ஒண்ணா..ரெண்டா?
அஞ்சா..பத்தா?
நூறா..ஆயிரமா?
பத்தாயிரமா..லட்சமா?
ஒரு லட்சமா..ரெண்டு லட்சமா?
மூணு லட்சம்..மூணு லட்சம்..மூணு லட்சம்! ஆமாங்க..என் வலைப்பூ 3,00,000க்கும் மேல "அடி":) வாங்கிருச்சு! :)))) Mahi's Space has crossed 3,00,000 hits! :))))))))
கவனமாக் கவனிச்சிகிட்டேதான் இருந்தேன், ஆனா பாருங்க..பிப்ரவரி 14-ஆம் தேதி இரவு தூங்கப் போகயில் 2,99, 099 என்று இருந்த பேஜ் வியூஸ்...
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது முக்கியமான எண்ணைக் கடந்து 3,00,102-ல வந்து நின்றிருந்தது.
வலைப்பூ ஆரம்பித்து வருஷங்கள் மூன்றானாலும் சீராகப் பதிவுகள் போட்டுக்கொண்டே இருந்தேனா என்றால் இல்லை. சித்தன் போக்கு, சிவன் போக்கு என்பதாக திடீரென சிலபல நாட்கள் இந்தப் பக்கம் வராமல் மறைந்து விடுவேன். பலநாட்கள் வந்த கருத்துக்களுக்கெல்லாம் நல்ல புள்ளையாகப் பதில் கொடுப்பேன், சில நாட்கள் சோம்பேறியாகி அடுத்த பதிவைப் போட்டுவிடுவேன். :)))) ஆனாலும் என்னிடம் ஏதேனும் விளக்கம், சந்தேகம் கேட்பவர்களை இதுவரை தெளிவாக்காமல் விட்டதில்லை! ;)
இப்படி நான் செய்யும் குறும்புகளை எல்லாம் பொறுமையாக சகித்துக்கொண்டு தவறாமல் என் பதிவுகளைப் படித்து கருத்துக்கள் தந்து உற்சாகப் படுத்தும் முகம் தெரிந்த/தெரியாத நட்புக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கருத்துக்கள் தர நேரமில்லா விட்டாலும், விருப்பமில்லா விட்டாலும்;) தவறாமல் வந்து என் எழுத்துக்களைப் படித்துச் செல்லும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
அஞ்சா..பத்தா?
நூறா..ஆயிரமா?
பத்தாயிரமா..லட்சமா?
ஒரு லட்சமா..ரெண்டு லட்சமா?
மூணு லட்சம்..மூணு லட்சம்..மூணு லட்சம்! ஆமாங்க..என் வலைப்பூ 3,00,000க்கும் மேல "அடி":) வாங்கிருச்சு! :)))) Mahi's Space has crossed 3,00,000 hits! :))))))))
கவனமாக் கவனிச்சிகிட்டேதான் இருந்தேன், ஆனா பாருங்க..பிப்ரவரி 14-ஆம் தேதி இரவு தூங்கப் போகயில் 2,99, 099 என்று இருந்த பேஜ் வியூஸ்...
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது முக்கியமான எண்ணைக் கடந்து 3,00,102-ல வந்து நின்றிருந்தது.
வலைப்பூ ஆரம்பித்து வருஷங்கள் மூன்றானாலும் சீராகப் பதிவுகள் போட்டுக்கொண்டே இருந்தேனா என்றால் இல்லை. சித்தன் போக்கு, சிவன் போக்கு என்பதாக திடீரென சிலபல நாட்கள் இந்தப் பக்கம் வராமல் மறைந்து விடுவேன். பலநாட்கள் வந்த கருத்துக்களுக்கெல்லாம் நல்ல புள்ளையாகப் பதில் கொடுப்பேன், சில நாட்கள் சோம்பேறியாகி அடுத்த பதிவைப் போட்டுவிடுவேன். :)))) ஆனாலும் என்னிடம் ஏதேனும் விளக்கம், சந்தேகம் கேட்பவர்களை இதுவரை தெளிவாக்காமல் விட்டதில்லை! ;)
இப்படி நான் செய்யும் குறும்புகளை எல்லாம் பொறுமையாக சகித்துக்கொண்டு தவறாமல் என் பதிவுகளைப் படித்து கருத்துக்கள் தந்து உற்சாகப் படுத்தும் முகம் தெரிந்த/தெரியாத நட்புக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கருத்துக்கள் தர நேரமில்லா விட்டாலும், விருப்பமில்லா விட்டாலும்;) தவறாமல் வந்து என் எழுத்துக்களைப் படித்துச் செல்லும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
~~~
பி.கு. என் எழுத்து இந்த வலைப்பூவுக்கு முதுகெலும்பாக இருந்தாலும்
புகைப்படங்கள் வலைப்பூவின் நறுமணமாக இருந்தது என்பது உண்மை. இதுநாள் வரை
எனக்குத் தேவையான படங்களை நன்றியுடன் எடுத்துத் தந்து அரும்பணியாற்றி வந்த
Sony H7 கேமரா, கடந்த வாரம் திடீரென தன் ஆயுட்காலத்தை முடித்துக்
கொண்டுவிட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த இடத்தை
நிரப்ப ஒரு Canon t3i வந்திருக்கிறது, ஆனால் கேனன்-இன் தோற்றம் மற்றும்
பணிச் செயல்முறைகள் கொஞ்சம் காம்ப்ளிகேட்டட் ஆகவும், கவனக்குறைவாகக்
கையாள்வது சரியில்லை என அதற்குக் கொடுத்த விலை மிரட்டுவதாகவும் ;) :)
இருப்பதால் இனிமேல் எனது சமையல் குறிப்புகளில் ஸ்டெப்-பை-ஸ்டெப் படங்கள்
வருவது (தற்சமயம்) கேள்விக்குறியாக இருக்கின்றது என்பதையும்
தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். "ஸோனி"-யை மீண்டும் பலசாலியாக்க
முடிந்தால் மிக்க மகிழ்வுறுவேன், பார்ப்போம் என்ன ஆகின்றது என! :)
~~~
வாழ்த்துகள் மகி !!!!!
ReplyDeleteThanks Angel Akka! :)
ReplyDeleteவாழ்த்துகள் மகி ... இன்னும் பல லட்சங்களை தாண்ட வாழ்த்துக்கள்
ReplyDeleteMahi,
ReplyDeleteவாழ்த்துக்கள் :) அடுத்து "கோடீஸ்வரி"-யாக எங்கள் வாழ்த்துக்கள் :D :D
Congrats.
ReplyDeleteநோஓஓஓஓஓஓஓஓஒ.. தாங்ஸ் அதிரா எண்டும் சொல்ல்லியிருக்கோணும்:)..
ReplyDeleteசரி சரி பெரிய மனது பண்ணி மன்னிச்சு விட்டிடுறேன்ன்ன்:)...
வாழ்த்துக்கள் மகி.
ஓ... அருமை. உங்கள் திறமைக்கு ஒரு சான்று...:)
ReplyDeleteவாழ்த்துக்கள் மகி!!!
Congrats!!!
ReplyDeleteHey congrats mahi!
ReplyDeleteமூனு லட்சமானது மில்லியனாகவும்,பில்லியனாகவும் வளர வாழ்த்துக்கள். புது காமிராவுடன் வந்து மீண்டும் கலக்குங்க.
ReplyDeleteCongrats Mahi... Looking forward more post from ur end...
ReplyDeletehttp://recipe-excavator.blogspot.com
வாழ்த்துக்கள் மகி.
ReplyDeletevaazththukkal mahi..
ReplyDeletevazhuthukkal akka... so interesting to read your write ups...
ReplyDeleteCongrats Mahi, you have number of fans for your writing..
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteMahi's Space has crossed 3,00,000 hits! :))))))))
ReplyDeleteஇனிய வாழ்த்துகள்..
Congrats mahi
ReplyDeleteஇதோ இன்னொன்னு சேர்த்துக்குங்க! வாழ்த்துக்கள்!
ReplyDeleteCongratulations
ReplyDeleteவாழ்த்துக்கள்..ஆஹா! நான் டபுள் அடிபின்னிட்டேனே! :)..
ReplyDeleteஎன்னை நம்பி நல்ல கேமரா தருவதில்லை,தடை உத்திரவே போடப்பட்டிருக்கு,எல்லாம் மசாலா வாடை வந்து விடுமாம்.என் மொபைல்,ஒரு பழைய கேமரா வைத்து வருது போகுதுன்னு எடுத்து தள்ளுவது தான் நம்ம வேலை..clarity பார்த்தால் அடுப்பில் உள்ளது நாசமாகிடும்,அதனால் படத்தை பற்றி நான் கவலைப் படுவதில்லை மகி..சும்மா பரிமாறுவதை எடுத்தால் சாப்பிடும் சுவாரசியம் போய்விடுகிறது.அதனால் கிச்சனில் எது முடியுதோ அதனை எடுப்பதோடு சரி..
நீங்க அசத்துவீங்க..அதனால் பயப்பட வேண்டாம்..
//ஆனாலும் என்னிடம் ஏதேனும் விளக்கம், சந்தேகம் கேட்பவர்களை இதுவரை தெளிவாக்காமல் விட்டதில்லை! ;)//
ReplyDeleteஆமாம்,மெயிலில் தொந்திரவு செய்யும் லிஸ்டில் நானும் இருக்கேனே!
கலக்கிடீங்க மகி. Congrats. ரொம்ப நாளாவே உங்க பிளாக்-ஐ follow செய்யறேன். ஆன கமெண்ட் போட, சில நேரம் அலுப்பு, சில நேரம் நேரமின்மை -காரணமா போய்டுவேன். ஆனா, மனதின் ஓரத்தில் குற்றவுணர்வு உண்டு. இன்னைக்கு, உங்க ப்ளாக்-இல் எனது வலையுலக மௌனத்தை உடைத்துவிட்டேன்.இனிமேல், மற்ற வலைதள தோழிகளுடனும் தொடர்பில் இருப்பேன்.
ReplyDeleteஎனது கணவர் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். கொங்கு உணவு, கலாச்சாரம், வார்த்தைகள் அனைத்தையும் ஓரளவு புரிய வைத்ததில் உங்க ப்ளாக்-க்கு பெரும் பங்கு உண்டு. நான் உங்களோட பரம விசிறி. டென்ஷன்-ஆ இருந்தா உங்க ப்ளாக் பக்கம் வந்து ரிலாக்ஸ் ஆயிடுவேன். தொடரட்டும் உங்கள் பணி. என்னையும் உங்கள் தோழிகள் லிஸ்ட்-இல் சேர்த்துக்கோங்க மகி.
I too follow your blog Mahi.
ReplyDeleteBut most of the time not putting comment is true.
Now I came here to Congragulate dear.
Go ahead. Sky is the limit for you to reach.
All the beast dear.
vijimma.
Congratulations Mahi. Best wishes to achieve many more milestones :-)
ReplyDeleteMira’s Talent Gallery
Wowwwww... congrats Mahi. 30 lakhs hit varrathukullayaachum naama meet panromaanu paappom...:)
ReplyDeleteநான் பல முறை உங்கள் கிச்சனை பார்வை இட்டுளேன் ஆனால் இங்கு இப்பொழுதான்
ReplyDeleteநல்ல இருக்கு வாழ்த்துகள்
congrats mahi..
ReplyDeleteகருத்துக்களால் வாழ்த்துக்கள் தந்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
ReplyDeleteமௌனப் பூட்டை உடைத்து வலைப்பூவிற்குள் நுழைந்த புதுமுகங்கள் சுபா குமார் மற்றும் மலர் பாலன் இருவருக்கும் ஸ்பெஷல் நன்றி! :)
~~
சுபா, /ஆனா, மனதின் ஓரத்தில் குற்றவுணர்வு உண்டு./ வேண்டாமே! :)
உங்க கருத்தைப் பதிக்கவைக்கும் அளவுக்கு என் எழுத்துக்களுக்கு/பதிவுகளுக்கு வலிமை இல்லை என்பதாகவே அதை நான் எடுத்துக்கொள்வேன். ;):)
என்னைப் பொறுத்தவரை நல்ல பதிவுகள் எனில் எப்படியாவது நேரத்தை ஒதுக்கிக் கொண்டு கருத்திடுவேன், அரிதாகச் சில சமயங்களில் அது முடியாமல் போவதுமுண்டு. ஆனால் கருத்துச் சொல்லாமல் போனால் அது உலகமகா குற்றம் என்றெல்லாம் எண்ணுவதில்லை..ஓரொருவர் சூழ்நிலை ஒவ்வொருமாதிரி இருக்கும். ப்ளாகரில் இருக்கும் ஸ்டாடிஸ்டிக்ஸ் மூலமாக என் வலைப்பூவிற்கு வந்து செல்லும் ட்ராஃபிக்கை கவனித்துக்கொண்டே இருப்பதால் கருத்துக்கள் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. ஆனால் சிலசமயங்களில் கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கும்! நானும் சாதாரண மனுஷிதானே!ஹஹஹா!
"சும்மா ஒரு கருத்தைச் சொன்னத்துக்கு நிக்காம தந்தி மிஷின் மாதிரி பதில் வருதே!..பேசாம மௌனமாவே இருந்திருக்கலாமோ?" என்று கூட உங்களுக்குத் தோணுமில்ல இப்ப? ;) ஹிஹிஹி!
நீங்க குற்றவுணர்ச்சியெல்லாம் கொள்ளத் தேவையே இல்லைங்க, என் பதிவுகள் உங்களுக்கு உபயோகமா இருக்கிறது என்பதே எனக்கு மிக்க மகிழ்ச்சி! காதைக் கொண்டுவாங்க, ஒரு ரகசியம் சொல்றேன். நானும் பல வலைப்பூக்களைப் படிச்சுட்டு நைஸா கம்பி நீட்டிருவேன். அதற்கு பல்வேறு காரணங்கள், அதையெல்லாம் பப்ளிக்கில சொல்லப்படாது! ;))))
~~
பலநாட்கள் கழித்துத் தலைகாட்டிய (சித்ரா)ஆச்சி:), தர்ஷினி, விஜிம்மா, அப்பாவி(நீயும் இந்த லிஸ்ட்ல சேர்ந்துட்டியே அம்முணி, இது உனக்கே அடுக்குமா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்), மீரா, கே.பி.ஜனா அனைவருக்கும் இனிய நன்றிகள்!
~~