Monday, May 7, 2012

ஸ்பைஸி ஃப்ரெஞ்ச் டோஸ்ட்

தேவையான பொருட்கள்
ரொட்டித் துண்டுகள் - 4
முட்டை-1
பால்-1/2கப்
வெங்காயம்(சிறியதாக)-1
பச்சைமிளகாய்-2 (காரத்துக்கேற்ப)
நறுக்கிய குடைமிளகாய்- 2 டேபிள்ஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை
வெங்காயம்-பச்சைமிளகாயை மிக்ஸியில் கொறகொறப்பாக அரைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டை-பால்-உப்பு சேர்த்து நன்றாக கலக்கி, அதனுடன் அரைத்த வெங்காயம்-பச்சைமிளகாயையும் சேர்த்து கலக்கவும்.
நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து கலக்கவும்.
தோசைக்கல்லை காயவைத்து, சிறிது எண்ணெய் விட்டு ஒரு துண்டு ரொட்டியை வைக்கவும். மேலாக முட்டை கலவையை சீராக ஊற்றிவிடவும்.

ரொட்டியைத் திருப்பி வைத்து அந்தப் பக்கமும் முட்டைக் கலவையை ஊற்றவும். சிறிது எண்ணெய் ஊற்றி டோஸ்ட் செய்து எடுக்கவும்.

ரொட்டியை முட்டை கலவையில் தோய்த்தும் டோஸ்ட் செய்யலாம், ஆனால் ஒவ்வொருமுறையும் கையைக் கழுவணும். இப்படி செய்தால், ஸ்பூனாலேயே முட்டைகலவையை எடுத்து ஊற்றிவிடலாம், அங்க இங்க சிந்தாமலும் இருக்கும். எப்படி என் கண்டுபுடிப்பூ??! :) ;)

இதிலே கலர் குடைமிளகாய் சேர்த்தா பார்க்கவும் நல்லா இருக்கும், ருசியும் சூப்பராக இருக்கும். எண்ணெய்க்கு பதிலாக வெண்ணெய் சேர்த்தும் டோஸ்ட் செய்யலாம். கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், தோசைக்கல்லை மிதமான சூட்டில் காயவிடணும், காலையில் ப்ரேக்ஃபாஸ்டுக்கு லேட்டாச்சுன்னு கொஞ்சம் அடுப்பை வேகமா வைத்தீங்கன்னா.......

...ஃபோர்க் & நைஃப் படத்தில இருக்க மாதிரி கொஞ்சம் கலர் மாறிப்போயிரும், ஹிஹி! :)
ஷார்ட் & ஸ்வீட்..இல்லைல்ல, ஷார்ட் & சேவரி-யா ஒரு ரெசிப்பி குடுத்திருக்கேன். செய்து பாருங்க.

இந்த குறிப்புக்கு இன்ஸ்பிரேஷன் இங்கே...அவங்க சொல்லியிருந்ததை கொஞ்சம் என் வசதிப்படி மாத்தி செய்திருக்கேன்.

24 comments:

  1. பாம்பே டோஸ்ட் என்று ஸ்வீட்டில்தான் செய்வோம்.இப்ப அதே மெதடில் ?வெரி குட்.

    ReplyDelete
  2. நான் சின்ன மாறுதலுடன் செய்வேன்.ஆனால் எது மகி செய்தாலும் ய்ம்மி தான்.

    ReplyDelete
  3. Siva sankar said...
    meeeeeeeee the firstu...///

    karrrrrrrrrrrrrrr:)))

    ReplyDelete
  4. சூப்பர் மகி.... எனக்கும் ரொம்பப் பிடிக்கும்... எண்ணிக்கை இல்லாமல் உள்ளே போயிடும்:)))

    ReplyDelete
  5. Siva sankar said...
    meeeeeeeee the firstu...///

    karrrrrrrrrrrrrrr:))):)

    hahaha

    y y y baby athira..

    ReplyDelete
  6. நல்ல ஐடியா .நான் சாப்பிட முடியாது so கணவருக்கு செய்து தரேன் .thanksda for the recipe

    ReplyDelete
  7. HI Mahi, Inga toast anga soup. Invite you to a hot cup of tangy delicious carrot soup with your toast. I am a vegetarian so could you please suggest substitute for egg or how veg toast to be prepared.

    ReplyDelete
  8. My family likes this savory version than the sweet one, nicely done..

    ReplyDelete
  9. love this savoury version,nice one!!

    ReplyDelete
  10. Supera irukku, parkavae nalla irukku

    ReplyDelete
  11. Very yummmmmmmy and inviting mahi! kalakareenga....

    ReplyDelete
  12. வெறும் பால் & முட்டை சேர்த்து உப்பு & பெப்பர் பொடி சேர்த்து நான் பாம்பே டோஸ்ட் செய்வேன். இந்த மாதிரி சேவரி நல்ல ஐடியா மகி. சூப்பர் ரெசிபி செஞ்சு காமிச்சு இருக்கீங்க. தாங்க்ஸ்!

    ReplyDelete
  13. //athira said....

    Siva sankar said...
    meeeeeeeee the firstu...///

    karrrrrrrrrrrrrrr:)))// ரிபீட்டு :))

    எப்புடி சிவா நெஜமாவே first ??? எ.கொ.சி.இ ??:))

    ReplyDelete
  14. //ஸ்பைஸி ஃப்ரெஞ்ச் டோஸ்ட்//

    இதுக்கு தமிழ்ல எனன் பேருன்னு சொல்லுங்களேன் # டவுட்டு --12689 :-))))

    ReplyDelete
  15. //athira said...

    சூப்பர் மகி.... எனக்கும் ரொம்பப் பிடிக்கும்... எண்ணிக்கை இல்லாமல் உள்ளே போயிடும்:))) //

    ஒரு 40 பீஸ் இருக்குமா ஹா..ஹா.. :-)))

    ReplyDelete
  16. Mahi,
    முட்டை,மிளகு,உப்பு சேர்த்துதான் செய்வேன். கலர்ஃபுல்லான ப்ரெட் டோஸ்ட்டைப் பார்க்கும்போது இது மாதிரியும் ஒரு தடவ செய்து பார்க்க வேண்டும்போல் உள்ளது.

    ReplyDelete
  17. ஒரு 40 பீஸ் இருக்குமா ஹா..ஹா.. :-)))//

    erukum erukkum.

    ReplyDelete
  18. Its in my try list for a long time.. urs is very nice :)

    ReplyDelete
  19. Whenever I see this recipe, I'll think I should do it. But never did... must do now I think... thanks Mahi...;)

    ReplyDelete
  20. புடிச்சிருக்கு. ;)

    ReplyDelete
  21. இப்படி ப்ரெட் செய்ததில்லை. விரைவில் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  22. Great toast, Mahi. Your's look more yummy than mine :)Thanks for linking back to me...

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails