Friday, March 16, 2012

சாம்பார் இட்லி

சமீபத்தில் இந்த அழகான சாம்பார் இட்லித்தட்டுகள் வாங்கினோம். என்னிடம் இட்லிக்கு என தனியாக குக்கர் இல்லை , 5 லிட்டர் ஹாக்கின்ஸ் குக்கரில்தான் இட்லி செய்வது வழக்கம். இந்த உயரமான 6 ப்ளேட் சாம்பார் இட்லி ஸ்டாண்ட் குக்கரில் வைக்க முடியலை..நல்ல வேளையாக இட்லிப்பாத்திரத்தில் ஓரொரு தட்டாக வைக்க முடிந்தது. அதனால் அளவாக 2 தட்டுகளை மட்டும் எடுத்து இதயம் நல்லெண்ணெய் தடவி குட்டி இட்லி செய்தாச்சு. :))))

ஆனா கொஞ்சம் பொறுமை வேணும்ங்க..18 குழி இருக்கு..ஸ்பூனால மாவை எடுத்து எடுத்து எடுத்து ஃபில் பண்ணனும்..ஒரு தட்டுக்கு ஊற்றி முடிக்கவே எனக்கு போரடிக்க ஆரம்பிச்சிருச்சு. எப்படி 6 தட்டுக்களுக்கு ஸ்பூன் ஸ்பூனா ஊற்றி இட்லி செய்வாங்களோ??? அவ்வ்வ்வ்வ்வ்....

சின்ன இட்லிகளாக இருப்பதால் 5 நிமிஷத்தில வெந்துருது..அடுத்த தட்டுக்கு எண்ணெய் தடவி இட்லி வார்த்து ரெடியா வைச்சிருந்தா வெந்த இட்லித் தட்டை எடுத்துட்டு இன்னொரு தட்டை வைச்சிரலாம். இட்லிகள் சில நிமிஷம் ஆறியதும் ஸ்பூனால எடுத்தா, அழகா வந்துருது.

அப்புறம் என்ன சாம்பாரை ஊற்றி சாப்பிட வேண்டியதுதான்!!

சாம்பார் இட்லி வாயில் போட்டா சும்மா வழுக்கிட்டு வயித்துக்குள்ளே போயிருது..நீங்க அதைச் சாப்பிட எந்த முயற்சியுமே எடுக்கத்தேவையில்லை! ;)

ஸ்பூனில் இட்லி வார்ப்பது கொஞ்சம் நச்சுப் புடிச்ச வேலையா இருந்தாலும், சாப்பிடும்போது its worth an effort -னு தெரியுதுங்க. சூப்பரா இருந்தது சாம்பார் இட்லி!

முன்பே ஒரு முறை சாம்பார் இட்லி போஸ்ட் செய்திருக்கேன், ஆனால் அது காஸ்ட்கோ எக் போச்சரில் செய்த இட்லிகள். கொஞ்சம் கொழுக்-மொழுக்னு இருக்கும், இந்த இட்லிகள் அழகா பட்டன் சைஸ்ல இருந்தது. ரோசாப்பூ ஒரு மாதிரி அழகுன்னா, மல்லிப்பூ இன்னொரு மாதிரி அழகு. இந்த இட்லி ஒரு அழகுன்னா, அந்த இட்லி இன்னொரு அழகு.டைமிருந்தா அதையும் ஒரு எட்டு எட்டிப்பாருங்க.. :)

31 comments:

  1. நில்லுங்க இட்லி சாப்பிட்டுப் போட்டு வாறேன்:))

    ReplyDelete
  2. அதென்னது முதலாவது படம் உங்களிடம் இருக்கும் இட்டில் தட்டோ மகி? அவ்வ்வ்வ்வ்:)) ஓடருக்கு அவிப்பதுபோல.. எதுக்கு அவ்ளோ நிறைய?.. எனக்கு ஒரு தட்டில் அவிப்பதே பெரிய பிரச்சனை.. ஒவ்வொருதட்டகத்தான் வைத்து எடுப்பேன்.. ஊரில் உப்படி 3 தட்டு மட்டும் கோர்ப்பது இருந்துது, ஆனா கஸ்டம் அது..

    உங்களுக்கு கஸ்டமில்லையோ?

    ReplyDelete
  3. சாம்பர் வடை கேள்விப்பட்டேன் சாப்பிட்டதில்லை, சாம்பார் இட்லி சூப்பர்.

    அப்போ தயிர் வடைபோல.. தயிர் இட்லியும் உண்டோ?:))...

    இனிமேல்தான் வேர்க்க விறுவிறுக்க கீரியும் வான்ஸ்சும் வருவினம்.. அதிரா கொண்டு போயிட்டா எனச் சொல்லுங்கோ.. கேட்டால் ஒரு ரோஸ்ட் போட்டுக் கொடுத்திடுங்க பாவம்தானே அவர்களும்:))

    ReplyDelete
  4. /அதென்னது முதலாவது படம் உங்களிடம் இருக்கும் இட்டில் தட்டோ மகி? /ஆமாம் அதிரா!! நானும் ஒரு தட்டுத்தான் செய்தேன்.

    இது ஒரு இட்லி பட்டன் சைஸுக்குத்தான் இருக்குது. அதனால்தாம் அவ்வளவு நிறைய தட்டுக்கள் குடுத்திருக்காங்க போல!! :)))))

    /உங்களுக்கு கஸ்டமில்லையோ? / நீங்க சொல்வது சரிதான்..இத்தனை தட்டுக்கும் இட்லி வார்க்க பொறு........மை வேணும்!! நான் 2 தட்டு மட்டுமே யூஸ் பண்ணறேன்.

    கீரிக்கும் வான்ஸுக்கும் ரோஸ்ட்-டோ?? ப்ரவுன் ரைஸும் பார்லியும் ஊர;) வைச்சிருக்கேன்,அதிலே தோசை சுட்டுப் போட்டுரலாம் அவிங்களுக்கு! டோன்ட் வொரி,நீங்க சாம்பார் இட்லி எஞ்சாய் பண்ணுங்க! ;))))

    ReplyDelete
  5. /அப்போ தயிர் வடைபோல.. தயிர் இட்லியும் உண்டோ?:)).../ஹ்ம்ம்..நீங்க வேற!! என்னவர் தயிர்வடையைக் கண்டாலே காததூரம் ஓடிருவார்.அதனால் நான் இன்னும் ஒருமுறை கூட தயிர்வடை செய்ததே இல்ல! தயிர் இட்லி வேணா அடுத்தமுறை செய்து டெஸ்ட்..ச்சீ,ச்சீ டேஸ்ட் பண்ணலாம்! :)))

    ReplyDelete
  6. சாம்பார் இட்லி சாப்பிட ஆசையக இருக்கு.

    ReplyDelete
  7. இட்லி தட்டு ரொம்ப அழகா இருக்கு மகி. விருந்துக்கு ஸ்டார்ட்டர் செஞ்சு கொடுக்கலாம். இங்கே இந்த மாதிரி மினி இட்லி தட்டு பார்த்ததில்லே. என் இட்லி fry க்கு இந்த குட்டி குட்டி இட்லிகள் நல்லா இருக்குமுன்னு நெனைக்கிறேன். சின்ன பசங்களுக்கு இந்த மாதிரி குட்டி குட்டியா செஞ்சு கொடுத்தா அவங்களே சாப்பிட்ட்ருவாங்க போல இருக்கு.

    ReplyDelete
  8. சாம்பர் வடை கேள்விப்பட்டேன் சாப்பிட்டதில்லை, சாம்பார் இட்லி சூப்பர்.// இந்த மாதிரி சாம்பார் இட்லி தெரியாதவங்களுக்கு எல்லாம் first ஆ வந்தாலும் எதுவும் கெடையாதாம்.

    பூஸ் உளுந்து வடை செய்யும் போது சாம்பார் செஞ்சு அதில் வடை யா ஊற வெச்சு சாப்பிடுங்க அதுதான் சாம்பார் வடை. எனக்கு சாம்பார் வடை யா விட தயிர் வடை தான் ரொம்ப புடிக்கும்ம்

    ReplyDelete
  9. //இனிமேல்தான் வேர்க்க விறுவிறுக்க கீரியும் வான்ஸ்சும் வருவினம்.. அதிரா கொண்டு போயிட்டா எனச் சொல்லுங்கோ//

    நாங்க எல்லாம் கண்ணு முழிச்சு கடமையா கமெண்ட் போட்டு கிட்டு இருக்கோமாக்கும் எங்களுக்கு ரோஸ்ட் ன்னு ரெகமெண்டேஷன் வேற கர்ர்ர்ர்

    ReplyDelete
  10. //தயிர் இட்லி வேணா அடுத்தமுறை செய்து டெஸ்ட்..ச்சீ,ச்சீ டேஸ்ட் பண்ணலாம்! :)))//


    மகி தயிர் இட்லி செஞ்சு பூசுக்கு பார்ஸல் பண்ணி டெஸ்ட் பண்ணுங்க :))

    ReplyDelete
  11. யாஸ்மின்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    கிரி,வாங்க,வாங்க! /இங்கே இந்த மாதிரி மினி இட்லி தட்டு பார்த்ததில்லே./ நானும் பார்த்ததில்லை.எங்கூட்டுக்காரர் ட்ரிப் போனப்ப இந்தியன் ஸ்டோர்ல பாத்து அழகா இருக்குன்னு வாங்கிட்டு வந்தாருங்க! ;)

    /என் இட்லி fry க்கு இந்த குட்டி குட்டி இட்லிகள் நல்லா இருக்குமுன்னு நெனைக்கிறேன்./எக்ஸாட்லி! நானும் சில்லி இட்லி, ஃப்ரைட் இட்லி, பொடி இட்லின்னு நிறைய வெரைட்டீஸ் செய்ய நினைச்சிருக்கேன்.
    சின்னப் பசங்களுக்கும் கண்டிப்பாப் பிடிக்கும்!

    சாம்பார்இட்லி தெரியாதவஙக்ளுக்கு குடுக்க வாணாமா? ம்ம்..நீங்க சொல்றதும் சரிதான்! நான் ஏற்கனவே ஒருக்கா சாம்பார் இட்லி போஸ்ட் பண்ணிருக்கேன்,அதுக்கும் வந்து கமென்ட் போட்டு மறந்து போயிருக்காங்க பூஸ்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்! போனாப் போகுது,வுடுங்க! எல்லாரும் வாங்க,எல்லாருக்கும் இட்லி சப்ளை உண்டு! ;))))

    ReplyDelete
  12. மகி,

    மினி சாம்பார் இட்லி நல்லாருக்குங்க.

    ReplyDelete
  13. athira said...
    ஐ... மீ 1ஸ்ட்டு:))

    16 MARCH 201///


    no no no noo mee the firstuu

    ReplyDelete
  14. நில்லுங்க இட்லி சாப்பிட்டுப் போட்டு வாறேன்:))

    16 March 2012 12:௪௨//



    அதெலாம் முடியாது எனக்குதான்

    நாந்தான் முதல சாப்பிடுவேன்

    நீங்க முன்னாடி போனால் எனக்கு எதுவும் சாப்பிட இருக்காது..

    ReplyDelete
  15. ahaa.... arumai mahi.... periya idli vida chinna idli than my fav....

    ReplyDelete
  16. மகி..பேபி இட்லி சூப்பர் !அடிக்கடி செய்வேன்.கோவையில் இது ரொம்ப பேமஸ் ஆச்சே..சாம்பார்ல கொஞ்சமா சர்க்கரை சேர்த்து இந்த இட்லியை ஊற வைத்து சாப்பிட ரொம்பவே நல்லாயிருக்கும்.

    ReplyDelete
  17. kutti idli supera iruku...amma ithu adikadi panuvanga...i love this

    ReplyDelete
  18. super Mahi.என்னவருக்கும் என் மகளுக்கும் ரொம்ப பிடிக்கும். கொஞ்சம் நேரம் எடுத்தாலும் டேஸ்ட் சூப்பர்.

    ReplyDelete
  19. மகி கலர்க்கலரா கிண்ணத்தில் கீரை,பீட்ரூட்,காரட்னு துளி அரைத்துக் கலந்து இட்லி செய்து மிக்சரா அசத்தலாம். நவராத்ரியிலே டிபன் வகையிலே எல்லாவற்றிற்கும் கூட இந்த மாதிரி கொஞ்சம் செய்து வைப்பேன். எங்கே? ஜெனிவாவில். இட்லிகள் குட்டி குட்டியாக அசத்தலா வருகிறது இல்லையா? ரஸித்துச் செய்ய வேண்டியது

    ReplyDelete
  20. மகி, சூப்பரா இருக்கு இட்லி பானை ( பெயர் சரி தானே? ), இட்லி, சாம்பார், & சாம்பார் இட்லி எல்லாமே. எனக்கு இந்த இட்லி தட்டுகள் கழுவுவது என்றாலே போரிங்கா இருக்கும். இத்தனை தட்டுக்களையும் எப்படி கழுவுவீங்க????

    மதிப்புக்குறிய பூஸார் அவர்களுக்கு, நான் கிரி பக்கம் இட்லி உப்புமா சாப்பிட்டுக் கொள்கிறேன். நீங்களே அத்தனை அடுக்கிலும் இட்லிகளை அவிச்சு சாப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  21. You really should have lot of patience top make in all those plates.I have just 2 plates, sometimes I make it just for my son.

    Namma itha sapida aarambicha, kanaku theriyama ulla poyitae irukum:)

    ReplyDelete
  22. சாம்பார் இட்லி நானும் செய்வேன்,ஆனால் மத்தவங்க செய்து தந்தால் சூப்பர் தான்.

    ReplyDelete
  23. இட்லி ஸ்பெஷலிஸ்ட் மகியின் மற்ருமொரு இட்லி பதிவு..டொட்டடய்ங்...


    இப்படி எல்லாம் பொறுமையாக மினி இட்லி ஊற்றுவதில்லை.பெரிய இட்லியாக செய்து குட்டி குட்டியாக கட் செய்து சாம்பாரில் ஊறப்போட்டு மேலே ஒரு ஸ்பூன் நெய் விட்டு ஸ்பூனால் எடுத்து வாயில் போட்டால் தானாகவே உள்ளே போய்விடும்.

    ReplyDelete
  24. U won't believe mahi, I saw this post last night, and U know what I prepared idli with sambar :)

    ReplyDelete
  25. கண்ணுக்கு விருந்தா சூப்பர் ஆ இருக்கு மினி இட்லிஸ்

    ReplyDelete
  26. small idlies soaked in sambar looks cute. Sambar preparation at every house is different. Mahi do share your recipe.

    ReplyDelete
  27. பாத்ததுமே சாப்பிடனும்போல இருக்கே வரவா மஹி?

    ReplyDelete
  28. //மதிப்புக்குறிய பூஸார் அவர்களுக்கு, நான் கிரி பக்கம் இட்லி உப்புமா சாப்பிட்டுக் கொள்கிறேன்.//

    வாங்க வான்ஸ் உங்களுக்கு எக்ஸ்ட்ரா டஜன் இட்லி போட்டு நல்ல காரம் சாரமா செஞ்சு இருக்கேன். பூசார ரெண்டு நாளா காணோம். நீங்க என்ன புகழ்ந்ததுல தேம்சுல ஜம்ப் பண்ணிட்டாங்களா :))

    ReplyDelete
  29. கிரிஜா,வானதி ப.மிளகாச் சட்னியே சாப்பிடற ஆளு,நீங்க காஆஆஆஆரமாவே செய்துகுடுங்க!;) பூஸார் தேம்ஸில ஜம்ப் எல்லாம் பண்ணிருக்கமாட்டாங்க, எண்ணெய் தேய்ச்சு குளிச்சுட்டு ப்ரெஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷா வருவாங்களா இருக்கும்! :)
    ~~
    /வரவா மஹி?/லஷ்மிமா,தாரளமா வாங்க! அப்புறம் எங்கூரைப்பத்தியும் பயணக்கட்டுரை எழுதணும்,சரியா? :) ரொம்ப நன்றிமா கருத்துக்கு!
    ~~
    மீரா,சாம்பார் ரெசிப்பி சிலபல வருஷங்களுக்கு முன்னாலையே போஸ்ட் பண்ணிருக்கேங்க. அந்த போல்ட் லெட்டர்ஸ்ல இருக்க சாம்பாரை க்ளிக்குங்க,ரெசிப்பி லிங்க்தான் அது!
    ஒவ்வொருத்தருக்கும் கைப்பக்குவம் மாறும்,ருசியும் அதுக்கேத்தமாதிரி மாறும்! :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    அருணா,சாம்பார் இட்லி பாத்து உங்க வீட்டிலும் இட்லிசாம்பாரா? சூப்பர் போங்க! ரொம்ப சந்தோஷம்,உங்க கருத்து பார்த்து! தேங்க்ஸ்!
    ~~
    /பெரிய இட்லியாக செய்து குட்டி குட்டியாக கட் செய்து சாம்பாரில் ஊறப்போட்டு மேலே ஒரு ஸ்பூன் நெய் விட்டு ஸ்பூனால் எடுத்து வாயில் போட்டால்/ஆஹா..ஸாதிகாக்கா சொல்றதைக் கேட்கும்போதே வாயூறுது! :P
    வருகைக்கும்,சுவையான கருத்துக்கும் நன்றி அக்கா!
    ~~
    ஆசியாக்கா,சரியாச் சொன்னீங்க! நாமே சமைத்து நாமே சாப்பிடுவது போரடிக்கும்ல..அடுத்தவர் கையால் சாப்பிட்டால் அது ஒரு ருசிதான்!
    நன்றி!
    ~~
    சுமி, நான் 2 தட்டுதாங்க எடுத்திருக்கேன். ஒரு முறை ஒரு தட்டுக்கு மட்டும்தான் மாவு ஊற்றி வேகவைக்கிறேன். செய்யற வேலைக்கு ஏத்த டேஸ்ட் இருக்குல்ல? அதனால் சாம்பார் இட்லி ஹிட் ஆகிடுச்சு! ;)
    நன்றிங்க!
    ~~
    /இட்லி பானை (பெயர் சரி தானே? ),/ஹாஹா! சரியா இருந்திருந்தா கண்டிப்பா உங்களுக்குச் சந்தேகமே வந்திருக்காது! ;) கரெக்ட்டாத் தப்பாச் சொல்லிருக்கீங்கோ! இது இட்லித் தட்டுங்க,பானையில்லே!:))))))

    /இத்தனை தட்டுக்களையும் எப்படி கழுவுவீங்க????/ஸ்ஸ்ஸப்பா...என்னல்லாம் டவுட்டுக் கேக்கிறாங்கப்பா! இட்லி சாப்பிட்டு முடிச்ச கையோட இட்லித் தட்டையும் கழுவிப்போட்டுருவேன் வானதி. இல்லைன்னா போரிங்க்தான்! :)
    ~~
    காமாட்சிம்மா,நான் செய்யும் பெரும்பாலான வேலைகள் ரசித்துச் செய்வதுதான்! :) கொலுவுக்கு மினிஇட்லியா? நல்ல ஐடியாதான்!
    யுரோப் பக்கம் என்னவர் கல்யாணத்துக்கு முன்பே சுத்திமுடிச்சுட்டார்மா! பார்ப்போம்,வாய்ப்புக் கிடைத்தால் கட்டாயம் ஜெனீவா-ல சந்திக்கலாம்! :)
    நன்றிமா!
    ~~

    ReplyDelete
  30. விஜி,ஆமாங்க! தட்டில் மாவு ஊற்றுவது மட்டுமே டைம் எடுக்கும் வேலை,ஐஞ்சு நிமிஷத்தில இட்லி வெந்துருதில்ல?! :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    ஆர்த்தி.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    ராதா,என்னோட சாம்பார்ல வழக்கமாவே அரைஸ்பூன் சர்க்கரை சேர்த்துருவேன்! ;) ஆமாங்க,எங்கூர்ல இந்த மினிஇல்டி-சாம்பார் ஃபேமஸ்தான்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    BTW,அந்த"பேபிஇட்லி" பேர் அழகாருக்கு! :)
    ~~
    வித்யா,சின்ன இட்லி உங்க ஃபேவரிட்டா? எங்கவீட்டிலும் அப்படியேதான்! நன்றிங்க!
    ~~
    சிவா,நீங்கதான் எப்பவுமே ஃபர்ஸ்ட்டு,பூஸ் கூட சண்டை போடாம சமர்த்தாச் சாப்பிடுங்க,சரியா?:))
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா!
    ~~
    சித்ராசுந்தர்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! உங்க முறுக்கு போஸ்ட்பாத்து டெம்ப் ஆகி நானும் இன்னிக்கு முறுக்கு செய்துட்டேன்! ;)))))
    ~~

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails