Wednesday, March 28, 2012

உருளைக்கிழங்கு குருமா

"இந்த குருமாவுக்கு ரிச் பொட்டட்டோ குருமான்னு பேரு வைக்கணும்"..அப்படின்னு நினைச்சு டைப் பண்ண ஆரம்பிச்சேன். ஒடனே மூளைக்குள்ளாற தூங்கிகிட்டிருந்த சிங்கம் எந்திரிச்சிரிச்சு..அதென்ன "ரிச்" பொட்டட்டொ குருமா?? பணக்காரக் குருமாவா?? இல்ல பணக்கார உருளைக்கிழங்கா..இப்படி பல்வேறு பதில் தெரியாத கேள்விகளால் மண்டையக் குடைய ஆரம்பிச்சிதா..அதனால வெறும் "உருளைக்கிழங்கு குருமா"னே டைட்டில் வைச்சிட்டேன். :)))))

குருமாவில் சேர்க்கும் எண்ணெய், தே.பால்,எவாப்பரேடட் மில்க் இதெல்லாம் சேர்ந்து நல்ல ரிச்சான சுவையைக் கொடுக்கும், பார்ட்டிகளுக்கு செய்வதற்கு பொருத்தமான டிஷ் இது! :)

தேவையான பொருட்கள்
உருளை கிழங்கு -2
தக்காளி-2
தேங்காய்ப்பால் பவுடர்- 11/2 டேபிள்ஸ்பூன்
எவாப்பரேடட் மில்க் - 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-1/2டீஸ்பூன்
மல்லித்தூள்-1டீஸ்பூன்
பிரியாணி இலை -1
கசூரி மேத்தி -1 டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு

அரைத்துக்கொள்ள
கொத்துமல்லி/தனியா - 1டீஸ்பூன்
வரமிளகாய்-2
சீரகம்-1/2டீஸ்பூன்
சோம்பு-1/2டீஸ்பூன்
மிளகு-1/2டீஸ்பூன்
பட்டை-சிறுதுண்டு
கிராம்பு-2
ஏலக்காய்-1

வெங்காயம்-1
பச்சைமிளகாய்-1
இஞ்சி-சிறுதுண்டு
பூண்டு- 3 பற்கள்

செய்முறை

1.வெங்காயம்-மிளகாயை பெரிய துண்டுகளாக நறுக்கவும். இஞ்சியைத் தோல் சீவி, பூண்டை உரித்துக்கொள்ளவும்.

2.தனியா முதல் ஏலக்காய் வரை இருக்கும் பொருட்களை மிக்ஸியில் போட்டு கொறகொறப்பாகப் பொடித்துக் கொண்டு, அதனுடன் வெங்காயம்-ப.மிளகா,இஞ்சி-பூண்டு சேர்த்து 2-3 முறை பல்ஸில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.

4. கடாயில் எண்ணெய் காயவைத்து ஒரு பிரியாணி இலையைப் பொரியவிடவும், அதனுடன் ஒரு டீஸ்பூன் கசூரி மேத்தியை சேர்த்து, அரைத்து வைத்த மசாலாவையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

5.மசாலா வதங்கியதும் நறுக்கிய தக்காளி,மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

6.நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.

7.கிழங்கு பாதி வெந்ததும் தேங்காய்ப்பால் பவுடரை சுடுநீரில் கலக்கி ஊற்றி நிதானமான தீயில் கொதிக்கவிடவும்.

8. குருமா நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் எவாப்பரேடட் மில்க்-ஐ ஊற்றி குறைந்த தீயில் சிலநிமிடங்கள் கொதிக்க விடவும்.

9.கொத்துமல்லி இலை தூவி குருமாவை அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான கமகம குருமா ரெடி..பரோட்டா,சப்பாத்தி,பிரியாணி, இட்லி-தோசை-ஆப்பம் இவற்றுக்கு பொருத்தமாக இருக்கும்.
~~~
கடந்த வாரம் வீடு மாறினோம், இதே அப்பார்ட்மென்டில் வேறொரு வீட்டிற்கு வந்திருக்கிறோம்,அது பற்றிய ஒரு பதிவைப் போட்டேன், அதற்கு கருத்தும் வாழ்த்தும் தெரிவித்த கிரிஜா,ராதை & இமா றீச்சருக்கு நன்றிகள்!
~~~

22 comments:

  1. Mahi,

    குருமாவின் சுவை அதன் செய்முறையைப் பார்த்தாலே தெரிகிறது

    ReplyDelete
  2. குருமா சூப்பர் மகி.

    'உ.வெ' - க்கு. ;)) தாங்ஸ்.

    ReplyDelete
  3. Super kurma, rich kurmathan..

    ReplyDelete
  4. குருமா ரொம்ப டேஸ்டா இருக்கு

    ReplyDelete
  5. வெரி டேஸ்ட்டி குருமா!!

    ReplyDelete
  6. அட அதுக்குள்ளே இன்னொரு பதிவா? புது வீட்டுக்கு போய் சீக்கிரம் செட்டில் ஆயிட்டீங்க போல இருக்கு? குருமா நல்லா இருக்கு மகி. ஒவ்வொரு வீட்டு குருமா ரெசிபியும் ஒவ்வொரு மாதிரி இருக்கு. உங்க மெதட் செஞ்சு பார்த்திட்டு சொல்லுறேன்.



    சிங்கத்துக்கு நெறையா சாப்பாடு போடுங்க. அப்பத்தான் எந்திரிச்சு கிராஸ் டாக் பண்ணாது. எங்களுக்கும் கும்மி அடிக்க ஏதாச்சும் கெடைக்கும்:))



    //எண்ணெய் பிரிந்து வந்ததும் //

    அம்மணி உங்கூருல எண்ணெய் பிரிஞ்சா:)) ஓகே ன்னு சொல்லறீங்க இதுவே அப்பாவியா நாங்கெல்லாம் எழுதினா கும்முறீங்க வாட் இஸ் திஸ் :))

    ReplyDelete
  7. Where is 66 to 151 post? eli thookittu poyidichchaa? naan first comment pottathaala yaaro senja sathi:))

    ReplyDelete
  8. wow delicious kurma,luks yum...

    ReplyDelete
  9. thengai paal serthu innum supera irukku. Can see thee richness in gravy

    ReplyDelete
  10. குருமா ரொம்ப சூப்பராக இருக்கு மகி.

    ReplyDelete
  11. சூப்பர் குருமா. விரைவில் செய்து பார்க்க வேண்டும். கிரிசா கேட்ட அதே கேள்வி தான் நேக்கும். எங்கே அந்த போஸ்ட்???????

    ReplyDelete
  12. சித்ராசுந்தர்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    ஆர்த்தி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    இமா றீச்சர்,ஆனாலும் இப்படி சுருக்கெழுத்தில கமென்ட் போட்டு எல்லாரையும் மண்டையப் பிச்சுக்க வைக்கக்கூடாது நீங்க! ;)
    உ.வெ.--வை ஆருமே கவனிக்கல,அதை நீங்க கவனிச்சீங்க? ;) நன்றி றீச்சர்!
    ~~
    ஹேமா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    லஷ்மிம்மா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா~
    ~~
    மேனகா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    புதுகைத் தென்றல்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! செய்து பார்த்து சொல்லுங்க!
    ~~
    /அட அதுக்குள்ளே இன்னொரு பதிவா? புது வீட்டுக்கு போய் சீக்கிரம் செட்டில் ஆயிட்டீங்க போல இருக்கு?/அட,கிரிசா...இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்பூடி அப்பாவியாவே உலவப் போறீங்க? ;)

    பதிவு டைப் பண்ணின உடனே பப்ளிஷ் பண்ணுவது ஒவ்வொரு முறையும் நடக்கும்னு சொல்லமுடியாது.அப்பப்ப தட்டின உடனே பப்ளிஷ் பன்ணுவேன்,சிலசமயம் டைப் பண்ணி ட்ராஃப்ட்ல வைச்சிருப்பேன்,அல்லது ஷெட்யூல் பண்ணி விட்டிருவேன். குருமா வைச்சு பலநாளாச்சுங்கோ! :)))))

    /அம்மணி உங்கூருல எண்ணெய் பிரிஞ்சா:)) ஓகே ன்னு சொல்லறீங்க இதுவே அப்பாவியா நாங்கெல்லாம் எழுதினா கும்முறீங்க வாட் இஸ் திஸ் :))/ஹிஹி..அதனாலதானங்க குருமாவுக்கு ஒரு முன்னுரையே குடுத்திருக்கேன்? ஆனாலும் உங்க ஜோ-அளவுக்கு நான் ஜோ-யூஸ் பண்ணீ சமைக்கறதில்லை! ;)

    /Where is 66 to 151 post? eli thookittu poyidichchaa? naan first comment pottathaala yaaro senja sathi:))/இத,இத,இதத்தாங்க எதிர்பார்த்தேன்!! :))))

    ஒரே அபார்ட்மென்ட்ல இன்னொரு வீட்டுக்கு மூவ் பண்ணினதுக்கே இம்பூட்டு பில்ட்-அப் குடுக்கோணுமான்னு தோணுச்சு,அதனால அந்த போஸ்ட்டை மறுக்கா ட்ராஃப்ட்லயே போட்டுவைச்சிட்டேன். :) அதைப்பத்தி ஒரு ஒரு வொய்ட் கலர் ஹைலைட்டட் பார்ட்ல போட்டிருக்கேன்,றீச்சர் மட்டும்தான் கவனிச்சிருக்காக,உங்க கண்ணுல எப்ப படுமோ? ;)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரிஜா!
    ~~
    பிரேமா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    அனு,ஆமாங்க! தேங்காய்ப்பால் சேர்த்தாலே தனி ருசிதானே! :P வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    காயத்ரி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    யாஸ்மின்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    வானதி,/கிரிசா கேட்ட அதே கேள்வி தான் நேக்கும்./கிரிசாவுக்குச் சொன்ன அதே பதில்தான் உங்களுக்கும்! :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~

    ReplyDelete
  13. HI..Every time i enters in ur blog. n aftr seeing this lang i thinks-oops..i cant na..isis tamil or malayalam??nway thanx 4 dropping n commenting in my space dear..
    Maha

    ReplyDelete
  14. wowwww very nice blog and recipes mahi. your presentation is very beautiful.

    ReplyDelete
  15. //உ.வெ.--வை ஆருமே கவனிக்கல,அதை நீங்க கவனிச்சீங்க? ;) நன்றி றீச்சர்//


    நான் இப்போ கவனிச்சேன் கவனிச்சேன். எப்போ பாரு அவசரமாவே வேலையில இருந்து படிக்குறதால வந்த வினை ( நாங்கெல்லாம் குப்புற விழுந்தாலும் நோ சான்ட் ஒன முச்டேஷ் ஜாதி :)) எனக்கு வான்ஸ் மேல சத்தியமா முச்டேஷ் இல்லீங்கோ இத சொல்லலேன்னா உங்களுக்கு டவுட்டு வருமே :))

    ReplyDelete
  16. //அட,கிரிசா...இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்பூடி அப்பாவியாவே உலவப் போறீங்க? ;) //

    போ...ங்க ரெம்ப புகழுறீங்க :)) நான் டிராப்ட் எல்லாம் டைப் பண்ணி வெக்குறது இல்லீங்க. பதிவ எழுதுறது என் பாடு உங்க பாடு;)) ன்னு இருக்கு! போட்டோ மட்டும் இருக்கும்.

    //ஆனாலும் உங்க ஜோ-அளவுக்கு நான் ஜோ-யூஸ் பண்ணீ சமைக்கறதில்லை! ;)//

    ஐயோ ஜோ இட்லி க்கு மட்டும் எக்செப்ஷன். எல்லாத்துக்கும் நெறைய்ய ஜோ சேர்த்தா எங்க வீட்டுல ஐ வில் பி இன் trouble !!

    //உங்க கண்ணுல எப்ப படுமோ? // பட்டுடிச்சு :))

    //ஒரே அபார்ட்மென்ட்ல இன்னொரு வீட்டுக்கு மூவ் பண்ணினதுக்கே இம்பூட்டு பில்ட்-அப் குடுக்கோணுமான்னு தோணுச்சு//

    இப்படி எல்லாம் நீங்க நெனைச்சா அப்புறம் பதிவே போட முடியாது. இனிமே பதிவெல்லாம் வாபஸ் வாங்காதீங்க என் தாழ்மையான வேண்டுகோள் :)

    ReplyDelete
  17. லைவ் ட்ராபிக் feed போடுறது பத்தி டுடோரியேல் போடுறேன்னு சொன்ன கமெண்ட் ஐ ஏன் டிலீட் பண்ணிட்டீங்க ? கொடுத்த வாக்கை இப்படி வாபஸ் வாங்கலாமா :)) நான் கமெண்ட் பார்த்தேன் ஆனா பதில் போட நேரம் கெடைக்கலே.

    என் ஈமெயில் ப்ரோபைல் இல் இருக்கு. அதுக்கு வேணுமுன்னா கொசுமெயில் அனுப்பி விடுங்களேன். ஆனா என் technical knowledge இஸ் appalling அப்படின்னு நெறைய்ய பேர் வாயார வாழ்த்தி இருக்காங்க. ஸோ நீங்களும் அதிலே ஜாயின் பண்ணிடுவீங்க இந்த டுடோரியேல் உக்கு அப்புறம் :))

    ReplyDelete
  18. பாரு இப்போதான் இந்தப் பதிவையே பார்த்தேன். நம்பர் ஒன் குருமான்னு
    பேர் கொடுத்துவிடலாம். ரிச்சான குருமாதான்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails