Friday, June 1, 2012

ஸ்பினாச் கோஃப்தா குழம்பு / பாலக்கீரை உருண்டை குழம்பு

தேவையான பொருட்கள்
கோஃப்தாவிற்கு
ஸ்பினாச் / பாலக்கீரை [கழுவி, நறுக்கியது] - 1 கப்
கடலை மாவு ~~~1/2 கப்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
மல்லி-சீரகத்தூள் -1 டீச்பூன்
சீரகம்- 1டீஸ்பூன்
**எள்ளு-வேர்க்கடலைப் பொடி -1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
உப்பு
தண்ணீர்- சிறிது

குழம்பிற்கு
வெங்காயம் -1
தக்காளி -2
மிளகாய்த்தூள்- 1 1/2டீஸ்பூன்
மல்லித்தூள் -11/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
பிரியாணி இலை -1
கிராம்பு-1
பட்டை - சிறுதுண்டு

செய்முறை

கோஃப்தாவிற்கு தேவையான பொருட்களை ஒரு கிண்ணத்தில் எடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசைந்துகொள்ளவும். கடலை மாவும் கால் கப்பிற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.
பணியாரக் கல்லை காயவைத்து, கொஞ்சமாக எண்ணெய் விட்டு, கீரை-கடலைமாவு கலவையை சிறு கோஃப்தாக்களாக உருட்டி போடவும்.
ஒரு புறம் வெந்ததும், திருப்பிவிட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுத்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை தனித்தனியே அரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவிட்டு, பிரியாணி இலை - பட்டை - கிராம்பு தாளித்து அரைத்த வெங்காயம் சேர்த்து பச்சைவாசம் போகும்வ்ரை வதக்கவும்.
பிறகு அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள் - மல்லித்தூள் - மஞ்சள்தூள் - உப்பு சேர்த்து ஒண்ணரை கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
கலவை பச்சைவாசம் அடங்க நன்கு கொதித்து சுண்டியதும், அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்துவிட்டு, கோஃப்தாக்களை சேர்க்கவும்.
குறைந்த தீயில் சில நிமிடம் கொதிக்கவிட்டு கொத்துமல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையாக ஸ்பினாச் கோஃப்தா குழம்பு தயார். சப்பாத்தி, நாண், ஜீரா ரைஸ் போன்ற நார்த் இண்டியன் உணவுவகைகளுக்கு இந்த கோஃப்தா கறி சூப்பராக இருக்கும்.

குறிப்பு
கடலை மாவு சேர்ப்பது கீரை நன்கு சேர்ந்து உருண்டைகளாக உருட்டும் பதம் வருவதற்காக. எனவே அரைக்கப் மாவையும் மொத்தமாக சேர்க்காமல், கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். உருட்டும் பக்குவம் வந்ததும் நிறுத்திவிடவும்.
க்ரேவி நிறைய வேண்டும் என்றால் உங்க விருப்பபடி தண்ணீர் அளவை அதிகரிக்கலாம்.
கோஃப்தாவிலும் உப்பு இருக்கும், குழம்பிலும் உப்பு சேர்க்கிறோம், அதனால் கவனமாக சேர்க்கவும்.
**எள்ளு-வேர்க்கடலைப் பொடி- ஒரு டேபிள்ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை, அரை டீஸ்பூன் எள்ளை பொடித்த பொடி.
வாக்கிங் போக கிளம்பிட்டு இருந்ததால் அவசரத்தில் எடுத்த படம், கொஞ்சம் ஷ்ஷ்ஷ்ஷ்ஷேக் ஆகிருச்சு, அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க! :))) போட்டோவை தெளிவாப் பாக்கோணும்னா நான் ஒரு remedy சொல்றேன், தலைய (உங்க தலையத்தான்...) இடம் வலமா மணிக்கு 5 கி.மீ. வேகத்தில ஆட்டுங்க, அப்ப தெளிவாத் தெரியும்! ஹிஹி..ஹி..என்னது, தெரியலையா? அப்ப வலமிருந்து இடம், அல்லது மேலிருந்து கீழ், கீழிருந்து மேல்..இப்படி எதாச்சும் ஒரு காம்பினேஷன் ட்ரை பண்ணுங்க, கண்டிப்பா தெளிவாகிருவீங்க! :)))

69 comments:

  1. Meeeeee first poos anju imaaa vaans sivaaa heee hee hee

    ReplyDelete
  2. வாங்க கீரி...டமில்;) ப்ளீஸ்!

    இப்புடி பல்லைக் காட்டி எல்லாரையும் பயமுறுத்தாதீங்க! :))))

    ReplyDelete
  3. ஸ்பினாச் கோப்தா குழம்பு நல்லா இருக்கு மகி. கோப்தா உருண்டைகள் சுலபமா சொல்லி இருக்கீங்க. குழம்பில் போடாமல் வெறுமனே சாப்புடலாம் போல இருக்கே.

    //தலைய (உங்க தலையத்தான்...) // நல்ல வேளை சொன்னீங்க நான் என் வீ.கா தலைய இல்ல உருட்டி விளையாடி இருப்பேன். நானே உங்க வாய்க்கு தீனி போடுறேன் பாருங்க:)) என்ன பண்ணுறது ஆல் மை டைம் :))

    //அப்ப தெளிவாத் தெரியும்// உங்க ரெமேடிய ட்ரை பண்ணாமலே எனக்கு தெளிவா ஆஆ தெரியுது ஆஆ வ்வ்வ்வ் நீங்க வேற ஏதும் சஜெஷன் கொடுக்குறதுக்கு உள்ளே நான் எஸ்கேப் ப்ப்ப்ப் :))

    ReplyDelete
  4. //இப்புடி பல்லைக் காட்டி எல்லாரையும் பயமுறுத்தாதீங்க! :))))// ஓகோ இங்கே தான் ஒழிச்சு:)) இருக்கீங்களோ . புன்னகை அரசியின் சிரிப்பை இப்படி கேலி பண்ணலாமா எல்லாம் உங்களுக்கு பொறாமை வேற என்ன :))

    ReplyDelete
  5. /ரெமேடிய ட்ரை பண்ணாமலே எனக்கு தெளிவா ஆஆ தெரியுது / ஓ...தேங்க்ஸ் பார் தி க்ளாரிஃபிகேஷன் கிரிஜா! அப்ப உங்க கேமரா:) ரிப்பேர் ஆகி, நல்ல்ல்ல்ல்ல்ல்லா வொர்க் பண்ணுது! ஸோ...canon T3i கேன்ஸல்! ஆன்லைன்ல போட்ட ஆர்டரை இப்ப,இப்ப, இப்பவே கேன்ஸல் பண்ணிடறேன்! :))))

    கோஃப்தா வெறுமனே சாப்பிட்டாலும் நல்லா இருக்கும், ட்ரை பண்ணிப் பாருங்க! கீரை வடைய டீஃப் ஃப்ரை பண்ணாம இப்புடி செய்யறோம்,அவ்ளோதானே?! ;))))

    ReplyDelete
  6. //T3i கேன்ஸல்! ஆன்லைன்ல போட்ட ஆர்டரை இப்ப,இப்ப, இப்பவே கேன்ஸல் பண்ணிடறேன்! :)))) //

    நோ நோ நோ நான் இப்போ கண்ணாடி :)) போட்டு கிட்டு உங்க ப்ளாக் பக்கம் வரேன் தட்ஸ் ஒய் யு நோ ? இதுக்காக சின்ன புள்ளத்தனமா ஆர்டர் கொடுத்தத கான்ஸல் எல்லாம் பண்ண கூடாது அப்புறம் சாமி குத்தம் ஆயிடும்ம் :))

    ReplyDelete
  7. /புன்னகை அரசியின் சிரிப்பை இப்படி கேலி பண்ணலாமா/ என்ன்ன்ன்ன்ன்ன்னது..புன்னகை அரசியா? இதைப் பார்த்து கே.ஆர்.விஜயாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுத்தாம் கிரிஜா! நானும் பெயின்ட்;) பண்ணிட்டேன்! :)))))

    /நான் என் வீ.கா தலைய இல்ல உருட்டி விளையாடி இருப்பேன்./ எ.கொ.கி.இ.??!!! அப்ப நீங்க பையனுடன் கிரிக்கெட் ப்ராக்டீஸ் போறதில்லையா? ஆ.காரர் தலைய வைச்சே football விளையாடறீங்களா? அவ்வ்....வ்வ்வ்!

    டாக்டர்...என்ன தவம் செய்தனை? இப்படி ஒரு பரபிரும்மம் உங்க மனைவியாக வர என்ன தவம் செய்தனை?!! ;))))) [கீரி,இதெல்லாம் உங்க ஆ.காரர் படிப்பாரா???! எல்லாம் ஒரு எச்சரிக்கைக்குக் கேட்டு வைச்சுக்கிறதுதான்! ;) ]

    ReplyDelete
  8. இன்னையில இருந்து ஒரு வாரம் லீவ் ஸோ எப்பெல்லாம் முடியுதோ வரேன். ஒடனே வரலேன்னு நோ பீலிங் ஓகே?? ( ச்சும்ம்மா ஒரு பில்ட் அப்புதேன் :))

    ReplyDelete
  9. /ஸோ எப்பெல்லாம் முடியுதோ வரேன். ஒடனே வரலேன்னு நோ பீலிங் ஓகே?? ( ச்சும்ம்மா ஒரு பில்ட் அப்புதேன் :)) / நோ ப்ராப்ளேம்...எப்ப வேணா வாங்கோ! இந்த வாரம் போஸ்ட் கோட்டா முடிந்தது. இனி அடுத்த திங்கள்/செவ்வாய்தான் அடுத்த பதிவு.

    /அப்புறம் சாமி குத்தம் ஆயிடும்ம் :))/ சாமிக்கும் 2 கோஃப்தா குடுத்து சரிக்கட்டிட்டேன், சக்ஸஸ்ஃபுல்லா ஆர்டர் கேன்ஸலும் ஆகிருச்சு! ஹிஹி!

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கிரிஜா!

    ReplyDelete
  10. //நானும் பெயின்ட்;) பண்ணிட்டேன்! :))))) // மகி எந்திரிங்கோ ஓஓ பூஸ் சுட்டு :)) ஆறின தண்ணி இருந்தா மகிக்கு தெளியுங்கோ இப்ப நான் என்ன சொல்லிட்டேன் ன்னு பெயிண்ட் ஆவுறீங்க. சினேகாவுக்கு அப்புறம் புன்னகை க்கு இந்த கிரிஸாஆ தான் ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ

    //ஆ.காரர் தலைய வைச்சே football விளையாடறீங்களா? அவ்வ்....வ்வ்வ்!// அதெல்லாம் அப்பப்போ என் மூட பொறுத்து ஆடுறதுதான் :))

    //டாக்டர்...என்ன தவம் செய்தனை?// இந்த லைன கத்தி முனையில படிக்க வெச்சிட்டோமுல்லே :))

    //என்ன தவம் செய்தனை?!! // ஒற்றைக்கால் தவம் !! அடுத்த ஆறு ஜென்மத்துக்கும் நான் தான் பொண்டாட்டின்னு அவர்கிட்டே சொல்லி இருக்கேன் :))

    //கீரி,இதெல்லாம் உங்க ஆ.காரர் படிப்பாரா???! // நீங்க பயப்புடாதீங்கோ படிக்க மாட்டார் நான் ஏதாச்சும் படிச்சு அவர் கழுத்தை அறுத்து கிட்டு இருப்பேன்:))

    ReplyDelete
  11. //வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கிரிஜா// நான் இன்னும் போகவே இல்லே என்னைய யாரு இப்படி வெரட்டுறது???? கழுத்தை புடிச்சு தள்ளினாலும் போக மாட்டோமுல்லே :))

    ReplyDelete
  12. லைவ் ட்ராபிக் பீட் பார்த்தா நெறைய்ய பேர் வந்து உங்க ஸ்பினாச் குழம்ப லுகிங் நானும் நீங்களும் கும்மி அடிக்குறதால யாரும் உள்ளே வர பயப்புடுறாங்களா :))

    ReplyDelete
  13. /நானும் நீங்களும் கும்மி அடிக்குறதால யாரும் உள்ளே வர பயப்புடுறாங்களா :)) /இருக்கலாம்! :)) நம்மல்லாம் அப்பாவிங்கன்னு தெரியாம பயப்படறாங்க போல! ;)

    /நான் இன்னும் போகவே இல்லே என்னைய யாரு இப்படி வெரட்டுறது???? / அவ்வ்வ்வ்...ஏதோ,ஒரு வாரம் லீவு, நோ ஃபீலிங்ஸூ-ன்னெல்லாம் சொன்னீகளா..நான் நீங்க கிளம்பிட்டீகன்னு தப்பா நினைச்சுட்டேன். மத்தபடி வெரட்டவெல்லாம் இல்லை..நீங்க இருங்க கிரிஜா! :)))

    ReplyDelete
  14. நம்மல்லாம் அப்பாவிங்கன்னு தெரியாம பயப்படறாங்க போல! ;) // ஹீ ஹீ பாவம்

    சைக்கில் காப்புல போய் டீச்சர் வீட்டுல கமெண்ட் போட்டிட்டு வந்திட்டேன்.

    //ஏதோ,ஒரு வாரம் லீவு, நோ ஃபீலிங்ஸூ-ன்னெல்லாம் சொன்னீகளா// ச்சே ச்சே அழுவாதீங்க மகி. இந்தாங்க டிஷ்யு. ஒரு ஏழு நாள் தான்

    ReplyDelete
  15. /சைக்கில் காப்புல போய் டீச்சர் வீட்டுல கமெண்ட் போட்டிட்டு வந்திட்டேன். / கலக்கறீங்க போங்க! லேடி-பர்ட் சைக்கிள்ளதானே போனீங்க? அங்க டீச்சரும் நானும் மட்டும் கும்மியடிச்சுட்டு:) இருந்தோம்! :))))))

    /ச்சே ச்சே அழுவாதீங்க மகி. இந்தாங்க டிஷ்யு. ஒரு ஏழு நாள் தான் / குடுங்க,குடுங்க!..அட, அதென்ன ஒண்ணு-ரெண்டா குடுக்கறீங்க? அப்பூடியே pack.-ஐக் குடுங்க கிரிசா! அடுத்த பார்டிக்கு டிஷ்யூ பேப்பர் வாங்கணும்னு நினைச்சேன், இப்ப வாங்க வேணாம்! ;))

    ReplyDelete
  16. //நீங்க எவ்வ்வ்வ்வ்வ்வளவு அடிச்சாலும் தாங்கும் "கைப்புள்ள"ன்ற தகிரியத்தில அடிச்சு ஆடினா... //

    அடி ஆத்தீ இந்த விஷயம் அமெரிக்கா வரைக்கும்ம்ம்ம் தெரிஞ்சிடிச்சா ஸீ என் என் இல் சொல்லிட்டாங்களோ :)))


    //உஸ்ஸ் அப்பா கொழுத்தி போட்டாச்ச் :)/ கர்ர்ர்ர்ர்..மீள, கொளுத்தி...ஒரு ஒன் மில்லியன் டைம் எழுதுங்க கிரி!//

    இதுல என்ன தப்புன்னு எனக்கு இப்போ தெரிஞ்சாகணும் தங்க மீன் அண்ட் டீச்சர் ஜெல்ப் ப்ளீஸ் :))

    ReplyDelete
  17. //அங்க டீச்சரும் நானும் மட்டும் கும்மியடிச்சுட்டு:) இருந்தோம்! :)))))) // ஆமா பார்த்தேன் டீச்சர் இப்போ காணோம் ஒரு வழி பண்ணிட்டீங்க போல இருக்கு டீச்சர் எஸ்கேப் :))

    //அப்பூடியே pack.-ஐக் குடுங்க கிரிசா// தெரியும் மகி என் மேலதான் உங்களுக்கு எவ்வுளோ பாசம்ம்ம். அப்புறம் என்னமோ எழுதி இருக்கீங்க என்னன்னு தான் தெரியல :))))

    ReplyDelete
  18. பூஸ் நாளைக்கு வந்து நம்ம கும்மிய பார்த்திட்டு உறுமுறது அண்டார்டிகா வரைக்கும்ம்ம் கேக்க போவுது மகி. அந்த தேன் பாயும் குரலை :)) கேக்கவாச்சும் எப்படியாவது வரேன் :))

    ReplyDelete
  19. /இதுல என்ன தப்புன்னு எனக்கு இப்போ தெரிஞ்சாகணும் தங்க மீன் அண்ட் டீச்சர் ஜெல்ப் ப்ளீஸ் :)) / அட ஆண்டவா! நீங்க போடற "ழ" தானுங்க தப்பூ! :))) மீழ இல்லை, மீள!! கொழுத்தி-இல்லை, கொளுத்தி!

    என்னதான் "ழ" தமிழுக்குச் சிறப்புன்னாலும், கண்ட நிண்ட இடத்தில எல்லாம் "ழ" போடப்படாது கிரிஷா! ;))))) அப்புறம், முற்றுப்புள்ளி, கமா வரும் இடங்களில் எல்லாம் ஒரு ஸ்பேஸ் விட்டுத்தான் அடுத்த வார்த்தை டைப் செய்யணும். வல்லினத்துக்கு அப்புறம் ஒற்றெழுத்து வரக்கூடாது. விட்டீங்கன்னா இப்படியே சொல்லிட்டே போவேன்! தமிழ் க்ளாஸுக்கு வர நீங்க ரெடியா? :))))

    /ஸீ என் என் இல் சொல்லிட்டாங்களோ :)))/ ஆமாம், ஏபிசி-ல கூட சொன்னாங்க..என்பிசி-லயும் சொன்னாங்க! அவ்வளவு ஏன் HG- TV ல கூட சொல்றாங்கன்னா பாருங்களேன்! யு ஆர் எ செலிபரிட்டி நவ்! :))))))

    ReplyDelete
  20. /பூஸ் நாளைக்கு வந்து நம்ம கும்மிய பார்த்திட்டு உறுமுறது அண்டார்டிகா வரைக்கும்ம்ம் கேக்க போவுது மகி./ இல்லே, நான் குடுத்த ஃபிஷ் ஃப்ரை & சிக்கின் கறி சாப்பிட்டு பூஸுக்கு தொண்டை கட்டிகிச்சாம், அதான் கட்டிலுக்கடியில் ஒழி;)ச்சு இருக்காங்க..சத்தமே வரல்லை! :)

    தங்க மீனையும் காணோம்! மகனுக்கு கல்யாணம் செய்யும் வேலையில பிஸியாகிட்டாங்க போல! ;)

    ReplyDelete
  21. //தங்க மீனையும் காணோம்! மகனுக்கு கல்யாணம் செய்யும் வேலையில பிஸியாகிட்டாங்க போல! ;)// மருமகளுக்கு எக்ஸாம் ன்னு அங்கின படிச்சனே ?? இப்புடி படிப்பு முடியுறதுக்கு உள்ளே கல்யாணத்துக்கு என்ன அவசரம் அஞ்சுவுக்கு:))


    //நான் குடுத்த ஃபிஷ் ஃப்ரை & சிக்கின் கறி சாப்பிட்டு பூஸுக்கு தொண்டை கட்டிகிச்சாம்// ஸோ கொஞ்ச நாளைக்கு நோ கர்ர்ர்ர் :))

    ReplyDelete
  22. //அட ஆண்டவா! நீங்க போடற "ழ" தானுங்க தப்பூ! :))) மீழ இல்லை, மீள!! கொழுத்தி-இல்லை, கொளுத்தி// நான் எப்பவும் கொழுந்து விட்டு பிரகாசமா இருக்குறதால கொழுத்திட்டேன் :))

    //தமிழ் க்ளாஸுக்கு வர நீங்க ரெடியா? :)))) // பூஸ் வந்தாதான் நானும் வருவேன். பீஸ் உக்கு நானே கைப்பட செஞ்ச சமையல் எடுத்துகிட்டு தான் வருவேன் ஓகே வா :))

    //யு ஆர் எ செலிபரிட்டி நவ்! :))))))// ஐ ஆம் அல்வேஸ் எ செலிப்ரிட்டி ஹா ஹா :))

    ReplyDelete
  23. /படிப்பு முடியுறதுக்கு உள்ளே கல்யாணத்துக்கு என்ன அவசரம் அஞ்சுவுக்கு:))/ நல்லாக் கேளுங்க கிரிஜா! பாலவிவாஹம் பண்ணிவைக்கிறாங்க! :) நாம இவ்ளோ நேரமா கும்மியடிக்கிறோம், ஒரு ஈ-காக்காவைவைக் கூட காணோமே? அவ்வ்வ்வ்!

    ReplyDelete
  24. /பீஸ் உக்கு நானே கைப்பட செஞ்ச சமையல் எடுத்துகிட்டு தான் வருவேன் ஓகே வா :)) / என்ன இப்பூடி சொல்லிப்போட்டீங்க? நம்ம என்ன அப்புடியா பள;)கிட்டு இருக்கோம் கிரிஜா? உங்க கிட்ட, பூஸ்கிட்ட எல்லாம் நான் ஃபீஸ் எல்லாம் வாங்குவேனா என்ன? ஃப்ரீஈஈஈ க்ளாஸ் வித் ஃபுல் 3 கோர்ஸ் மீல், டீல் ஓக்கேவா?

    [அப்பாடி..எப்படியோ கொக்ககோலா கொழம்புல இருந்து தப்பிச்சாப் போதும்டா சாமீ..பூஸ் வேற வாயப்பய;) ஒட்டீஈஈஈ;) கொண்டுவருவேன்னு அடம் புடிப்பாங்க..]

    ReplyDelete
  25. //ஒரு ஈ-காக்காவைவைக் கூட காணோமே? அவ்வ்வ்வ்!// எல்லாரும் உங்க ஸ்பினாச் குழம்ப பார்த்து பயந்து :)) போய் நைட் பதினோரு மணிக்கே தூங்கிட்டாங்க போல இருக்கே. நான் மட்டும்தான் விண்ணை தாண்டி வருவாயா டீ வில பார்த்துகிட்டே கும்மி ;))

    ReplyDelete
  26. //நம்ம என்ன அப்புடியா பள;)கிட்டு இருக்கோம் கிரிஜா? உங்க கிட்ட, பூஸ்கிட்ட எல்லாம் நான் ஃபீஸ் எல்லாம் வாங்குவேனா என்ன?// நீங்க என்னதான் சொல்லுங்க குரு தட்சிணை குடுக்காம கத்துகிட்டா மண்டையில:)) ஏறாதாம். ஸோ நான் பேபி காரன் ஆச்சும் செஞ்சு எடுத்து கிட்டு தான் வருவேன்:))

    ReplyDelete
  27. கொஞ்சம் நில்லுங்க வாறேன்ன்... கீரிக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

    இண்டைக்கு எங்கேயும் வட கிடைக்கேல்லை, ஆனா வீட்டில் வடை சுட்டமே:))))

    ReplyDelete
  28. /பேபி காரன் ஆச்சும் செஞ்சு எடுத்து கிட்டு தான் வருவேன்:)) / குரு தட்சணைதான் குடுக்கொணும், "தண்டனை" குடுக்கப் படாது! :)

    நீங்க வேணா ப்ளாங்க் செக் குடுங்களேன் கிரிஜா! I gladly accept Master card/Visa card also! :)))))) ஆனா இந்த 'செஞ்சு எடுத்துகிட்டு வரது' மட்டும் நாட் அக்சப்டட்! ;)

    பூஸ் இப்பதான் சிக்கின்-பிஷ் எல்லாம் மோப்பம் புடிச்சிட்டு இருக்காங்க, இனிமேல் தூங்கறதாவது?! :))))

    ReplyDelete
  29. //En Samaiyal said...
    //ஒரு ஈ-காக்காவைவைக் கூட காணோமே? அவ்வ்வ்வ்!// எல்லாரும் உங்க ஸ்பினாச் குழம்ப பார்த்து பயந்து :)) போய் நைட் பதினோரு மணிக்கே தூங்கிட்டாங்க போல இருக்கே. நான் மட்டும்தான் விண்ணை தாண்டி வருவாயா டீ வில பார்த்துகிட்டே கும்மி ;))////

    அவ்வ்வ்வ்வ் நானும் தேனீர் விடுதி ஒன்றில, விண்ணைத்தாண்டி வருவாயா ஒன்றில ஓடிச்சு....

    தேனீர் விடுதி மட்டும் முழுசா பார்த்தேன்ன்.. வி.தா.. வவ்வாயாஆஆ... ஓல்ரெடி பார்த்ததால... டிமிக்க்கி விட்டிட்டேன்:)) அப்பூடி எப்பூடி?:))

    ReplyDelete
  30. //பூஸ் இப்பதான் சிக்கின்-பிஷ் எல்லாம் மோப்பம் புடிச்சிட்டு இருக்காங்க, இனிமேல் தூங்கறதாவது?! :))))// பூசுக்கு தொண்டையாவது கட்டுறதாவது கர்ர்ர் ரர்ர்ர்ர் இங்கே வரைக்கும் கேக்குதே :))

    ReplyDelete
  31. //கொஞ்சம் நில்லுங்க வாறேன்ன்// நோ நோ நான் உக்கார்ந்து தான் கமெண்ட் போடுவேன் நின்னா கால் வலிக்கும்ம்ம் :))

    ஸோ நீங்களும் ஐங்கரன் வெச்சு இருக்கீங்களா பூஸ் ?? நான் தே .வி.பார்க்கல. dvd வெச்சு இருக்கோம். இன்னும் பார்க்கல. எப்புடி இருந்திச்சு ? வி.தா.வ நானும் பார்த்திட்டேன் முன்னே இப்போ அகைன் பாட்டுக்காக

    ReplyDelete
  32. /ஸோ நீங்களும் ஐங்கரன் வெச்சு இருக்கீங்களா பூஸ் ?? நான் தே .வி.பார்க்கல. dvd வெச்சு இருக்கோம். இன்னும் பார்க்கல. எப்புடி இருந்திச்சு ?/ ஹல்லோ..ஹல்லோ! ஸ்டாப்! நீங்க பேசிட்டு இருப்பது அமெரிக்கன் ப்ளாக்ஸ்பேஸ்! ஐரோப்பா டீவி சானல்லாம் நாட் அலவ்டு! ;)))))

    வி.தா.வ. ஓகே,ஆனா தேனீர் விடுதின்னும் படம் வந்திருக்கா? அவ்வ்வ்வ்! ஒன்ஸ் அகய்ன் ஐ ரிமைன்டிங் யூ கர்ல்ஸ், திஸ் இஸ் ப்ளாக்ஸ்பேஸ், நாட் மூவி ரிவியூ பாயின்ட்! ;))))

    ReplyDelete
  33. பாலக்கீரை உருண்டை சூப்பர்.. இவ்ளோ தூரம் மினக்கேடுச் செய்தா சாப்பிடோணுமே... வீட்டிலுள்ளோர்ர்... அதுதான் பிரச்சனையே.

    ReplyDelete
  34. //பூஸ் இப்பதான் சிக்கின்-பிஷ் எல்லாம் மோப்பம் புடிச்சிட்டு இருக்காங்க, இனிமேல் தூங்கறதாவது?! :))))///

    அதெப்பூடிக் கரெக்ட்டாச் சொல்லிட்டீங்க:))).

    உஸ்ஸ்ஸ் நல்லவேளை விண்ணைத்தாண்டி வருவாயா பார்த்து பீலிங்ஸ்ஸாகி கீரிக்கு நித்திரை வந்திட்டுதுபோல:)))) சினிமாவில இதெல்லாம் சகஜம் எனச் சொல்லி வையுங்கோ மஞ்சள் பூ:))

    ReplyDelete
  35. //உஸ்ஸ்ஸ் நல்லவேளை விண்ணைத்தாண்டி வருவாயா பார்த்து பீலிங்ஸ்ஸாகி கீரிக்கு நித்திரை வந்திட்டுதுபோல:)))) // நோ நோ நான் நியுசிக்கும் அமெரிக்காவுக்கும் பறந்து :)) கிட்டு இருக்கேன்

    //நீங்க பேசிட்டு இருப்பது அமெரிக்கன் ப்ளாக்ஸ்பேஸ்! ஐரோப்பா டீவி சானல்லாம் நாட் அலவ்டு! ;))))) // ஐ மகி டென்சன் டென்சன் பூஸ் லேட்டா வந்தாலும்ம் என்னால இவ்ளோ நேரமா பண்ண முடியாதத வந்த சில நிமிஷத்துல வெல் டன் :))

    //தேனீர் விடுதின்னும் படம் வந்திருக்கா?// ரொம்ம்ம்ப நாளைக்கு முன்னே :))

    ReplyDelete
  36. ஆனா ஒண்ணுங்க... ஒரு நாள் இல்லாட்டி ஒருநாள் நீங்க உங்க ஐபோன பஜ்ஜி மாவுக்க்குல போட்டு பொரிச்சு எடுத்துட்டு... அதையே போட்டோ எடுக்க ஐபோன தேடப்போறீன்களா இல்லையான்னு பாருங்க... எப்பிடிங்க ஒவ்வொரு ஸ்டேப்லயும் போட்டோ எடுக்குறீங்க?

    ReplyDelete
  37. /டென்சன் டென்சன் / ச்சே, நியூஸி. போய் ஒரு கப் "அம்லா பால்" குடிச்சதும் டென்ஷன்லாம் போயி "தண்டா டண்டா..கூல், கூல்!" ஆகிட்டேன் கிரிஜா!

    அதிரா,/மினக்கேடுச் செய்தா சாப்பிடோணுமே... வீட்டிலுள்ளோர்ர்... அதுதான் பிரச்சனையே. / அது கரெக்ட்டுதான் அதிரா! அப்ப எதாவது பார்ட்டிக்கு, இல்லைன்னா உங்க ஓஃபிஸுக்கு:) செய்யுங்க! :))

    /விண்ணைத்தாண்டி வருவாயா பார்த்து பீலிங்ஸ்ஸாகி / ரியலி?! நானும் கஸ்ரப்பட்டு;) அந்தப் படம் பார்க்க முயற்சித்தேன், ஆனா பாதிக்கு மேலே பார்க்க முடீல! கேரளா போவாங்களே,அத்தோட நிறுத்திட்டேன்!

    /இப்போ அகைன் பாட்டுக்காக / இஸ் இட்? அவ்ளோ நல்லா இருக்குமா கிரி? ஓமனப் பெண்ணே என்ற பாட்டு ஒரு வரி மட்டும் நினைவு இருக்கு எனக்கு! அவ்ளோதான்! :)))

    ReplyDelete
  38. /ஒரு நாள் இல்லாட்டி ஒருநாள் நீங்க உங்க ஐபோன பஜ்ஜி மாவுக்க்குல போட்டு பொரிச்சு எடுத்துட்டு... / அட, என்ன மாதிரி ஒரு ஆசை பாருங்க ஜெய்-க்கு!! :)))))

    சான்ஸே இல்லைங்க ஜெய்! நான் யூஸ் பண்ணுவது Sony H7! ஐபோன் ஆத்திர அவசரத்துக்கு..கைவசம் சோனி இல்லாதப்ப மட்டும்தான் யூஸ் பண்ணறது! :)))))

    /எப்பிடிங்க ஒவ்வொரு ஸ்டேப்லயும் போட்டோ எடுக்குறீங்க? / கேமரா-லதானுங்க எல்லா ஸ்டெப்பையும் போட்டோ எடுக்கிறேன். :)))))

    இன்னிக்கென்ன, ஆபீஸ் டைம் முடிந்து ரொம்ப நேரம் கழிச்சு வந்திருக்கீங்க? உங்க ஏஞ்சல் எப்படி இருக்காங்க?!

    ReplyDelete
  39. //அம்லா பால்" குடிச்சதும் டென்ஷன்லாம் போயி "தண்டா டண்டா..கூல், கூல்!" // டீச்சர் அடுத்த போஸ்ட் உங்களுக்கு பயந்து ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க. பூஸ் கோன் டு பெட் ??

    //அவ்ளோ நல்லா இருக்குமா கிரி? // இங்கே ஒரு விஷயம் நீங்க தெளிவா தெரிஞ்சுக்கணும் நான் ஒரு சினிமா பைத்தியம். நல்லா இல்லேன்னா கூட நெட் பார்த்து கிட்டே மல்டி டாஸ்கிங் பண்ணிடுவேன்.:)) சினிமா பைத்தியம் ஓகே ஸ்டார்ட் மியுசிக் :))

    ReplyDelete
  40. /பூஸ் கோன் டு பெட் ?? / poosh gone to bed? இதானே நீங்க சொல்ல வந்தது! அப்பா..எங்க மூளைல்லாம் வொர்க்கிங் கண்டிஷன்ல இருக்கோ, பிழைச்சமோ? இல்லன்னா எல்லாரும் zombi-யா திரிய வேண்டியதுதான்! :)))

    /அடுத்த போஸ்ட் உங்களுக்கு பயந்து ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க./ அப்படின்றீங்க? ம்ம்ம்..பண்ணட்டும்,அதையும் ஒரு கை பார்த்துருவோம்! தூங்கிராதீங்க கிரி...ஸ்டெடியா இருங்க..அம்லா பாலை அப்பப்ப குடிங்க,சரியா?! ;) ;)

    ReplyDelete
  41. //தூங்கிராதீங்க கிரி...ஸ்டெடியா இருங்க..அம்லா பாலை அப்பப்ப குடிங்க,சரியா?! ;) ;)//

    ச்சே ச்சே நீங்க எவ்ளோ போட்டு தாக்கினாலும்ம் ஸ்டெடியா இருக்கேன் பாருங்க :))

    //எங்க மூளைல்லாம் வொர்க்கிங் கண்டிஷன்ல இருக்கோ, பிழைச்சமோ?// ஹீ ஹீ என்னைய நெனச்சா எனக்கே ரெம்ம்ம்ப பெருமையா இருக்கு :))

    ReplyDelete
  42. மகி ஓகே குட் நைட். இன்னிக்கு ரெண்டு மணி நேரம் போனதே தெரியல. ஹாவ் எ நைஸ் வீக் எண்டு !!

    ReplyDelete
  43. குட்நைட் கிரிஜா! நைஸ் கும்மி! :))) உங்களுக்கும் இனிய வார இறுதி!

    ReplyDelete
  44. அவ்வ்வ்வ்வ் கீரி இப்போ குல்ட்க்குள்ள:))).. உண்மையில் விணைத்தாண்டி வருவாயா சூப்பர் சீனறீஸ், சூப்பர் பாட்டுக்கள்.. படமும் பிடிச்சிருக்கெனக்கு..

    ReplyDelete
  45. ஜெய் என பெயர் பர்த்தௌம் நம்மட ஜெய்யின் நினைவு வந்திட்டுது:(( ஆளைக் காணேல்லை.

    ReplyDelete
  46. ஹலோ இத நான் சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லலைங்க.... சும்மா சிவனேன்னு லஞ்ச் சாப்பிட்டு முடிச்சு போயிட்ட இருந்த நம்ம நண்பர் ஒருத்தர அவுங்க மனைவி கூப்பிட்டு ஏங்க இந்த தோசை மாவை எடுத்து அந்த ப்ரீசர் பாக்ஸ் ல கொட்டி கொடுத்துட்டு போங்க ன்னு கூப்பிட்டாங்க....நம்ம தான் கொஞ்சம் இளகின மனசாச்சே,,,தாய்குலம் உதவி கேட்ட ஓடி போய் செய்வோமே....மச்சி கொஞ்சம் வெயிட் பண்ணுடான்னு சொல்லிட்டு அவரு பாஞ்சு போய் அத ஊத்திகிட்டு இருந்தாரு.... அவங்க மனைவி அந்த மாவ ஏதோ பாட்லக் க்கு அரைச்சு இருக்காங்க போல... நம்ம ஆளு ஊத்தினது மூணாவது ரவுண்டு... சரியா விழலைன்னு ஒரு குலுக்கு குலுக்கினாறு..அப்போ அவரு பாக்கெட் ல இருந்த அவரு ஆபிஸ் பட்ஜே மற்றும் ஐபோன் ரெண்டும் உள்ள விழுந்துட்டு ... பட்ஜே மட்டும் மேல நின்னுச்சு...ஆனா 'போன்' உள்ள போய் செட்டில் ஆயிட்டுது.... அவர் போன் விளுந்தத கவனிக்கவே இல்ல... பட்ஜே விழுந்ததுக்கே அவ்வளோ எபெக்ட் கொடுத்து நல்ல (அன்னிக்குத்தான் தெரிஞ்சுது அவருக்குள்ள ஒரு சிங்கம் தூங்கி கிட்டு இருந்தது) அர்ச்சனை பண்ணிட்டு என்னோட கார் ல ஏறிட்டார் அப்புறம் மச்சி கொஞ்சம் வெயிட் பண்ணு போன் எடுக்க மறந்துட்டேன்னு உள்ள போனார்... போனமனுசன பத்து நிமிஷமா காணோம் ..என்னடான்னு போய் பார்த்தா எல் போ வரை மாவோட ஏதோ வெள்ளையா கைல வச்சுக்கிட்டு நின்னுகிட்டு இருந்தாரு.... என்னால அதுக்கு மேல அந்த இடத்துல நிக்க முடியல... ஆபீஸ் க்கு வந்து அடுத்த இரண்டு மணி நேரம் சிரி சிரி ன்னு விழுந்து விழுந்து சிரிச்சோம் .. மறு நாள் பாட்லக் ல ஒவ்வொரு இட்லிக்கும் 'ஐ-இட்லி' ன்னு பேரு வச்சோம்.....

    ReplyDelete
  47. /உண்மையில் விணைத்தாண்டி வருவாயா சூப்பர் சீனறீஸ், சூப்பர் பாட்டுக்கள்.. / :) ரசனைகள் மாறுது அதிரா! :))

    சாரி, ஒரு போன் கால் வந்ததால் உடனே உங்களுக்கு பதில் சொல்ல முடியலை.

    /நம்மட ஜெய்யின் நினைவு வந்திட்டுது:(( ஆளைக் காணேல்லை./ நோ வொரி.."மீ ரிடர்ன்ஸ்" என்று சத்தமாச் சொல்லிகிட்டே லேண்ட் ஆகிருவார் சீக்கிரமா! :)

    ReplyDelete
  48. /மறு நாள் பாட்லக் ல ஒவ்வொரு இட்லிக்கும் 'ஐ-இட்லி' ன்னு பேரு வச்சோம்..... / ஹாஹ்ஹா!செம காமெடி போங்க! சிரிச்சு கண்ணுல தண்ணியே வந்துருச்சு! :))))))))

    ஆனா இந்த நிகழ்வில் நீங்க கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், ஐ-போனை தவறவிட்டவர் ஒரு அண்ணா! கூகுள் அக்கா மாதிரி ஒரு பெண்மணி இல்ல!;);)))

    லேடீஸ் எல்லாரும் எச்சரிக்கையாதான் இருப்போம்! பாருங்களேன், அவர் மனைவி மாவை எடுத்து டப்பால ஊத்தக் கூட அவரோட ஹெல்ப்பை கேட்டிருக்காங்க, இதில இருந்தே நீங்க எங்க(தாய்க்குலத்தின்) அதிபுத்திசாலித்தனத்தை, "பின்"புத்தியை (சேஃப்டி பின் மாதிரி கூர்மையான புத்தின்னு அர்த்தம்) புரிஞ்சுக்கோணும்! :)

    BTW, உங்க நண்பர் ஐ-போனுக்கு என்ன நிகழ்ந்தது? புது ஆப்பிள் வாங்கினாரா..அல்லது வாரண்டி/கேரண்டி பீரியட் எல்லாம் முடிந்து அதோ கதி ஆகிருச்சா? :)))))

    ReplyDelete
  49. அங்க தான் நீங்க கவனிக்கணும்.... பெண்புத்தி - அவுங்க ஹேர் டிரையர் கொடுத்து இருக்காங்க... நான் போன் பண்ணி என்னாச்சு ன்னு கேட்டப்போ சொன்னாரு.... உடனே நான் மச்சி டிரையர் யூஸ் பண்ணினேன்னா மாவு உள்ள போய்டும் சோ வாக்க்யும் வச்சு சக் பண்ணுன்னு சொன்னேன். பண்ணிட்டு அப்புறம் அத ஆப் பண்ணி காய வச்சுட்டாரு.. நல்ல வேளை மாவு செம கட்டியா இருந்ததால தபிசுட்டாறு இல்லன்ன ஒரு இரநூறு மொய் எழுத வேண்டியதுதான்

    ReplyDelete
  50. /டிரையர் யூஸ் பண்ணினேன்னா மாவு உள்ள போய்டும் சோ வாக்க்யும் வச்சு சக் பண்ணுன்னு சொன்னேன்./ அட,அட,அட!! புல்லா அரிச்சுப்போச்சு போங்க! :)))))

    நல்லவேளை...வாஷர்-ட்ரையர் ல போட்டு துவைச்சு காயப்போடாம விட்டாங்களே! :))))) SIRI இருக்கறதால அவங்க ஹேர்ட்ரையர் குடுத்திருக்கக் கூடும்!;)

    எப்படியோ ஒரு வழியா போன் சரியாச்சுதே..நல்ல எக்ஸ்பீரியன்ஸ் போங்க! அப்ப ஐ-போனை பஜ்ஜியா பொரிச்சு(!?) எடுத்த பிறகும் கூட ரெகவர் பண்ணிரலாம் போலிருக்கே! ஆப்பிள் வாள்;)க!!

    ஓக்கேங்க ஜெய்..இனிய வார இறுதி! அடுத்த வாரம் சந்திப்போம்! கருத்துக்களுக்கும் ஐ-போன் காமெடி கதை சொன்னதுக்கும் நன்றிங்க!

    ReplyDelete
  51. Super healthy koftas, without any deep frying..

    ReplyDelete
  52. அருமையாக பார்க்கவே சாப்பிடத்தூண்டுகிறது மகி

    ReplyDelete
  53. பருப்பு உருண்டைகள் அணிவகுத்து குழம்புக்குள் செல்லும் அழகே அழகு. அருமையான recipe Mahi :D I am drooling....gosh! the room is going to get flooded soon.

    ReplyDelete
  54. கடலை மாவு சேர்த்துச் செய்து, பணியார வாணலியிலபதப்படுத்தி எடுத்து பதம் அருமையாக இருக்கு. லாகவமா செய்தால் அருமையா வரும்.
    நல்லநல்ல யோசனை. எண்ணெய் சிலவு கம்மியானால் நலமோடு இருக்கலாம். கோப்தா ருசியாயிருக்கு

    ReplyDelete
  55. மகி .நான் ஒத்துக்க மாட்டேன் .எனக்கு தெரியாம எப்ப போஸ்ட் போட்டீங்க ????/.கோப்தா looks yummy. .நேற்று எங்க வீட்டு லேடி காகா/susan boyle/ என் பொண்ணை கொயர் பிரக்டிசுக்கு கூட்டிட்டு போய் வந்தேன் .அதான் லேட்டாகிவிட்டது .
    கிரி வீட்ல ஒரு வருங்கால சச்சின் எங்க வீட்ல ஒரு வருங்கால ஜெனிபர் லோபஸ் :)))))))

    ReplyDelete
  56. சத்தான கீரை உருண்டை குழம்பு.நல்ல ஐடியா.

    ReplyDelete
  57. போட்டோவை தெளிவாப் பாக்கோணும்னா நான் ஒரு remedy சொல்றேன், தலைய (உங்க தலையத்தான்...)//


    நல்லவேளை !!!! அடைப்புக்குறிக்குள்ள இருக்கற வாசகத்தை படிச்சேன்
    இல்லான்னா ஒருவருக்கு கழுத்து சுளுக்கிருக்கும் அவ்வவ் .

    ReplyDelete
  58. /படிப்பு முடியுறதுக்கு உள்ளே கல்யாணத்துக்கு என்ன அவசரம் அஞ்சுவுக்கு:))/ நல்லாக் கேளுங்க கிரிஜா! //

    இன்னிக்கு மூணுதரம் போலிஸ் வண்டி எங்கூட்டு பக்கமா போச்சு
    இப்பதானே புரியுது அவ்வ்வ்வ் .ப்லாக்லீக்ஸ் .பால்ய விவாஹம் ஸ்காட்லான்ட் யார்ட் வரைக்கும் போயிருச்சி :))))))))))))))
    ஆமா !!!!!!!நம்ம ஜெய்க்கு என்னா ஆச்சுது ???

    மட்டன் பட்டிஸ் செய்யபோறேன் கண்டிப்பா வருவார் பாருங்க :))))))

    ReplyDelete
  59. ///
    angelin said...
    மகி .நான் ஒத்துக்க மாட்டேன் .எனக்கு தெரியாம எப்ப போஸ்ட் போட்டீங்க ????/.கோப்தா looks yummy. .நேற்று எங்க வீட்டு லேடி காகா/susan boyle/ என் பொண்ணை கொயர் பிரக்டிசுக்கு கூட்டிட்டு போய் வந்தேன் .அதான் லேட்டாகிவிட்டது .
    கிரி வீட்ல ஒரு வருங்கால சச்சின் எங்க வீட்ல ஒரு வருங்கால ஜெனிபர் லோபஸ் :)))))))////

    ஹா..ஹா..ஹா... பிரபல்யங்களின் அம்மாக்கள் எல்லாம் இப்போ எங்கட புளொக்கில....எங்கட புளொக்குகள் கொடிகட்டியெல்லோ பறக்குது:))).. அது என்ன கொடி எனக் கேட்டிடப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
  60. //
    Mahi said...
    /உண்மையில் விணைத்தாண்டி வருவாயா சூப்பர் சீனறீஸ், சூப்பர் பாட்டுக்கள்.. / :) ரசனைகள் மாறுது அதிரா! :))///

    அப்பூடியா பிபிசில சொன்னாங்க?:))

    ReplyDelete
  61. பாலக் கோஃப்தா கிரேவி செய்முறை சூப்பர்.அடடா!என்னோட எல்லாப்படமும் நீங்க சொல்லிய முறையில் தான் பார்க்கணும்.மொபைலில் அவசர சமையலின் போது எடுப்பது...

    ReplyDelete
  62. En Samaiyal said...
    //கொஞ்சம் நில்லுங்க வாறேன்ன்// நோ நோ நான் உக்கார்ந்து தான் கமெண்ட் போடுவேன் நின்னா கால் வலிக்கும்ம்ம் :))

    ஸோ நீங்களும் ஐங்கரன் வெச்சு இருக்கீங்களா பூஸ் ?? நான் தே .வி.பார்க்கல. dvd வெச்சு இருக்கோம். இன்னும் பார்க்கல. எப்புடி இருந்திச்சு ? வி.தா.வ நானும் பார்த்திட்டேன் முன்னே இப்போ அகைன் பாட்டுக்காக////

    என்னமோ ஆஹா.. ஓஹோ எண்டு சொன்னார்கள் தேனீர்பற்றி.. நாஅனும் சூப்பராக்கும் என நினைத்தேன்ன்.. சுமார்தான்.. அதில ஒண்டுமே இல்லை, ஆனா அதில வாற ஹீரோயினை எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு....

    ReplyDelete
  63. மகி, சூப்பரா இருக்கு.நானும் அந்த பணியார சட்டி வாங்கிட்டோமோமில்ல. அமேஸான் இல் order பண்ணியாச்சு. அதுக்கு பிறகு செய்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  64. மகி !!! ஆமணக்கு விதை சென்னைல நாட்டுமருந்து கடைகள் மற்றும் பூஜை பொருட்கள் சந்தானம் விபூதி சாம்பிராணி இதெல்லாம் விக்கிற கடைகளில் இது கிடைக்குது மகி பாரிமுனையில் ட்ரை பண்ண சொல்லுங்க .
    இட்லிக்கு போட என்றே கேட்டு வாங்கலாம்

    ReplyDelete
  65. மகி சில கடைகள் மஞ்சள் கயிறு /சாமிக்கயிறு நோன்புகயறு/ loofa
    இதெல்லாம் விப்பாங்க புரசை தாணா தெரு /தி நகர் இங்கே டிரை பண்ண சொல்லுங்க .இல்லன்னா நாம ரெண்டு பெரும் us /uk joint venture ஒரு பிஸ்னஸ் ஆரம்பிக்கலாம் எப்பூடி ஐடியா:))))))))))

    ReplyDelete
  66. Super looking kofta! Loved the low fat idea too. :) Yabba ivlo comments ah? !! :);)

    ReplyDelete
  67. ஹேமா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~!~
    ஸாதிகாக்கா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~!~
    /பருப்பு உருண்டைகள் அணிவகுத்து/ மீரா, படங்களைப் பார்த்து ரசித்ததில் ரெசிப்பியை கவனிக்கலை போலிருக்கே! ;) உருண்டைகள் கடலைமாவு, பருப்பு இல்லைங்க! :))
    அழகான கருத்துக்கு நன்றிங்க மீரா!
    ~!~
    காமாட்சிம்மா, உண்மையைச் சொல்லப்போனா உங்க ப்ளாகில் வந்த லௌகி கா கோஃப்தா பார்த்தபிறகுதான் நான் இந்த கோஃப்தா கறி பக்கமெல்லாம் போனேன். அதுக்கு உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்மா! :)
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
    ~!~
    /எங்க வீட்டு லேடி காகா/susan boyle/ என் பொண்ணை கொயர் பிரக்டிசுக்கு கூட்டிட்டு போய் வந்தேன் /ஏஞ்சல் அக்கா, அப்ப ஷெரனை BGT-க்கு அனுப்பலாம்ல?! ;)
    /கிரி வீட்ல ஒரு வருங்கால சச்சின் எங்க வீட்ல ஒரு வருங்கால ஜெனிபர் லோபஸ் :))))))) / அடடா! அப்ப எங்களுக்கும் வருங்கால சூப்பர் ஸ்டார்களை பலகாலமாத் தெரியும்னு சொல்லிக்கலாம் போலிருக்கே! :) ;)

    /நல்லவேளை! அடைப்புக்குறிக்குள்ள இருக்கற வாசகத்தை படிச்சேன்/ பா...பின் கால் பா..பறியும், அதனால்தான் யார் தலைன்னு கரீக்ட்டா அழுத்திச் சொல்லிருக்கேன், ஹாஹ்ஹா! :)

    /பால்ய விவாஹம் ஸ்காட்லான்ட் யார்ட் வரைக்கும் போயிருச்சி :)) / ஆமாம், எதுக்கும் கொஞ்சநாள் அடக்கி வாசிங்கோ! ;)

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஏஞ்சல் அக்கா!
    ~!~
    சித்ராக்கா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
    ~!~
    /எங்கட புளொக்குகள் கொடிகட்டியெல்லோ பறக்குது:))).. அது என்ன கொடி எனக் கேட்டிடப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்:)) / சந்தேகமென்ன அதிரா? உங்கட புளொக்கில ;) பூஸ் கொடி, என்ர ப்ளொக்கில;) மஞ்சள் பூ போட்ட கொடி, காகிதப் பூக்கள்ல மீன்கொடி! கரெக்ட்தானே நான் சொல்வது? :)))

    /அப்பூடியா பிபிசில சொன்னாங்க?:))/ இல்லைல்ல, ஐங்கரன்ல ஃப்ளாஷ் நியூஸ் வந்துச்சு, நீங்க பார்க்கேல்லையோ? :))))

    /அதில வாற ஹீரோயினை எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு.... / ஹூம்..என்னத்தச் சொல்ல?
    ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுவோமே!
    ~!~
    /மொபைலில் அவசர சமையலின் போது எடுப்பது... / நிஜமாவா சொல்றீங்க ஆசியாக்கா? மொபைல்லதான் போட்டோ எடுக்கறீங்களா? ஒய்ய்ய்ய்ய்...நார்மல் கேமரால எடுங்க, க்வாலிட்டில நல்ல வித்யாசம் தெரியும்.
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
    ~!~
    சங்கீதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~!~
    வானதி, pan cake puff-pan ஒரு வழியா வெற்றிகரமாத் தேடிப் புடிச்சீட்டீங்களா? வீட்டுக்கு வந்துருச்சா? அப்ப இனி நிறைய பணியார ரெசிப்பில்லாம் வரும்ல ப்ளாக்ல?! :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி!
    ~!~
    /ஆமணக்கு விதை சென்னைல/ அடடே..இதை ஒரு மாதம் முன்னால கேட்டிருந்தேன்னா அவங்கள்ட்ட சொல்லிருப்பேனே! அவங்க ஊரிலிருந்து இங்கே வரும்போது வாங்கிவர டிபார்ட்மென்டல் ஸ்டோர், சூப்பர் மார்க்கெட் இங்கெல்லாம் தேடியிருக்காங்க ஏஞ்சல் அக்கா! அங்கெல்லாம் கிடைக்கலையாம், அவங்க இங்கே வந்து சேர்ந்துட்டாங்க. பரவாயில்லை, தகவலைச் சொல்லிடறேன், அடுத்த முறை வாங்க உபயோகப்படும்.

    /நாம ரெண்டு பெரும் us /uk joint venture ஒரு பிஸ்னஸ் ஆரம்பிக்கலாம் எப்பூடி ஐடியா:)))/ ஜூப்பர் ஐடியா! எப்ப இருந்து துவங்கலாக்னு சொல்லுங்க, ஜமாய்ச்சிரலாம்! :)))
    ~!~
    ராஜி, வெகுநாட்களுக்கு பின் உங்களை இங்கே பார்ப்பது மகிழ்ச்சி! /Yabba ivlo comments ah? !! :);) / இதெல்லாம் உங்க ப்ளாக்ல வர கமென்ட்ஸ் மாதிரி நினைச்சுராதீங்க. ;)

    உங்களுக்கு வரும் கமென்ட்ஸ் எல்லாம் ரெசிப்பிக்கு வருவது, இங்கே நாங்க அரட்டையடிச்சு கமென்ட்ஸ் எண்ணிக்கை இப்படி போயிருக்குது. ;)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~!~

    ReplyDelete
  68. அப்ப இனி நிறைய பணியார ரெசிப்பில்லாம் வரும்ல ப்ளாக்ல?!//நீங்க வேறு மகி. உங்களை பார்த்து இனிமே தான் கற்றுக் கொள்ளணும் என்று இருக்கிறேன்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails