Friday, November 11, 2011

டாய் ஸ்டோரி-3

சமையல் குறிப்பா போட்டுப் போட்டு மகி அக்காவுக்கு ரெம்ப போர் அடிக்குதாம்..என்ன எழுதறதுன்னு ஹெட்-ஐ ப்ரேக் பண்ணிட்டு இருந்தாங்க,அதனால நாங்கள்லாம் ஒதவிக்கு வந்தம்.




எப்பவாவது ஒருக்கா வரோம்,நம்ம எல்லாம் படிக்கறவங்க நினைவுல வைச்சிருப்பாங்களான்னு சீரியஸா டிஷ்கஷேன் பண்ணம், அக்கா சொன்னாங்க, "தீபாவளி பொங்கல் எல்லாம் டெய்லியுமா வருது? வருஷத்துக்கொருக்காத்தான வருது? அதுக்காக எல்லாரும் அதையெல்லாம் மறந்திடராங்களா? கண்டிப்பா கிடையாது! ஸ்பெஷலா ஞாபகம் வச்சு கொண்டாடுவாங்க! அது மாதிரிதான் நீங்களும்! தைரியமா எழுதுங்கோ!"ன்னு!! நாங்க ஸ்பெஷல்தானே?? வாட் யு ஸே?:))))))))))

பேசினது போதும்,சரி வாங்க,மேட்டருக்குப் போவோம்! ஸ்டார்ட் மீசிக்! ஆஅஅ..டண்டணக்கா..டமுக்கு டக்கா...ஆ...டண்டணக்கா!

க்ரிஸ்லி: பசங்களா ரெம்ப குதிக்காதீங்க,பக்கத்து வீட்டுக்காரங்க நாய்ஸ் பொல்யூஷன்னு கம்ப்ளெய்ன்ட் பண்ணிருவாங்க..அடக்கி வாசிங்க!

#########^^^^^^^########

*இன்னிக்கு தேதிக்கு ஏத்தமாதிரி பதினொரு விஷயம் சொல்லணும்னு அக்கா விரும்பினாங்க. (இதுல ஒரு விஷயம் முடிஞ்சிருச்சு, நாங்க கணக்குல கரீக்ட்டா இருப்பம்ல?;))

* '11ஆம் வருஷம், பதினொண்ணாம் மாதம், பதினொண்ணாம் தேதி,பதினொரு மணி,பதினொரு நிமிஷத்துக்கு இந்த போஸ்ட் வரமாதிரி அக்கா ஷெட்யூல் பண்ணிருக்காங்க.

*போன ஞாயிறு முதல் இந்த டேலைட் சேவிங் வந்து fall back ஆனதால் ஜாலியா இன்னும் ஒரு மணி நேரம் தூங்க முடியுதாம்..springல ஒன் அவர் forward பண்ணா கடியா இருக்குமாம்.

Ted: எங்களுக்கென்ன..எல்லா நாளும் ஒரே மாதிரிதான். மனுஷங்களுக்குதானே இந்த ப்ராப்ளம்லாம்! ஹிஹி!

*நேத்து தயிர்சாதத்துக்கு அ.கோ.மு. [அவித்த கோழி முட்டை] காம்பினேஷன் நல்லா இருக்குமான்னு ஒரு டிஸ்கஷன் (இங்கே) நடந்தது. அது நல்லா இருக்காதுக்கு சில பேர் வேற காம்பினேஷன்லாம் சொன்னாங்க. அதனால இன்னிக்கு தயிர்சாதம்-மோர்மிளகா-வெங்காயவடகம்- இஞ்சி ஊறுகாய்-புதினா சட்னி. யாருக்கு எது புடிக்குமோ சைட் டிஷா வைச்சு சாப்பிடுவீங்களாம்.


Ted: இதெல்லாம் என்னா..சும்மா சப்ப மேட்டரு! எழுத எதுவும் கிடைக்கலனா போட்டோவ போட்டுர்ராங்கப்பா!! இப்பவே என்ன சொல்றதுன்னு தெரியாம முழிக்கிறாங்க..எங்க போயி 11 விஷயம் சொல்றது...ஹாஹாஹா!

*அக்கா ப்ளான்லாம் பண்ணி ஷெட்யூல் பண்ணி வச்சாலும், இந்த போஸ்ட் பதினொண்ணு பதினொண்ணுக்கு பதிலா ஒன் அவர் முன்னாடியே..அதாவது10.11க்கே பப்ளிஷ் ஆகி அக்காவுக்கு பன்னு கிடைச்சிருச்சாம்! (Ted: ஹ்..ஹா..ஹா,மீ வெரி ஹேஏஏஏஏஏப்பி! ) ஏனா கம்ப்யூட்டர்ல டைம் இன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னும் சால்ட் லேட் சிட்டி டைம் ஜோன்லயே இருக்காம். அங்க mountain time zone, இங்க pacific time zone!! இன்னும் டீடெய்லா தெரிஞ்சுக்க விரும்பினா இங்ஙன போய்ப் பாருங்க.

* இந்த நீமோ மீன் மாதிரி இருக்கான்னு நினைச்சிக்காதீங்க. அவன் ஒரு white whale. அக்கா வாங்கின முதல் முதல் souvenir அவன்! சொல்லப்போனா எங்க எல்லாருக்கும் சூப்பர் சீனியர். அவன் பின்னால ஒரு கதையே இருக்குதாம். (be ready..story time starts!! )

##########vvvvvvvvvv##########

அமெரிக்கா வந்த புதுசுல அக்காவுங்க ப்ரெண்ட் பேமிலியோட(ப்ரசாத்-அனு & கிட்ஸ்) Connecticut-ல இருக்க சப் மெரைன் ம்யூஸியம் பார்க்கப் போனாங்களாம். ம்யூஸியத்தில நீர்மூழ்கி கப்பல் உள்ளே எல்லாம் போய்ப் பார்க்கலாம்னு ஆவலா போயிருக்காங்கா, ஆனா இவங்க போன சமயம் வின்டரா இருந்ததால சப் மெரைன்ஸ் எல்லாம் க்ளோஸ்ட்! ஏமாற்றத்தோட வெளியே வந்தப்ப கொஞ்சம் தூரத்தில ஒரு சப்மெரைன் போறத பாத்தாங்களாம், அதனால அங்க இருந்த அடுத்த கட் ரோடு, அதுக்கடுத்த ரோடு இப்படி கடகடன்னு போய் நின்னு நின்னு சப்மெரைன்ஸ்-ஐ போட்டோ புடிச்சிருக்காரு ப்ரசாத் அண்ணா. அப்பறம் மெதுவா மிஸ்டிக் அக்வேரியம் போயி வெள்ளை திமிங்கிலம் ஷோ,பெங்குயின்ஸ் எல்லாம் பார்த்துட்டு நீமோவ வாங்கிட்டு வீட்டுக்குப் போயிட்டாங்களாம்.

ஒரு வாரம் பத்து நாள் கழிச்சு, ப்ரசாத்-அனு வீட்டுக்கு ஒரு போன் கால்!! கார் நம்பர் சொல்லி, இந்த கார் உங்களுதான்னு கேட்டிருக்காங்க. அனுவும் ஆமான்னு சொல்ல, ஆரம்பிச்சது தலைவலி! போன் பண்ணீனது F.B.I.!!! லாஸ்ட் வீகென்ட் இந்த கார் சந்தேகம் தரும் அளவுக்கு(!) சப்மெரைனை தேடித்தேடி போட்டோ எடுத்திருக்குது. நீங்க யாரு..என்னன்னு கேள்வி மேல கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். அனு என்னென்னமோ சொல்லிப் பார்த்தும் கேக்காம, வீட்டுக்கே வந்து கார் ரெக்கார்ட்ஸ்,அவங்களோட பாஸ்போர்ட்-விஸா பேப்பர்ஸ், ப்ரசாத் எங்கே வேலை பார்க்கிறார்ங்கற விவரங்கள் எல்லாம் செக் பண்ணப்புரம்தான் நாங்கள்ளாம் sight seeing போயிருக்கோம்ங்கற நம்பிக்கையே FBIக்கு வந்திருக்கு!! :))))

மக்கா,இனிமேட்டு உங்களை சப் மெரைன் பக்கம் பாத்தீங்க,அம்புட்டுதான்ன்னு எச்சரிக்கை பண்ணிட்டுப் போனாங்களாம்!! (Ted: என்னா மாறி ஒரு காமெடி பாருங்க. சிரிச்சி சிரிச்சி எனக்கே வயிரு வலிக்கிது...ஆரும் ஊர் சுத்திப் பார்க்கப்போனீங்க, ஒயுங்கா ஊர சுத்திப்பார்த்துட்டு வந்து சேருங்க,ஓக்கை?)

இப்புடிப்பட்ட ப்ளாஷ் பேக் கொண்ட நீமோ, டேபிள்மேலே இருந்து தரையில விழுந்ததுல உடைஞ்சு போயிட்டானாம். அக்கா 2-3 வருஷமா பத்திரமா வச்சிருந்து இப்ப க்விக் ஃபிக்ஸ் போட்டு அவன் வாலை ஃபிக்ஸ் பண்ணிவைச்சிருக்காங்க.
***
*க்ராண்ட்பான்னு பேர் வைச்சதால இந்த மகிப்புள்ள என்னைய மறந்துருச்சு! கர்ர்ர்ர்ர்ர்! நான் அதுக்கெல்லாம் கோவிச்சுக்க மாட்டேன், ஞாபகப்படுத்திவிட்டு வந்துட்டேன்,பாருங்க!:)

கீபோர்ட் பக்கத்திலே உட்கார்ந்து பாட்டு கேட்டுகிட்டு இருக்கறேன் நானு! என்ன பாட்டுன்னு நீங்களும் கேக்கறீங்களா? கேளுங்க..


நல்லாருக்குல்ல பாட்டு?? :)

பி.கு.
1.இந்த Ted பய அப்பப்ப இடைல பூந்து முந்திரிக்கொட்டைத்தனமாப் பேசறத யாரும் காதுல போட்டுக்காதீங்க. அவனுக்கு வாட்ச் குடுக்கலன்னு கோவப்பட்டது இன்னும் சமாதானம் ஆகாம இருக்கான்.
2.முதன்முறையா இந்தப் பக்கம் வந்து மொக்கையப் படிக்கறவங்களுக்கு கண்டிப்பா தலையும் புரியாது,வாலும் புரியாது!!:))))அவிங்கள்ளாம் தயவு செய்து டாய்ஸ்டோரி & டாய்ஸ்டோரி-2 இரண்டையும் படிச்சுட்டு இதை மீண்டும் ஒரு முறை படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!:)

நன்றி,வணக்கம்!

24 comments:

  1. மகி அந்த தயிர் சாதமும் வெங்காய வடகமும் எடுத்துக்கிட்டேன் .
    அக்கா சைவம் அந்த முட்டையை அதிராக்கு கொடுங்க .எவ்ளோ குளிரிலும் தயிர்சாதம் இஸ் மை ஃபேவரிட் .
    அதிரா

    ReplyDelete
  2. உங்க டெட்டிஸ்எல்லாம் அழகா இருக்காங்க மகி .என் பொண்ணும் உங்கள மாதிரியே எல்லாருக்கும் பேர் வச்சிருக்கா .SOO CUTE

    ReplyDelete
  3. ஏஞ்சல் அக்கா,வெயிட்டீஸ்!!இன்னும் போஸ்ட் எடிட்டிங் முடில. இருங்கோ! :))))))

    ReplyDelete
  4. ஃபேஷன் நகைகள் செய்ய தேவையான பொருட்களை எங்களுக்கு ஒரு போன் கால் மூலமாகவோ அல்லது ஒரு மெயில் மூலமாகவோ தொடர்புக்கொண்டால் உங்கள் வீடு தேடி கூரியர் மூலமாக பொருட்களை அனுப்பி வைக்கிறோம்..
    பொருட்கள் தேவைக்கு தொடர்புக்கொள்ளவும்:
    moosa shahib
    e.mail : moosafs69@gmail.com
    contact no: 0476 - 3293737 Mobile no : 09387044070
    NEW JANATHA FANCY JEWELLERY
    B.R.Complex, K.S.R.T.C.Bus Stand,
    Thevarkaavu Road
    karunagappally - 690518

    ReplyDelete
  5. //Mahi said...
    ஏஞ்சல் அக்கா,வெயிட்டீஸ்!!இன்னும் போஸ்ட் எடிட்டிங் முடில. இருங்கோ! :))))))///

    karrrrrrrrrrrrrrrrr:))) குறை மாதத்தில பிறந்த குணம் தெரியுது, அவசரப்பட்டுப் பதிவைப் போட்டுவிட்டு எடிட்டிங்காம்:))))

    ReplyDelete
  6. // angelin said...
    ME ME ME FIRST///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆருக்கு வேணும் 1ஸ்ட்டூஊஊஊஉ:))), எனக்கு அந்த அ.கோ.முட்டைதான் வேணும்ம்ம்ம்:)) நல்லவேளை அஞ்சு சைவமாமே உண்மையாவோ?

    ReplyDelete
  7. குட்டி எழுத்துக்கள் புரியேல்லை மகி, பெரிதாக்கவும் முடியுதில்ல, கறுப்பு எழுத்தில போட்டிருந்தால் ஒருவேளை புரிஞ்சிருக்குமாக்கும், 1வது மட்டும்தான் புரியுது.

    ReplyDelete
  8. ஆஆஆஆஆஆஆஆ
    தங்கப்ப தக்கம்....
    தங்கப்ப தக்கம்....
    தங்கப்ப தக்கம்....
    தங்கப்ப தக்கம்....
    தங்கப்ப தக்கம்....
    தங்கப்ப தக்கம்....

    நான் தயிர்ச்சாதத்தைச் சொன்னேன்:))))

    ReplyDelete
  9. /குட்டி எழுத்துக்கள் புரியேல்லை மகி, பெரிதாக்கவும் முடியுதில்ல, கறுப்பு எழுத்தில போட்டிருந்தால் ஒருவேளை புரிஞ்சிருக்குமாக்கும், 1வது மட்டும்தான் புரியுது. /அவ்வ்வ்...அவ்வளோ குட்டியா இருக்கா அதிரா??எனக்கு தெளிவாத் தெரிந்ததுன்னுதான் அப்படியே போட்டேன். கறுப்பு எழுத்தில போட்டா டாய்ஸ் எல்லாம் டிஸ்ட்ராக்ட் ஆகிடுமோன்னு டவுட்டா இருந்தது.

    /குறை மாதத்தில பிறந்த குணம் தெரியுது, அவசரப்பட்டுப் பதிவைப் போட்டுவிட்டு எடிட்டிங்காம்:)))) /கர்ர்ர்ர்ர்! அது பதினொரு மணிக்கு பப்ளிஷ் ஆகும்ணு நினைச்சுட்டு நான் பத்தரை மணிக்கு எடிட்டிங் பண்ண வந்தாஆஆஆ...பத்துமணிக்கே பப்ளிஷ் ஆகிட்டுது! ஏஞ்சல் அக்கா கமென்ட்டும் போட்டுட்டு ஓடிட்டாங்க.

    ReplyDelete
  10. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் தலைப்பை மாத்தி மாத்தி விலை:)) யாடுறா மகி:))). இல்ல குட்டி எழுத்துக்கள் வாசிக்க முடியுதில்ல:((((. படத்தை பெரிதாக்கும் வசதியைப் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்...

    ஆனா தங்கப்ப தக்கம் வைத்திருப்பதனால் பூட்டிப்போட்டீங்க போல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).

    ReplyDelete
  11. /படத்தை பெரிதாக்கும் வசதியைப் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.../ஹும்,அது இவ்ளோதான் அதிரா ஜூம் பண்ண முடியும். பிக்காஸால கொலாஜ் பண்ணி, GIMPல எடிட் பண்ணி நிறைய காம்ப்ளிகேஷன் பண்ணி வைச்சுருக்கேன்,ஹிஹி!
    மெய்ல செக் பண்ணுங்கோ!

    ReplyDelete
  12. karrrrrrrrrrrrrr:)))) ஓடிப்போய் மெயிலை ஓபின் பண்ணினால்...

    Sorry, an error has occurred in the slide show. Please try அகயின் லேட்டர் எனச் சொல்லுது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) எ.கொ.சாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ:)))).

    ReplyDelete
  13. ஸ்லைட் ஷோ எல்லாம் வேணாம், ஜஸ்ட் போட்டோஸ மட்டும் ஓபன் செய்து பாருங்க ம்யாவ்! :)

    ReplyDelete
  14. நல்லவேளை அஞ்சு சைவமாமே உண்மையாவோ?//
    yes athees .
    நான் சைவம் .தாவரபட்சிணி .மகளுக்கும் கணவருக்கும் மட்டும் அசைவம் சமைப்பேன்

    ReplyDelete
  15. குறை மாதத்தில பிறந்த குணம் தெரியுது, //
    என்னையா சொல்றீங்க ???எப்பூடி ?????

    ReplyDelete
  16. /என்னையா சொல்றீங்க ???எப்பூடி ?????/ அது உங்களை இல்ல..இந்த போஸ்ட்-ஐ!:)

    ReplyDelete
  17. பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு
    தயிர் சாதம்
    பதிவும்...:)

    ReplyDelete
  18. konjam late-a vanthutenoo..:)thairsadam pochey..avvv..

    ReplyDelete
  19. நானும் டி வி டி வச்சிருக்கேன் மகி .சூப்பர் film and and and saif ali khan tooooooo:):):):):):):):):)

    ReplyDelete
  20. Congratulations Mahi for getting the Licence! (waiting for your godhumai halwaaa treat for it, mahi. he.hie.eee...)

    Very nice presentation and lovely conversations. Enjoyed it Mahi.

    Wow! thayir sadhamaaa! my favourite. I wanted to grab the second one with mormilagai, pickle, vadam. Love the presenation. Made me drool badly. Going to have nice thaalicha morsaadham for dinner.

    ReplyDelete
  21. தயிர் சாதம் அழகு மகி!!

    ReplyDelete
  22. எடிட்டிங் முடிஞ்சதும் வரலாம்னால்,மற்ந்திட்டேன்.இப்படி தயிர் சாதம் அகோமு காம்பினேஷன் எல்லாம் லேட்டஸ்ட் போல,டாய்ஸ்க்கு ஏற்ற மாதிரி...?
    நானும் இப்ப மொபைல் வச்சி கிளிக் பணறதை பார்த்து வெறுத்து அடி வாங்காத குறை தான்,எங்க வீட்டிற்கு எப்ப இன்வெஸ்டிகேசனுக்கு வரப் போறாங்கன்னு தெரியலை,வயிற்றில் புளியைக் கரைக்குது...

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails