ஜோஷ்வா மரங்களும் கள்ளித் தோட்டமும்..
சின்னத்தம்பில குஷ்பு சுத்திப் பார்த்த மாதிரி பசுமையான குளுகுளு சத்தியமங்கலம்,கொடிவேரிக் காட்சிகளை மனசுக்குள்ள ஓட்டிகிட்டே இங்கே வந்தீங்கன்னா..சாரி, உங்கள் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகப் போகிறது. இந்தப் பதிவில் நான் உங்களைக் கூட்டிப்போகப் போவது ஒரு கள்ளிக்காடு! தேங்க்ஸ்கிவிங் வியாழனன்று நாங்கள் மற்றும் இன்னொரு நண்பர் குடும்பமும் ஜோஷ்வா ட்ரீ என்ற மரங்கள் நிறைந்த ஒரு நேஷனல் பார்க்கிற்கு போயிருந்தோம்.
மரங்களின் பெயராலேயே இந்த பார்க்கிற்கு ஜோஷ்வா ட்ரீ நேஷனல் பார்க் என்று பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பாலைவனமாய்க் கிடக்கும் ஒரு இடத்தில் ஜோஷ்வா மரங்கள் பல ஏக்கர் பரப்பளவிற்கு பரந்து விரிந்து கிடக்கின்றன. குளிர்காலம் ஆரம்பித்த காரணத்தால் கொஞ்சம் குளிரும் காற்றுமாக இருந்தாலும் வெயிலும் நன்றாகவே இருந்தது அன்று. முற்பகலில் பார்க்கை அடைந்து நுழைவுச்சீட்டுடன் பார்க் மேப்பையும் வாங்கிட்டு உள்ளே நுழைந்தோம்.
மொட்டைக்காடாக இருக்கும் இந்தப் பூங்கா(!)வில், ஆங்காங்கே பெரிய பெரிய பாறைகள், சின்னசின்னப் பாறைகளாலான மலைகள் ஏராளமாக இருக்கின்றன. "ராக் க்ளைம்பிங்" செய்பவர்களின் விருப்பத்திற்குகந்த இடமாக இருக்கிறது இந்த ஜோஷ்வா ட்ரீ பார்க்.
பாறைகள் இருக்கும் இடங்களிலெல்லாம் எறும்புகள் போல மனுஷர்கள் தொத்திக்கொண்டு இருக்கிறார்கள். எப்படி இவ்வளவு செங்குத்தாக இருக்கும் பாறைகளில் எல்லாம் ஏறுகிறார்களோ!! எல்லாரும் ஒரே இடத்துக்கு சென்று அங்கே இருக்கும் பறவைகள்,செடிகொடிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் ராக் க்ளைம்பிங் செய்ய விரும்புவர்கள் பார்க் மேனேஜ்மென்ட்டிடம் முன் அனுமதி வாங்க வேண்டும் என்று தெரிவிக்கிறது இந்தப் பலகை..
எங்கு பார்த்தாலும் ஜோஷ்வா மரங்களும் பாறைகளும் மட்டுமே கண்ணில் படும் இந்தப் பார்க்கில் ஹைக்கிங் ட்ரெய்ல்களும் இருக்கின்றன. ஒரு மைல் தூரமுள்ள Hidden Valley Hiking Trail-லில் உள்ளே நுழைந்தோம்..ட்ரெய்ல் முழுவதும் ஆங்காங்கே வழிகாட்டும் பலகைகள்..சிறுவர் முதல் முதியவர் வரை கடந்து செல்லும் சக பயணிகள்.
ஜோஷ்வா மரங்களுடன் பைன் மரங்களும் இருக்கின்றன. முன்காலத்தில் செவ்விநிதியர்களின் முக்கிய உணவாக பைன் மரக்கோன்கள் இருந்ததாகத் தெரிவிக்கிறது ஹைக்கிங் ட்ரெய்லில் உள்ள இந்தப் பலகை..பச்சைக்கோன்களை மரத்திலிருந்து பறித்துச் சென்று நெருப்பில் சுட்டு உள்ளே இருக்கும் பைன் நட்ஸ்-ஐ சாப்பிடுவார்களாம்.
வீடு கட்ட பைன் மரம், பைன் மரப்பிசினுக்கும் உபயோகம்..நல்ல உபயோகமான மரம்தான் இந்தப் பைன் மரம்!:)
சில இடங்களில் சாதாரணமாக இருக்கும் பாதை ஒரு சில இடங்களில் பாறைகளாலான படிக்கட்டுகளாக இருக்கிறது. சுற்றிலும் பாறைகள் சூழ, இருக்கும் குட்டிகுட்டி மலைகள்..பாறைகள் ஒவ்வொன்றும் கரடுமுரடாகவெல்லாம் இல்லை..மழமழன்னு உருட்டி வைத்த களிஉருண்டைகளைப் போல இருக்கு! ஒவ்வொரு பாறையைப் பார்க்கையிலும் ஒவ்வொரு உருவம் தெரிகிறது! ;) இந்தப் படத்தில் இடதுமூலையில் இருக்கும் போட்டோல குட்டியா இருக்கும் பாறையைப் பார்க்கையில் சின்னதா ஒரு சேர் தெரிந்தது..அடுத்த படத்தில் கட்டத்தினுள் உட்கார்ந்திருக்கும் நாய்க்குட்டியின் உருவம் தெரிகிறதா? :)))))))
தஞ்சாவூர் பெரிய கோயில் நந்தி போல இருந்தது ஒரு மலையுச்சியில் இருந்த பாறை..இப்படியே பாறைகளையும் காட்டுச் செடிகளையும் ரசித்தவாறே பாறைகளில் ஏறி இறங்கி, நடந்து வெற்றிகரமாக ஹைக்கிங் ட்ரெய்லை கம்ப்ளீட் பண்ணினோம்.
வழியில் டென்ட் (Tent) அடித்து, காஸ்-ஸ்டவ், பாத்திரங்கள் சகிதம் கேம்ப் அடித்திருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டே(நல்ல பசியுடன்) காருக்கு வந்து நாங்கள் எடுத்துப் போயிருந்த தக்காளி சாதம்-எலுமிச்சை சாதம்-உருளைகிழங்கு பொடிமாஸ்-புதினாத் துவையல்-பருப்புத் துவையலை ஒரு பிடி பிடிச்சோம்.அதையும் விடாம ஒரு போட்டோவைப் புடிச்சு கொண்டாந்திட்டமுல்ல?ஹிஹி!
அடுத்து எங்கே போலாம்னு பார்க் மேப்பை எடுத்து பார்க்கும்போதே மணி 3 ஆகியிருந்தது. "காக்டஸ் கார்டன்" என்ற கள்ளித்தோட்டம் நல்லா இருக்கும்னு சொல்லியிருந்தாங்க..சரி அதைப் பார்க்கப்போவோம்னு போனோம்,போனோம்..போயிட்டேஏஏஏ இருந்தோம்..மைல் கணக்கில் விரிந்து கிடக்கும் பார்க்கில் ஒரு மூலையில் இருக்கிறது இந்த Cholla Cactus Garden. 20-30 மைல்கள் ட்ரைவ் செய்த பிறகும் கள்ளித்தோட்டமே கண்ணில் படவில்லை. கூடவே வந்து கொண்டிருந்த ஜோஷ்வா மரங்களூம் திடீரென்று காணாமல் போயிருந்தன.
சூரியனும் மேற்கில் புதைய ஆரம்பித்திருந்தான். ஒரு இடத்தில் ரோடு சற்றே திரும்ப, திரும்பியதும் முகத்தில் அறைந்தன சோயா ( cholla-ல ரெண்டு "L"ம் சைலன்ட்டாமாங்க..கர்ர்ர்ர்ர்)செடிகள். எதாவது ஒரு கட்டடம் இருக்கும், ஆட்கள் இருப்பாங்கன்னு ஊட்டி பொட்டானிகல் கார்டன் ரேஞ்சுக்கு எதிர்பார்த்துப் போன எனக்கு மாலை நேர மஞ்சள் வெயிலில் தலையாட்டி வரவேற்ற கள்ளிக்காட்டைப் பார்த்ததும் சந்தோஷ ஆச்சர்யம்!
பாலைவனத்தின் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் மட்டுமே இந்த கள்ளிச்செடிகள் வளர்வதற்கான தட்பவெப்பம் இருக்கிறதாம். அதனால் அங்கே மட்டும் குத்துக்குத்தாக வளர்ந்து இருக்கின்றன இவை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்தக் கட்டடமும் இல்லை..எந்தத் திசையில் பார்த்தாலும் மலைக்குன்றுகள் எல்லை கட்ட, அழகான கரடிக்குட்டிகள் போல சோயா கள்ளிச்செடிகளே நிற்கின்றன. உச்சி முதல் பாதம் வரை முள்ளாய்ப் இருந்தாலும், அந்த அடர்த்தியான முட்களே இச்செடிக்கு டெடி பேர் செடிகள் என்று பேரும் வாங்கிக் கொடுத்திருக்கு! கள்ளிச்செடியில் என்ன அழகு என்று கேட்பவர்களும் இந்தச் செடிகளை, முள்ளில் பூத்திருக்கும் மலர்களைப் பார்த்தால் வாயடைத்துப் போவது உறுதி! :)
கள்ளித்தோட்டத்தினுள் நடந்து செல்ல கால் மைல் தொலைவில் ஒரு செல்ஃப் கைடிங் ட்ரெய்ல் இருக்கிறது. இந்த கள்ளிச்செடிகள் பற்றிய விளக்கங்கள் கொண்ட பேப்பர் வைக்கப்பட்டிருக்கு, செடியில் இருக்கும் முட்கள் விஷத்தன்மை கொண்டது, க்யூரியாஸிட்டியில் செடிகளை தொடாமல் ஹைக்கிங் ட்ரெய்லில் மட்டும் நடந்து சுற்றிப்பாருங்கள் என்று எச்சரிக்கைப் பலகையும் வைச்சிருக்காங்க. இந்த முட்கள் நம் உடலில் குத்திவிட்டால் எடுப்பது மிகவும் சிரமம் என்று அங்கு வந்திருந்த அமெரிக்கர் ஒருவரும் எச்சரித்தார். கூகுளில் கிடைத்த சோயா கள்ளித் தோட்ட வீடியோவை இணைத்திருக்கேன்,பாருங்க..
சூரியன் இறங்க இறங்க குளிரும் ஏறத்துவங்கியது.கள்ளித்தோட்டத்தினுள் கொஞ்சம் சுற்றிப் பார்த்துவிட்டு காரில் ஏறி " Key's View Point"விரைந்தோம்..சிறு குன்றின் மேல் இருக்கும் இந்த வியூ பாயின்ட் சன்ஸெட்-டிற்கு மிகவும் பிரபலம்!
நாலரை மணிக்கு நாங்கள் போய்ச் சேர்வதற்குள் கதிரவன் மேற்கு வானில் இறங்கி பஸிஃபிக் கடலில் மூழ்கியிருந்தான். செவ்வானமும், மலைக்குன்றுகளும் கண்களுக்கு விருந்து கொடுத்தாலும் குளிர்காற்று காருக்குப் போ என்று துரத்தியது. அந்த அழகிய காட்சியை முடிந்த அளவு கேமராவில் க்ளிக்கிவிட்டு குடுகுடுன்னு காருக்கு ஓடிவந்து ஹீட்டரை ஹை-ல போட்டுகிட்டு கிளம்பினோம். அன்று தேங்க்ஸ்கிவிங் என்பதால் பெரும்பாலான அமெரிக்கக் கடைகள் மூடப்பட்டிருக்க, திறந்திருந்த ஒரு பஞ்சாபி உணவகத்தில் டின்னரை முடித்துக்கொண்டு வீடு வந்து சேரும்போது இரவாகியிருந்தது.
பார்க் பற்றி மேலதிகத் தகவல்கள் தேவைப்பட்டால் ஆங்காங்கே இணைப்புகள் கொடுத்திருக்கேன்..அவற்றை க்ளிக்கிப் பாருங்க. ஜோஷ்வா ட்ரீ நேஷனல் பார்க்கில் இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கு..வருங்காலத்தில் மறுபடியும் போனால் இந்தப் பதிவைத் தொடர்கிறேன். பொறுமையா இந்தக் கள்ளிக்காட்டு இதிகாசத்தை(!!??!!) படித்தமைக்கு நன்றி!
karrrrrrrrrrr அங்கின பதிவுக்கு கஸ்டப்பட்டு பின்னூட்டம் போட்டுக் கை எடுக்கேல்லை இங்கின புத்துத்தலைப்பு.... ஊர்கோலமாம் என்னையும் மகி என்னையும் கூட்டிப்போங்கோ எங்க நாசாவுக்கோ? நில்லுங்க படிச்சிட்டு வாறேன்ன்ன்ன்
ReplyDelete//வழியில் டென்ட் அடித்து,///
ReplyDeleteஹா..ஹா...ஹா... அவசரத்தில செண்ட்(பேர்பியூம்) எனப் படிச்சு.... இதை எதுக்கு எழுதுறா எனக் குழம்பிட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))
உந்த எலுமிச்சை சாதமும் தக்காளிச் சாதமும் எனக்கு வேணும் அவ்வ்வ்வ்வ்வ்:)).
ReplyDeleteநாங்கள் வீட்டில் சாதம் செய்வதே இல்லை...இல்லை...இல்லை.... ஆருக்கும் பிடிக்காது.
எப்பவாவது ஆசைக்கு செய்து அனைத்தையும் நானே அதுவும் உடனேயே சாப்பிட்டுவிடுவேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))
//பொறுமையா இந்தக் கள்ளிக்காட்டு இதிகாசத்தை(!!??!!) படித்தமைக்கு நன்றி.///
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வெறும் நன்றி மட்டும்தானோ? ஸ்ரோபெரி ஸ்மூத்தி மேபிள் ஸ்ரப் விட்டுக் குடுங்கோ:))
படங்கள் சூப்பர். அதிலும் கள்ளிமரமும் பூக்களும் மிக அழகு. நான் கள்ளிப்பூக்கள் கண்டதில்லை....
ReplyDeleteஆனா உள்ளே நடக்க பயமில்லையோ? குத்தினால் விஷமென்பார்களே?.
ஐ இம்முறை அஞ்சுவுக்கும் சிவாவுக்கும் சான்ஷே இல்லை நான் முந்திட்டேன்.... ஓக்கே குட்நைட் சீயா மீயா.
ReplyDeleteVery nice description of JNP, Mahi. I haven't been there yet.
ReplyDeletemeeeeeeeeeeeeeeeee the firstu...baby athira second..
ReplyDeleteநானும் போவோமா ஊர்கோலம் என்றவுடன் ஓடும் பொன்னி ஆறு எல்லாம் இருக்கும்னு நினைச்சேன்,பாறையும் கள்ளிச்செடியும்,உங்க சாப்பாடு பகிர்வும் சூப்பர்.
ReplyDeleteஅதிரா,பப்ளிஷ் பண்ணப்பண்ண சுடச்சுட பின்னூட்டங்கள் தந்தமைக்கு நன்றி! :)
ReplyDelete/அவசரத்தில செண்ட்(பேர்பியூம்) எனப் படிச்சு.../ஹாஹாஹா!:)))))
/நாங்கள் வீட்டில் சாதம் செய்வதே இல்லை...இல்லை...இல்லை.... /அப்ப????என்னதான் சாப்புடுவீங்க? ரொட்டியும் பன்னுமேவா?? அவ்வ்வ்வ்வ்!;))))
கள்ளிக்காட்டின் உள்ளே நாம் நடந்து செல்ல ட்ரெய்ல் இருக்கு அதிரா,அதில் மட்டுமே சென்று பார்க்கலாம். காட்டுக்குள்ள போனா முள்ளு குத்திடும்.விஷமேதான்!
நிறைய கருத்து சொல்லி களைப்பாயிட்டீங்க..வெல்லம் போட்ட(!)ஸ்ராபெரி ஸ்மூத்தி(தான்) இருக்குது,வசதி எப்புடி? அஜீஸ் பண்ணிக் குடிச்சிடறீங்களா? ;)
நன்றி அதிரா!
**
மஹேஸ் அக்கா,ஸ்ப்ரிங் ஸீஸன்லே போய்ப்பாருங்க,வைல்ட் ஃப்ளவர்ஸ்,காக்டஸ் ஃப்ளவர்ஸ் எல்லாம் பார்க்கலாமாம்!:)
நன்றி!
**
சிவா,நன்றி சிவா!
**
ஆசியா அக்கா, ஓடும் பொன்னி ஆறும் இல்ல,அது கானம் பாடுவதும் இல்லை! ;) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா!
ரொம்ப நல்ல இருந்தது கள்ளிக்காட்டு இதிகாசம் .... தகுந்த படங்கள், லின்க்குகள், நாவின் சுவையுடன் சேர்த்து நன்றாக விவரித்து இருக்கிறீர்கள் மகி .. சூப்பர்.............யு. ஸ் பக்கம் வராதவர்களுக்கு உங்கள் பதிவு மிகவும் அருமை...மிக பெரிய தாக்கத்தை ஏற்படுதித்து னே சொல்லலாம்....
ReplyDeletekarrrrrrrrrrrrrrrrrr எனக்கு நேற்று ஸ்ரோபரி ஸ்மூத்தி படம் போட்டு பிறகேன் டிலீட் பண்ணினனீங்க மகி... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்கு இப்பூடி ஆசை காட்டி மோசம் செய்வோரைப் புய்க்காது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எதுக்கு டிலீட் பண்ணினனீங்க??????.
ReplyDeleteநான் சொன்னது தயிர்ச்சாதம்... புளிச் சாதம்... லெமன் சாதம்... இந்த வகையை. நாங்க வைட் ரைஸ்..தான்:))).
நோ.... நோ... சிவாவுக்கு ஆயாதான் இம்முறை:))
/படம் போட்டு பிறகேன் டிலீட் பண்ணினனீங்க /அது...லின்க் மட்டுந்தேன் வந்திருந்தது,படம் வரல! HTML எல்லாம் எடிட் பண்ணியும் படம் வரல.சலிச்சுப்போய் டெலீட் பண்ணிட்டேன் அதிரா! :) ஆசை காட்டி மோசம் எல்லாம் பண்ணல..அவ்வ்வ்வ்வ்வ்!
ReplyDeleteஓ...வைட்:) ரைஸைச் சொன்னீங்களா? சரி,சரி! எனக்கு இப்புடி வகைவகை சாதத்தைவிடவும் வெள்ளை சோறு-ப்ளெய்ன் பருப்பு தான் புய்க்கும்! ;)) ட்ரிப்புங்கறதால இதுதான் வசதி!
**
வித்யா,ரொம்ப சந்தோஷங்க உங்க கருத்தைப் பார்த்து! மணிக்கணக்கா உட்கார்ந்து எழுதினதுக்கு தாக்கம் இருக்குன்னு சந்தோஷமா இருக்குது. தேங்க்ஸ் எ லாட்! :)
/நோ.... நோ... சிவாவுக்கு ஆயாதான் இம்முறை:)) / கி கிக் கிக்க்கீஈஈஈ! நோ கமென்ட்ஸ்யா! ;)))))))))))
ReplyDeleteஊர்வலம் அருமை,படங்களும் அருமை
ReplyDeleteஎனது பின்னூட்டத்தைக்காணோமே?
ReplyDeleteகள்ளிக்காட்டு இதிகாசமா????
ReplyDeleteபைன் கோன் மழை வரும் போது மூடிக் கொள்ளும் இயல்புடையது. எங்க தோட்டத்தில் பைன் மரம் இருக்கு. முன்பு பைன் கோன்கள் சேர்ப்பதுண்டு இப்ப இல்லை.
Thanks for sharing the pics with us Mahi , wonderful trip!
ReplyDeleteகொஞ்சமா புல்வெளி, அங்கங்கங்கே ஷேர், ஊஞ்சல்-இதான் எங்கூரு பார்க். அதுனால ஹோஸ்வா பார்க்னு நீங்க சொன்னத நம்பி ஏமாற நா என்ன சின்னபுள்ளையா ஹி...ஹி...ஹி..
ReplyDeleteநல்லதொரு பயணக்குறிப்பு வாழ்த்துகள்
ReplyDelete@சினேகிதி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ReplyDelete**
@ஸாதிகா அக்கா,பின்னூட்டத்தைக் காணோமா? நான் கமென்ட் மாடரேஷன் எதுவும் போடலையே..என்னாச்சுன்னு தெரியலையே?!! உங்க கமென்ட் எப்பவுமே முதல்ல வந்துருமே,இன்னும் காணோமேன்னு நினைச்சேன்.
**
/கள்ளிக்காட்டு இதிகாசமா????/ வானதி,சும்மா ஒரு 'இது'க்கு போட்டா.....கரெக்ட்டா அதையே புடிச்சுட்டீங்களே! அவ்வ்வ்வ்.....
இங்கும் பைன் மரங்கள் பல இருக்கு..ஆனா இந்த உபயோகங்கள் எல்லாம் பார்க்ல இருந்த போர்டு பார்த்துதான் தெரிந்தது.
/முன்பு பைன் கோன்கள் சேர்ப்பதுண்டு இப்ப இல்லை./ பைன்கோனை சேர்தீங்களா??எதுக்கு?? எதாவது செய்தீங்களா கோன் வைச்சு??
நன்றி வானதி!
**
ராஜி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
**
/அதுனால ஹோஸ்வா பார்க்னு நீங்க சொன்னத நம்பி ஏமாற நா என்ன சின்னபுள்ளையா /அதான,ஆமினாப்பாட்டிய;):P ஆரும் ஏமாத்த முடியுமா??ஹிஹிஹிஹி!
நீங்க சொன்ன பார்க் எங்க வீட்டுப்பக்கத்தில இருக்கு. யு.எஸ்.ல காட்டைதான் நேஷனல் பார்க்குன்னு சொல்றாங்க.:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆமினா.
கள்ளிக்காட்டு பயணம் அருமை. யாரையும் முன்னாடி கூப்பிடறதில்லே.கூடவேஅழைத்துப்போன
ReplyDeleteமாதிரி உணர்வுகளை நிறையக் கொட்டிக் கொடுத்து விடுகிறாய். கள்ளியையும், சப்பாத்தியையும் நாம் மறப்போமா. சப்பாத்தி சாப்பாட்டுலேயும்,கள்ளி கெட்டிக்காரத்தனமாய் காரியம் செய்பவர்களைச் செல்லமாயும் சொல்வோமல்லவா. படங்களெல்லாம்
எப்படி இவ்வளவு துல்லியமாக இருக்கு. கள்ளிப்பூ அழகோ அழகு.
மெச்ச வேண்டிய பதிவு
அழகிய சுற்றுலா! அழகிய பதிவு. நன்றி சகோ!
ReplyDelete"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"
Thanks for the posting Mahi.
ReplyDeleteennale engellam poga mudiyathu.
Photovillachum parthu santhosha padrene.
vijimma