Thursday, May 24, 2012

வெங்காய பஃப்ஸ்/ஆனியன் சமோஸா

மேல் மாவுக்குத் தேவையான பொருட்கள்
கோதுமை மாவு -1/2கப்
மைதா மாவு/ஆல் பர்ப்பஸ் மாவு -1/2கப்
உப்பு- 1/4டீஸ்பூன்
தண்ணீர் - 1/2கப்புக்கும் குறைவாக
எண்ணெய் - 2 டீஸ்பூன்

ஸ்டஃபிங்-கு தேவையான பொருட்கள்
நறுக்கிய வெங்காயம் -1/
அவல் -1/4கப்
மிளகாய்த்தூள் -1டீஸ்பூன் (காரத்துக்கேற்ப)
சீரகத்தூள் -1/2டீஸ்பூன்
உப்பு-சிறிது
சாட் மசாலா (அ) எலுமிச்சை சாறு -சிறிது (விரும்பினால்)

பஃப்ஸை மடித்து,ஒட்டுவதற்கு..
மைதா -1டேபிள்ஸ்பூன்
தண்ணீர் -2 டேபிள்ஸ்பூன்

செய்முறை
1. மாவுகள், உப்பு இவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு..

2.கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து பிசையவும். மாவு கையில் ஒட்டாத பதம் வந்ததும் இரண்டு டீஸ்பூன் எண்ணெயும் விட்டு நன்றாக 5 நிமிடங்கள் பிசைந்து அரைமணி நேரம் மூடி வைக்கவும்.
3. மாவை சம அளவில் நான்காகப் பிரித்து...

4. உருண்டைகளாக உருட்டி, மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்த்துக் கொள்ளவும்.

5. தோசைக்கல்லை காயவிட்டு, தேய்த்த சப்பாத்திகளை சூடான கல்லில் சிலவிநாடிகள் போட்டு, திருப்பி விட்டு சில விநாடிகளில் எடுத்துவிடவும். (மொத்தமே 20-30 விநாடிகள் தோசைக்கல்லில் இருந்தால் போதுமானது)

6. ஸ்டஃபிங்-கிற்கு தேவையான வெங்காயம்,அவல், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு இவற்றை ஒன்றாக கலந்து வைத்துவிடவும். (நான் சாட் மசாலா/எலுமிச்சை ஜூஸ் எதுவும் சேர்க்கவில்லை, விரும்பினால் அதையும் கலந்து வைத்துக்கொள்ளவும்.

7. சப்பாத்திகளின் ஓரங்களை நறுக்கிவிட்டு, சீரான செவ்வகத் துண்டுகளாக வெட்டவும். (3x6 செ.மீ. வெட்டினால் கரெக்ட்டா இருக்கும் என்று சொல்லறாங்க, நான் அளந்தெல்லாம் பார்க்கலை! ;) )

8.இதே போல எல்லா சப்பாத்திகளையும் நறுக்கிக் கொள்ளவும்.

9. ஒரு டேபிள்ஸ்பூன் மைதாவுடன் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கலந்துவைக்கவும். செவ்வகத்துண்டை ஒரு ஓரத்திலிருந்து மடித்துவிட்டு மீதியுள்ள ஓரத்தில் மைதா பசையைத் தடவவும்.

10. பசை தடவிய பக்கத்தை மடித்து ஒட்டவும். இப்போது அதனை கையில் எடுத்துப் பார்த்தால் ஒரு கோன் வடிவம் கிடைத்திருக்கும்.

11. வெங்காயக் கலவையை கோனில் நிரப்பி,

12. மீதியுள்ள பக்கத்தில் மைதா பேஸ்ட்டை தடவி,

13. இறுக்கமாக ஒட்டவும். இப்போது அழகான (!) முக்கோண வடிவில் பஃப்ஸ் தயாராகியிருக்கும்.
14. எல்லா செவ்வகத்துண்டுகளையும் பஃப்ஸாக செய்துவைக்கவும். மடித்த பஃப்ஸ்களை காய்ந்து போகாமல் மூடிவைக்க வேண்டியது அவசியம்.

15. மிதமான சூட்டில் எண்ணெய் காயவிட்டு, பஃப்ஸ்களை பொரிக்கவும்.

16.சில நிமிடங்களில் லேசாக நிறம் மாறியதும், பஃப்ஸ்களை எடுத்துவைக்கவும்.

17. எல்லா பஃப்ஸ்களையும் அரைவேக்காடாக எடுத்து வைத்தவுடன், மீண்டும் அவற்றை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். (இரண்டு முறை பொரிப்பது ஆப்ஷனல்..நல்லா முறுகலா வருவதற்காக அப்படி செய்வது, இல்லையெனில் ஒரே முறையிலும் பொரித்து எடுத்துவிடலாம்.)

சுவையான மொறு மொறு பஃப்ஸ் ரெடி!

தேங்கா பன் செய்தபொழுது பூரணம் கொஞ்சம் மீதமாகியிருந்தது, அதனால் பஃப்ஸில் அதையும் கொஞ்சம் ஃபில்லிங்-ஆக வைத்தேன், எண்ணி மூணே மூணு ஸ்வீட் பஃப்ஸ்தான் வந்தது. சப்ளை கம்மியா இருக்கவும், டிமாண்ட் அதிகமாகிடுச்சு! :) போட்டோ எடுக்கவும், சுவை பார்க்கவும் என்னவரிடம் கெஞ்சி பாதி பஃப்ஸ் வாங்கினேன்! ;) அவ்வளவு சூப்பரா இருந்தது ஸ்வீட் பஃப்ஸ்! :P :P

குறிப்பு
பஃப்ஸ்களை ஸ்டஃபிங் வைத்து மடித்த நிலையில் (ஸ்டேஜ் 14) காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்து ஃப்ரிட்ஜ்/ஃப்ரீஸரில் வைத்து தேவையான பொழுது பொரித்துக் கொள்ளலாம். அல்லது ஒரு முறை பொரித்து எடுத்த பின்னர் (ஸ்டேஜ் 16) கூட ப்ரிட்ஜில் வைத்து அடுத்த முறை டீ டைமில் பொரித்து சூடாகச் சாப்பிட சூப்பராக இருக்கும்.

*****************
முதல் படத்தில் X>Y>Z வடிவத்தில் இருக்கு மூணு பஃப்ஸும், அப்படின்னு நினைக்காதீங்க, மூணு பஃப்ஸும் என்ன ஒரு அழகான முக்கோணங்களா இருக்குன்னு நினைக்கோணும், சரியா? ;) அப்படி இப்படின்னு நானும் முக்கோணமா பஃப்ஸை மடிக்க கத்துகிட்டேன். அதை முடிந்தளவு(!) விளக்க்க்க்கமான படங்களுடன் குடுத்திருக்கேன், ஒவ்வொரு ஸ்டெப்பையும் விடாமல் போட்டோ எடுத்ததால் நிறைய படங்கள் வந்துவிட்டது, ப்ளீஸ் அட்ஜஸ்ட்! ;)
*****************


35 comments:

  1. Hi Mahi ,

    Very nice to see in Tamil.

    Keep Rocking Mahi....

    ReplyDelete
  2. my friend's mom makes this so yum and i got the recipe from her too. Nicely done and explained mahi, craving for some now

    ReplyDelete
  3. Romba nalla iruku
    http://followfoodie.blogspot.com/

    ReplyDelete
  4. Samosa superb.. loved it..
    Reva

    ReplyDelete
  5. இது சூப்பர்.. எனக்கு மடிக்கும் முறை தெரியாது, நீங்க கடலைச் சுருள்போல் செய்து மடித்ததுபோல தெரியுதே..

    நிட்சயம் செய்யோணும், “அங்கின” அண்டாட்டிக்காவில் நிறைய ஒயில் ஐட்டம்ஸ் சாப்பிட்டதால, கொஞ்சக் காலம் பொரியல் வகையை தவிர்க்கலாமே என விட்டிருக்கு...

    செய்தால் படமெடுட்துப் போடுறேன்.

    உங்களுடையது கடையில் வாங்குவதுபோல பொயிங்கி சூப்பரா வந்திருக்கு. மாக்குழைத்த பதம் சூப்பர்.

    ReplyDelete
  6. அட! மூணு பஃப்ஸும் என்ன ஒரு அழகான முக்கோணங்களா இருக்கு!!

    ReplyDelete
  7. 'தேங்கா பன்' பாரால ம்...ஹும் நல்லா இல்ல இது. காமராவ கை மாத்திட்டு சிறந்த பாதிட்ட இருந்து பாதியை புடுங்கிட்டீங்க. ;)) கொடுமை இது! ;))

    ReplyDelete
  8. பப்ஸ் மூன்றும் அழகா மடித்து நீட்டா செய்திருக்கீங்க மகி..அப்பிடியே எடுத்து சாப்பிடலாம் போல அழகா போட்டோ எடுத்திருக்கீங்க ..

    ReplyDelete
  9. Mahi, nethu evening snack enga veetla samosa thaan. Mukonama thaan parthenga ;-). Sevvagam-na enna? romba azhaga vandiruku samosa. Use of aval is different. going to try this samosa :-)

    ReplyDelete
  10. Love this better than the Punjabi aloo samosa, yumm..

    ReplyDelete
  11. சமோசா அழகா மடிச்சிருக்கீங்க மகி .
    எனக்கும் வெங்காய சமோசா ரொம்ப பிடிக்கும் .நான் லேசா தாளித்து வதக்கிதான் stuff செய்வேன் .இது ரொம்ப ஈசியா இருக்கு .செய்து பார்த்துட்டு சொல்றேன் ..
    btw மகி இப்படியெல்லாம் டேஸ்டி ரெசிப்பிஸ் போட்டு பூஸை டைவேர்ட் செய்யாதீங்க :>))))பூஸ் டவுட்ட கேக்க நீங்க சொன்ன ப்ளேசுக்கு புறப்பட்டுடாங்கலாம்:))))))))

    ReplyDelete
  12. அழகாக செய்து காட்டி அசத்திட்டீங்க மகி.

    ReplyDelete
  13. நான் வந்திட்டேன்ன்ன்ன் பஃப் சாப்புட. அழகா விளக்கமா சொல்லி இருக்கீங்க மகி. நான் முன்னே ஒரு முறை சமோசா செஞ்சு இருக்கேன் ஆனா உங்கள போலே சப்பாத்தி எல்லாம் பண்ணலே. அப்படியே மாவுல ஸ்டஃப் பண்ணி இஷ்டத்துக்கு :)) மடிச்சு பொரிச்சு எடுத்தேன். மொறு மொறுப்பா வரலே பட் சாப்புடுற மாதிரி வந்திச்சு (அது பெரிய விஷயம் இல்லே :))

    ReplyDelete
  14. //என்னவரிடம் கெஞ்சி பாதி பஃப்ஸ் வாங்கினேன்! ;) // எங்கே முன்னே டோக்ளா ல மாதிரி நல்லா இருக்குன்னு சைகை எல்லாம் போட்டோல காணோம்?? அதையும் போட்டாத்தான் நாங்க நம்புவோம் பஃப்ஸ் நல்லா இருந்திச்சுன்னு:))


    //மூணு பஃப்ஸும் என்ன ஒரு அழகான முக்கோணங்களா இருக்கு// நானும் டீச்சரை வலி மொலிகிறேன் (அதீஸ் கொஞ்சம் ஸ்பெல்லிங் கரெக்டா ன்னு செக் பண்ணுங்க ப்ளீஸ் :))

    ReplyDelete
  15. //பூஸ் டவுட்ட கேக்க நீங்க சொன்ன ப்ளேசுக்கு புறப்பட்டுடாங்கலாம்:))))))))//

    அஞ்சு விம் பார் ப்ளீஸ் டிட் ஐ மிஸ் எனிதிங் ???


    மகி ஒழுங்கா பூசொட கமெண்டுக்கு மட்டுமாச்சும் பதில் போட்டுட்டு வீக் எண்டு காக்கா போங்க இல்லேன்னா அடுத்த பதிவு நீங்க போடும் போது வந்து டின்:)) கட்டிடுவாங்க! நானே அவங்க உங்கள பொராண்டி ட்டு போனத பார்த்து தான் என் பதிவுல வந்த கமெண்டுக்கு எல்லாம் ஒடனே பதில் போட்டேன்!!!!

    Have a nice Week end Mahi. It is still HOT here!!

    ReplyDelete
  16. you have such a nice blog in tamil.. really surprised to see dear :) happy to follow u.. do stop by mine sometime..

    http://jopreet.blogspot.com

    ReplyDelete
  17. அஞ்சு விம் பார் ப்ளீஸ் டிட் ஐ மிஸ் எனிதிங் ??? //

    எல்லாம் மணத்தக்காளி மேட்டர்ல பூசுக்கு வந்த டவுட்தான் :)))))))))))

    ReplyDelete
  18. R.Punitha said... /// வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    jeyashrisuresh said... /// வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ஜெயஸ்ரீ, செய்து பாருங்க!
    ~~
    Follow foodie said... /// ப்ரீத்தி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    Lakshmi said... ///லஷ்மிம்மா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா!
    ~~
    Usha Srikumar said... /// வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க!
    ~~
    Sangeetha Nambi said... /// புக்மார்க் பண்ணியதோட மறந்துபோகாம, சீக்கிரம் செய்துபார்த்து சொல்லுங்க சங்கீதா! :)
    நன்றி!
    ~~

    ReplyDelete
  19. /athira said... நீங்க கடலைச் சுருள்போல் செய்து மடித்ததுபோல தெரியுதே../// அதே,அதே! கரெக்ட்டாப் புடிச்சுட்டீங்க அதிராவ்! :)

    //கொஞ்சக் காலம் பொரியல் வகையை தவிர்க்கலாமே என விட்டிருக்கு...// செய்தாலும் கூட நீங்க தவிர்க்கலாமே அதிரா? மற்ற மூன்றாட்களுக்கும் மட்டும் பொரிச்சுக் குடுங்கோ, நீங்க bake செய்து சாப்பிடுங்களேன்! ;) :)

    மாக்குழைத்த பதம் சூப்பர். /// ஓ..தேங்க் யூ அதிரா! அந்தப் படமெல்லாம் சேர்த்ததால்தான் போட்டோஸ் நிறைய ஆகிருச்சு, நீங்க "படிச்சே ரயேட் ஆகிட்டேன்" என்று சொல்வீங்கன்னு நினைச்சுகிட்டேன்,ஆனாலும் நாங்கள்லாம் பூ.க.அ.நெ.சங்க உறுப்பினர்கள்! அதனால தகிரியமா போஸ்ட் பண்ணிட்டேன்,எப்பூடி? ;) :)

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அதிரா. உடனுக்குடன் பதில் சொல்லிட்டேன், போனவாரம் பிறாண்டியதுக்கு பதிலா, இப்ப வந்து செல்லமா pat பண்ணிட்டுப் போங்கோ,இல்லன்னா தூக்கமே வராது! சொல்லிட்டேன். [ஆருக்குத் தூக்கம் வராது?-ன்னு க்ரிட்டிகல் கொஸ்டீன் எல்லாம் கேக்கப் படாது!கர்ர்ர்ர்ர்ர்]
    ~~
    இமா said... அட! மூணு பஃப்ஸும் என்ன ஒரு அழகான முக்கோணங்களா இருக்கு!!/// ஆஹா..நீங்க சூப்பர் இமா! நீங்கதான் நண்பேன்ன்ன்ன்ன்ன்டாஆஆஆ!!! :))))))

    சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை மாதிரி கரெக்ட்டாச் சொல்லிருக்கீங்க,குட் ஜாப்! ;)))

    /காமராவ கை மாத்திட்டு சிறந்த பாதிட்ட இருந்து பாதியை புடுங்கிட்டீங்க. ;)) கொடுமை இது! ;)) // அப்பறம் போட்டோவுக்கு என்ன பண்றதாம்? கொடுமைல்லாம் இல்லை! என் வாசகப் பெருமக்களுக்காக எனது சேவை! அவ்வ்வ்வ்வ்வ்வ்! :))))
    நன்றி இமா!
    ~~
    ராதா ராணி said...பப்ஸ் மூன்றும் அழகா மடித்து நீட்டா செய்திருக்கீங்க/// ஆத்தீ...நாஞ்செஞ்ச மிச்ச பஃப்ஸ் எல்லாம் உங்க கண்ணில படல்லியா? மூணே மூணு பஃப்ஸ் மட்டும் நீட்டா இருக்குன்னு சொல்லீட்டீகளே? ;);)

    சும்மா தமாஷ் பண்ணேன், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!
    ~~

    ReplyDelete
  20. Mira said... /// மீரா,நீங்க சீரியஸாக் கேக்கறீங்களா இல்ல காமெடி பண்ணறீங்களான்னு தெரிலை..முக்கோணம் = triangle, செவ்வகம் = rectangle. :))

    அவல் போட்டால் அது வெங்காயத்தில் இருக்கும் ஈரத்தை உறிஞ்சிரும், அதனால பஃப்ஸ் பொரிச்சு எடுத்த பிறகும் சொதசொத-ன்னு ஆகாம க்ரிஸ்ப்பாவே இருக்கும்ங்க.

    அவல் சேர்த்திருக்கோம்னே தெரியாது, வெறும் வெங்காயம் சேர்த்தமாதிரிதான் சுவையும் இருக்கும். செய்து பாருங்க மீரா!
    நன்றி!
    ~~
    /Hema said... / சேம் பின்ச் ஹேமா! நானாவது எப்பவாவது ஒரு சமோசா சாப்பிடுவேன், என்னவர் டச்சே பண்ணமாட்டார் நார்த் இண்டியன் சமோசாவை! ;)
    நன்றிங்க!
    ~~
    angelin said... லேசா தாளித்து வதக்கிதான் stuff செய்வேன்// நான் அப்படி செய்ததில்லை ஏஞ்சல் அக்கா! இந்த சுவையே பிடிச்சுப் போயிடுச்சு,வேலையும் கம்மி! :)

    பூஸ் டவுட்ட கேக்க நீங்க சொன்ன ப்ளேசுக்கு புறப்பட்டுடாங்கலாம்:))))/// டைவர்ட்டாவது இன்னொண்ணாவது? ஒரு நாலஞ்சு பஃப்ஸ்-ஐ நியூஸ் பேப்பரில மடிச்சு, பூஸாரின் back-pack-ல வைச்சு அனுப்பிவிட்டுருவோம்,விட்டுரக்கூடாது! ராமபிரானுக்கும் பஃப்ஸ் குடுத்துட்டு வந்திருவாங்கள்ல! ;)
    நன்றி ஏஞ்சல் அக்கா!
    ~~
    ஸாதிகா said... //வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸாதிகாக்கா!
    ~~

    ReplyDelete
  21. En Samaiyal said...மொறு மொறுப்பா வரலே பட் சாப்புடுற மாதிரி வந்திச்சு (அது பெரிய விஷயம் இல்லே :)) /// ஸ்ட்ரிக்ட்லி ந்ந்ந்ந்ந்நோ கமென்ட்ஸ் கிரிஜா! ;))))) பஃப்ஸ் எப்படி இருந்ததுன்னு டாக்டர் & சன் சொல்லாம நான் கமென்ட் சொல்ல விரும்பலை! ஹாஹா!

    எங்கே முன்னே டோக்ளா ல மாதிரி நல்லா இருக்குன்னு சைகை எல்லாம் போட்டோல காணோம்?? /// உங்க மெமரி நல்லா இருக்கு, கேமரா தான் ரிப்பேருன்னு நினைக்கிறேன் கிரிஜா! :)))))

    நல்லா இருக்குன்னு சைகை செய்த கை வேறு கை,ரெசிப்பியும் டோக்ளா இல்லே,வேற ரெசிப்பி. அப்புறம்,..டோக்ளா புடிச்ச கை வேறு கை! இந்த பஃப்ஸை பிடிச்சிருப்பதும் அதே கை! ஆனா நல்லா இருக்குன்னு சை கை செய்த கை இது இல்லை! ஆக மொத்தம் நீங்க கை-யை சரியாக் கவனிக்கிறதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.[உஸ்ஸ்ஸ்....ஸப்பா, தெளிவாக் குழப்பியாச்சு!]

    கிரிஜா,நில்லுங்க,"கை-கை-கை-கை"ன்னு கத்திட்டே ஓடப்படாது! ஐரோப்பாலே எல்லாரும் பயந்துருவாங்க! :)))))

    ஒழுங்கா பூசொட கமெண்டுக்கு மட்டுமாச்சும் பதில் போட்டுட்டு வீக் எண்டு காக்கா போங்க இல்லேன்னா அடுத்த பதிவு நீங்க போடும் போது வந்து டின்:)) கட்டிடுவாங்க!/// அதுக்குத்தானே மெனக்கெட்டு மணிக்கணக்கா உட்கார்ந்து பதிலைத் தட்டிட்டு இருக்கேன் கிரிஜா! இப்ப மீ எஸ்கேப்பூ! :) :)

    உங்கடவுட்டை ஏஞ்சல் அக்கா விம் பார் போட்டு விளக்கிட்டதால் எனக்கு வேலை குறைந்தது. கோ அன்ட் ஸீ ஹர் போஸ்ட்'ஸ் கமென்ட்ஸ்! :) தேங்க்ஸ் ஏஞ்சல் அக்கா!

    நன்றிங்க கிரிஜா, வருகைக்கும் கருத்துக்கும்! உங்களுக்கும் இனிய ஹொட் வாரஇறுதி! [இங்கே மழை...கர்ர்ர்ர்ர்!]
    ~~
    PT said... /// முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ப்ரீத்தி! போரடிக்கறப்பெல்லாம் இங்கே வாங்க, நல்லா பொழுது போயிடும்! :))) கட்டாயம் உங்க வலைப்பூவுக்கும் வருகிறேன்.
    தமில் வலைப்பூ மட்டுமில்லாமல் ஆங்கிலத்திலும் ஒரு வலைப்பூ இருக்கு, டைமிருந்தா பாருங்க..ரைட் சைட்ல லிங்க் இருக்கு!
    [என்ன ஒரு ஃப்ரீ பப்ளிஸிட்டி?-ன்னு யாரப்பா,அங்கே உறுமுறது?...அவ்வ்வ்வ்! :)))]
    நன்றிங்க!
    ~~

    ReplyDelete
  22. யாரப்பா,அங்கே உறுமுறது?...அவ்வ்வ்வ்! :)))]


    meeeeeeeee

    ReplyDelete
  23. அடடா சம்சா போச்சே
    கொஞ்சம் தாமதாம வந்து விட்டேனோ

    ReplyDelete
  24. கை-கை-கை-கை- கை -கை கை x 100000 கர்ர்ரர்ர்ர்

    ReplyDelete
  25. //உங்க மெமரி நல்லா இருக்கு// டாங்க்ஸ் டாங்க்ஸ் எனக்கு ஓவரா புகழ்ந்தா புடிக்காது :))

    //கேமரா தான் ரிப்பேருன்னு நினைக்கிறேன் கிரிஜா! :))))) // இருக்கும் இருக்கும் எதுக்கும் என் தம்பிய ஒரு நல்ல காமெராவ வாங்கி கொடுக்க சொல்லுங்கோ :))


    //பஃப்ஸ் எப்படி இருந்ததுன்னு டாக்டர் & சன் சொல்லாம நான் கமென்ட் சொல்ல விரும்பலை// சாரி அவுங்க வாயில இன்னும் அந்த பஃப்ஸ் வெச்சுகிட்டு இருக்குறதால சொல்ல மாட்டாங்க :))


    அந்த கை காண்ட்வி சாரி டங் சிலிப் ஆகி டோக்ளா ஆயிடிச்சு இதை எல்லாம் போய் பெரிசு பண்ணி என்னைய இந்த வெயில்ல கை கை ன்னு ஓட விடுறது நியாயமா ????

    இந்த படத்துல இருக்குறது உங்க கை தான் ன்னு தெரியும் அதனாலதான் நல்லா இருக்குன்னு சைகை போட்டோ போடலேன்னா நான் ஒத்துக்க மாட்டேன்னு சொன்னேன். (உஸ்ஸ்ஸ் பூஸ் எல்ப் மீ ப்ளீஸ் உங்கள மாதிரியே ரெம்ப சமாளிக்க வேண்டியதா இருக்கு :))

    ReplyDelete
  26. Mahi it was a serious question as out of my laziness to google for it. I know chathuram, vattam and mukkonam. but always confused with the term "Sevvagam" ha.ha.a. right from my childhood days.

    Saturday we had samosa in a famour joint in our place and it had similar stuffing (aval + onion) and tasted delicious. So going to try yours soon.

    ReplyDelete
  27. ஸ்சப்பாடா! செமையாக இருக்கு,.:)..

    ReplyDelete
  28. சப்பாத்திகளாக இட்டு தோசைக்கல்லைக் காயவைத்து 20 வினாடிகளில் போட்டெடுத்து
    பதமாக ஈரப்பதத்தைக் குறைக்கும் விதம் மஹி நீ தேர்ந்த மஹிதான். எல்லாமே ரொம்பவே அசத்தல்தான். நான் ரொம்பவே தாமதம் மஹி. கமென்ட் எழுதுவதில். டைம் அப்படி போய்விடுகிறது

    ReplyDelete
  29. அவல் எல்லாம் சேர்த்து வித்தியாசமா செஞ்சிருக்கீங்க. பிச்சி வச்சிருக்கிற கடைசி இரண்டு படங்கள் சூப்பர்.

    ReplyDelete
  30. //யாரப்பா,அங்கே உறுமுறது?...அவ்வ்வ்வ்! :)))] meeeeeeeee // ஆஹா,நீங்கதானா அது? வேணாம்,உறுமினா தொண்டை கட்டிக்கும், அப்புறம் ஜில்ஜில் ஜிகர்தண்டா குடிக்க கஷ்டம்! நீங்க சாந்தமாவே இருங்க ஏஞ்சல் அக்கா! :))
    ~~
    /அடடா சம்சா போச்சே
    கொஞ்சம் தாமதாம வந்து விட்டேனோ / அதனாலென்ன சிவா? நீங்க தாமதாம தாமதாம தாமதாம:))))) வருவீங்கன்னுதான் உங்களுக்கு சம்சா(!?) ஸ்பெஷல் பார்சல் எடுத்துவைச்சு அனுப்பிட்டேன். வருகைக்குக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    கிரிஜா,நான் சொன்ன மெமரி = உங்க ஞாபகசக்தி, கேமரா = உங்க ரெண்டு கண்கள்! இப்ப //ஒரு நல்ல காமெராவ வாங்கி கொடுக்க சொல்லுங்கோ :))// இப்புடிச் சொன்னா??! ஆஆஆஆஆஆ! ஒரு canon T3i கேட்டீங்கன்னா கூட $1000 போனா போகுது(!)ன்னு வாங்கி அனுப்பிருவேன், ஆனா கண்ணு கேக்கறீங்களே? ஊமைவிழிகள் படம்லாம் நினைவுக்கு வருது! ஹ்ஹாஹிஹிஹாஹா! :)))

    நீங்க //கை-கை-கை-கை- கை -கை கை x 100000 // என்று ஓடும்போதே நினைச்சேன், எதுக்கும் உங்க வீட்டு டாக்டர் இல்லாம ஒரு நல்ல சைக்யாட்ரிஸ்ட் கிட்ட செக்-அப் பண்ணுங்க! :)))))))
    ~~
    மீரா, நீங்க சீரியஸாக் கேட்டிருப்பீங்கன்னுதான் எனக்கும் தோணுச்சு! அதான் காமெடி பண்ணாம பதில் சொன்னேன்! :) சீக்கிரமா செய்து பார்த்து சொல்லுங்க! நன்றி!
    ~~
    ஆசியாக்கா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
    ~~
    காமாட்சிம்மா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிம்மா! நாக்கு படுத்தற பாட்டில் நான் இப்படியெல்லாம் செய்யறேன், அதை நீங்க வேற பாராட்டறீங்க! ரொம்ப சந்தோஷம்மா! :)
    ~~
    சித்ராக்கா, படத்தில பாதி தெரிவது ரெண்டுமே ஸ்வீட் பஃப்ஸ்! அடுத்தமுறை நீங்க சொன்ன Wanton wrap-ஐத் தேடிப்புடிச்சுடுவேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
    ~~

    ReplyDelete
  31. //ஆஆஆஆஆஆ! ஒரு canon T3i கேட்டீங்கன்னா கூட $1000 போனா போகுது(!)ன்னு வாங்கி அனுப்பிருவேன்//

    இதை எல்லாம் நான் கேக்குற வரைக்கும் வெயிட் பண்ண கூடாது. நாங்க அப்புடி இப்புடி தான் ஹின்ட் குடுப்போம் நீங்க குறிப்பு அறிஞ்சு அனுப்பிடணும் ஓகே:))


    //ஊமைவிழிகள் படம்லாம் நினைவுக்கு வருது// பாருங்க பழைய படம் எல்லாம் உங்களுக்கு ஞாபக படுத்தி இருக்கேன் எப்பேர்பட்ட சேவை :))

    //எதுக்கும் உங்க வீட்டு டாக்டர் இல்லாம ஒரு நல்ல சைக்யாட்ரிஸ்ட் கிட்ட செக்-அப் பண்ணுங்க! :))))))) // இத படிச்சா அப்பவியோட பைத்தியத்துக்கு வைத்தியம் பார்த்த டாகுட்டேர் தான் நினைப்புக்கு வருது:)) டாக்குட்டேர் நெலைமைய நெனச்சு ஐ ஆம் நாட் டேகிங் ட்ரீட்மென்ட் :))

    ReplyDelete
  32. hi mahi i love your blog but i cant follow tamil and so i request to add google translate gadget to your blog so that it would be helpful for some people like me..

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails