Wednesday, May 5, 2010

காளான் குழம்பு

மொட்டுக்காளான்(பட்டன் மஷ்ரூம்) அல்லது சிப்பி காளான்(ஆய்ஸ்டர் மஷ்ரூம்)தான் இதுவரை வாங்கியிருக்கிறேன்.இந்த வாரம் ஒரு சைனீஸ் மார்க்கெட் போயிருந்தோம்.அங்கே இருந்த விதவிதமான காளான்களில் என் கணவர் செலக்ட் பண்ணியது இந்த ட்ரம்பெட் மஷ்ரூம். ஆசியாக்கா ஸ்டைல்-ல சொல்லணும்னா, ஒரொரு காளானும் நல்லா வாட்டசாட்டமா இருந்தது.:) சுவையும் அருமையா இருந்தது.

தேவையான
பொருட்கள்
காளான் - 300 கிராம்
வெங்காயம் - 2 (மீடியம் சைஸ்)
தக்காளி -2
மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
கொத்துமல்லி விதை(தனியா) - 1 ஸ்பூன்
சீரகம் -3/4 ஸ்பூன்
சோம்பு -1/2 ஸ்பூன்
பட்டை-2 இன்ச் துண்டு
கிராம்பு-2
ஏலக்காய் -2
காய்ந்த மிளகாய்-5 (அ) காரத்துக்கேற்ப
தேங்காய்-கால் மூடி
எண்ணெய்
உப்பு
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை

செய்முறை
ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.தக்காளியையும் நறுக்கவும்.

கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் காயவைத்து தனியா,சீரகம்,பட்டை,கிராம்பு,சோம்பு,ஏலக்காய் போட்டு பொரிந்ததும் வெங்காயம்,காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
தக்காளி மசிந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி ஆறவைக்கவும்.
ஆறியதும் மசாலாவை நைசாக அரைத்துக்கொள்ளவும்.

காளானை நன்கு கழுவி, நீரில்லாமல் துடைத்து சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கி ஒரு ஸ்பூன் எண்ணெயில் வதக்கி எடுத்து தனியாக வைக்கவும்.

மீதமுள்ள இன்னொரு வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கடுகு,வெங்காயம் கறிவேப்பிலை தாளித்து, அரைத்த மசாலா, மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு நன்றாக கொதி வந்ததும், வதக்கி வைத்த காளான் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்.

எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்துமல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.

இந்த குழம்பு சாதம்,தோசை,இட்லி இவற்றுக்கு பொருத்தமாய் இருக்கும்.

17 comments:

 1. நல்லா இருக்கே மகி.

  ReplyDelete
 2. ஆரம்பிச்சாச்சா சமைக்க? குட்.. இதை சீக்கிரமா செஞ்சு பாத்துடறேன்..

  ReplyDelete
 3. mushroom curry looks very nice. my fav. curry to chappati

  ReplyDelete
 4. சமையல் களைகட்ட ஆரபிச்சாச்சா?அருமை.

  ReplyDelete
 5. காளான் க்ரேவி,வருவல் தான் செய்துள்ளேன்.குழம்பு செய்ததில்லை.சூப்ப்ரா இருக்கு மகி....

  ReplyDelete
 6. Good ,mushroom curry the healthy one.Thanks mahi.did u finished ur arranging work in new home?

  ReplyDelete
 7. சூப்பராக இருக்கின்றது...எங்கே மகியுடைய பூவே அல்லது பொம்மையே காணவில்லை...

  ReplyDelete
 8. /நல்லா இருக்கே மகி./வாங்க இமா,சாப்பிடலாம்! :)
  ~~~***~~~
  ஆமாம்..அதெல்லாம் ஆரம்பிச்சாச்சு..சீக்கிரமா அட்ரஸ் குடு கண்ணு..உன் கையால சாப்பிட ஆசையா இருக்கு! ;)
  ~~~***~~~~
  வேணி, நன்றிங்க!
  ~~~***~~~
  களை கட்டறதா? இன்னும் ஸ்டார்டிங் ட்ரபுளே சரியாகல ஆசியாக்கா. :) நன்றி!
  ~~~***~~~
  மேனகா,குழம்பு செய்து பாருங்க..மட்டன் குழம்பு மாதிரியே இருக்குமாம்..இது என் கணவரின் கமென்ட்! நன்றி.
  ~~~***~~~
  நன்றி கொய்னி..இன்னும் இல்லைங்க..மெதுவா செய்துட்டிருக்கேன்.
  ~~~***~~~
  நன்றி வானதி!
  ~~~***~~~
  கீதா,புது வீட்டுல செட்டில் ஆக இன்னும் கொஞ்சம் டைம் எடுக்கும்.அதுக்கப்புறம் பாருங்க..நிஜ பூவே வைச்சு கலக்கிடலாம்.நன்றி கீதா.

  ReplyDelete
 9. wow.. looks awesome.. visit my site whenever.. following you

  ReplyDelete
 10. மகி, நேற்று உங்கள் மஷ்ரூம் குழம்பு செய்தேன். யம்மியோ யம்மி.. என் கணவருக்கு மிகவும் விரும்பி சாப்பிட்டார்.

  ReplyDelete
 11. அனைத்து
  சகபதிவர்களுக்கும் தங்களுக்கும்
  உலகத்தில் உள்ள அனைத்து அம்மாவிருக்கும்
  அன்னையர்
  தின வாழ்த்துக்கள்  வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
  காம்ப்ளான் சூர்யா

  ReplyDelete
 12. மஹி இது நம்ம ஊரு கோழிக்குழம்பு ரெசிப்பிதானே? நானும் இப்படிதான் செய்வேன்

  ReplyDelete
 13. ஸ்ரீவித்யா, நல்வரவு! உங்க கருத்துக்கு நன்றி..விரைவில் உங்க ப்ளாக் வந்து பார்க்கிறேன்.
  வானதி,குழம்பை செய்து, பின்னூட்டமும் தந்ததிற்கு நன்றி!
  நன்றிங்க கவுண்டரே!
  காம்ப்ளான் சூர்யா, நன்றி!
  சுகந்திக்கா,நான் ஊர்ல நான்வெஜ் எல்லாம் சமைச்சதில்லை.அதே மாதிரிதான் இருக்குன்னு என் கணவர் சொன்னார். உங்கள் வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 14. ம்கி ரொம்ப அருமை,

  அந்த ஸ்லைட் ஷோ எபப்டி போடனும், இடையில் பூ வேற பறக்குதே அது எப்படி?

  காளான் நான் சாப்பிட மாட்டேன்,பெரிய பையனுக்கு மட்டும் தான் பிடிகும், அவனுக்காக மட்டும் செய்வேன்.

  ReplyDelete
 15. ஜலீலாக்கா, அந்த ஸ்லைட்ஷோ-லயே இருக்க "create your own "-ஐ கிளிக் பண்ணுங்க.rockyou.com சைட் ஓபன் ஆகும்.அங்கே யூசர் நேம் க்ரியேட் பண்ணி, நம்ம போட்டோஸ்-ஐ அப்லோட் பண்ணனும்.இந்த மாதிரி பூ,இலை எல்லாம் செட் பண்ணும் வசதி இருக்கு..ட்ரான்சிஷன்,பேக்ட்ராப் இப்படி இருக்கற ஆப்ஷன்ஸ்ல நமக்கு பிடித்த்ததை சேர்க்கலாம்.ட்ரை பண்ணிப் பாருங்க. நன்றி!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails