Wednesday, April 11, 2012

மழையும், மழை நிமித்தமும்..

மழை வருமா?..
இல்லை வானில் சூல்கொண்ட கருமேகங்கள் காற்றில் கலைந்து சென்றுவிடுமா?..
மாலையில் சூழ்ந்த மேகங்கள் இரவு முழுக்க மழையாய்ப் பெய்தபின்னும், தாம் சுமந்த தண்ணீரின் தாக்கம் குறையாமல் மீண்டும் பூமியை நீராட்டத் தயாராய்...மரங்களின் பின்ணணியில் அணிவகுத்து!..
மலர்களுக்கு வண்ணம் தரும் கடவுளுக்குத்தான் எத்தனை அலாதியான ரசனை? மஞ்சள் என்ற ஒரே நிறத்தில்தான் எத்தனை வகைகள்? அடர்ந்த மஞ்சள், வெளுத்த மஞ்சள், சிவப்பும் மஞ்சளும் கலந்து ஆரஞ்சாய் ஆன மஞ்சள்! மலர்களில் வண்ணங்களைக் கலக்கும் அந்த வித்தையை ஒவ்வொரு மலரைக் காண்கையிலும் நான் வியக்கத் தவறுவதில்லை!
மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளியழகு..மலரிதழ் சுமந்த துளியும் அழகே! மழை வந்து தலைதுவட்டிப் போன பின்னர் எல்லா மலர்களும் உலர்ந்துவிட்டன, அந்த மஞ்சள் மலரைத் தவிர! [அது எந்த மலர் என்று உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையெனில், எனக்கு சரியாகப் படமெடுக்கத் தெரியவில்லை! ;) ]
~~~
வானம் என்ற காகிதத்தில்
மேகம் எனும் மையூற்றி,
காற்றென்னும் தூரிகையால்
கடவுள் தீட்டும் ஓவியங்கள்..
வானோவியங்கள்..
ஒவ்வொரு கணமும்
ஒவ்வொரு வண்ணம்,
ஒவ்வொரு காட்சி..
அத்தனை காட்சியிலும்
இயற்கையின் ஆட்சி!

14 comments:

  1. கலக்குறிங்க மகி...சூப்பராக எழுதி இருக்கின்றிங்க...படங்களும் அழகு..

    ReplyDelete
  2. Wow Mahi, kavithai mazhai pozhiyaringu, superb clicks and nalla rasanai..

    ReplyDelete
  3. படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. காட்சிகளும் அழகு. கவிதையும் அழகு.
    kbjana.blogspot.com

    ReplyDelete
  5. நான் போட்ட கமெண்ட் எங்கே மகி??

    ReplyDelete
  6. காலையிலேயே கமண்ட் போட்டேன்.மகி,படங்களும் வர்ணணையும் அருமை.

    ReplyDelete
  7. சிவா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! :) கொஞ்சம் ஓவராவே புகழறீங்களோ?? கூச்சமா இருக்கு! தேங்க்ஸ் சிவா!
    ~~
    கீதா,வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க!
    ~~
    ஹேமா,:) தேங்க்ஸ்ங்க!
    ~~
    லஷ்மிம்மா,கருத்து மற்றும் வாழ்த்துக்கு நன்றிம்மா!
    ~~
    கே.பி.ஜனா,முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சிங்க.நன்றி!
    ~~
    அனு,தேங்க்ஸ் அனு!
    ~~
    /நான் போட்ட கமெண்ட் எங்கே மகி??/தெரியலையே ஸாதிகாக்கா? நான் ஆட்டோ பப்ளிஷ்-தானே போட்டிருக்கேன்,மாடரேஷன் இல்லையே?! நீங்க முதலில் போட்ட கமென்ட் எனக்கும் வரவில்லையே...ப்ளாகர் உங்ககிட்ட வம்பு பண்ணிருக்குதுபோல! ;)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸாதிகாக்கா!
    ~~
    அப்பாவி,ஆமாம்,சூப்பரா இருக்கும்,எப்ப எங்கூருக்கு வாறீங்க? ;)
    தேங்க்ஸ் புவனா!
    ~~

    ReplyDelete
  8. கவிதை & படங்கள் சூப்பர் மகி. பார்த்து பி சி ஸ்ரீராம் & வைரமுத்து க்கு பத்தி உங்கள தமிழ் சினிமாவில கூப்புட போறாங்க :))

    ReplyDelete
  9. நல்ல ரசனையுள்ள பெண்மணி நீங்கள் என்று நான் நினைக்கிறன்....உங்கள் புகைப்படங்கள் கண்ணனுக்கு குளிர்ச்சியாக இருந்தன... எனக்கு உங்களின் இப்பதிவு மிகவும் பிடித்தது....

    ReplyDelete
  10. /பார்த்து பி சி ஸ்ரீராம் & வைரமுத்து க்கு பத்தி உங்கள தமிழ் சினிமாவில கூப்புட போறாங்க :))/ அப்படின்றீங்க கிரிஜா?! ஹ்ம்ம்..மேனேஜர் வேலைக்கு ஆள் தேடவேணாம்,எங்காத்துக்காரரே பாத்துக்குவார்.;) யு.கே.சைடை நீங்க கவனிச்சுக்குங்க,சரியா? ஹாஹ்ஹாஹா!

    வித்யா,என்ன சொல்லறது போங்க..சந்தோஷத்தில வார்த்தை வரமாட்டீங்குதுங்க உங்க கமென்ட்டையும் கிரிஜா கமென்ட்டையும் பார்த்து! ரொம்ப சந்தோஷம் வித்யா!

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க கிரிஜா & வித்யா!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails