Guacamole (US /ɡwɑːkəˈmoʊliː/; Spanish: [wakaˈmole] or [ɡwakaˈmole]), is an avocado-based sauce that originated with the Aztecs in Mexico.[1] In addition to its use in modern Mexican cuisine it has also become part of American cuisine as a dip, condiment and salad ingredient. It is traditionally made by mashing ripe avocados with a molcajete (mortar and pestle) with sea salt. Some recipes call for tomato, onion, garlic, lime juice, chili, yogurt and/or additional seasoning's.
Thanks to Wikipedia.
க்வாக்கமோலே - இது ஒரு மெக்ஸிகன் டிப். சிப்ஸ் உடன் பரிமாறலாம், அல்லது மெக்ஸிகன் உணவுவகைகளுடன் பரிமாறலாம். இங்கே உள்ள சிப்போட்லே மெக்ஸிகன் உணவகத்தில் இதனை ருசித்திருக்கிறேன். சமீபத்தில் அவகாடோ பழங்கள் கிடைத்ததில் ஒருமுறை அவகாடோ சப்பாத்தி செய்தபிறகு, வேறென்ன செய்யலாம்னு கொஞ்சம் இணையத்தை துருவியதில்;) க்வாக்கமோலே சிக்கியது!முதன்முறையாக வீட்டில் செய்கிறேன், அதனால் எப்படி இருக்குமோ என கொஞ்சம் பயந்துகிட்டே செய்தேன், சும்மா சூப்பரா இருந்தது! :)
க்வாக்கமோலே-வில் அவகாடோ-எலுமிச்சை சாறு -உப்பு இவைதான் மூலப்பொருட்கள் (main ingredients) இவற்றுடன் உங்க விருப்பப்படி பொருட்களைச் சேர்த்து கலந்துக்கலாம். சிலர் தயிர் சேர்க்கறாங்க, பூண்டு சேர்க்கிறாங்க..நான் எனக்குப் பிடிச்ச பொருட்களைச் சேர்த்திருக்கேன்.
Thanks to Wikipedia.
க்வாக்கமோலே - இது ஒரு மெக்ஸிகன் டிப். சிப்ஸ் உடன் பரிமாறலாம், அல்லது மெக்ஸிகன் உணவுவகைகளுடன் பரிமாறலாம். இங்கே உள்ள சிப்போட்லே மெக்ஸிகன் உணவகத்தில் இதனை ருசித்திருக்கிறேன். சமீபத்தில் அவகாடோ பழங்கள் கிடைத்ததில் ஒருமுறை அவகாடோ சப்பாத்தி செய்தபிறகு, வேறென்ன செய்யலாம்னு கொஞ்சம் இணையத்தை துருவியதில்;) க்வாக்கமோலே சிக்கியது!முதன்முறையாக வீட்டில் செய்கிறேன், அதனால் எப்படி இருக்குமோ என கொஞ்சம் பயந்துகிட்டே செய்தேன், சும்மா சூப்பரா இருந்தது! :)
க்வாக்கமோலே-வில் அவகாடோ-எலுமிச்சை சாறு -உப்பு இவைதான் மூலப்பொருட்கள் (main ingredients) இவற்றுடன் உங்க விருப்பப்படி பொருட்களைச் சேர்த்து கலந்துக்கலாம். சிலர் தயிர் சேர்க்கறாங்க, பூண்டு சேர்க்கிறாங்க..நான் எனக்குப் பிடிச்ச பொருட்களைச் சேர்த்திருக்கேன்.
தேவையான பொருட்கள்
அவகாடோ பழம்/பட்டர் ஃப்ரூட் -1
கால் பாகம் தக்காளி
சிறியதாக ஒரு வெங்காயம் (Shallot)
இரண்டு பச்சைமிளகாய் (காரத்துக்கேற்ப)
ஒரு மூடி எலுமிச்சைச் சாறு
ஒரு கைப்பிடி கொத்துமல்லித் தழை
உப்பு
செய்முறை
வெங்காயம்-தக்காளி-மிளகாய்- கொத்துமல்லித் தழை இவற்றை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
தக்காளியின் விதைகள் இல்லாமல் சதைப் பற்றான பகுதியை மட்டும் நறுக்கியிருக்கேன். மிளகாயின் காரம் குறைவாக வேண்டும் என்றால் அதிலும் விதைகளை நீக்கிவிட்டு நறுக்கிகொள்ளவும்.
அவகாடோ-வை நறுக்கி, அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்து, மசித்துக்கொள்ளவும்.
அதனுடன் நறுக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்க்கவும்.
தேவையான உப்பும் சேர்க்கவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக சேரும்படி கலந்துவிட்டு, குளிர்சாதனப் பெட்டியில் அரைமணி நேரம் வைக்கவும். பிறகு எடுத்துப் பரிமாறலாம்.
ஸோ...க்வாக்கமோலே ஃப்ரிட்ஜ்ல இருக்கட்டும், நாம அப்படியே பொடிநடையா எங்கூர் உழவர் சந்தைக்குப் போயிட்டு வரலாம் வாங்க! :)
இங்கே இன்னும் முழுவீச்சில் உழவர் சந்தை துவங்கவில்லை..குளிர்காலம் வேறு! ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு காய்கறிக்கடை! :) சில பழக்கடைகள், ஒரு ஆர்கானிக் பால்- கடை, செல்லப் பிராணிகளுக்கான கடை ஒன்று, க்ரீன் டீ கடை ஒன்று என இரட்டைப்படை எண்ணிக்கையைக் கூடத் தொடாத கடைகள்தான் உள்ளன. இருந்தாலும் நம்மள்லாம் போய் ஆதரவு குடுத்தாத் தானே இன்னும் நிறையக் கடைகள் வரும்? -அப்படீன்ற நல்லெண்ணத்தில நான் வாரவாரம் போலாம்னு இருக்கேங்க! ஹஹஹா!
சரி..போனதுக்கு சல்ஸா கடைல ஒரு பாக்கெட் சிப்ஸ் வாங்கிட்டு,
காய்க்கடைக்காரம்மா கிட்ட கொஞ்சநேரம் கதையடிச்சுட்டு ஒரு முட்டைக் கோஸும்,
ரெண்டு தக்காளியும் வாங்கிட்டு நடையக் கட்டினேன்.
வீட்டுக்கு வந்து குளிர்சாதனப் பெட்டியில் இருந்து guacamole-வ கொஞ்சம்
கிண்ணத்தில எடுத்துவைச்சிகிட்டு, சிப்ஸையும் பிரிச்சு ஒரு புடி புடிச்சேன்!
;)))))
சிப்ஸ் &க்வாக்கமோலே காம்பினேஷன் சூப்பரா இருக்கும்! பொரிக்காம, bake பண்ண சிப்ஸா இருந்தா உத்தமம், ருசி கம்மியா இருந்தாலும் ஆரோக்கியமா இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்க..நன்றி, வணக்கம்!
I learnt this recipe from my daughter!Looks yum and avacado nna butter fruitnnu ippo dhan theriyum
ReplyDeletewow want to make long mahi,but didnt tried at home...sure will try.
ReplyDeleteLooks yum.
ReplyDeleteஅட அவகாடோ பழ ரெஸிப்பி...:) ஸூப்பர்...பார்க்கவே ம்..நாவூறுதே.. எங்கையிருந்துதான் இப்பிடி புதுசுபுதுசா பிடிச்சிடுறீங்களோ... வாயிலயே நுழையுதில்லை. நான் பெயரைச் சொன்னேன்...:) அவகாடோ எனக்கு ரொம்ப பிடிச்சதாச்சே... அடுத்தமுறை வாங்கும்போது செய்து பார்த்திடவேண்டியதுதான்.
ReplyDeleteஉங்க தயாள சிந்தனை மார்கட்வரை கேட்குது. அங்கிருந்த காய்க்கடைக்காரம்மா உங்களை அப்படி புகழ்ந்து தள்ளீட்டாங்கன்னா பாருங்களேன்...:)))
அருமையான குறிப்புப் பகிர்வுக்கு மிக்க நன்றி மகி!
பெயரை உச்சரிக்கவே கஷ்டமாக இருக்கு மகி:)
ReplyDelete/ஸாதிகா said... பெயரை உச்சரிக்கவே கஷ்டமாக இருக்கு மகி:)/ ஸாதிகாக்கா, பெயரை உச்சரிக்காட்டா என்ன? அவகாடோ dip-னு சொல்லிக்கோங்க! டேஸ்ட் சூப்பரா இருக்கும்! :)
ReplyDeleteநன்றி!
~~
இளமதி, காய்க்கடைக்காரம்மாவை நீங்களும் பாத்தீங்களா?! நாங்க friends ஆகிட்டோம்! சீ யூ ஆன் தர்ஸ்டே-னு சொல்லி அனுப்பிருக்காங்க..ஆனா இந்தவாரம் மழை வரும்போலிருக்கு..அவ்வ்வ்!
அடுத்தமுறை அவகாடோ வாங்கைல கண்டிப்பா ட்ரை பண்ணிப் பாருங்க. நன்றி!
~~
Anu, Prema, Jeyashri...thanks very much for your comments.
~~
Even I do it the same way, miss the avocados here..
ReplyDelete"இருந்தாலும் நம்மள்லாம் போய் ஆதரவு குடுத்தாத் தானே இன்னும் நிறையக் கடைகள் வரும்?" ___ஆதரவு கொடுக்கறவங்க ரெண்டுமூனு பை நிறைய வாங்கிவரணுமா இல்லையா!
ReplyDeleteஎனக்கு 'க்வாக்கமோலி'பிடிக்காது.ஆனால் அவகடோவை மேஷ் பண்ணி அல்லது நீளவாக்கில் துண்டுகள் போட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட எனக்கு ரொம்பரொம்ப பிடிக்கும்.
/ஆதரவு கொடுக்கறவங்க ரெண்டுமூனு பை நிறைய வாங்கிவரணுமா இல்லையா!/ ஐ! இது நல்லா இருக்கே! 4 நாள் முன்னாடிதான் மார்க்கெட் போயி 2 வாரத்துக்கு காய் வாங்கிட்டு வந்திருந்தேன். அதுக்கப்புறமும் பை நிறைய வாங்கிவந்து என்ன செய்ய சித்ராக்கா!?! ;)))
ReplyDelete//ஆனால் அவகடோவை மேஷ் பண்ணி அல்லது நீளவாக்கில் துண்டுகள் போட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட எனக்கு ரொம்பரொம்ப பிடிக்கும். // ஆஹா! என்னென்னமோ சொல்றீங்களே!! எனக்கு அவகாடோ அவ்வளவாப் புடிக்காது. க்வாக்கமோலி சிப்போட்லே-ல சாப்பிட்டுப் பார்த்த தைரியத்தில செய்தேன். அதுக்கே எவ்ளோ நாள் யோசனைன்றீங்க?! ;) ஸ்மூத்தி நல்லார்க்கும் என்கிறாங்க..ஆனா என்னால நீங்க சொல்வதெல்லாம் இமேஜின் பண்ணக் கூட முடிலே...சாரி! ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
ஹேமா, நன்றிங்க!
~~
சிப்ஸ் &க்வாக்கமோலே காம்பினேஷன் சூப்பரா இருக்கும்!
ReplyDeleteஆஸ்திரேலியாவில் பிஸ்ஸா போன்ற உணவுகளில்
தொட்டுக்கொள்ள இந்த அவகோடாவை மேஷ் செய்து கொடுத்தார்கள் .. அருமையாக இருந்தது .. சிப்ஸ் சாப்பிடவும் துணையாக இருந்தது ..
கெட்டித்த்யிரும் சிப்ஸுக்கு தொட்டுக்கொள்ள்
நன்றாக இருந்த்து...
அவகாடோ வாங்கினால் உடனே காலிசெய்துடுவாங்க. நல்ல சிம்பிள் ஆன ரெசிப்பி. நானும் செய்து பார்க்கிறேன்.
ReplyDeleteநாங்களும் இம்மார்கட்டுக்கு போவோம் மகி. தொடர்ந்து சென்று வாங்கினால் தெரிந்தவர்கள் என்று சில கொசுறுகள்,விலைகுறைப்புகள்
இருக்கும். நல்ல பகிர்வு நன்றி மகி.
அவகாடோ பார்த்திருக்கிறேன். அதில் இதையெல்லாம் செய்யலாமா?ஆனால் பேரே சொல்ல சிரமமாக இருக்கிறது.
ReplyDeleteநல்ல பதிவு.
ராஜி
ஆவ்வ்வ் குவாக்காமோல்.. பெயர் புதுசெனக்கு.. நானும் உப்பூடிச் சாப்பிட்டேன் நன்றாக இருந்துது, ஆனா நீங்க மசித்து விட்டிருக்கிறீங்க நான் சாப்பிட்டது சலாட்டாக எல்லாமே குட்டி குட்டியாக அரிந்து போட்டு ஒரு அவிச்ச முட்டையையும் குட்டியா வெட்டி மிக்ஸ் பண்ணி விட்டிருந்துதா... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :))
ReplyDeleteLooks yummy. I will try this one in the coming weeks.
ReplyDeleteஎனது தளத்தில் Passion On Plate contest வைத்திருக்கிறேன்.. உங்களால் முடிந்த சமையல் குறிப்பினை அனுப்பி போட்டியில் கலந்துக்கொள்ளும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeletehttp://www.en-iniyaillam.com/2013/02/announcing-passion-on-plate-giveaway.html
மஹி,
ReplyDeleteஎன் கணவருக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா எனக்கு.... அவகாடோ சாப்டு ஒரு நாள் வயிறு கலக்கு கலக்கு-னு கலக்கிடுச்சு. அப்போதிருந்து அவருக்கு மட்டும் செய்து தருவேன்.
ராஜேஸ்வரி மேடம், அம்முலு, ராஜி மேடம், அதிரா மேடம்:), வானதி, மீனாக்ஷி அனைவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!
ReplyDelete/கெட்டித்தயிரும் சிப்ஸுக்கு தொட்டுக்கொள்ள்
நன்றாக இருந்த்து/ ஆமாங்க, நல்ல காம்பினேஷன்! ஆரோக்கியமானதும் கூட.
/தொடர்ந்து சென்று வாங்கினால் தெரிந்தவர்கள் என்று சில கொசுறுகள்,விலைகுறைப்புகள் கூட/ ஆமாம் அம்முலு, இரண்டாவது முறை பாத்தப்பவே இஞ்சி கொசுறு கிடைச்சது. :) ஆனா பாருங்க, இந்த வாரம் குளிர்னு நான் மார்க்கட் போகாம கட் அடிச்சிட்டேன். :)
/ஆனால் பேரே சொல்ல சிரமமாக இருக்கிறது./ ஆஹா! ராஜி மேடம், எல்லாரும் இப்படியே சொன்னா எப்புடி? குவாக்கமோலி- என்று சொல்லிருங்களேன், ஈஸி! :)
/குட்டி குட்டியாக அரிந்து போட்டு ஒரு அவிச்ச முட்டையையும் குட்டியா வெட்டி மிக்ஸ் பண்ணி விட்டிருந்துதா... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)) / அவகாடோ சாலட் தானே? இன்னும் 2-3 பழம் ப்ரிஜ்ல;) வைச்சிருக்கேன், செய்துட்டா போச்சு! தாங்க்ஸ் for the idea அதிராவ்!
மீனாக்ஷி, உங்க பிரச்சனை ரெம்ப புதுசா இருக்குது. முதல் முறை கேள்விப்படறேன். ஐ திங்க் நீங்க அவகாடோ-க்கு முன்னால பின்னால சாப்பிட்ட எதாச்சும்தான் தொந்தரவு குடுத்திருக்கணும். எதுக்கும் இன்னொரு முறை அவகாடோ சாப்பிட்டு டெஸ்ட் பண்ணுங்க,தெரிஞ்சுரும்.
~~
பாயிஸா, கலந்து கொள்ள முயற்சிக்கிறேன். தகவலுக்கு நன்றி!
~~
Wow!
ReplyDelete..."எதுக்கும் இன்னொரு முறை அவகாடோ சாப்பிட்டு டெஸ்ட் பண்ணுங்க,தெரிஞ்சுரும். "... :D :D :D lol
ReplyDeleteOk Doctor Mahee.