Thursday, March 4, 2010

டிபன் சாம்பார்

தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 1/4கப்
வெங்காயம் - பாதி
தக்காளி - 2 (மீடியம் சைஸ்)
பச்சை மிளகாய் - 1
கடுகு -1/2ஸ்பூன்
சீரகம் -1/2ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
மஞ்சள்தூள் - 1/2ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4ஸ்பூன்
புளிக்கரைசல் - 1/4கப்
சாம்பார்த்தூள் - 1 1/2ஸ்பூன்
சர்க்கரை - 1/2ஸ்பூன்
எண்ணெய் - 1ஸ்பூன்
உப்பு
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை-சிறிது

செய்முறை
பருப்புடன் கால் ஸ்பூன் மஞ்சள்தூள், இரண்டு மூன்று சொட்டு எண்ணெய் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் - பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் கடுகு,சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து காய்ந்த மிளகாய், வெங்காயம்,பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின்னர் தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

எல்லாம் நன்கு வெந்ததும் வெந்த பருப்பை நன்றாக மசித்து சாம்பாருடன் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதிக்க ஆரம்பித்ததும் சாம்பார்த்தூள் சேர்த்து அடுப்பை குறைந்த சூட்டில் வைக்கவும்.

சாம்பார் நுரைக்கட்ட ஆரம்பித்ததும் சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடம் லோ ஹீட்டில் வைத்து கொத்துமல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.

கம-கம டிபன் சாம்பார் தயார்..இட்லி,தோசை,ஊத்தப்பம்,பொங்கல், உப்புமா, கிச்சடி இவற்றுக்கு பொருத்தமான ஜோடி இந்த சாம்பார்.

குறிப்பு
  • எப்பொழுதும் சாம்பார் பொடி சேர்த்ததும், நிறைய நேரம் சாம்பாரை கொதிக்க விடக் கூடாது.நுரைக் கட்ட ஆரம்பித்ததுமே அடுப்பிலிருந்து இறக்கிவிடவேண்டும்.
  • சாம்பார் கெட்டியாக இருக்காது. திக்காக வேண்டும் என்றால் தண்ணீரின் அளவைக் குறைத்துக்கொள்ளவும்.

இந்த முறை ஊரிலிருந்து சக்தி சாம்பார் பொடி வாங்கி வந்திருக்கிறேன்..என்னதான் எம்.டி.ஆர். சாம்பார் பொடி உபயோகித்தாலும் நம்ம ஊர் சாம்பார் டேஸ்ட் தனிதான்! :) எம்.டி.ஆர்-ல பட்டை கிராம்பு சேர்த்திருப்பதால் கொஞ்சம் கர்நாடகா சாம்பார் டேஸ்ட் வந்துடும்..அன்ன பூர்ணா சாம்பார் பொடி, சக்தி சாம்பார் பொடி இரண்டும் வாங்கி யூஸ் பண்ணிபாருங்க..உங்களுக்கே வித்யாசம் தெரியும்.

19 comments:

  1. கன்பியூஜன்.. இப்பத்தான் இந்த மாதிரி ஒரு குறிப்ப பாத்தா மாதிரி இருந்துச்சு.. ???

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா இருக்கு மஹி

    ReplyDelete
  3. தக்காளி போடாம பண்ணப் போறேன். நல்லா வரும்ல டீச்சர்?

    ReplyDelete
  4. //கொத்துமல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்// புரியல.

    இது சாம்பார் ரெசிபி தானே!!

    ReplyDelete
  5. மஹி டிஃபன் சாம்பார் நல்லா இருக்கு நன்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு.

    ReplyDelete
  6. ரொம்ப நல்லா இருக்கு மஹி. நன்றி.

    ReplyDelete
  7. மகி, நல்லா இருக்கு. நான் சாம்பார் பொடி வாங்குவதில்லை. தேவைக்கு ஏற்ப அரைத்துக் கொள்வேன்.
    இமா,"//கொத்துமல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்// புரியல. "


    கொத்தமல்லி தழை தூவி அடுப்பை நிப்பாட்ட வேண்டும். கட்டிப்பிடிக்க கூடாது. சுட்டு விடும்.

    ReplyDelete
  8. /கன்பியூஜன்.. இப்பத்தான் இந்த மாதிரி ஒரு குறிப்ப பாத்தா மாதிரி இருந்துச்சு.. ???/ அதுவா.. ஸ்கெட்யூல் பண்ணி வைச்சதில கொஞ்சம் குழப்பம், அதான்! :)

    /நல்லா வரும்ல டீச்சர்?/ நான் இதுவரை தக்காளி போடாம செஞ்சதில்ல டீச்சர்..நீங்க செய்து பாத்து சொன்னா நல்லாருக்கும் டீச்சர்! உங்க இன்னொரு கேள்விக்கு வானதியே பதில் சொல்லிட்டாங்க டீச்சர்..[ஸ்கூல்-ல டீச்சர்கூட பேசின ஞாபம் வருது இமா டீச்சர், போதும் இந்த டீச்சர விட்டுடுங்க டீச்சர்!:D]

    நன்றி சாரு,கொய்னி,பிரபா!

    வானதி,எனக்கு இந்த சாம்பார் பொடி,ரசப்பொடி எல்லாம் அரைக்கத் தெரியாது.தெரிஞ்சுக்கவும் சோம்பேறித்தனம்..;)
    எல்லாமே ரெடிமேட்தான்..இப்பதான் கொஞ்ச நாளா இட்லிபொடி மட்டும் அரைச்சுக்கறேன். நன்றி வானதி!

    ReplyDelete
  9. விளக்கத்துக்கு நன்றி வாணி. ;D

    மகி, தங்கள் வேண்டுகோள் பரிசீலனையில் இருக்கிறது. ;)

    ReplyDelete
  10. naan ithilayee araichu vittu vellam serpen. it looks good. i'll try it like this next time.

    ReplyDelete
  11. மஹி அக்கா ரொம்ப நல்லா இருக்குது உங்க சாம்பார்,

    ஆனா எனக்கு சாப்பாட்டுக்கு சாப்படற மாதிரி எப்டி சாம்பார் வைகிரதுன்னு டிப்ஸ் குடுங்க pls..

    ReplyDelete
  12. Nice sambar recipe. Would try ur version next time.

    ReplyDelete
  13. ப்ரியா, மகியை கஷ்டப் படுத்துவானேன் என்று நானே பதில் சொல்றேன். இது //சாப்பாட்டுக்கு சாப்படற மாதிரி// சாம்பார் தான். ஒண்..ணும் ஆகாது. பயமில்லாம சாப்பிடுங்க. அவங்க வீட்டு எலியே இதை சாப்பிட்டும் நல்ல மாதிரி ஹெல்தியா இருக்கு என்று கேள்வி. மகி கூட வந்து இதை ஆமோதிப்பாங்க பாருங்க.

    -இப்படிக்கு இன்னொரு எலி ;)

    ReplyDelete
  14. நன்றி ப்ரியா!
    நன்றிங்க சிட்சாட்!
    ப்ரியா, இந்த சாம்பார்ல விருப்பமான காய் சேர்த்து கொஞ்சம் கெட்டியா வைத்தால் சாதத்துக்கு நல்லா இருக்கும்.
    இமா..ஏன்..ஏன்...எங்க வீட்டு எலிய எல்லா ரெசிப்பிலையும் இழுக்கறீங்க?
    எனக்காக பதில் சொன்னதுக்கு நன்றிங்க!

    ReplyDelete
  15. சரி.. சரி. ;) இனிமேல் ஒண்ணும் சொல்லல. ;) நன்றிக்கு நன்றி மகி. ;)

    ReplyDelete
  16. mamhima enda roomla nan seitha sambarala nanbar oruvar veru room matralagi sendruvittar..

    enta receipt sambar vaipati print potukondey enimey ethey pola vaithu anta nanbarai thirimba kootivara venum..

    nanum eppadi elamey vaithupaken..enta sambaru matum varavey matuku..mahima..

    next or question..
    oru 10-20minsla oru kulambu vaika venaum..oru 2vegtablesthan erukku..simplea fasta vaikrthu pola oru idea kudunga..

    nandri..
    siva

    ReplyDelete
  17. இதுக்காகவே சக்தி சாம்பார் பொடி வாங்கி வந்து செஞ்சு பாத்தேன்.. ஓரளவுக்கு நான் எதிர்பார்த்த ஹோட்டல் சுவை வந்துட்டது.. நன்றி மஹி..

    ReplyDelete
  18. சாம்பார் நல்ல இருக்கு

    ReplyDelete
  19. Sambar remba supera Irukku.Manam Inge varai thukkuthu.I was luking for this Idli Sambar recipe to try a variety. Thanks or sharing this recipe, dropping at my space and the add.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails