Sunday, February 3, 2013

அனுவாவி - நிறைவுப் பகுதி

கடைசி சிலபல படிகள் சற்றே நெட்டுக் குத்தாய் இருக்கும் என்று அங்கே இளைப்பாறிக் கொண்டிருந்தோம், வாங்க..ஒரே மூச்சாய் ஏறிப் போயிரலாம்! :)
 
படிகள் ஏறியதும் ஒரு சமதளப் பகுதி..அங்கிருந்து இடப்பக்கம் சென்றால் தண்ணீர்க்குழாய்கள், மடப்பள்ளி இருக்கின்றன, வலப்பக்கம் கோயிலின் அலுவலகம் இருக்கிறது. சில்லென்ற அனுவாவி தண்ணீரில் முகம் கைகால் கழுவி, ஆசைதீர நீரையும் பருகிவிட்டு மீதமுள்ள கொசுறுப் படிகளும் ஏறினால் சுப்பிரமணியரின் தரிசனம் கிடைக்கிறது.
கோயிலின் உள்ளே படங்கள் எடுக்க அனுமதியில்லை என்பதால் அப்படியே வெளியே எடுத்த சிலபடங்கள் உங்கள் பார்வைக்கு..
 
படியேறி கோயிலுக்கு வந்தோம் அல்லவா, ஆஞ்சநேயர், விநாயகர், முருகன், நவக்கிரக தரிசனங்கள் முடிந்து ஆஞ்சநேயர் சந்நிதிக்கருகில் இருக்கும் படிகளில் ஏறி மடப்பள்ளியின் மேல்தளத்திற்கு வரலாம். அங்கிருந்து எடுக்கப்பட்ட படம்தான் மேலே...
மடப்பள்ளியின் மேல்தளத்திலிருந்து செல்லும் பாதையின் ஒரு பக்கமாய் அனுவாவி சுனை இருக்கிறது. சுனையில் தண்ணீர் நிறைய இருந்து நான் பார்த்ததில்லை, பேருக்கு கொஞ்சம் ஓடிக் கொண்டிருக்கும். அங்கிருந்து சற்றே வலப்புறம் சென்றால் மேற்கண்ட படத்தில் இருக்கும் சிறுகோயிலுக்கு படிகள். முன்பெல்லாம் படிகள் இருக்காது. ஆனாலும் சர்க்கஸ் பண்ணி(!) :) தள்ளாடி மேலே சென்று அங்கிருக்கும் சிறு கோயிலைப் பார்ப்போம். இப்பொழுது கோயிலைப் புணரமைத்து படிகளும் கட்டிவிட்டார்கள்.
அப்படியே கீழே இறங்கி வந்தால் கோயிலைச் சுற்றி சில அரளி- தங்க அரளிப் பூச்செடிகள் நிற்கின்றன. அங்கிருந்து கீழே தெரியும் ஊரும், மலைச்சாரலும்!
 
கீழே இறங்கிவருகையில் இளைப்பாறக் கட்டப்பட்ட மேடையை ஒரு க்ளிக்க்க்க்க்! :)
இறங்கியாச்சு..கோயில் வாசலில் ஆலமரங்கள் சூழ இருக்கும் திடல்..அந்த லாரி நிற்கும் இடம் தாண்டி சற்று தொலைவில்தான் லலிதாம்பிகை திருக்கோயில் இருக்கிறது. நாங்கள் போகும் நேரங்களில் பெரும்பாலும் கோயில் மூடப்பட்டிருப்பதால் இன்னும் அங்கே செல்லவில்லை. அப்படியே கிளம்பி மேட்டுப்பாளையம் ரோட்டை வந்து சேர்ந்தபோது மதிய உணவு நேரம் ஆகியிருந்தது.
சரவணபவன்-ல ஒரு புல் மீல்ஸ் சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் கிளம்பி விமானத்தைப் பிடித்தோம். அவ்ளோதாங்க, அனுவாவி ட்ரிப்! :)
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்,
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய், உயிராய், கதியாய் விதியாய்க் 
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே!

19 comments:

  1. நல்ல படங்கள்... அடுத்த முறை லலிதாம்பிகை கோயிலுக்கும் சென்று வரலாம்...

    ReplyDelete
  2. அங்கேயும் சரவணபவனா?தெளிவான படங்கள்.

    ReplyDelete
  3. Fabulous clicks Mahi... Full meals super... :P
    http://recipe-excavator.blogspot.com

    ReplyDelete
  4. அழகான படங்களுடன் கூடிய பதிவு மகி. அனுவாவிக்கு நாங்களும் உங்களுடன் பயணித்த அனுபவமாக இருக்கிறது. வெயிலைப்பார்க்க ஆசை
    யாக இருக்கு.

    ReplyDelete
  5. பச்சைப் பசேலென பார்க்கவே அழகா இருக்கு.அருள் கிடைத்து,எப்போதாவது பார்க்கப்போனேன் என்றால் அப்போது உங்க பதிவுதான் நினைவுக்கு வரும். போய் வந்த களைப்புக்கு சரவணபவன் சாப்பாடும் கொடுத்திட்டிங்க.

    லலிதாம்பிகை கோயில் போனால் மறக்காம வந்து பதிவு போடுங்க. இப்பதிவினால் கோயிலுக்கு போய் தரிசனம் செய்து வந்த‌ திருப்தி.

    ReplyDelete
  6. பசுமையான மலையில் ஏறி இறங்கி வந்த திருப்தியும், கண்டிப்பாக போய் பார்த்தேயாக வேண்டும் என்கிற ஆசையும் ஒருங்கே வருகின்றன.
    சுப்பிரமணியரின் தரிசனம் உங்கள் பதிவின் மூலமாக கிடைக்கப் பெற்றேன்.
    நன்றி,

    ராஜி

    ReplyDelete
  7. அழகான நல்ல பதிவு. நாமும் உங்களுடன் அந்த மலையடிவாரத்தில் இருந்ததைப் போல எனக்குள் ஒரு உணர்வு...:). அருமை.
    பகிர்வுக்கு மிக்க நன்றி மகி!

    ReplyDelete
  8. அழகான படங்கள்,அடுத்தமுரை அம்மனையும் தரிசிக்க வாழ்த்துகக்ள்...

    ReplyDelete
  9. ஆஹா அழகான அனுவாவி முருகன்... இனி நான் கூப்பிடும் முருகன் கோயில் லிஸ்ட்டில் அனுவாவியையும் சேர்த்திடுறேன்ன்ன்ன்.. அனுவாவி முருகா என்னைக் காப்பாத்தப்பா... :)

    கோயிலை விட சாப்பாடு பிரமாதமா இருக்கே மகி... குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.....

    ReplyDelete
  10. //கடைசி சிலபல படிகள் சற்றே நெட்டுக் குத்தாய் இருக்கும் என்று அங்கே இளைப்பாறிக் கொண்டிருந்தோம், வாங்க..ஒரே மூச்சாய் ஏறிப் போயிரலாம்! :)// நோ ஓஒ என்னால முடியாது லிஃப்ட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க....:)

    ReplyDelete
  11. //நோ ஓஒ என்னால முடியாது லிஃப்ட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க....:) // அதிரா, அங்க மாருதிகள்;) நிறையப் பேர் இருப்பாங்க..ஒரு ரெண்டாள் போதும்ல, உங்கள லிஃப்ட் பண்ணி கோயிலுக்குள் கொண்டு விட?! ;)))
    ~~
    கருத்துக்கள் தந்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்!
    பெரும்பாலும் ஆகஸ்ட்-செப்டம்பரிலேயே ஊருக்குப் போவோம், அப்போதும் நல்ல கோடை போலவே வெயில் பிச்சு வாங்கும், இப்படி மலைக்கோயில்களுக்குப் போனால் சில்லென்று இதமாக இருக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சி! :)
    ~~

    ReplyDelete
  12. சஞ்சீவிமலையை எடுத்து வந்த அனுமன் களைப்பாறியபோது அவரது தாகத்தை தணிக்க முருகன் தன் கை வேலால் உருவாக்கிய ஊற்றாம் ..

    ஆகவே அவ்வளவு சுவையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கிறது அந்தப் புனித நீர் ...

    ReplyDelete
  13. Mahi,
    I liked all the pictures. Just told Amma about the temple and we too will visit. இப்பதான் எனக்கு இந்த கோவில் பற்றி எல்லாமே தெரியுமே :)

    ReplyDelete
  14. நல்ல பகிர்வு,படங்கள் அருமை.வழக்கம் போல் அந்த ப்லேட்டை இப்படி தள்ளுங்க.

    ReplyDelete
  15. வெற்றி வேல் முருகனுக்கு "அரோகரா "

    ReplyDelete
  16. ராஜேஸ்வரி மேடம், தகவலுக்கு நன்றி! நீங்க சொன்னபிறகுதான் எனக்கும் நினைவு வருகிறது. "அனுமாக் குமரன் கோயில்" என்றும் சொல்வாங்க. அனுமார் எப்படி முருகர் கோயிலில் என்று யோசித்திருக்கேன். :)

    கருத்துக்கள் தந்த சௌம்யா, ஆசியா அக்கா, மீனாஷி, ராஜேஸ்வரி மேடம் அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  17. பார்க்காத இடம் அனுவாவி. மிக அழகா எழுதி புகைப்படத்துடன் போட்டு போக வேண்டும் என்ற ஆசையை தூண்டி விட்டு விடீர்கள், மகி!

    ReplyDelete
  18. where are you actually from? i am from cbe, saibab colony

    ReplyDelete
  19. அன்பின் மகி - அனுவாவியின் தொடர்ச்சி அருமை - படங்கள் கண்ணைக் கவர்கின்றன - எளீய நடையில் கூற வேண்டிய அனைத்தையும் கூறி விட்டீர்கள் - நல்லதொரு வழிகாட்டிப் பதிவு - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails