Wednesday, November 2, 2011

இட்ஸ் பார்ட்டி டைம்! :)

இந்த வருஷ தீபாவளி வாரநாட்களில் வந்ததால் மற்றுமொரு நாளாகத்தான் கழிந்தது. வெள்ளிக்கிழமை டின்னருக்கு எல்லாரும் சந்திக்கலாம்னு முடிவு செய்து மெனு ஃபிக்ஸிங் ஆரம்பித்தோம்..பேசிப்பேசி டின்னர் லன்ச்சாகி, மெய்ன் கோர்ஸ் அபெடைஸராகி ஒரு வழியா ஆளாளுக்கு என்னென்ன ஐட்டம் செய்வது என்று முடிவானது. வெஜ்-சீஸ் பேஸ்ட்ரி வீல்ஸும் சப்பாத்தி இரண்டும் நான் செய்து கொண்டுபோனேன்.

வெஜ் பேஸ்ட்ரி வீல் ரெசிப்பி முதல்லயே போஸ்ட் பண்ணியிருக்கேன். இந்த முறை கொஞ்சம் க்ரேட்டட் செடர் சீஸ்-ஐ வெஜ் மசாலா மீது தூவி சுருட்டிவைத்தேன்,மத்தபடி அதே ரெசிப்பிதான். வியாழன் இரவே வெஜ் மசாலா செய்து, பேஸ்ட்ரி ஷீட்களில் தடவி, சீஸ் தூவி சுருட்டி, க்ளியர் ராப் பேப்பரில் wrap செய்து ஃப்ரீஸரில் வைச்சாச்சு. சப்பாத்திக்கும் மாவு பிசைந்து ப்ரிட்ஜில் வைச்சாச்சு. வெள்ளி காலை ப்ரேக்ஃபாஸ்ட் முடித்துட்டு சப்பாத்தி செய்து முடித்துவிட்டு...
ப்ரீஸரில் இருந்து பேஸ்ட்ரி ரோல்ஸை எடுத்து வைச்சா, அரை மணி நேரமாகியும் ரூம் டெம்பரேச்சருக்கு வராம கல்லு மாதிரியே இருக்குது. என்னடா இது வம்பாப்போச்சுன்னு கிட்னிய கசக்கிப் பிழிஞ்சு யோசிச்சு(!) ஒவ்வொரு ரோலையும் பத்திருபது செகன்ட் மைக்ரோவேவ்-ல வைச்சேன். ப்ராப்ளம் சால்வ்ட்!:)
பேஸ்ட்ரி ரோலை துண்டுகளா நறுக்கி மில்க் வாஷ் பண்ணி, bake செய்து எடுத்தாச்சு. எல்லாரும் ஒன்று சேர்ந்து பார்ட்டி நடக்கும் இடம் போய்ச் சேர்ந்தபோது மணி கிட்டத்தட்ட 3. கோபி மன்ச்சூரியன்,பேஸ்ட்ரி வீல்ஸ், டொமட்டோ சூப்,சிக்கன் சூப் இதெல்லாம் சாப்பிட்டுட்டு எல்லாரும் போக்கர் விளையாடி, எர்லி டின்னர் சாப்பிடப்போனோம்.

பட்டர் சிக்கன், சிக்கன் கோலாப்பூரி, மட்டர் பனீர், தால், ஜீரா ரைஸ், சப்பாத்தி, கேரட் ஹல்வா. எல்லாமே வடஇந்திய உணவு வகைகளாவே இருக்குன்னு யோசிக்கிறீங்களா..கரெக்ட்டுதான்! மொத்த க்ரூப்பிலும் நாங்க & இன்னொரு பேச்சலர் பையன் மூணுபேரும்தான் தமிழு..நான் இட்லி0சாம்பார் செய்து எடுத்துட்டு போலாம்னு முதல் மெனுல ப்ளான் பண்ணியது கடைசியில் பேஸ்ட்ரிவீல் &சப்பாத்தில போய் முடிந்தது.

அரட்டையடித்து, விளையாடி, போட்டோஸ் எடுத்து,மிச்சம் மீதியெல்லாம் ஆளாளுக்கு pack பண்ணிக்கொண்டு, பார்ட்டி ஹாலில் இருந்து கிளம்பும்போது பத்துமணியாகிவிட்டது.

தீபாவளி பார்ட்டி ஓவர்! :)

*********^^^^^*********
Mahi..
She is writing very nicely.
Bringing out all topic. She is also having another blog exclusively for kitchen.
But I like to read her other blog.
I like to pass this award to her.
என்று சொல்லி விஜி'ஸ் க்ராஃப்ட்ஸ் ப்ளாகில் இருந்து விஜிம்மா எனக்கு இந்த அவார்டை கொடுத்திருக்காங்க.
என் சமையல் கொடுமைய விடவும் மொக்கை கொடுமைய ரசிச்சுப் படிச்சேன்னு சொல்லவும் ஒரு ஆள் இருக்காங்கங்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு போங்க! :)))))) நன்றி விஜிம்மா! லட்டு சாப்புடுங்க. :)

எல்லாரும் ஸ்வீட் எடுங்க,கொண்டாடுங்க!! :))))[எ.கொ.ச.இ.??!! ஒரு டயலாக் ஃபேமஸ் ஆனாலும் ஆச்சு..எங்கெங்கே யூஸ் பண்ணறதுன்னு வகைதொகை இல்லாமப் போச்சு! ஹிஹி!]

Diwali Dhamaka 2011
பிக்காஸா-வில் போய் எல்லாரும் அவங்கவங்களுக்குப் பிடிச்ச ஸ்வீட்டைச் சாப்புடுங்க,நன்றி!

16 comments:

  1. பார்ட்டி ஐட்டங்கள் சூப்பர்!

    ReplyDelete
  2. மகி,உங்க பேஸ்ட்ரி வீலும் சப்பாத்தியும் சூப்பர்.மற்ற ஐட்டம்ஸும் தான்..
    மிச்சம் மீதியை கூட விடலை..எ.கொ.சா.இ?
    அவார்ட்டிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. /மிச்சம் மீதியை கூட விடலை..எ.கொ.சா.இ?/ :)))) ஆசியாக்கா, கஷ்டப்பட்டு சமைச்சு கொண்டுவந்ததை வேஸ்ட் பண்ணமுடியுமா சொல்லுங்க?

    அவரவருக்கு பிடிச்ச உணவுவகைகளை பேக் பண்ணி கொண்டுவந்திடுவோம். நாம சமைச்சதையே சாப்பிடறத விட அடுத்தவங்க சமையல் ருசி தனிதானே?!:) சாப்பாடும் வீணாகாது,win win solution!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா!
    ~~
    ஸாதிகாக்கா,ஒரு சவுத் இண்டியன் ஐட்டம் கூட இல்லையேன்னு நான் ஃபீலிங்க்ஸ் பண்ணேன்!
    அசைவப் பிரியர்கள் ஒரு புடி புடிச்சாங்க. ;)
    கருத்துக்கு நன்றி ஸாதிகாக்கா!

    ReplyDelete
  4. wow so many items,kalakuringa mahi...All are too gud...

    ReplyDelete
  5. Yay! Party!! Looks like had a great food! Enjoy!! Laddoo va vera yenga potu potu tempt panreenga?

    ReplyDelete
  6. நீண்ட காலமாக எங்கேயும் அவோர்ட் கதையைக் காணேல்லையே.... நானாவது ஏதாவது செய்து எல்லோருக்கும் கொடுக்கலாமே என யோஓஒசித்தேன்....

    அவோர்ட்டுகு வாழ்த்துக்கள் மகி.

    Good party.

    ReplyDelete
  7. wow !!!! superb!!!.
    உங்க சேமியா பைனாப்பிள் கேசரி செய்து பார்த்தேன் மகி .சூப்பரா வந்தது .

    ReplyDelete
  8. போஸ்ட் சூப்பர் மகி..... //பிக்காஸா-வில் போய் எல்லாரும் அவங்கவங்களுக்குப் பிடிச்ச ஸ்வீட்டைச் சாப்புடுங்க// - ன்னு மகி சொன்னத நம்ம்ம்பி போனா... அட பாவி மக்கா... லட்டுக்கு வாய் இருந்தா அழுதிருக்கும்... வளைச்சு வளைச்சு போட்டா எடுத்திருகீங்களே???? தேங்காய் பர்பி, மைசூர் பாக் சூப்பருங்கோ!

    ReplyDelete
  9. all items are simply superb,love ur laddoo post!!

    ReplyDelete
  10. Lattu romba nalla irrunthathu Mahi.
    viji

    ReplyDelete
  11. Pattasu vedikamma enna Deepavali Mahi......
    Deepavalikku enka vanthirukalam ella?
    vijimma.

    ReplyDelete
  12. நன்றாக ஜமாய்த்துவிட்டு பார்ட்டி கொண்டாடிவிட்டு மிச்சம் மீதியைக் கொண்டு வந்து மறுநாளும் அவ்வளவுதான். உன் லட்டு இருக்கே மினுமினு என்று கசிவாக பதமாக இருக்கு. எல்லாமே அசத்தல்தான்.

    ReplyDelete
  13. ப்ரேமா,ராஜி,அதிரா,ஏஞ்சல் அக்கா,நித்து,சித்ரா,மேனகா,விஜிம்மா,காமாட்சிம்மா,அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    @ராஜி,பொழுது போகாம இருந்ததா..அதான் லட்டை ரவுண்டு கட்டு போட்டோ எடுத்துட்டேன்!ஹிஹி!:)

    @அதிரா,க்யூட்டா பூஸ் அவார்ட் குடுங்களேன்,நல்ல ஐடியா!:)

    @ஏஞ்சல் அக்கா,கேசரி நல்லா வந்ததா? சூப்பர்! மறக்காமவந்து சொன்னதுக்கு நன்றிங்க!

    @நித்து, :)

    @ஆச்சி,லட்டு அழுவுறதாவது?? மாடலிங் அழகிகள் கணக்கா மினுக்குதுல்ல?!!! ;))))))

    @மேனகா, நீங்கள்லாம் பல முறை செய்திருப்பீங்க, நான் முதல்முறை லட்டு செஞ்சிருக்கேன். அவ்ளோதான்!..thanx-pa!

    @விஜிம்மா, கோயில்ல பட்டாசு (மத்தாப்பு,புஸ்வாணம்,சங்குசக்கரம்) எல்லாம் இருந்தது. லேட்டானதால் வீட்டுக்கு வந்துட்டோம். கல்யாணம் ஆனதிலிருந்து ஒரு தீபாவளி/பொங்கலுக்கு கூட நான் ஊரில் இல்ல! அடுத்த முறை லீவுக்கு வரும்போதாவது அதை பார்த்து வரணும். :)
    நன்றிமா!

    @காமாட்சிம்மா,ரசிச்சு கமென்ட் போடறீங்க!:)தேங்க்ஸ்மா!

    ReplyDelete
  14. congratulations Mahi. thanks for the laddu (halwaa tharama laddu thandhadhuke oru special wish and thanks) ;-)

    ReplyDelete
  15. 'அட பாவி மக்கா' என்பது மதுரை வட்டார தமிழ். மிகவும் நெருங்கிய தோழர்/தோழிகளிடம் பயன்படுத்துவது...... தப்பா எடுத்துகாதீங்க மகி.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails