Monday, April 9, 2012

தால் மக்னி / Dal Makhni

தேவையான பொருட்கள்
முழு உளுந்து(தோலுடன்)-1/4கப்
கடலைப்பருப்பு-1டேபிள்ஸ்பூன்
ப்ளாக் ஐட் பீஸ்(Black eyed peas) -2 டேபிள்ஸ்பூன்
தக்காளி-4
சீரகம்-1டீஸ்பூன்
தால் மக்னி மசாலா-1டேபிள்ஸ்பூன்
(fat free)எவாப்பரேடட் மில்க் -1/4கப்
எண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
நெய்-1டீஸ்பூன்
உப்பு

செய்முறை
பருப்புகளை அலசி 8 மணி நேரம் ஊறவிடவும்.
குக்கரில் 5 கப் தண்ணீர் கொதிக்கவிட்டு பருப்புகளைச் சேர்த்து நன்றாக வேகவிடவும்.
அதிகப்படியான நீரை வடித்து எடுத்துவைத்துவிட்டு பருப்புகளை மசித்துவைக்கவும்.

தக்காளிகளை மிக்ஸியில் அரைத்து எடுத்துவைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவிட்டு சீரகம் தாளிக்கவும்.
அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
தக்காளி நன்றாக சுண்டியதும் பருப்பு வேகவைத்த தண்ணீர், தால் மக்னி மசாலா ஒரு டேபிள்ஸ்பூன், தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
இந்தக் கலவை நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் மசித்த பருப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும்.
தீயைக் குறைத்துக்கொண்டு கால் கப் எவாப்பரேடட் மில்க், ஒரு டீஸ்பூன் நெய் சேர்க்கவும்.
2-3 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி இலை தூவி தால் மக்னி-யை அடுப்பிலிருந்து இறக்கவும்.

சூடான சப்பாத்தி/ ஜீரா ரைஸ்/ புலாவ் வகைகளுடன் பரிமாற ஏற்ற சைட் டிஷ் இது. பொதுவாக உளுந்துடன் கிட்னி பீன்ஸ்தான் சேர்ப்பார்கள், என்னிடம் கிட்னி பீன்ஸ்/ராஜ்மா பீன்ஸ் இல்லாதாதால் இந்த black eyed peas சேர்த்திருக்கிறேன். இந்த ரெசிப்பி, MDH-தால் மக்னி மசாலா பேக்கட்டில் இருந்தது. விரும்பினால் எண்ணெய்க்கு பதிலாக வெண்ணெய், எவாப்பரேடட் மில்க்கிற்கு பதிலாக ப்ரெஷ் க்ரீம், ஒரு டீஸ்பூனிற்கு பதிலாக ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்க்கலாம். ;)
ரிச்சாக செய்யும் முறைதான் பேக்கட்டில் சொல்லிருக்காங்க, ஆனா நம்ம வசதிப்படி மாத்தி செய்வோம் என்று இப்படி செய்துவிட்டேன். தால் மக்னியை பரிமாறும்போது மேலாக கொஞ்சம் எவாப்பரேடட் மில்க்-ஐ ஊற்றி பரிமாறவும்.
~~~
தால் மக்னி என்றால் என் மனதில் உடனே ஒரு கொசுவர்த்தி சுத்த ஆரம்பிக்கும். இந்த படம் எங்க ஹனிமூன் ட்ரிப்பில் எடுத்தது. அப்பல்லாம் நார்த் இண்டியன் உணவுன்னாலே தலை தெறிக்க ஓடுவேன். 5 நாள் டிரிப்பில் வட இந்திய உணவு வகைகளை சாப்பிடப் பிடிக்காமல் நான் பட்ட பாடு...அதனால போகும் இடமெல்லாம் சவுத் இண்டியன் ஹோட்டல்கள் தேடி என்னவர் பட்ட பாடு!!! :))))) இந்த படத்தில கூட பாருங்க..தால் மக்னிய விட்டுட்டு தயிர்தான் சாப்பிடறேன். ஹிஹி! அப்ப இருந்து இன்று வரை தால் மக்னி-ன்னா எனக்கென்னமோ அவ்வளவா விருப்பம் கிடையாது. ஆனா என்னவர் அதுக்கு அப்படியே ஆப்போஸிட்!! தால் மக்னி ரொம்பப் புடிக்கும் அவருக்கு. அதனால் வீட்டில் செய்து பார்ப்போமே என்று முயற்சித்தது இது. பருப்பு வாங்கி மாதக்கணக்கா அப்படியே இருந்தது. மசாலா வாங்கினாலாவது(!) செய்வேனோ என்ற நப்பாசையில் அதையும் வாங்கி பலநாட்கள் கழித்து வெற்றீகரமா செய்துட்டேன். நீங்களும் செய்து பாருங்க! :)))

16 comments:

  1. கொசுவர்த்தி சுத்தோ சுத்துன்னு சுத்துதூஊஊஉ ;))

    மருதாணியை முழுசா காட்டி இருக்கலாம்.

    அதுசரி... அப்பவே ப்ளாக்ல போடணும் என்று ஃபோட்டோ எடுத்து இருக்கீங்க! அட!

    //ஒரு டீஸ்பூனிற்கு பதிலாக ஒரு டேபிள்ஸ்பூன் நெய்// ம். ;) புரியல உங்களுக்கு. ஸ்பூனைப் போடச் சொல்லல அவங்க.

    ReplyDelete
  2. Even I am not a big fan of this dish mainly because of the urad dal, I reduce it while making this..

    ReplyDelete
  3. நல்ல சத்தான சமையல்.எனக்கு பிடிச்சிருக்கு.நீங்க தயிர் சாப்பிடுங்க,நாங்க இதை சாப்பிடறோம்.

    ReplyDelete
  4. Nicely done mahi, ennadhan varietya northindian food sapitalum namma thayir sadam dhan super

    ReplyDelete
  5. super aa irukku....soo yummm...

    ReplyDelete
  6. Mahi, recipe and tortoise very nice!! As I am suffering from ...not fever but lots of work I am unable to write lot of comments and kummi. Will be back!!

    ReplyDelete
  7. மகி, படங்கள், கொசுவத்தி நல்லா இருக்கு. எனக்கும் இந்த டிஷ் பிடிப்பதில்லை. ரெஸ்டாரன்ட் போனால் என் ஆ.காரர் விரும்பி சாப்பிடுவார். நான் திரும்பி கூட பார்க்கமாட்டேன்.
    கிரிசா என்னமோ பள்ளிக்கூட வாத்தியாருக்கு லீவ் கடுதாசி போல எழுதி இருக்கிறாங்க. வேலையை முடிச்சுட்டு வாங்க அம்மினி.

    ReplyDelete
  8. Eesta receta la voy a leer varias veces me gusta quiero aprender rápido el idioma me encanta,abrazos hugs,hugs.

    ReplyDelete
  9. சப்பாத்தி இன் ஆல் ஷேப்ஸ்!! எனி ஸ்பெஷல் ரீசன்!!

    ReplyDelete
  10. இமா,கொசுவர்த்தி சுத்தி, ஹனிமூன் போட்டோவையே தேடிப் புடிச்சு போடவைச்சிருச்சுங்க! ;) அப்ப இந்த பேருள்ள உணவுவகைகள் எல்லாம் எனக்கு ரொம்பப் புதுசு. என் திண்டாட்டம், இன்னொருத்தருக்கு கொண்டாட்டம்..படமா எடுத்துவைச்சுகிட்டார்! அது இப்ப உபயோகமாகியிருக்கு.

    மெஹந்தி..ஹ்ம்,தேடிப்பார்க்கிறேன்,இருந்தா அனுப்புறேன்.

    //ஸ்பூனைப் போடச் சொல்லல அவங்க.//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! சரீங்கோ! அடுத்தவாட்டி சரியா புரிஞ்சிக்கிறேன்! ;)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இமா!
    ~~
    ஹேமா,உங்களை மாதிரி ரீஸன் சொல்லத் தெரிலை எனக்கு,ஆனா அவ்வளவாப் புடிக்கலை! :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    siva sankar said...

    :)/////////// =) =)
    ~~
    ஆசியாக்கா,அப்படியா சொல்றீங்க?? தயிர் சாப்பிட்டதெல்லாம் அந்தக்காலம்..இப்பல்லாம் ஒரு நேரம்தானேன்னு அஜீஸ் பண்ணி, தால்மக்னி நானும் சாப்பிடுவேனே! ;)
    நன்றி!
    ~~
    ஜெயஸ்ரீ,நீங்க சொல்றது சரிதாங்க. ஆனா அந்த ட்ரிப்பில் தயிர் சாதம் கூட கிடையாது! வெறும் தயிர்தான்! :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    லாவண்யா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    கிரிஜா,நன்றி,மீண்டும் வருக! :)
    ~~
    அனு,நன்றீங்க!
    ~~
    ப்ரியா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    //எனக்கும் இந்த டிஷ் பிடிப்பதில்லை. ரெஸ்டாரன்ட் போனால் என் ஆ.காரர் விரும்பி சாப்பிடுவார்.//ஆஹா! அதே கதை தான் எங்க வீட்டிலயும் வானதி! சாப்பிடும்போதெல்லாம், "இதை ஏன் நீ வீட்டில் செய்வதேஏஏஏஏ இல்லை?"ன்னு ஒரு கேள்வியும் தவறாது! ;)

    //கிரிசா என்னமோ பள்ளிக்கூட வாத்தியாருக்கு லீவ் கடுதாசி போல எழுதி இருக்கிறாங்க. //பையனுக்கு லீவ் லெட்டர் எழுத ட்ரெயினிங் குடுத்துட்டு இருக்கப்ப இங்கயும் வந்து கமென்ட்டிருப்பாங்கனு நினைக்கிறேன். ஹாஹா!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி!
    ~~
    Rosita,thanks for your sweet words! Unfortunately there is no translation from my language to English. Will try to post the recipe in English.
    Thanks again!
    ~~
    /சப்பாத்தி இன் ஆல் ஷேப்ஸ்!!/இல்லையே, ஒரே சப்பாத்திதான், பல angle-ல இருக்கு இமா, உந்த கண்ணாடிய நல்லாக் கழுவித் துடைச்சுப்போட்டு பாருங்கோ! ;))))
    thanks!
    ~~
    அப்பாவி, நான் அந்தப் படம் முழுசா பார்க்கலை..ஒரு ஒன் அவர் பார்த்திருப்பேன், அதனால் நீ சொல்வது என்னன்னு கெஸ் பண்ணமுடீல! தேங்க்ஸ்!
    ~~

    ReplyDelete
  11. ////கிரிசா என்னமோ பள்ளிக்கூட வாத்தியாருக்கு லீவ் கடுதாசி போல எழுதி இருக்கிறாங்க. //பையனுக்கு லீவ் லெட்டர் எழுத ட்ரெயினிங் குடுத்துட்டு இருக்கப்ப இங்கயும் வந்து கமென்ட்டிருப்பாங்கனு நினைக்கிறேன். ஹாஹா! //


    ரெண்டு பேருக்கும் என்கிட்டே இருந்த பயம்;)) போயிடிச்சு போல இருக்கு. ஊருல இருந்து மை நீஸ் அண்ட் கணவர் திடீருன்னு வேலை கிடைத்து வந்து இருக்காங்க. சோ. சாரி நானே நெட் பக்கம் போக முடியலேன்னு வருத்தத்துல இருக்கேன். அடுத்த வாரம் வேலைக்கு போய் தான் கும்மி கண்டின்யு பண்ணனும் :))

    ReplyDelete
  12. //கண்ணாடிய நல்லாக் கழுவித் துடைச்சு// ம்... 'முக்கியமான வேலை எதையோ மறக்கிறீங்கள் இமா.' என்று உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே.. இருக்கும். காரில ஏறி மூக்கில மாட்டினதுக்குப் பிறகுதான் நினைவு வரும் எப்பவும். நினைவுபடுத்தினதுக்கு நன்றீ.. ;D)))

    அட! கிரீஸ் வேலையே கும்மிதானா!!! லக்கி யூ கிரி.

    ReplyDelete
  13. ஊருல இருந்து மை நீஸ் அண்ட் கணவர் திடீருன்னு வேலை கிடைத்து வந்து இருக்காங்க. சோ. சாரி நானே நெட் பக்கம் போக முடியலேன்னு வருத்தத்துல இருக்கேன். //நீஸ் & கணவருக்கு ஒரு சின்ன விண்ணப்பம்- நல்லா கிரிசா அம்மினியை வேலை வாங்கோணும். ஓகே.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails