Tuesday, March 20, 2012

Kid in a Candy Store...

என்ன பாக்கறீங்க? இதென்ன ஃபோட்டோ..எதைப்பத்தி பதிவுன்னுதானே?? :) கொஞ்ச நாட்கள் முன் நாங்க போன ஒரு டிரிப்பில ஒரு சாக்லேட் ஃபேக்டரிக்குப் போனோம். அங்கு வாங்கிய ஒரு நினைவுப்பொருள்தான் முதல் படத்தில் இருப்பது. பதிவும் அந்த ஃபேக்டரியைப் பற்றித்தான்...ம்ம்..இப்ப ' Today I Feel...Bored! ' சொல்வது உங்க டர்ன்! ஹாஹா! :)

Ethel M Chocolate ஃபேக்டரி லாஸ் வேகாஸில் இருக்கிறது. வாரநாட்களில் சாக்லேட் ஃபேக்டரியில் நடக்கும் வேலைகளை ஒரு டூராகப் பார்க்க வசதி செய்திருக்கிறார்கள். சாக்லேட் ஃபேக்டரியில் நுழையும் முன்பே வாசலில் கள்ளித் தோட்டம்(Cactus garden) ஒன்றும் நம்மை வரவேற்கிறது.

ஃபேக்டரியின் உள்ளே நுழைந்ததும் நீளமான காரிடாரில் ஒரு புறம் சுவற்றில் சாக்லெட் கண்டுபிடிப்பு, உற்பத்தி, பல்வேறு இடங்களில் இருக்கும் மற்ற ஃபேக்டரிகள் பற்றிய தகவல்கள் அழகாகப் படங்கள் மற்றும் வீடியோவுடன் அமைக்கப்பட்டு இருக்கின்றன. காரிடாரின் மறுபுறம் கண்ணாடிச் சுவர்..அதற்கப்பால் சாக்லேட் ஃபேக்டரியில் பலவித சாக்லேட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. நட் வகைகளை அரைக்கும் இயந்திரங்கள், சாக்லேட்டை உருக்கும் எந்திரங்கள் ஒரு ஓரம் உள்ளன. மற்றும் பல்வேறு இயந்திரங்கள் உதவியுடன் ஆட்கள் மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இங்கே மில்க் சாக்லேட் வகைகள் உருவாகின்றதாம். சாக்லேட்களை உருக்கி அச்சுக்களில் வார்த்து கூலிங் டன்னல்(cooling tunnel) வழியே அனுப்புகிறார்கள். பத்தடி நீளமிருக்கும் குளிரூட்டியில் சாக்லேட்டுகள் இறுகி, அச்சுக்களில் இருந்து அழகாகக் கழன்று வெளியே வருகின்றன. அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கும் தயாராகின்றன. அந்த ஃபேக்டரி ஹாலினை ரசித்து விட்டு வெளியே வரும் வழியருகே நாம் ருசிக்க சாக்லேட்டுகளைத் தந்து நாம் கேட்கும் சந்தேகங்களையும் தீர்த்துவைக்க ஒரு பெண்மணி இருக்கிறார்.

இதயவடிவ சாக்லேட், அதனுள்ளும் குட்டிக் குட்டி இதயங்கள்! :)

வெளியே வந்ததும் அங்கேயே சாக்லேட்களை விற்பனை செய்யும் ஒரு விசாலமான கடை இருக்கிறது. சாக்லேட்ஸ், சிறிய நினைவுப்பொருட்கள், டி-ஷர்ட்ஸ் மற்றும் நானாவிதப்பொருட்கள் இருக்கின்றன. நாங்கள் போனது வாலன்டைன்ஸ் டே சமயத்தில் என்பதால் இந்த இதய வடிவ சாக்லேட்ஸ் அதிகம் டிஸ்ப்ளேயில் இருந்தது.

சாக்லேட் ஃபேக்டரியில் இருந்து வெளியே வந்தால் பலவகையான கள்ளிச்செடிகள்/ கள்ளிமரங்கள் நிறைந்த தோட்டம் இருக்கிறது. நாங்கள் போன சமயம் நல்ல குளிரும் காற்றுமாக இருந்தது. விதவிதமான உருவங்களில், உயரங்களில் கள்ளிகள் வைத்திருக்கிறார்கள். படத்தில் இடது மூலையில் இருக்கும் "சோயா காக்டஸ்" செடிகளை நினைவிருக்கா உங்களுக்கு? ;) இல்லைன்னா அதைப்பற்றிய தனிப்பதிவு இங்கே..

