Wednesday, April 4, 2012

ரசித்து ருசித்தவை - 7

மற்ற வலைப்பூக்களில் இருந்து நான் ரசித்து ருசித்தவை..நீங்களும் ருசிக்க! :)
~~
1.Baked காலிஃப்ளவர் கறி - வானதியின் வலைப்பூவிலிருந்து..
சப்பாத்திக்கு ஈஸியான சுவையான பக்க உணவாக இருந்தது. கொஞ்சம் எண்ணெய் சூடாக்கி, மஞ்சள்தூளும் சேர்த்து கலக்கி அதில் காலிஃப்ளவர் பூக்களை பிரட்டி அவனில் 15 நிமிடங்கள்
bake செய்துகொள்ளவேண்டும். பிறகு சீரகம், பூண்டு தாளித்து வெங்காயம் தக்காளி வதக்கி, மிளகாய்ப்பொடி, கரம்மசாலாபொடி, உப்பு சேர்த்து கிளறி சமைத்த காலிஃப்ளவரையும் சேர்த்து சூடாக்கி இறக்கினா அவ்வளவுதான். சுவையான சைட் டிஷ் ரெடி!
நன்றி வானதி!

2. சர்க்கரை வள்ளி - சித்ராசுந்தர் வலைப்பூவில் இருந்து..
பலநாளாக கிழங்கை குக்கரில் போடுவேன், அல்லது கிண்ணத்தில் வேகவைப்பேன். இனிப்பே இல்லாத மாதிரி இருக்கும். சித்ரா அவர்கள் வலைப்பூவில் இட்லித் தட்டில் வைத்து வேகவைக்கச் சொல்லிருந்தாங்க. ரொம்ப நல்லா வந்தது கிழங்கு.
நன்றி சித்ரா!
3.முறுக்கு - சித்ராசுந்தர் வலைப்பூவில் இருந்து..
பொங்கல் தீபாவளிக்கு செய்யும் முறுக்கை நினைவு படுத்திவிட்டாங்க பொட்டுக்கடலை மாவு முறுக்கை செய்து காட்டி...டெம்ப்ட் ஆகி நானும் கொஞ்சம் முறுக்கு செய்துட்டேன். :)
நன்றிங்க!


4.பொடி இட்லி - கிரிஜாவின் வலைப்பூவில் இருந்து..

மினி இட்லி அல்லது பெரிய இட்லியை நறுக்கி ரெடியா வைச்சுக்கணும். நல்லெண்ணெய் காயவைத்து கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கணும். வதங்கியதும், தேவையான இட்லிப்பொடியை சேர்த்து கலந்து, இட்லியையும் சேர்த்து ஒரு நிமிடம் சூடாக்கி இறக்கினா சுவையான பொடி இட்லி ரெடி!
நன்றி கிரிஜா!

5.வெஜிடபிள் ஊத்தப்பம் - மீராவின் வலைப்பூவில் இருந்து..

ஒரு கேரட், சிறு துண்டு இஞ்சி துருவி வைச்சுக்கணும். வெங்காயம்-பச்சைமிளகா-கொத்துமல்லி பொடியாக நறுக்கி வைச்சுக்கணும். ஊத்தப்பம் வார்த்து எல்லாப் பொருட்களையும் தூவி கொஞ்சம் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிடணும். ஊத்தப்பத்தை திருப்பிப் போடாமல் அப்படியே எடுத்து வைத்தால் கலர்ஃபுல்லா அழகா இருக்கும்.
நன்றி மீரா!

6. வெங்காயம்-புதினா-தக்காளி சட்னி - கீதாவின் வலைப்பூவில் இருந்து..
இட்லி-தோசைக்கு சட்னி தேடுவதே ஒரு பெரிய குழப்பமா இருக்கும் எனக்கு. கீதா ஆச்சலின் ப்ளாகில் பாப்புலர் போஸ்டில் இந்த சட்னி இருந்தது. வழக்கமா செய்யும் சட்னியிலிருந்து ஒரு புதுவிதமான சட்னி.

கடுகு,உளுத்தம்பருப்பு வரமிளகாயை கொஞ்சம் எண்ணெயில் வதக்கி, அதனுடன் தேங்காய், புளி சேர்த்து நைஸா அரைச்சுக்கணும். அதனுடன் தேவையான உப்பு, வதக்கிய வெங்காயம்-தக்காளி-புதினாவை சேர்த்து ஒன்றிரண்டாக அரைச்சு எடுத்து தாளிச்சுக் கொட்டினா சட்னி ரெடி!
நன்றி கீதா!
~~
நீங்களும் செய்து ருசியுங்க..அந்தந்த வலைப்பூக்களின் இணைப்புக்கள் அங்கங்கே குடுத்திருக்கேன், அங்கே போனால் தெளிவான செய்முறை இருக்கும். நன்றி!

23 comments:

 1. மஹி நீங்கமட்டும் ரசித்து ருசித்த்துடன் நில்லாம எல்லாருக்கும் லிங்க் கொடுத்திருக்கீங்க நன்றி

  ReplyDelete
 2. மகி, சூப்பரா இருக்கே. காலிஃப்ளவர் எங்க வீட்டில் முதல் ஸ்டெப் தாண்டுவதே அபூர்வம். நானும் வேலை குறைவு என்பதால் அலட்டிக் கொள்வதில்லை. உங்க ரெசிப்பி ஒன்று ட்ரை பண்ணினேன். அதிகம் எல்லாம் எதிர்பார்க்க கூடாது. உங்களுக்கு காட்ட வேண்டும் என்பதால் போட்டோ எடுத்தேன். சுவை அபாரம். ஆனால், ப்ரசன்டேஸன் சொதப்பலோ சொதப்பல் ( கிரி, சிரிக்கப்படாது. எனக்கு கெட்ட கோபம் வரும். சொல்லிப்போட்டன் )

  ReplyDelete
 3. பொடி இட்லி ஆவலை தூண்டுது! நாளைக்கே செய்துடுறேன்

  உங்க போட்டோகிராபி செம கலக்கல்!

  வாழ்த்துகள்

  ReplyDelete
 4. அருமையான பகிர்வு.

  ReplyDelete
 5. மகி,

  படங்கள் நன்றாக உள்ளன.நல்ல கலர்ஃபுல்லான ஊத்தப்பம்.மேலும் பல வலைப்பூக்கள்.குறிப்புகளைப் பார்த்து, சமைத்து,அவற்றைப் பதிவாக்கியது நல்லாருக்கு.என்னுடைய குறிப்புகளையும் பகிர்ந்ததற்கு நன்றி.

  ReplyDelete
 6. மகி ரெம்ப ரெம்ப நன்றி. என் இட்லிய விட உங்க இட்லி கியூட்டா இருக்கு. வெங்காயமும் அழகா நீளமா நறுக்கி இருக்கீங்க...ஹும்ம்ம் எனக்குத்தான் இந்த நறுக்குற மேட்டர் எல்லாம் பொறுமை எல்லாம் இல்ல ஸோ கன்னா பின்னான்னு தான் இருக்கும்.

  ReplyDelete
 7. வான்ஸ் இன் ஐ பூரியே நான் இன்னும் செஞ்சு பார்க்கலே அதுக்குள்ளே இன்னொரு ரேசிபியா. Cauliflower ரொம்ப ஈசி ரேசிபியா சொல்லி கொடுத்ததுக்கு நன்றி வான்ஸ் அண்ட் அதை ஜூம்:)) பண்ணி காமிச்சதுக்கு நன்றி மகி.

  ReplyDelete
 8. //கிரி, சிரிக்கப்படாது. எனக்கு கெட்ட கோபம் வரும். சொல்லிப்போட்டன் )// க்கிக் க்கிக் க்கிக் அது ஒண்ணும் இல்லே வான்ஸ் விக்கல் விக்கல் நான் எல்லாம் உங்கள பார்த்து சிரிப்பேனா ஆஆ???? ப்றேசெண்டேஷன் சொதப்பல் ன்னா டோன்ட் வொர்ரி பதிவா போட்ட்ருங்க. பூஸ் திரும்ப வர்றதுக்குள்ளே போட்ட்ருங்க நான் மகி எல்லாம் உங்கள ஒண்ணும் பண்ண மாட்டோம் :))

  ReplyDelete
 9. ஊத்தாப்பம் கலர்புல்லா இருக்கு,அருமையன பகிர்வு!!

  ReplyDelete
 10. கிரி, இல்லை. நான் படத்தோடு தான் போடுவேன் ஆக்கும். பூஸாருக்கு நான் எதுக்கு பயப்பிடோணும். அவ்வ்வ்... இது ஆனந்தக் கண்ணீர்.

  ReplyDelete
 11. மகி... இமா ரெசிபி ஒண்ணும் ட்ரை பண்ணல. அழறேன்ன்ன்ன். ;((

  ReplyDelete
 12. மகி. நல்ல ஐடியா. எல்லா ரெசிப்பிஸ்ஸும் சூப்பர். நானும் காலிப்ஃளவர் பேக் செய்வேன். நன்றாக க்ரிஸ்பியாக வரனும் என்பதலால் கடைசி 5 நிமிடம் ப்ராயில் மோடில் வைத்து எடுப்பேன். இதேபோல் ப்ரோக்லியும் செய்வேன்.நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 13. சர்க்கரை வள்ளி நான் எப்போதும் இட்லி பானையில் தான் அவிப்பேன்
  கீழே ஈர துணி புட்டுக்கு விரிப்பது போல் விரித்து கொள்ளனும்.

  இட்லி ம்ம்ம் ஒரு பிடி பிடிக்க வேண்டியது தான்...

  அனைத்து ருசியும் அருமை


  ஜலீலா

  ReplyDelete
 14. மற்றவர்களை ஊக்குவிக்கும் நல்லதொரு பகிர்வு.

  ReplyDelete
 15. ஓ..இது ஊத்தப்பமா...நான் ஏதோ பிஸ்ஸான்னு நினச்சேன்... அந்தளவுக்கு கலர்புல்லா இருக்கு...உங்களால் இப்படி மினி குறிப்பு கூட குடுக்க முடியுமா.... ஹி..ஹி... (ஒருவேளை மினி இட்லிதட்டு வாங்கினதுக்கப்புறம் மாறிட்டீங்களோ?!) சட்னிக்கு அடியில் விரித்திருக்கும் மேட் சூப்பர்...நானும் சீனிக்கிழங்குக்கு இட்லிதட்டு தான் யூஸ் பண்றது.. nice presentations as usual...

  ReplyDelete
 16. ரஸித்து ருசித்தவை எல்லாம் நன்னாயிருக்கு. வெந்தயம் சேர்த்து அரைத்த மாவில் இம்மாதிரி ஊத்தப்பம் செய்தால் குழல்குழலாய் பொத்தல்களுடன் கலர்க் கலராய்க் காய்களுடனும் அருமையாக வரும். கொஞ்சம் மேலே சீஸ் துருவலும் கொஞ்சம் தூவிவிட்டால் சொல்லவே வேண்டாம். நான் இப்படிச் செய்வேன்.
  நீ நன்ராகவே ரஸித்ததுடன் ருசிக்கவும் ,செய்யவும் எல்லோருக்கும்
  அழகா டீச் செய்கிறாய்.ஸந்தோஷமாக
  இருக்கு. எல்லோருக்கும் என் மகிழ்ச்சி

  ReplyDelete
 17. மகி வந்து பதில் சொல்லாம இருக்கிறதால... அவங்க சார்பா... இமா உட்பட... இங்க கருத்துச் சொல்லி இருக்கும் அனைவருக்கும் இமாவே நன்றி சொல்லிக்கிறேன். ;))

  நன்றி. மீண்டும் வருக.

  ;)))))))))))))

  ReplyDelete
 18. ஹேமா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
  ~~
  லஷ்மிம்மா,நான் மேலோட்டமாதானே சொல்லிருக்கேன்,நீங்க எல்லாரும் செய்து பார்க்கத்தான் லிங்க் குடுத்திருக்கேன்.:) நன்றிமா!
  ~~
  வானதி,இந்த முறை முழுதாக செய்து பார்த்து விடுவதுன்னுதான் ஆரம்பித்தேன்.;)
  கான்ட்வி செய்துபார்த்து பதிவும் போட்டமைக்கு மிக்க நன்றி வானதி!
  ~~
  அனு,நன்றிங்க!
  ~~
  ஆமினா,பொடி இட்லி செய்துட்டீங்களா? :)
  போட்டோ பற்றிய பாராட்டுக்கு நன்றி ஆமினா!ரொம்ப சந்தோஷம் உங்க கருத்தைப் பாத்து!
  நன்றி!
  ~~
  ஆசியாக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  ~~
  சித்ராசுந்தர்,நன்றிங்க! போரடிக்காம சமைக்கலாம்,இந்தக் குறிப்புகளை செய்தவர்களுக்கும் சந்தோஷமா இருக்கும்,அதான் இப்படிலாம்! :)
  நன்றிங்க!
  ~~
  கிரிஜா,பொதுவாவே எனக்கு பொறுமை கொஞ்சம் சாஸ்தி;)ங்க..அதனால முடிந்தஅளவு எல்லா வேலைகளையும் நீட்டா செய்வேன்,அவசரப்பட்டா சொதப்பிடுவேன்! :)
  வானதியின் "ஐ...பூரி"சீக்கிரம் செய்து போட்டுருங்க,நானும் அடுத்த முறை பூரி செய்யும்போது மறக்காம செய்து பார்க்க நினைச்சிருக்கேன்.

  //நான் மகி எல்லாம் உங்கள ஒண்ணும் பண்ண மாட்டோம் :))//என்னோட சார்பா நீங்களே இப்பூடி சொல்லிட்டிங்க, இதுக்கப்பறம் நான் என்ன சொல்லப்போறேன்? :)

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
  ~~
  மேனகா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
  ~~
  //நான் படத்தோடு தான் போடுவேன் ஆக்கும். பூஸாருக்கு நான் எதுக்கு பயப்பிடோணும். அவ்வ்வ்... இது ஆனந்தக் கண்ணீர்.//ஆனந்தக் கண்ணீர் விட்டு,வெற்றீகரமா போட்டோவை பப்ளிஷ் பண்ணீட்டீங்க! சூப்பர் வானதி! மிக்க நன்றி!
  ~~
  /மகி... இமா ரெசிபி ஒண்ணும் ட்ரை பண்ணல./இது சிரியஸ்-ஆ, இல்ல சீரியஸ்-ஆன்னு தெரிலை! உங்க ரெசிப்பிதானே?? கண்டிப்பா அடுத்த சீரிஸ்ல போட்டுடறேன் இமா,இதுக்கெல்லாம் அழப்படாது,சிரிங்கோ...என்ன?? :)))))
  நன்றி இமா!
  ~~
  //நன்றாக க்ரிஸ்பியாக வரனும் என்பதலால் கடைசி 5 நிமிடம் ப்ராயில் மோடில் வைத்து எடுப்பேன்.//சும்மா bake பண்ணினாலே சூப்பரா இருக்கு,இதுல broil வேற செய்தா,ஆஹா..சூப்பராத்தான் இருக்கும்! ஐடியாவுக்கு நன்றிங்க விஜி!
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  ~~
  ஜலீலாக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! கிழங்கு இட்லித் தட்டில் அவிப்பது இப்போதான் எனக்குத் தெரியும். :)
  ~~
  ஸாதிகாக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  ~~
  //உங்களால் இப்படி மினி குறிப்பு கூட குடுக்க முடியுமா.... ஹி..ஹி... (ஒருவேளை மினி இட்லிதட்டு வாங்கினதுக்கப்புறம் மாறிட்டீங்களோ?!) //பானு,மினி-மைக்ரோ-மேக்ரோ எல்லாக் குறிப்புமே குடுப்பேனுங்க.படிக்க நீங்க ரெடியா? :)

  மினி இட்லியை அழகா கனெக்ட் பண்ணிட்டீங்க கமென்ட்ல! :)))

  //சட்னிக்கு அடியில் விரித்திருக்கும் மேட் சூப்பர்..// நன்றிங்க! அது ஹாலில் விரிச்சிருக்க கார்பெட்-டுங்க பானு! என்னவரின் செலக்ஷன்! அவரிடம் சொல்லிடறேன். :)

  அவ்வ்..நீங்களூம் இட்லித்தட்டுதானா? சரி,இட்ஸ் பெட்டர் லேட் தேன் நெவர். எனக்கு இப்பவாவது தெரிந்தது! ;)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பானு!
  ~~
  காமாட்சிம்மா,எப்பவுமே வெந்தயம் சேர்த்துதான் நான் மாவரைக்கிறது. :) சீஸ் மட்டும் எனக்கு அலர்ஜி! சான்ட்விச்-ல அது இருக்கறது தெரியாம உள்ள போகும். ;)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா!
  ~~
  // மகி வந்து பதில் சொல்லாம இருக்கிறதால... அவங்க சார்பா... இமா உட்பட... இங்க கருத்துச் சொல்லி இருக்கும் அனைவருக்கும் இமாவே நன்றி சொல்லிக்கிறேன். ;))//ஆஹா! தேங்க்ஸ் பார் தி back up இமா! இனிமேல் ஒரு நாலு நாள் ப்ளாக் பக்கம் என்னைக் காணம்னா நீங்க வந்து கொஞ்சம்;) கவனிச்சுக்குங்க, சரியா??? தேங்க்ஸ்! :))))))))))))

  ReplyDelete
 19. cauliflower recipe - simple and nice

  oothappam - lovely

  nice handpicked recipes...thanks Mahi

  ReplyDelete
 20. அப்பாவி,ஆபீஸ்ல கொஞ்சம் ஃப்ரீயானதும் புயல் மாதிரி புறப்பட்டுட்ட மாதிரியே இருக்கே? ;)))
  கமென்ட் மழைக்கு டாங்க்ஸ்! செய்து பாரு,எல்லாமே ஜூப்பர்!

  ReplyDelete
 21. Tit for tat. ;)

  http://imaasworld.blogspot.co.nz/

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails