தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு-1/2கப்
கோதுமை மாவு /ஆட்டா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 11/4கப்
நெய்-1/2கப்
ஏலக்காய்-3
கேசரி கலர்-சிறிது
திராட்சை,முந்திரி-சிறிது
செய்முறை
குக்கரில் ஒண்ணரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து, பாசிப்பருப்பை சேர்த்து 4-5 விசில் வரும்வரை வேகவிடவும்.
ப்ரெஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து பருப்பை மசித்துக்கொள்ளவும்.
ஒரு டேபிள்ஸ்பூன் நெய் காயவைத்து முந்திரி-திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அதே கடாயில் கோதுமை மாவை சேர்த்து வாசனை வரும்வரை வறுக்கவும்.
வறுத்த மாவுடன் மசித்த பருப்பை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
அதனுடன் சர்க்கரை சேர்த்து கலக்கவும். கேசரி கலரை சேர்த்து கலக்கிவிடவும்.
ஹல்வாவுடன் கேசரி பவுடர் கலந்ததும், நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
ஹல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் முநிதிரி திராட்சை, ஏலப்பொடி சேர்த்து கிளறி, அடுப்பிலிருந்து இறக்கவும்.
குறிப்பு
- கோதுமை மாவிற்கு பதிலாக மைதாவும் உபயோகிக்கலாம்.
- ஒரு கப் பருப்புக்கு ஒரு கப் நெய் என்ற ரேஷியோ[1:1] சரியாக இருக்கும், விரும்பினால் இன்னும் நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேரச்சேர ருசி அதிகமாகும்! ;) :P,
- ஆக்ச்சுவல் ரேஷியோ 1:2:3[பருப்பு:சர்க்கரை:நெய்]..ஒரிஜினல் ருசிதான் வேண்டும் என்பவர்கள் இந்த அளவில் பொருட்கள் சேர்த்து செய்து பாருங்க! ;)
- ஹல்வா-வை இளம் சூட்டுடன் சாப்பிட நன்றாக இருக்கும். ஹல்வாவை நேரடியாக சூடாக்காமல், சூடான நீரில் சிறு கிண்ணங்களில் ஹல்வாவை சிறிது நேரம் வைத்தால் நன்றாக இருக்கும் என்று நளினி சொல்லிருக்காங்க, அவங்க வலைப்பூவில் இருந்து கொஞ்சம் மாற்றங்களுடன் நான் முயற்சித்திருக்கிறேன், நன்றி நளினி!
~~~
அசோகா அல்வா படங்களும் செய்முறையும் நல்லா இருக்கு. தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
ReplyDeleteமுதலில் வாழ்த்து
ReplyDeleteஎங்கள் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
அடுத்து ஹல்வா எடுத்துக்கொண்டேன்
நன்றி ஸ்வீட் எடு கொண்டாடு ...
அல்வா எடு கொண்டாடு ...
Even I tasted this only a couple of years back from Grand Sweets, it was superb, never tried at home, yours' has come out very well..
ReplyDeleteசூப்பர் ஹல்வா. செய்து பார்க்க வேண்டும்.
ReplyDeleteமகி,
ReplyDeleteஅல்வா நல்லாருக்கு.மைதா,கோதுமை,பாதாம் அல்வாக்கள் சாப்பிட்டதுண்டு. எதனால் இது அசோகா அல்வா தெரியவில்லை.
உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மகி.
chitrasundar5,
ReplyDeleteமன்னர் அசோகர் விரும்பி சாப்பிட்ட அல்வா அதனால் தான் அதற்கு அசோகா அல்வா என்று பெயர் வந்தது அப்படினு அறுசுவைல சொல்லியிருந்தாங்க. ஆனால் நான் தஞ்சாவூர் பொண்ணு எனக்கும் தெரியாது.....தெயஞ்சவங்க சொல்லுங்க.
அசோகா அல்வா என்ற பெயர் காரணம் எனக்கும் சரியாகத் தெரியலைங்க. இந்த அல்வாவே 2 வருஷங்களுக்கு முன்புதான் தெரியும்.
ReplyDeleteஅனானி,நீங்க சொன்ன காரணம் பொருத்தமா இருக்கு. தெரிந்தவர்கள் யாராவது சொல்லுவார்களான்னு பார்க்கலாம். கருத்துக்கு நன்றிங்க!
~~
லஷ்மிம்மா,வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிம்மா!
~~
சிவா,இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! நன்றி தம்பி!
~~
ஹேமா,நான் "Grand"ஸ்வீட்ஸ் அல்வா எல்லாம் சாப்பிட்டதில்லைங்க.ஹ்ம்ம்ம்..[ஏக்கப் பெருமூச்சுதான்,ஹிஹி!] இங்கே பக்கத்தில் இருக்கும் தோழிகள் மூலம்தான் ருசி பாத்தேன். :)
இன்னும் ஒரு கப் நெய் ஊற்றியிருக்கலாம்னு என்னவரின் கமென்ட்டு! அவ்வ்வ்வ்!! ;)
~~
வானதி, 1/2கப் நெய்...அதை கவனிச்சீங்கதானே? ;) நாள்-கிழமைன்னா நெய் அளவெல்லாம் பார்க்கக் கூடாது,தூள் கிளப்பிரோணும்,சரியா?!
நன்றி வானதி!
~~
சித்ரா அக்கா,வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்! அல்வா பெயர் காரணம் பற்றி மேலேயே சொல்லியிருக்கிறேன். கோதுமை-பாதாம் அல்வா நானும் சாப்பிட்டு இருக்கிறேன், இது கொஞ்சம் வித்யாசமாய் இருக்கும், செய்து பாருங்க!
நன்றி!
~~
Wow..! Superb Mahi. thankspa!
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மகி. அசோகா அல்வா சூப்பர்ஆ வந்து இருக்கு. எனக்கு பொதுவா அல்வா சாப்புட புடிக்காது கொடுக்க தான் புடிக்கும்:))
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் மஹி. பழம் பொரி, அசோகா அல்வா.. கலக்குறீங்க. ;)
ReplyDeleteஇது... பார்க்க அழகா இருக்கு. ஆனாலும் நான் முயற்சி செய்ய மாட்டேன். ;) என்னவோ எனக்கு பயறு பயறாக இருந்தால்தான் ரசிக்க முடிகிறது. ஒரு முறை சைனீஸ் ஸ்டோரில் எல்லோரும் அடிச்சுப் பிடிச்சு வாங்குறாங்க என்று 'மூன் கேக்' ;) (முங் கேக்) வாங்கி வந்தோம். (டப்பா & அதற்கான பை அழகா இருந்துது என்றுதான் இமா வாங்கினாங்க. அழ..கா குட்டியூண்டு க்ளியர் ப்ளாஸ்டிக் நைஃப், ஃபோர்க் எல்லாம் இருந்துது.) சுவைல இருந்து மேலே நீங்க கொடுத்த எல்லாம் இருந்தது புரிந்தது. எல்லோரும் ஒவ்வொன்று 'ட்ரை' பண்னினதுல அது தீர்ந்து போச்சு.
குல்ஃபி கூட பயறு இருந்தால் என்னால் ரசிக்க முடியவில்லை. பழக்கமில்லாமல் இருக்கு. எனக்கு ஒரே ஒரு குட்டி பீஸ், ட்ரை பண்ண பார்சல் ப்ளீஸ். ;)
Supera iruku.My In laws hail from the tanjore region and they keep talking about this sweet. I have tated this only once in one of the relatives place. This sweet is in my to make list for a long time now.
ReplyDeleteWish you a very happy new year:)
புத்தாண்டு ஸ்பெஷல் மகி யின் அசோகா அல்வாவா?பேஷ்...உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மகி
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மகி.படங்கள் சூப்பர்.அசோகா அல்வா பார்சல்.
ReplyDeleteஇனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் மகி! அசோகா அல்வா குறிப்பும் படங்களும் அருமை!
ReplyDeletehalwa sooper mahi... belated wishes.. hope u had a great time with your family!!
ReplyDeleteமஹி நலமா? அசோகா அல்வா சுப்பரா இருக்கு , நீங்க சொன்ன மாதிரி 1:2:3 ratio than romba tastea irukkum , next time seyum pothu 1/4 cup cooking oil kuda uthikalam taste nalla irukkum...
ReplyDeleteபார்க்கவே வாயூறுது மகி
ReplyDeleteஜலீலா
அசோகா அல்வா பார்க்கவே சூப்பரா இருக்கு...... அழகா செய்து காட்டியிருக்கீங்க சூப்பர். வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅஸ்மா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
ReplyDelete~~
கிரிஜா,"இதென்ன புத்தாண்டுக்கு அல்வா குடுத்துட்டே எல்லாருக்கும்!"னு என்னவரும் கேட்டாரு! ;) நீங்க அல்வா குடுக்கப் பிடிக்கும்னு சொல்றீங்க,நான் குடுத்துட்டேன் பாத்தீங்களா?! ;)) :)
நன்றி கிரிஜா!
~~
இமா,நாங்களும் ஒரு முறை கராச்சி ஹல்வா என்று ஒன்று இண்டியன் ஸ்டோரில் வாங்கினோம்,நீங்க சொல்வது போல நீட்டா பேக் செய்து அழகா இருந்தது,டேஸ்டும் சுப்பர்!;) ஆனா மூன் அல்வா நான் பார்க்கலை.
/குல்ஃபி கூட பயறு இருந்தால் என்னால் ரசிக்க முடியவில்லை./???! நான் குல்ஃபியே சாப்பிட்டதில்லை,நீங்க ஏதேதோ சொல்றீங்க.நீங்க சொல்வதை இமேஜின் பண்ணினா எனக்கும் பிடிக்கலை! ;)
/ஒரே ஒரு குட்டி பீஸ், ட்ரை பண்ண பார்சல் ப்ளீஸ். ;)/குட்டி பீஸ் எல்லாம் பார்சல் பண்ண முடியாதாம்,அடுத்த முறை அரைக்கிலோ அல்வா செய்து அனுப்பறேன்,நன்றி! :))))
~~
சுமி,புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றிங்க. உங்களுக்கும் புத்தாண்டு நன்மையே தர வாழ்த்துக்கள்!
ஆமாம், தஞ்சை-கும்பகோணம் பகுதியில் பிரபலமான ஹல்வாதான் இது. நான் அந்தப்பக்கம் போனதே இல்லை,சமீபத்தில் இங்கேதான் ருசித்துப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. நன்றிங்க!
~~
ஸாதிகாக்கா,புத்தாண்டு ஸ்பெஷலேதான்!:) வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஸாதிகாக்கா!
~~
ஆசியாக்கா,உங்களுக்கும் பார்சலா? சரி,அரைக் கிலோ போதுமா, இல்ல ஒரு கிலோவாவே அனுப்பிடறேன்,சீக்கிரமா!
நன்றி ஆசியாக்கா!
~~~
/இமா said...;)/ என் சென்டிமென்ட்டை மதித்து, கரெக்ட்டாக அவ்வப்போது ஸ்மைலி போட்டு கமென்ட் எண்ணிக்கைய 13-ஆம் நம்பரில் இருந்து 14-ஆக மாற்றும் இமாறீச்சர் வாழ்க! :)))))))))
ReplyDeleteநன்றிங்க றீச்சர்!
~~
மனோ மேடம்,வருகை-கருத்து-வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி!
~~
வித்யா,வருகை-கருத்து-வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! புத்தாண்டு அன்று இங்கே சரியான மழை & குளிர்! வெளியே தலை காட்ட முடியல, கொஞ்சம் போரடிச்சது! :)
~~
சாரு,பலநாள் கழித்து உங்க கருத்தைப் பார்த்து மகிழ்ச்சி! :) அடுத்த முறை நீங்க சொன்ன டிப்ஸையும் பாலோ பண்ணறேன்.நன்றி சாரு!
~~
ஜலீலாக்கா,உங்க ஸ்பீடுக்கு நிமிஷத்தில ஹல்வாவை செய்து பார்த்திர மாட்டீங்க? ;)
கருத்துக்கு நன்றி ஜலீலாக்கா!
~~
யாஸ்மின்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. இது என் முதல் முயற்சி. இன்னும் முன்னேற இடமுண்டு! ;)
~~