நிதானமாகக் கள்ளித்தோட்டத்தை ரசிக்க விடாமல் எலும்பைத் துளைக்கும் குளிர்க்காற்று விரட்டவே, அப்படியே அடுத்த இடத்துக்கு நகர்ந்தோம். M&M சாக்லேட் ஸ்டோர்ஸின் கடை அது. அழகழகான பேக்ஸ், டாய்ஸ், சாக்லேட்ஸ் என்று கண்ணைக்கவரும் பொருட்கள் தகதகவென்று இருந்தன.

அங்கே வாங்கியதுதான் இந்த ஃப்ரிட்ஜ் மேக்னட்! க்யூட்டான எம் & எம் பொம்மை..ஒவ்வொருநாளும் நம் மூடிற்கு ஏற்ப மேக்னட்டை அப்டேட் செய்துகொள்ளலாம். :)))

சரி,பதிவு ரொம்ப மொக்கையா இருந்துதுன்னா கோவப்படாதீங்க, இந்தாங்க, லட்டு!! சாப்ட்டு சந்தோஷமாக் கமென்ட்டையும் போட்டுட்டுப் போங்க. ;) ;)

டாட்டா,பை,பை!

25 comments:

  1. Mee Firstuuuu All M&Ms for meeeeeeeeeeeeee!!!!

    ReplyDelete
  2. // Today I Feel...Bored!// சொல்லியாச்சு ஓகே :))

    சாக்லேட் புடிக்காத நீங்க அங்கே போய் என்ன பண்ணீங்க?பேருக்காச்சும் ஏதாவது சாக்லேட் வாங்கினீங்களா ?

    ReplyDelete
  3. //நாம் கேட்கும் சந்தேகங்களையும் தீர்த்துவைக்க ஒரு பெண்மணி இருக்கிறார்//

    நீங்க போயிட்டு வந்தப்புறமும் அந்த பெண்மணி :)) இருக்காங்களா? இல்லே உங்களுக்குத்தான் டவுட்டு டவுட்டா வருமே அதேன் கேட்டேன்!!

    ReplyDelete
  4. இந்த மாதிரி போயிட்டு வந்த இடங்கள பத்தி interesting ஆ எழுத உங்களால மட்டும் தான் முடியும். படங்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு மகி

    ReplyDelete
  5. கிரிஜா,இன்றும் நடுஇரவில் வந்து கமென்ட் போட்டிருக்கீங்க போல? ரொம்ப நன்றிங்க. :)

    //சாக்லேட் புடிக்காத நீங்க அங்கே போய் என்ன பண்ணீங்க?// சும்மா...பட்டிக்காட்டான் முட்டாய்க்கடையப் பாத்த மாதிரி பராக்குப் பாத்துட்டு வந்தனுங்கோ! :)))))

    //பேருக்காச்சும் ஏதாவது சாக்லேட் வாங்கினீங்களா?/ஹிஹி..வாங்கலை! ஃப்ரிட்ஜ் மேக்னட் மட்டுமே வாங்கினோம்!

    /நீங்க போயிட்டு வந்தப்புறமும் அந்த பெண்மணி :)) இருக்காங்களா?/ குட் கொஸ்டின்! அந்த வரியைத் தட்டும்போது நானும் "அந்தம்மா இன்னும் அங்க வொர்க் பண்ணுவாங்களா,இல்லயா?"ன்னு நினைச்சுட்டேதான் தட்டினேன்! ஹாஹா! :)

    4வது கமென்ட்டில நச்சுன்னு சொல்லிட்டீங்க,ஒரு டம்ளர் ஹார்லிக்ஸ் குடிச்சமாதிரி தெம்பா இருக்குது,தேங்க்ஸ் கிரிஜா! :)

    ReplyDelete
  6. ஆஅ முதல் லட்டு போச்சே :(((


    லட்டு மட்டுமே முதலில் தெரிந்தது அதனால்
    ரெண்டு லட்டை சாப்பிட்டு விட்டேன் :)

    ReplyDelete
  7. /லட்டு மட்டுமே முதலில் தெரிந்தது அதனால்
    ரெண்டு லட்டை சாப்பிட்டு விட்டேன் :) / லட்டுக்கு முன்னால இருக்க எந்த விஷயமுமே சிவா கண்ணுக்கு படலையா? எ.கொ.சி.இ.?

    ஹூம்..பதிவை படிக்காமல் படம்பார்த்து கமென்ட்டா? கர்ர்ர்ர்ர்ர்! சிவா,நீங்க ஆல்ரெடி சாப்பிட்ட லட்டு மட்டுமே உங்களுக்கு, தட்டில் மீதி இருப்பது மற்ற எல்லாருக்கும்! ;)

    நன்றி சிவா!

    ReplyDelete
  8. மகி, சூப்பர். நாங்களும் இங்கே Hershey, Pensylvenia செல்வதுண்டு. நகர்ந்து செல்லும் கார் போன்ற ஒரு வாகனத்தில் ஏறி, சாக்லேட் ஃபாக்டரியை வலம் வரலாம்.

    //நீங்க போயிட்டு வந்தப்புறமும் அந்த பெண்மணி :)) இருக்காங்களா? இல்லே உங்களுக்குத்தான் டவுட்டு டவுட்டா வருமே அதேன் கேட்டேன்!!//
    நல்ல வேளை எங்க பச்சைப் பூ போயிருந்தா அந்தம்மா கதி.

    ReplyDelete
  9. Nice post Mahi, never thought of a chocolate factory in Las Vegas..

    ReplyDelete
  10. அருமையான போட்டோக்கள்.நாவூறச்செய்யும் பதிவு.

    ReplyDelete
  11. Hershey-யுடன் எல்லாம் இந்த சாக்லேட் ஃபேக்டரியைக் கம்பேர் பண்ண முடியாது வானதி! போட்டோலே பாருங்க, அந்த காரிடார் மொத்தமே 25அடிதான் இருக்கும். ஹெர்ஷீஸ் போயிட்டு வந்த என் ஃப்ரெண்ட் சொல்லிருக்காங்க அது எவ்வ்வ்வ்வ்வ்வளோ பெரிசுன்னு!:)

    /நல்ல வேளை எங்க பச்சைப் பூ போயிருந்தா அந்தம்மா கதி./என்ன சந்தேகம், அந்தம்மா அப்பவே பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் பிடிச்சிருப்பாங்க!;)))))))
    நன்றி வானதி!
    ~~
    ஹேமா,இது las vegas Blvd-ல இருந்து பக்கம்தாங்க. ஜஸ்ட் ஃபார் எ சேஞ்ச் போலாம்! :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    ஸாதிகாக்காக்கு சாக்லேட்டும் விருப்பமோ? ;) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~

    ReplyDelete
  12. ட்! க்யூட்டான எம் & எம் பொம்மை..ஒவ்வொருநாளும் நம் மூடிற்கு ஏற்ப மேக்னட்டை அப்டேட் செய்துகொள்ளலாம். :)))///

    KOVAMA ERUNTHA ENNA DISPLAY VAIPEENGA?

    ReplyDelete
  13. சொக்கலேட் பக்டரி சூப்பர்.. அழகாக படம் பிடிச்சிட்டீங்க...

    நாங்களும் கனடாவில் ஒரு சொக்கலேட் பக்ரறிக்குப் போனோம்... போகும்போது பெரிய பெரிய கனவோடு போனேன்... என்னெண்டால்.. சும்மா சும்மா அள்ளி அள்ளிச் சாப்பிடலாக்கும் என.. எனக்கு கட்டியாக இருப்பது பிடிக்காது.. அப்பூடியே கரைந்ததுபோல இருக்கும்போதுதான் பிடிக்கும்...

    அங்கு போனால் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) எல்லாம் தூர..தூர நின்றபடியேதான் பார்க்க முடிஞ்சுது, பக்கத்தில ஓடிய பெல்ட்டுக்கெல்லாம் நெட் போட்டிருந்தினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  14. சரி,பதிவு ரொம்ப மொக்கையா இருந்துதுன்னா கோவப்படாதீங்க, இந்தாங்க,////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. இது மொக்கை என எழுதியமைக்கு:))

    லட்டு!! சாப்ட்டு சந்தோஷமாக் கமென்ட்டையும் போட்டுட்டுப் போங்க. ;) ;)///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எங்க சாப்பிடுறது.. எனக்கு வாணாம் சிவா வுக்கு பாதி, மற்றப் பாதியில கீரிக்குப் பாதி வான்ஸ்க்குப் பாதி பிச்சூஊஊஊஊஉப் பிச்சுக் கொடுங்கோ:))

    ReplyDelete
  15. சும்மா சும்மா அள்ளி அள்ளிச் சாப்பிடலாக்கும் என.///அடி ஆத்தி! அந்த chocolate factory உரிமையாளர் தலையில் துண்டை போட்டுக் கொண்டு, தெருத் தெருவாக சுற்றத் தான் சரி. பூஸார் அள்ளிச் சாப்பிட கரண்டியோடு போனதாக யாரோ சொன்னார்கள்.

    ReplyDelete
  16. ஹா!! kid!!!
    m.. Mahi kid!! ok.
    ரசிச்சு எழுதி இருக்கிறதைப் பார்த்தால் அப்பிடித்தான் இருக்கு. மிட்டாய்க் கடையில் ஒரு மஞ்சள் பூ.

    ReplyDelete
  17. //பூஸார் அள்ளிச் சாப்பிட கரண்டியோடு போனதாக யாரோ சொன்னார்கள்.// நானும் பார்த்தேன், அது உண்மைதான் வானதி.

    ReplyDelete
  18. என்னவோ ஆச்சு. படம் ஒண்ணுமே தெரியல. சாயந்திரமா திரும்ப வரேன் மஹி.

    ReplyDelete
  19. "Kanna! rendu laddu saapda aasaya?"
    amam, modhalla chocloate laddu, appram boondhi laddu ;-) haha.a. sweeet post mahi. each cactus looks beautiful with their unique feature.

    ReplyDelete
  20. மகி லட்டு சூப்பர்....

    எப்பவும் போல எழுத்து நடையும் லட்டு மாதிரியே சூப்பர்....

    ReplyDelete
  21. மகி,
    நானும் டயட் இருக்கலாம் என முயற்சிக்கும்போது இப்படி சாக்லேட் ஃபேக்டரிக்கு கூட்டிட்டுப் போய்ட்டிங்க.எத்தனை வெரைட்டியான சாக்லேட்டுகள் இருந்தாலும் எனக்கு அந்த லட்டுகள்தான் பிடிக்கிறது.

    ReplyDelete
  22. சிவா,இந்த மேக்னட்டில் கோவமா இருப்பது, சோகமா இருப்பது போன்ற டிப்ரஸிங் விஷயங்கள் எதுவுமே இல்லை,எல்லாமே சந்தோஷம்,சிரிப்பு,தமாஷ்..கடைசியா டயர்ட் ஐகான் மட்டிலுமே இருக்கு. ;)))))

    அதுவும் இல்லாம, கோவமா இருக்கும்போது ப்ரிட்ஜ் மேக்னட் எல்லாம் அட்ஜஸ்ட் பண்ண நினைவு வருமா சொல்லுங்க? ;)
    நன்றி சிவா!
    ~~
    /சும்மா சும்மா அள்ளி அள்ளிச் சாப்பிடலாக்கும் என.. / avvv,,,பூஸ்,நீங்க கையில் கரண்டியோட திரிவதா வானதியும் புனிதா ஜி-யும் சொல்றாங்களே,நிசம்தானா அது?? பார்ன் வித் சில்வர் ஸ்பூன்-ம்பாங்களே,அதானா இது??! :)))))

    எனக்கு கட்டியாக இருப்பது பிடிக்காது..//எனக்கு சாக்லெட்டே புடிக்காது! கி கிகி!

    அப்பூடியே கரைந்ததுபோல இருக்கும்போதுதான் பிடிக்கும்...//அதாவது வாழைப்பழச் சோம்பேறி போலன்னு சொல்லுங்க..சாக்லட்டை கடிக்கக்கூட கச்டமாம்,அள்ளி அள்ளி குடிக்கணுமாம்! எ.கொ.ச.இ.? ;))))

    பக்கத்தில ஓடிய பெல்ட்டுக்கெல்லாம் நெட் போட்டிருந்தினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).///ஆஹா,உங்கட கூரான நகங்களுக்கு என்னாச்சு? பாய்ஞ்சு பிறாண்டிருந்தா பெல்ட்டாவது இன்னொண்ணாவது? ;)

    /எங்க சாப்பிடுறது.. எனக்கு வாணாம்/ஏன்ன்ன்ன்? பூஸுக்கு இனிப்பூ புடிக்காதோ?? உறைப்புக் கறி போட்டு லட்டு பிடிச்சுத் தரட்டே அதிரா? :P
    நன்றி,வருகைக்கும் கருத்துக்கும், பதிவு மொக்கையில்லை எனச் சொன்னமைக்கும்! =)
    ~~
    /அந்த chocolate factory உரிமையாளர் தலையில் துண்டை போட்டுக் கொண்டு, தெருத் தெருவாக சுற்றத் தான் சரி./வானதி,ஹாஹா,கற்பனை பண்ணிப் பார்க்கிறேன்...சிரிச்சு முடியல, உங்களுக்கு புனிதா ஜி-வேற ஜால்ரா அடிக்கிறாங்க! :)))
    ~~
    புனிதா ஜி(இது இனிஷியல் இல்லே,ஹிந்திலே "ஜி"ன்னா மரியாதை ஜி! ;) ) இனிமே உங்களை இப்படிதான் கூப்டப்போறேன் ஜி! நீங்க எது சொன்னாலும் சரிங் ஜி! [எப்போ எங்க ஆப்பு வைப்பீங்கனு தெரிலையே,அதனால மரியாதையா பேசிக்கறேனுங்க ஜி! ;)]

    /படம் ஒண்ணுமே தெரியல. சாயந்திரமா திரும்ப வரேன் மஹி./சாய்ந்திரம் வந்தீங்களா ஜி..படம் தெரிஞ்சுதா ஜி?
    நன்றிங் ஜி! :)))
    ~~
    மீரா,பதிவுக்கேத்த கமென்ட் போட்டுட்டீங்க!;)
    காக்டஸ் கார்டன் இன்னும் நிறைய படம் இருக்கு, ஆனா பதிவு நீளமாகிடும்னு கொலாஜ் பண்ணிட்டேன்..படங்களும் குறைச்சுட்டேன்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    ஆஹா,ப்ரியா 2 இன் ஒன் கமென்ட்னா இதானா? :))) தேங்க்ஸ்ப்பா!
    ~~
    சித்ராமேடம், நீங்க ஆனியன் பக்கோடாவும், முறுக்கும் போட்டு டெம்ப்ட் பண்ணிட்டு இப்படி சொன்னா எப்படி? ;) நானும் உங்க கட்சிதான்..இந்திய உணவுகள்ல இருந்து பெருசா மாறலை! :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~

    ReplyDelete
  23. Mahi,
    Chocalate sapida asia varuthu.
    Doctor sapadakudathunnu chollidare enna saiarathu?

    Seri padamum padium parthu santhosha pattukaren.
    viji

    ReplyDelete
  24. இப்போதான் சாயந்திரம் ஆச்சு. //நீங்க எது சொன்னாலும் சரிங் ஜி! [எப்போ எங்க ஆப்பு வைப்பீங்கனு தெரிலையே,அதனால மரியாதையா பேசிக்கறேனுங்க ஜி! ;)// சரிங். :-)

    அப்றம்... வானதி பாவம், குழப்பாதீங்க மகிமா.

    மாக்னட் நல்லா இருக்கு. சாக்லேட் ஃபாக்டரி அழகா இருக்கு. குட்டி குட்டி இதயங்கள் க்யூட்டா இருக்கு. சாப்பிட்டுப் பார்த்தீங்களா? காக்டை சூப்பர். ஊர்ல இருக்கிறப்ப நிறைய வச்சிருந்தேன். இப்ப எதுவும் இல்ல. டீ சர்ட் ஏதும் வாங்கலயா! ஹை! லட்டு அகெய்ன். இதான உங்க பக்கம் வரப் பயமா இருக்கு. கைக்கும் எட்டாது; வாய்க்கும் எட்டாது. ஏக்கம்தான் மிச்சம்.

    ReplyDelete
  25. டாக்டர் அட்வைஸா விஜிமா? அப்ப சரி..சாக்லெட் பாத்துட்டு மட்டும் போங்க! ;) டேக் கேர் ஆஃப் யுவர் டயட்!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    புனிதா ஜி,எங்க ஊர்ல 24 மணி நேரத்துக்கு ஒரு முறை சாயந்திரம் வரும்,உங்கூர்ல வேஏஏஏற மாதிரி போல,சரி,சரி!!! 2நாள் கழிச்சுதான் வந்திருக்குது!

    நான் ஒய்ட் சாக்லட் சாப்பிட்டேன்,அப்புறம் இன்னொரு சாக்லட்,பேர் மறந்து போச்,மைசூர்பாக் மாதிரி இருந்தது!;) அதுவும் சாப்பிட்டேன்.அவ்ளோதாங்க!

    //கைக்கும் எட்டாது; வாய்க்கும் எட்டாது. ஏக்கம்தான் மிச்சம்.// :))))

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails