இந்த தோசை இங்கே வந்த புதிதில் மிக்ஸி இல்லாமல் திண்டாடியபோது கை
கொடுத்தது. பெங்களூரில் பக்கத்து அப்பார்ட்மென்டில் இருந்த ஒரு சென்னை
தோழியின் செய்முறை, அமெரிக்காவில் சமைக்கப்பட்டது! எவ்ளோ ஊர் தாண்டி வந்திருக்கு பாருங்க! :)
1 பங்கு ரவைக்கு 3 பங்கு அரிசி மாவு, கொஞ்சம் மைதா.. இதுதான் பேஸிக் ரேஷியோ..அதனுடன் இந்த "மானே,தேனே, பொன்மானே.." (அதாங்க மற்ற பொருட்கள்) இதெல்லாம் விருப்பப்படி சேர்த்துக் கொள்ளலாம். :))) சிலர் எண்ணெயில் தாளித்துக்கொட்டியும் செய்கிறார்கள். எனக்கு அந்த அளவுக்கு பொறுமை இல்லாததால் அப்படியே பச்சையாகச் சேர்ப்பேன், இந்த ருசியே நன்றாக இருப்பதால் தாளித்துக் கொட்டப்போகல இன்னும்! :)
தேவையான பொருட்கள்
ரவை -1/4கப்
அரிசி மாவு-3/4கப்
மைதா மாவு - 2டேபிள்ஸ்பூன்
கெட்டியான மோர் (அ) புளித்த தயிர் - 1/2கப்
[தயிர் உபயோகிப்பதானால் அரைக் கப்புக்கும் கொஞ்சம் குறைவான தயிருடன் தண்ணீர் விட்டு, கரைத்து உபயோகிக்கவும்]
உப்பு
சீரகம்-1 டீஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்துமல்லி -சிறிது (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய்-2 (பொடியாக நறுக்கியது)
முந்திரி -5 (பொடியாக நறுக்கியது) - விரும்பினால் சேர்க்கலாம், நான் சேர்க்கவில்லை.
செய்முறை
அரிசிமாவு-ரவை-மைதா-உப்பு இவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மோர் விட்டு கரைக்கவும். பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அரைமணி நேரம் வைக்கவும்.
மாவு, சாதாரண தோசை மாவைவிட நீர்க்க இருக்கவேண்டும். அதனால் ஒரு கப்பிற்கும் அதிகமாகவே தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
தோசை வார்க்கும் முன்பாக மாவுடன் சீரகம், நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லி, உடைத்த முந்திரி சேர்த்து கலக்கவும்.
தோசைக்கல்லைக் காயவைத்து மாவை ஊற்றவும். வழக்கமாக தோசை ஊற்றுவது போல செய்யக்கூடாது. கல் நன்றாகச் சூடானதும் கரண்டியால் ரவாதோசை மாவைக் கலக்கிவிட்டு 2 கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் தெளித்தாற்போல ஊற்றவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு, தோசை மீதும் கொஞ்சம் எண்ணெய் தெளித்து வேகவிடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து சட்னிகளுடன் சூடாகப் பரிமாறவும்.
1 பங்கு ரவைக்கு 3 பங்கு அரிசி மாவு, கொஞ்சம் மைதா.. இதுதான் பேஸிக் ரேஷியோ..அதனுடன் இந்த "மானே,தேனே, பொன்மானே.." (அதாங்க மற்ற பொருட்கள்) இதெல்லாம் விருப்பப்படி சேர்த்துக் கொள்ளலாம். :))) சிலர் எண்ணெயில் தாளித்துக்கொட்டியும் செய்கிறார்கள். எனக்கு அந்த அளவுக்கு பொறுமை இல்லாததால் அப்படியே பச்சையாகச் சேர்ப்பேன், இந்த ருசியே நன்றாக இருப்பதால் தாளித்துக் கொட்டப்போகல இன்னும்! :)
தேவையான பொருட்கள்
ரவை -1/4கப்
அரிசி மாவு-3/4கப்
மைதா மாவு - 2டேபிள்ஸ்பூன்
கெட்டியான மோர் (அ) புளித்த தயிர் - 1/2கப்
[தயிர் உபயோகிப்பதானால் அரைக் கப்புக்கும் கொஞ்சம் குறைவான தயிருடன் தண்ணீர் விட்டு, கரைத்து உபயோகிக்கவும்]
உப்பு
சீரகம்-1 டீஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்துமல்லி -சிறிது (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய்-2 (பொடியாக நறுக்கியது)
முந்திரி -5 (பொடியாக நறுக்கியது) - விரும்பினால் சேர்க்கலாம், நான் சேர்க்கவில்லை.
செய்முறை
அரிசிமாவு-ரவை-மைதா-உப்பு இவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மோர் விட்டு கரைக்கவும். பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அரைமணி நேரம் வைக்கவும்.
மாவு, சாதாரண தோசை மாவைவிட நீர்க்க இருக்கவேண்டும். அதனால் ஒரு கப்பிற்கும் அதிகமாகவே தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
தோசை வார்க்கும் முன்பாக மாவுடன் சீரகம், நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லி, உடைத்த முந்திரி சேர்த்து கலக்கவும்.
தோசைக்கல்லைக் காயவைத்து மாவை ஊற்றவும். வழக்கமாக தோசை ஊற்றுவது போல செய்யக்கூடாது. கல் நன்றாகச் சூடானதும் கரண்டியால் ரவாதோசை மாவைக் கலக்கிவிட்டு 2 கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் தெளித்தாற்போல ஊற்றவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு, தோசை மீதும் கொஞ்சம் எண்ணெய் தெளித்து வேகவிடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து சட்னிகளுடன் சூடாகப் பரிமாறவும்.
~~
யூ ட்யூபில் பாடல்கள் கேட்டுக் கொண்டு இருந்தபோது இந்த தொகுப்பு சிக்கியது. அருமையான பாடல்கள். போட்டுவிட்டால் ஒரு மணி நேரம் போவதே தெரியாது. நேரமிருந்தால் நீங்களும் கேளுங்க.
:)
சூப்பர் கிரிஸ்பி தோசை மகி. நானும் செய்வதுண்டு. ஆனால், அளவுகள் வித்தியாசமாக இருக்கும். இந்த வாரம் ஒரு நாள் செய்துடுறேன்.
ReplyDeleteமொறுமொறு ரவா தோசை_சட்னிகளுடன் சூப்பரா இருக்கு.ஊறவைத்து அரைமணி நேரத்தில் சுட்டுடுவிங்களா?நான் இட்லி மாவுடன் ரவையைச் சேர்த்து நீர்க்க கரைத்துவைத்து ரவை ஊறியதும் மெல்லியதாக தெளித்து ஊற்றுவேன்.அரை மணி நேரத்தில் தோசைமாவு ரெடி என்றால் சுட்டுட வேண்டியதுதான்.
ReplyDeleteCRISPY DOSAI!!And bonus raja sir's song collection
ReplyDeleteஎல்லோருக்கும் பிடித்த தோசை... நன்றி...
ReplyDeleteஇனிமையான பாடல்கள்...
super roast.
ReplyDeleteமொறு மொறு தோசை அப்பிடியே ஒரு விள்ளல் பிய்த்து சட்டினியில தொட்டு சாப்பிடனும் போல இருக்கு..நாளை காலை எங்கள் வீட்டில் மொறு மொறு ரவா தோசைதான் மகி..அருமையா இருக்கு.
ReplyDeleteஇது வித்தியாசமான ரெசிப்பி. நான் இப்படி செய்யவில்லை.நல்ல க்ரிஸ்பா இருக்கு பார்க்க. அவசரத்துக்கு கைகொடுக்கும் இந்தக்குறிப்பு. செய்து பார்க்கிறேன். எனக்கு பாடல்கள் கேட்க முடியவில்லை மகி.கேட்க முயற்சிக்கிறேன். பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteதயிர் படுத்திய மாதிரி இந்த ரவா தோசையும் என்னை படுத்தும்.மொருகலா ரவா தோசை சாப்பிட வேண்டுமென்ரால் பேசாமல் பக்கத்தில் இருக்கும் வெஜிடேரியன் ரெஸ்டாரெண்டில் போய்த்தான் சாப்பிடுவது வழக்கம்.ஐடியா கொடுத்திட்டீங்க.செய்து பார்த்து விடுகிறேன் மகி.
ReplyDeleteமகி.. நல்ல தோசை. எனக்கும் பிடிக்கும். இதே அளவில்தான் நானும் சேர்த்துச் செய்வதுண்டு. இதை தோசை வார்க்கும் கல்லில்தான் சுடவேண்டும் அப்பதான் கிரிஸ்பி கிட்டும். நொன்ஸ்டிக் நான் பாவித்துப் பார்த்த மட்டில் ரவா தோசைக்குக் கைகொடுக்காது. {அதாவது ரவாதோசைன்னா கிரிஸ்பி தோசைதான். அதுக்கு நொன்ஸ்ரிக் சரிப்படாதுன்னேன்...:)}
ReplyDeleteமாவை கையால் தெளித்து சுடவேண்டுமென ஓரிடத்தில் பார்த்தேன். அப்படி நான் முயற்சி செய்தபோது நன்றாக மொருமொருப்பாக வரும். ஆனால் கல்லில் தெளிக்கும் போது கொஞ்சமாக அடுப்புக்கும் ஈயப்படும்...:) (எனக்கு அப்படித்தான் வரும்..)
பாடல் எங்களுக்கு காட்டமாட்டாங்களாம்...:(
நல்ல பகிர்வு மகி. நன்றி!
ஆஹா.... நேத்து ராத்திரி.. யம்மாஆஆஆஆஆ.. ஹையோ என்னவோ சொல்ல வந்து என்னமோ சொல்லுறேனே...:) நேற்று நைட் சட்டவுன் பண்ணும்போது தலைப்பு பார்த்தேன், சட்டவுனில் கை வச்சிட்டதால விட்டிட்டேன்ன்ன்.. அதேன் ஓசை கிடைக்கல்ல....
ReplyDeleteஅழகான ஓசை ஆனால் பிய்ந்திடாமல் வருமோ எனப் பயம்ம்ம்ம்மா இருக்கே.. ஊற விடவும் தேவையில்லை என்பதால் சூப்பர்... நான் ராத்திரி ரவா +உழுந்து தோசை அரைத்து அவனில வத்திட்டு இப்போ பார்த்தேன் பொயிங்கல்ல:) மீண்டும் இப்போ அவனை நொட் அவளை:) ஓன் பண்ணி மறக்காமல் ஓவ் பண்ணி வச்சுட்டேன்ன்ன்ன்ன்ன்:)..
ReplyDeleteமகி, உங்க ரவா தோசை ரொம்ப நல்லா வந்து இருக்கு... நான் கொஞ்சம் வேற மாதிரி பண்ணுவேன்..
ReplyDeletewww.vahrehvah.com
இந்த சைட் பார்த்து ரவா தோசை நிறைய பண்ணி இருக்கேன். கையால் தளிக்கறேன்னு நான் கூட அடுப்பு மேல எல்லாம் தளித்து, சுத்தம் பண்ண கஷ்டப்பட்டு இருக்கேன்...
பாடல்கள் எல்லாமே சூப்பர்...
very yummy n crispy...
ReplyDeleteரவா ரோஸ்ட் சூப்பர் :))
ReplyDeleteநானும் இப்படிதான் செய்வேன் ..ரவா தோசை வார்த்ததும் உடனே சாப்பிடனும் அதாவது ஒருவர் சுடனும் இன்னொருவர் சாப்பிடனும் !!!அப்புறம் vice versa :))
நான் முழு மிளகும்.நறுக்கிய இஞ்சியும் அரை தேக்கரண்டி சேர்ப்பேன் ..
ReplyDeleteமானே தேனே என்ற வசனம் ..........கிரி அடிக்கடி சொல்வாங்க ..
மகி நான் ஊட்டி வருக்கியை ட்ரை செய்தேன் விரைவில் போடறேன்
/அதாவது ஒருவர் சுடனும் இன்னொருவர் சாப்பிடனும் !!!அப்புறம் vice versa :))/ ஹூம்! கேக்க நல்லாத்தான் இருக்கு, ஆனா நடக்கணுமே ஏஞ்சல் அக்கா?! உங்க வீட்டில் நடக்குமா? குடுத்து வைச்ச ஆளுதான் நீங்க.
ReplyDelete/மானே தேனே என்ற வசனம் ..........கிரி அடிக்கடி சொல்வாங்க ../ஆஹா! நானும் பலநாள் முன்னாடியே சொல்லிருக்கேனே, காப்பிரைட் வாங்கிவைக்காம விட்டுட்டனோ? அவ்வ்வ்வ்வ்...கிரி, எங்கிருக்கீங்க? சீக்கிரம் வந்து பதில் சொல்லுங்க! ;):)
/நான் ஊட்டி வருக்கியை ட்ரை செய்தேன் விரைவில் போடறேன்/ நிஜமாவா சொல்றீங்க? வாவ்!!!! சீக்கிரம், சீக்கிரம், சீக்கிரமா போஸ்ட் பண்ணுங்க. ஊரில் இருந்து கொண்டுவந்து ஃப்ரிஜ்ல வைச்சிருந்த வர்க்கி காலியாகிடுச்சு, நானும் செய்து பார்க்கணும். :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சல் அக்கா!
~~
விஜி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
/கையால் தளிக்கறேன்னு நான் கூட அடுப்பு மேல எல்லாம் தளித்து,/ ப்ரியா, நீங்க "தெளித்து"ங்கறதைத்தானே சொல்றீங்க?! இன்ஃபாக்ட், படத்தில இருக்க தோசை கையால தெளிச்சதுதான்பா! :)))அதேன் அடுப்பு மேல எல்லாம் தெளிக்கறீங்க, தோசைக்கல்லு மேல மட்டும் தெளிங்கோ! ;)))
கஷ்டமா இருக்குதுன்னா கரண்டிலயே எடுத்து தெளிச்ச மாதிரி ட்ரை பண்ணுங்க..என்னோட தோசைக்கல் கொஞ்சம் குழிவா இருக்கும், flat-ஆ இருக்கற கல்னா இன்னும் சூப்பரா வரும் ரவா ரோஸ்ட்.
வாரேவாஹ்.காம் நானும் பார்த்திருக்கேன், ஆனா இந்த ரேஷியோ ஈஸியா இருப்பதால் நினைவு வைச்சுக்க சுலபம்னு இதத்தான் செய்வேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா!
~~
/ஆனால் பிய்ந்திடாமல் வருமோ எனப் பயம்ம்ம்ம்மா இருக்கே.. / அதிராவ்..அது தோசைக்கல் கண்டிஷனைப் பொறுத்துதான்! :) உங்க தோ.கல் நல்ல பக்குவத்தில இருந்தா பேப்பர் மாதிரியே வரும். நீங்க சொன்ன மாதிரி உளு(ழு- இல்லே..கர்ர்ர்ர்ர்ர்ர்)ந்து-ரவை அரைச்சு நான் செய்ததில்லை. இது க்விக்அன்ட் ஈஸியா செஞ்சிரலாம், ட்ரை இட் அன்ட் ஸீ! :)
//நொட் அவளை:) ஓன் பண்ணி மறக்காமல் ஓவ் பண்ணி வச்சுட்டேன்ன்ன்ன்ன்ன்:).. // உஸ்ஸ்ஸ்ஸ்.....ஸப்பா! இந்த பூஸ் தொந்தரவு தாங்க முடீலையே..இந்த வாட்டியாவது மாவு பொயிங்கிரணும், சாமி கடவுளே!!! :))
நீங்க வருவீங்கனுதான் ஞாயிறூ மதியம் 1.45க்கு பப்ளிஷ் பண்ணினேனாக்கும். ஆனா வானதிதான் வந்தாங்க, யு ஸ்லெப்ட்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா!
~~
...."அதனுடன் இந்த "மானே,தேனே, பொன்மானே.." ...." :D :D
ReplyDeleteMahi, இந்த மாதிரி ஒரு ரவா ரோஸ்ட் செய்யனும்னு ரொம்ப ஆசை. இந்த ரெசிப்பி ட்ரை பண்ண போறேன். நல்லா வந்துச்சுனா என் ப்ளாக்-ல போடலாமா? உங்க லிங்க் குடுக்றேன் குடுக்றேன்... :)
//இந்த ரெசிப்பி ட்ரை பண்ண போறேன். நல்லா வந்துச்சுனா என் ப்ளாக்-ல போடலாமா? // இதென்ன கேள்வி மீனாக்ஷி? தாராளமா ட்ரை பண்ணுங்க, ப்ளாகிலயும் போடுங்க. அதென்ன இடைல "நல்லா வந்துச்சுன்னா"-- அப்படின்னு வேற செக் வைக்கிறீங்க?! ;))) நல்லாவே வரும், தைரியமாச் செய்யுங்க.
ReplyDeleteஎன்ர ப்ளாக் லிங்க் குடுக்கலைன்னாலும் எனக்குப் பிரச்சனையே இல்லே. இங்க போஸ்ட் பண்ணும் ரெசிப்பி மத்தவங்களுக்கும் உபயோகப்படுதுன்னா எனக்கு ரொம்ப சந்தோஷம்..அதுக்காகத்தானேங்க ப்ளாகே? :)
~~
/பாடல் எங்களுக்கு காட்டமாட்டாங்களாம்...:(/ ஏன் இளமதி ஏன்? ஏன் காட்டமாட்டாங்களாம்??! மத்த எல்லாருக்கும் தெரியுதே..நீங்களும் அம்முலுவும் மட்டும்தான் தெரியலை என்கிறீங்க..ஒருவேளை ஜெர்மனி-ல தெரிய மாட்டேன்னுதோ? அவ்வ்வ்வ்வ்...
/ஆனால் கல்லில் தெளிக்கும் போது கொஞ்சமாக அடுப்புக்கும் ஈயப்படும்...:) / :))) அதெப்படி ஈயறீங்கனு எனக்குப் புரிலை! கேஸ் அடுப்பா? எப்படின்னாலும் அலுங்காம,நலுங்காம தெளிக்கலாமே! ;)
இந்த நான்ஸ்டிக்-ஸ்டிக் தவா எல்லாம் நான் கவனிக்கறதில்லைங்க..ஊரில் இருந்து ஒரு நான்ஸ்டிக் தவா(ன்னுதான் நினைக்கிறேன்) வாங்கிவந்தேன்,அதிலதான் செய்வது. :)
வருகைக்கும் கருத்துக்கும் ந்னறி இளமதி!
~~
ஸாதிகாக்கா, உங்களுக்கு பக்கத்திலயே ரெஸ்டாரன்ட் இருக்கு, அதனால ரிஸ்க் எடுக்காம இருக்கீங்க. எனக்கு அப்படி இல்லையே! ;) இந்த மெதட் ட்ரை பண்ணி பாருங்க. மாவு நல்லா தண்ணி மாதிரி கரைச்சுக்குங்க, ரோஸ்ட் சும்மா சூப்பரா வரும்.
நன்றி ஸாதிகாக்கா!
~~
அம்முலு, ட்ரை பண்ணிப் பாருங்க. தோசை சூப்பரா இருக்கும். பாடல் ஏன் உங்களுக்குத் தெரியலைன்னு எனக்குத் தெரியலையே!
நன்றி அம்முலு!
~~
ராதாராணி, கட்டாயம் செய்துபாருங்க. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
~~
அனு, நன்றிங்க!
~~
தனபாலன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! எல்லாருக்கும் புடிக்கும்னா சொல்றீங்க? எங்கவீட்டில ஒருத்தருக்கு புடிக்காதாமே! :)
~~
ரம்யா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
சித்ராக்கா, இது சிம்பிள் & quick method..செய்துபாருங்க. நன்றி!
~~
வானதி, ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு அளவு போல! உங்க மெஷர்மென்ட்டும் சொல்லுங்களேன், அதையும் ட்ரை பண்ணிப் பார்ப்பொம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி!
~~
சூப்பர் ரவா தோசை.
ReplyDeleteReally? என் ப்ளாக்-ல இருந்து மக்கள் ரெசிப்பி ட்ரை செஞ்சா, என் லிங்க் குடுக்கனும்னு ரொம்ப விருப்பப்படுவேன். அட்லீஸ்ட் எப்டி வந்துச்சுன்னுனாச்சும் கமெண்ட் எதிர்பார்ப்பேன் :)
ReplyDeleteMahi, nethu dinner idhudhaan. Soopera irundhadhu dosai :)
ReplyDeleteஆசியாக்கா, நன்றி!
ReplyDelete~~
மீனாக்ஷி, செய்து பார்த்து மறக்காமல் சொன்னதுக்கு நன்றி! போட்டோ எடுத்தீங்களா, இல்லையா? ;) :)
~~