Friday, April 20, 2012

தோட்டம்,2012

2010-ல் இந்த ஊருக்கு வந்ததும் வீடு தேடும் படலத்தின் போது, முதல் தள வீடு ஒன்று இருந்த போதும் அதை விடுத்து தரைத்தள வீட்டிற்கு குடிவந்தோம். காரணம், வீட்டின் முன்பு இருந்த கையகல நிலம்! அங்கே விவசாயமே செய்யப்போவது போல நிறைய ரிஸர்ச், வீட்டுத் தோட்டம் வைத்திருப்போரிடம் 1008 சந்தேகம் என்று ஏகப்பட்ட ஏற்பாடுகளுடன் களமிறங்கினோம்! :)))))

அந்தக் கையகல இடத்தில், காங்க்ரீட் கற்கள்தான் உண்டு, போதுமான சூரியவெளிச்சம் இருக்காது, வாசலில் இருக்கும் இங்கிலீஷ் பாக்ஸ் செடி எங்கெங்கும் பரந்து விரிந்து வேர்விட்டிருக்கிறது என்பதும் தெரியாமல் ஆரம்பித்து இரண்டு கோடைகளில் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. இரண்டாவது கோடையிலேயே தொட்டிச் செடிகள் வாங்கி (பூக்கள் மட்டும்) வளர்க்கவும் ஆரம்பித்தோம்.

இந்த வருஷம் வசந்தம் சீக்கிரமே வர, நாங்களும் ஏப்ரல் முதல் வாரமே கடைக்குப் போனோம். நர்ஸரியிலும் ப்ளாக் ஃப்ரைடே சேல்!! கடையைச் சுத்திக்காட்டப் போறேன்,ரெடி, ஸ்டெடி!!! :)) ஹோம் டிப்போவில் வீட்டுக்குத் தேவையான ஹார்ட்வேர் பொருட்கள், தோட்டத்திற்குத் தேவையான பொருட்கள் (A to Z) இருக்கும்.

ஒவ்வொரு ஸ்ப்ரிங் ஸீஸனிலும் கடையின் வெளியிலேயே சிறிய பூச்செடிகள், பழ மரங்கள், தோட்டத்திற்கு தேவையான மண் எல்லாமே அடுக்கி வைச்சிருவாங்க..கடையின் உள்ளேயும் பலவகைப் பூச்செடிகள், காய்கறிச் செடிகள் இருக்கிறது.செம்பருத்திப் பூவில் இருந்து ஆரஞ்சு -எலுமிச்சை மரங்கள்,தென்னை முதல் palm trees வரை அழகாக அடுக்கி வைச்சிருக்காங்க. நமக்கு எதாவது சந்தேகம் வந்தால் அதைத் தீர்த்துவைக்க, உதவி செய்ய ஆட்களும் கடை பூராவும் இருக்கிறார்கள்.

செடிகொடிகளை எல்லாம் பார்த்துட்டு வந்தம்னா சுற்றிலும் ஓரத்தில் தோட்டத்துக்குத் தேவையான பொருட்கள்இருக்கு..பிளாஸ்டிக் தொட்டிகள், மண் தொட்டிகள், மரத்தொட்டிகள், தோட்டத்துக்கு வேலி, பார்டர் கட்ட/ தரையில் பதிக்க கற்கள், தண்ணீர் பாய்ச்ச ட்யூப் என்று எல்லாப் பொருட்களும் சுற்றிலும் வைத்திருக்கிறார்கள். அங்கிருந்து உள்ளே நுழைந்ததும் இன்டோர்-ப்ளான்ட்ஸ் இருக்கின்றன. சுவரில் வானமெல்லாம் வரைந்து ரூமுக்குள்ளேயும் அவுட்டோர் ஃபீலிங்கை கொண்டுவந்துடறாங்க..

இன்னும் உள்ளே போனால் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் இருக்கின்றன. வாசலிலேயே லில்லிப் பூந்தொட்டிகள் விற்பனைக்கு..பக்கத்திலேயே ஆர்க்கிட் பூக்கள் அணிவகுத்து நிற்கின்றன. தேடிக்கண்டுபுடித்து Bird feeders வாங்கியதுடன் கார்டன் ஷாப்பிங் நிறைவுபெற்றது.

இந்த ட்ரிப் பற்றிய தொடர்புகளை அங்கங்கே bold letters-ல் இணைத்திருக்கேன், க்ளிக் பண்ணிப் பாருங்க. படங்களைத் தனித்தனியே ரசிக்க விரும்பினால், ஆல்பம் இங்கே இருக்கிறது..
புதிய பூவிது, பூத்தது!
~~~
இந்த முறை bird feeder ஒன்றும், humming bird-க்கு ஒரு nectar feeder-ம் வாங்கிவந்தோம். நெக்டர் மிக்ஸை தண்ணீரில் கரைத்து feeder-ல் நிறைத்து வெளியே மாட்டியிருக்கிறோம். அவ்வப்பொழுது மினியேச்சர் ஹெலிகாப்டர் போல தேன்சிட்டுக்கள் வந்து செல்கின்றன. :)

பறவைகளுக்கு peanut butter snacks-ஐ feeder-ல் நிறைத்து கூரையில் தொங்கவிட்டோம், ஆனால் அவற்றுக்கு கண்டுபிடிக்கத் தெரியவில்லையோ என்னவோ, யாருமே வரவில்லை..கழற்றித் தரையில் வைச்சோம், பிறகென்ன??

அடுத்த பதிவில் இந்தப் பறவையம்மா(!) வருவாங்க,அதுவரை நன்றி கூறி விடை பெற்றுக்கொள்கிறேன்,நன்றி வணக்கம்!

பி.கு. :தோட்டம் பற்றிய பதிவுகள் எல்லாமும் பார்க்க இங்கே க்ளிக் பண்ணுங்க.

10 comments:

  1. வாவ் !!!!! படங்கள் அருமை .சிட்டுகுருவி க்யூட் .
    நாங்களும் bird feeder வச்சிருக்கோம் .ஒரு பூஸ் எங்க தோட்டத்திலேயே ரவுண்ட்ஸ் வருவதால் பறவைகள் வர அச்சப்படுதுங்க

    ReplyDelete
  2. இங்கயும் இதே செட்டப்லதான் கடை இருக்கு.

    இந்த நெக்டர் ஃபீடர் எனக்கு புதுசா இருக்கு. நான் சீனியை கரைச்சு / தேனை செறிவு குறைத்துத்தான் பட்டாம்பூச்சிக்கு வைப்பேன். அது தற்கொலை செய்துவிடுமோ என்று பயமாக இருக்கும். இது பட்டாம்பூச்சிக்கும் சரிவரும் போல இருக்கிறது. அடுத்த சீசனுக்குள் ஒன்று தேடிப் பிடிக்க வேண்டும். DIY சரிவராது. ;(

    அடுத்த இடுகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    பர்ட் ஃபீடர்... அப்துல் காதர் ஒரு ஐடியா கொடுத்து இருக்காங்க. பண்ணப் போறேன்.

    ReplyDelete
  3. Nice post, Home Depot vai oru valam vandachu..

    ReplyDelete
  4. படங்களும் பதிவும் ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. ஹோம் டிபோட் போய் ரொம்ப நாள் ஆச்சு.உங்க இடுகையையைப் பார்த்ததும் வந்த புதிதில் இக்கடையைப் பார்த்து,மலைத்து நின்று,ஏகத்துக்கும் செடிகளை வாங்கி வந்த‌துதான் ஞாபகம் வருகிறது.orchard supply பக்கத்திலேயே இருப்பதால் இப்போதெல்லாம் அங்கேதான் போவது.

    ReplyDelete
  6. @அப்பாவி,தேங்க்ஸ்,தேங்க்ஸ்,தேங்க்ஸ்!
    ---
    @ஏஞ்சல் அக்கா,இங்கே பூஸார் வரமுடியாது,அதனால் பறவைகள் தகிரியமா வராங்க! :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ---
    @இமா,குட் லக் வித் "நெக்டர் ஃபீடர் & பர்ட் ஃபீடர்!"! :)
    வீடியோவை ஆவலுடன் எதிர்பார்ப்பதுக்கு நன்றி! ;) சீக்கிரம் வந்துரும்!
    ---
    @ஹேமா, :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ---
    @லஷ்மிம்மா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா!
    ---
    @சித்ராக்கா, எங்களுக்கு ஹோப் டிப்போதான் பக்கம். நீங்க சொல்லும் கடை எங்க ஏரியாவில் இல்லை. நீங்க இந்த சீசனுக்கு என்ன செடிகள் வளர்க்கறீங்க? :)
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
    ---

    ReplyDelete
  7. romba pidichudu mahi indha padivu:) kalakiteenga:):)

    ReplyDelete
  8. Nice post Mahi. Never thought about taking the camera to B&Q or the garden centre here:)) Athukkuththaan kidney venumunnu sollurathu:)) not the same not being able to type in TAMIL!!!!

    ReplyDelete
  9. வித்யா,நன்றிங்க!
    ~~
    கிரிஜா,அடுத்த முறை போகும்போது கேமரா உங்க ஜூனியர் கிட்ட குடுத்திருங்க, அப்புறம் பாருங்க,உங்க கிட்னி எப்படியெல்லாம் வேலை செய்யப்போகுதுன்னு!
    நன்றி!
    ~~

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails