Tuesday, April 17, 2012

முட்டை குருமா

தேவையான பொருட்கள்
வெங்காயம்-1
தக்காளி-2
முட்டை-3
பச்சைமிளகாய்- 3(அ)4
பூண்டு-4 பற்கள்
கொத்துமல்லி இலை-சிறிது
மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்
கரம் மசாலா-1டீஸ்பூன்
உப்பு

அரைக்க
தேங்காய் - 3டேபிள்ஸ்பூன்
முந்திரி-4
சோம்பு-1டீஸ்பூன்

செய்முறை
இரண்டு முட்டைகளை தேவையான உப்பு சேர்த்து வேகவைத்து தோலுரித்து வைக்கவும்.
தேங்காய்-முந்திரி-சோம்பை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துவைக்கவும்.
வெங்காயம்,தக்காளி, பூண்டை நீளவாக்கில் நறுக்கவும்.
பச்சைமிளகாயை ஒடித்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவிட்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும். பூண்டு,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளியைச் சேர்த்து குழையும்வரை வதக்கவும்.
மிளகாய்த்தூள், கரம்மசாலா, உப்பு (வேகவைத்த முட்டையில் உப்பு இருக்கிறது,கவனம்!) சேர்த்து மசாலா வாசம் போகும்வரை கிளறவும்.
அரைத்த விழுது சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
குருமா நன்றாக கொதித்ததும் வெந்த முட்டைகளை கத்தியால் அங்கங்கே கீறிவிட்டு குருமாவில் சேர்க்கவும்.
சில நிமிடங்கள் கழித்து இன்னொரு முட்டையை உடைத்து குருமாவில் ஊற்றி, மெதுவாக கலக்கி விடவும்.
தீயைக் குறைத்து 4-5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, மல்லித்தழை தூவி இறக்கவும்.

சுவையான முட்டைகுருமா ரெடி! ஆப்பம்-பரோட்டா-சப்பாத்தி-இட்லி-தோசை-இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.

ஆப்பம் குருமா உடன் தேங்காய் சட்னியும் சேர்ந்துகொண்டால் அமர்க்களமான பொருத்தம்தான்! நீங்களும் செய்து ருசித்துப் பாருங்க! :)))))
~~~
ஆப்பத்துக்கு சைட் டிஷ் தேடியபொழுது இந்த மலையாள வீடியோ சிக்கியது. ஏஷியா நெட்-டில் வரும் அடுக்களை-பகுதியில் செய்து காட்டிய முட்டைகுருமாவை வழக்கம் போல, என் வசதிப்படி மாற்றி செய்தேன். உங்களுக்கு வீடியோ குக்கிங் பார்க்க விருப்பமும் நேரமும் இருந்தால் யு ட்யூபில் போய்த் தேடாமல் இங்கேயே.. :))குருமா ரெசிப்பியை விட, குருமா செய்யும் பெண்மணியின் மலையாளம் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்தது! வெகுநாட்கள் கழித்து இவ்வளவு மலையாளத்தை பார்த்ததால் இருக்கலாம். பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு நீ...ள....மா....ன வீடியோ! கொஞ்ச நேரத்தில் ஃபாஸ்ட் பார்வர்ட் பண்ணிட்டேன், அது வேறகதை! ;)

"நல்லது போலே" என்ற பதத்தைப் பலப்பலப்பல முறை உபயோகித்தாங்க, நானும் நல்லது போலே ;) அரைச்சு, கரைச்சு, குருமா ஆக்கிட்டேன்..தேங்க்ஸ் டு அடுக்களை! ;)))))
ஆப்பம்-முட்டை குருமா & தேங்காய் சட்னி
[யாரது..எதுக்கு இவ்ளோ படம்னு கேக்குறது?? எடுத்த போட்டோவை எல்லாம் இங்கே போஸ்ட் பண்ணாம என்ன பண்ணறதாம்???;)))))) ]

18 comments:

 1. Aapam & egg kurma, super combination..

  ReplyDelete
 2. ஆப்பம் எக் குருமா நல்ல காம்பினேஷன் போல.கூட சட்னி வேறு.வெள்ளை வெளேர் ஆப்பம். நல்ல பகிர்வு.

  ReplyDelete
 3. மகி,
  ஆப்பம்&முட்டை குருமா நல்லாருக்கு. ஒரு முட்டை குழம்பில் ஒளிந்திருப்பது தெரியாமல் அது எங்கே என்று தேடிக்கொண்டே படித்தேன்.

  ReplyDelete
 4. ரொம்ப நல்லா இருக்கின்றது மகி...கலக்குறிங்க...

  முட்டை வேகவைக்கும் பொழுது தண்ணீருடன் உப்பு 1 மேஜை கரண்டி சேர்த்து எப்பொழுதும் நானும் வேகவைப்பேன்...அதனால் முட்டையில் உப்பு சேருமா...இது நாள் வரை எனக்கு தெரியாது.... நன்றி...

  ReplyDelete
 5. ஒரு முட்டையை உடைத்து குழம்பில் சேர்த்து,ரெண்டு முட்டையை அவித்து குழம்பில் சேர்த்து இதுவரை செய்ததில்லை.வித்தியாசமா நல்லாத்தான் இருக்கு.இந்த குழம்பு ருசிக்கு ஆப்பம் காலியாச்சா..இல்ல ஆப்ப ருசிக்கு குழம்பு காலியாச்சா..:)குழம்பும் சூப்பர்..வெள்ளையா மிருதுவான ஆப்பமும் சூப்பர்..!

  ReplyDelete
 6. Supera iruku, Naan ippadi muttai kurma idiyappathukum seivathu undu.

  ReplyDelete
 7. முட்டை குருமா சூப்பர்.ஆப்பத்தை பட்டு பட்டாக சுட்டு இருக்கீங்க மகி.முட்டைக்குருமா செய்து காட்டி கூடவே பரோட்டாவையும் காட்டி இருக்கணும்.நீங்க முட்டை ஆப்பத்தை காட்டி இருக்கீங்க.

  அடுத்து ஆப்ப ரெஸிப்பி ஒகேவா?

  ReplyDelete
 8. நல்ல ரெசிப்பி. நான் முட்டை சாப்பிடுவது குறைவு. பிள்ளைகள், ஹஸ்ஸூக்கு செய்து குடுக்கப் போறேன்.
  முட்டைக்கு உப்பு சேர்த்து அவிப்பதன் காரணம்- முட்டையின் ஓடு ஈஸியாக, முட்டையை டாமேஜ் பண்ணாமல் கழற்றவே. உப்பு சேர்க்காமல் அவித்தால் ஓடு முட்டையை ஒரு வழி செய்துவிடும்.

  ReplyDelete
 9. wow delicious recipe,luks so tempitng...wonderful combo.

  ReplyDelete
 10. wow very yummy yummy kurma dear....

  ReplyDelete
 11. குருமா சூப்பரா இருக்கு..ஆப்பத்திற்கு தே.சட்னி நல்லாயிருக்குமா மகி??

  ReplyDelete
 12. முட்டையை உடைத்து ஊற்றுவது செய்ததில்லை. இப்படி கீறிப் போட்டதும் இல்லை. குட்டிக் குறிப்பாக இருப்பதால்... இப்பவே முட்டை குர்மா சமைக்கப் போகிறேன். ;)

  ReplyDelete
 13. முட்டை அவிக்கிறது பற்றி வான்ஸ் கதைக்க... எனக்கு 'அங்க' நடந்ததெல்லாம் நினைவுக்கு வருது. ;)))

  ReplyDelete
 14. video paarthean mahi

  nallathu pole nu sollite erukanga

  muttai kuruma and aappam super.......

  ReplyDelete
 15. ஹேமா,ஆசியாக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
  ~~
  சித்ராக்கா,//ஒரு முட்டை குழம்பில் ஒளிந்திருப்பது தெரியாமல்// :)) கண்டுபுடிச்சிட்டீங்கள்ல? இப்படி டைரக்ட்டா உடைச்சு ஊத்தினா குருமாவும் கெட்டியாகும், டேஸ்டும் நல்லா இருக்கும்,செய்துபாருங்க!:) வருகைக்கும்கருத்துக்கும் நன்றி!
  ~~
  /தண்ணீருடன் உப்பு 1 மேஜை கரண்டி சேர்த்து எப்பொழுதும் நானும் வேகவைப்பேன்.../நான் ஒரு கால் டீஸ்பூன் உப்புதான் சேர்ப்பேன் கீதா! வேகவைத்த முட்டை ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு செய்கையில் நன்றாகவே கவனித்திருக்கேன்,வெந்த முட்டையில் உப்புச் சுவை கட்டாயம் தெரியும்.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  ~~
  ராதாராணி,/குழம்பு ருசிக்கு ஆப்பம் காலியாச்சா..இல்ல ஆப்ப ருசிக்கு குழம்பு காலியாச்சா..:)/ஆஹா,நல்ல கேள்விங்க! கோழியிலிருந்து முட்டை வந்துச்சா,முட்டையிலிருந்து கோழி வந்துச்சா கதை போல இருக்கு!:) எப்படின்னாலும் சமைச்ச ஐட்டங்கள் எல்லாமும் காலியானாதானே நமக்கு சந்தோஷம்?!
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க!
  ~~
  சுமி,எங்க வீட்டில இடியாப்பம் ப்ளெய்னா செய்தா அவ்வளவா காலியாகாது,அதனால் இந்த குருமா பெரும்பாலும் சப்பாத்தி-சாதத்துக்குதான் செய்வேன்,இந்த முறை ஆப்பத்துக்கு!
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க!
  ~~
  /அடுத்து ஆப்ப ரெஸிப்பி ஒகேவா?/ ஸாதிகாக்கா,ஏற்கனவே ரெஸிப்பி போட்டிருக்கேனே..மறந்துட்டீங்கனு நினைக்கிறேன்! ;)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!
  ~~
  வானதி, முட்டைக்கு உப்பு சேர்ப்பதோட காரணத்தை புட்டுப் புட்டுவைச்சிட்டீங்க,நன்றி! :)

  உப்பில்லாமல் முட்டை வேகவைத்தா சுவை குறைவது போல தோன்றும்,ஸோ எப்பவுமே கொஞ்சம் உப்பு போட்டுதான் வேகவைப்பேன். நீங்க முட்டை குருமா செய்திட்டீங்களா?? :)
  நன்றி வானதி!
  ~~
  ப்ரேமா, அனானி1,அகிலா,மேனகா வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
  @மேனகா, தேங்காய்ச்சட்னி-ஆப்பம் காம்பினேஷன் நல்லா இருக்கும்,ட்ரை பண்ணிப் பாருங்க அடுத்த முறை!
  ~~
  /வான்ஸ் கதைக்க... எனக்கு 'அங்க' நடந்ததெல்லாம் நினைவுக்கு வருது. ;)))/ நினைவு வந்ததுசரி, நீங்க மட்டும் சிரிச்சுட்டுப் போனா எப்புடி..என்ன நடந்ததுன்னு சொல்லிட்டுப் போயிருந்தா நாங்களும் சிரிச்சிருப்போமில்ல இமா? ;)
  மு.குருமா செய்து படத்துடன் பதிவு போட்டமைக்கு மிக்க நன்றி!நன்றி!
  ~~
  அனானி2, வருகைக்கும் கருத்துக்கும் வீடியோவை ரசித்தமைக்கும் நன்றிங்க!
  ~~

  ReplyDelete
 16. http://www.arusuvai.com/tamil/node/13801 ;)

  ReplyDelete
 17. This is a regular in our house since I eat only eggs and not meat. So egg kuruma is a favourite side dish with chappaththis. We eat lot of chappaaththis. Should make aappam soon!! Tempting looking at your photos. I boil eggs with salt as well Mahi if I forget same story like Vaans:))

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails