikaradhu ennavo naan eludhina madhriyae iruku :D . Nalla casual writing skills ungaluku. Especially, "dosai kal ejamaan visuvaasam" sari comedy :D. Tips-lam padikum podhu, "ada, indha simple tips-a namma epdi miss pannom blog-la poda" nu thonudhu. Will list few tips from here in my later posts.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails