Monday, February 25, 2013

BBB

A, B, C, D கூட ஒழுங்கா சொல்லத்தெரில, ஒரே எழுத்தை திரும்பத் திரும்ப சொல்லுறாங்க என்று சிரிக்கிறீங்க..ஐ நோ!!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ;) பிஸி  பேளே  பாத் - Bisi Bele Bath அப்படீன்றதத்தான் சுருக்கி BBB -னு சொல்லிருக்கேன். டைப் பண்ணற எனக்கும் ஈஸி, படிக்கிற உங்களுக்கும் ஈஸி![டைட்டில மட்டும் மூணெழுத்தில வைச்சிட்டு போஸ்ட்ல நீட்டி முழக்கிட்டு.."எங்களுக்கு ஈஸி"ன்னு வேற சொல்றயா? என்று பல்லைக் கடிக்காதீங்க..பாவம் பல்லு! :)

(என்னைப் பொறுத்தவரை) இந்த ரெசிப்பிக்கு முக்கியமான பொருட்கள் ரெண்டு. ஒண்ணு பச்சை வேர்க்கடலை, ரெண்டாவது கலர் கலர் குடைமிளகாய்! மத்த என்ன இல்லன்னாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம், ஆனா இது ரெண்டும் இல்லாம BBB செய்யாதீங்கன்னே சொல்லுவேன்! ஹிஹி! கூடவே சாப்பிடும்போது தட்டுல சுடச்சுட சாம்பார் சாதத்தை வைச்சு, மேலாப்பல காராபூந்தியோ, மிக்ஸரோ தூவி, ஒரு டீஸ்பூன் நெய்யும் விட்டு சாப்பிட்டா...சாப்பிட்டுப் பாருங்க, உங்களுக்கே தெரியும். :) ;)
தேவையான பொருட்கள்
அரிசி-3/4கப்
துவரம் பருப்பு-1/4கப்
விருப்பமான காய்கறிகள்( சற்றே பெரிய துண்டங்களாக்கியது)-1கப்
தக்காளி-2
பச்சை வேர்க்கடலை -ஒரு கைப்பிடி
புளிக்கரைசல்-1/4கப்
மஞ்சள் பொடி-1/4டீஸ்பூன்
மிளகாய் பொடி-1/2டீஸ்பூன்
சர்க்கரை -1/4டீஸ்பூன்
MTR சாம்பார் பொடி (அ) ஏதாவதொரு:) சாம்பார் பொடி-11/2டீஸ்பூன்
தண்ணீர்-21/4 கப்

நெய்
உப்பு
தாளிக்க
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் -1(நீளமாக நறுக்கவும்)
குடைமிளகாய்(பச்சை-சிவப்பு-ஆரஞ்சு இப்படி எல்லாக் கலரும் சேர்த்து)-1
கறிவேப்பிலை
பட்டை -2"துண்டு
கிராம்பு-2
சீரகம்-1/2டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
வரமிளகாய்-2

செய்முறை
அரிசி-பருப்பை களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
குக்கரில் அரிசி-பருப்பு-காய்கள்-பச்சை வேர்க்கடலை-நறுக்கிய தக்காளி-மஞ்சள் பொடி-மிளகாய்ப் பொடி-சாம்பார் பொடி-உப்பு-சர்க்கரை-புளிக்கரைசல் எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீரும் சேர்த்து 3 விஸில் வரும் வரை சமைக்கவும்.
தனியாக ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு-சீரகம்-பட்டை-கிராம்பு சேர்த்து பொரியவிட்டு, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.  [தாளிக்க வேண்டிய பொருட்களை தாளிக்கவும்-அப்படின்னா ஒரே லைன்ல வேலை முடிஞ்சது, ஆனாலும் பாருங்க, விளக்கவுரை-பொழிப்புரை எழுதிஎழுதிஎழுதி....சரீஈஈஈ...நிறுத்திக்கறேன்!;)] வதக்கும்போது கொஞ்சூண்டு உப்பும் சேர்த்தா சுவை நல்லா இருக்கும், சும்மா ரெண்டு சிட்டிகை சேருங்க. ப்ரெஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து தாளித்த பொருட்களைச் சேர்த்து கலந்துவிடவும். விரும்பினால் இப்பொழுதும் கொஞ்சம் நெய்யும் சேர்த்து கலக்கிவைக்கலாம்.
சுவையான BBBath தயார். விருப்பமான வடகம், சிப்ஸ், அப்பளம் வகைகளுடன் சாப்பிடலாம்.
குறிப்பு
நான் சேர்த்திருக்கும் காய்கறிகள் 2கத்தரிக்காய்,சில துண்டுகள் முருங்கைக்காய், கொஞ்சம் மேரக்காய்/ சௌ-சௌ/பெங்களூர் கத்தரிக்காய், கேரட் 1, பீன்ஸ் ஒரு 3-4 அப்புறம் ஒரு சின்ன உருளைக் கிழங்கு. நீங்க உங்க வீட்டில் கைவசம் இருக்கும் காய்களை சேர்க்கலாம்.
நான் சக்தி மசாலாவின் சாம்பார் பொடி உபயோகித்தேன்.

இந்தக் குறிப்பு ஆங்கில வலைப்பூவில் பலகாலம் முன்பே பகிர்ந்திருந்தாலும், இங்கே மறுபடி பகிரக் காரணம் கடந்த வாரத்தில் மீண்டும் ஒரு முறை செய்தேன்.  என்னவருக்கு சாம்பார் சாதம் அவ்வளாப் புடிக்காது, பலநாள் கழிச்சு செய்ததால் சாப்பிட்டார், அவருக்கும் ரொம்ப பிடிச்சிப்போச்சு. சாதத்தின் மேலே மிக்ஸர் தூவி சாப்பிட்டது அவர்தான், எனக்கு இந்த அலங்காரம்லாம் வேணாம், அப்படியே சாப்பிடுவேன். ;) :) 
இவ்ளோ விளக்கிருக்கேன், கட்டாயம் நீங்களும் ஒருமுறை BBB செய்து பார்ப்பீங்கதானே? :) 
~~~
Sending this recipe to "Passion on Plate" event happening at "En Iniya Illam"
~~~

16 comments:

 1. Love this all time with Pappad and Some raitha Mahi.. Super post...
  http://recipe-excavator.blogspot.com

  ReplyDelete
 2. ஆஹா..ஆஹா.. சூப்பர் பிபிபி எண்டதும் ஏதோ மகிக்கு பிபி ஏறிட்டுதாக்கும்:) அதான் அட்வைஸ் கேட்கிறா:) எண்டெல்லோ பதறி அடிச்சுக்கொண்டு ஓடிவந்தனான்ன்:)..

  சூப்பரா இருக்கு.... இதுக்கு பழப்புளி விட்டால் கோயில் குழைசாதம் அப்படித்தானே?.. வீட்டில ஆருக்கும் இப்படியான சாஅத வகையே பிடிக்காது. எனக்கு மட்டும் ரொம்பவும் பிடிக்கும்... செய்வேன்ன் வெள்ளிக்கிழமைக்கு:).

  ReplyDelete
 3. ஸ்.ஸ்.ஆ.... வாசிக்கும் போதே வாய் ஊறிஈஈஈ... இருங்க வாயை துட... ச்சீ வாணாம்....:)))
  செம வாசனை ருசியா இருக்குது என் கற்பனைல....
  ஹாஆ ஹா ஹா...:)
  அருமை அருமை. சூப்பர் குறிப்பு & ஈஸி பாத் மகி!
  கண்டிப்பா செய்து பார்க்கணும். ரொம்ப நன்றி பகிர்வுக்கு மகி...;)

  ReplyDelete
 4. பி பி பி நல்ல குறிப்பு நன்றி ஷர்ட்டா சூப்பரா இருக்கு

  ReplyDelete
 5. Adding the capsicum pieces last is a nice idea, gives a nice flavor to the rice rt..

  ReplyDelete
 6. BBB கொடைமிள்காய் சேர்த்து செய்ததில்லை. சூப்பர்.

  ReplyDelete
 7. மகி BBB :))) A 1 !!!!!!
  எங்க வீட்லயும் சாம்பார் ருக்கு வரவேற்பு கிடையாது ..இனிமே BBB தான் எங்க வீட்லயும்

  ReplyDelete
 8. கேக்க மறந்திட்டேன் ..அந்த கலர் FRYUMS கோவை ஸ்பெஷ ல் .:))

  ReplyDelete
 9. நான் செய்ததில்லை.செய்துபார்க்கணும்.ஈசியான குறிப்பா இருக்கு.

  ReplyDelete
 10. This one pot meal was colourful with the addition of capsicum...........

  ReplyDelete
 11. Mahi, quick and super easy method for BBB. Will try soon

  ReplyDelete
 12. கலர்ஃபுல்லான சாம்பார் சாதம் பார்க்கவே சாப்பிடத்தோணுது.புதுபேர் நல்லாருக்கு.

  ஊரிலிருந்து எடுத்து வந்த பொடி என்னாச்சு? அதுக்குள்ள சக்தி மசாலாவுக்குப் போயிட்டீங்க. பச்சை வேர்க்கடலை இப்போ கிடைக்குதா?

  மேரக்காய்_ இப்போதான் கேள்விப்படுகிறேன். இன்னமும் என்ன காய்னு தெரியல.பகிர்வுக்கு நன்றி மகி.

  ReplyDelete
 13. ம்ம்ம்.... மைன்ட்-ல வச்சுக்குறேன். என்னோட neighbor ஒரு முறை BBB செஞ்சாங்க. ப்ப்ப்ப்பாஆஆஆ whole apartment-um வாசன... உங்க BBB அதைவிட வாசனை பரப்பி இருக்கும்-னு நினைக்கிறேன். எனக்கு ஊறுகாய் வச்சு சாப்பிட பிடிக்கும் :) லாஸ்ட் cooker picture ரொம்ப நல்லா இருக்கு மஹி.

  ReplyDelete
 14. சங்கீதா, BBB & ரைத்தா??! புது காம்பினேஷனா சொல்றீங்க! :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  ~~
  அதிராவ், //மகிக்கு பிபி ஏறிட்டுதாக்கும்:) அதான் அட்வைஸ் கேட்கிறா:) எண்டெல்லோ பதறி அடிச்சுக்கொண்டு ஓடிவந்தனான்ன்:)..// ஹாஹாஹ! அது இல்லன்னதும் உங்களுக்கு பிபி ஏறி இருக்கோணுமே, am I right? ;)))

  /கோயில் குழைசாதம் அப்படித்தானே/ இது என்ன சாதம் எனத் தெரிலை..ஆனால் கோயில் பிரசாதம்னா வெங்காயம் மட்டும் சேர்க்காம செய்வாங்க. மத்தபடி அதே செய்முறை! அளவா அரைகப் அரிசி போட்டு செய்து பாருங்க அதிராவ்! கடைசி படம் அப்படி செய்ததுதான்! சூப்பரா இருக்கும்.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  ~~
  இளமதி, ரசிச்சு, ருசிச்சு கருத்துச் சொன்னதுக்கு மிக்க நன்றி! ஈஸி அன்ட் சீக்கிரமாச் செய்துடலாம், சைட் டிஷ் கூட சிப்ஸ் ஏதாச்சும் வைச்சு சாப்பிடலாம். ட்ரை பண்ணி பார்த்து சொல்லுங்...நன்றி! :)
  ~~
  மலர், இப்படியான ஈஸி சமையல்னா எனக்கு கொஞ்சம் வசதியா இருக்கும், அதான் பேரையும் ஷார்ட் பண்ணிட்டேன். நன்றிங்க! :)
  ~~
  ஹேமா, கரெக்ட்டாப் பாயின்ட்டைப் புடிச்சிட்டீங்க! கேப்ஸிகம் முதல்லயே சேர்த்தா குழஞ்சுரும், இப்படி லேஸா வதக்கி கடைசியா சேர்த்தா க்ரன்ச்சியாவும் ருசியாவும் இருக்கும். :)
  கருத்துக்கு நன்றிங்க!
  ~~
  ஆசியாக்கா, உங்க BBB ரெசிப்பி பார்த்திருக்கேனே, இந்த கொடமிளகா மட்டும் சேர்த்து செய்து பாருங்க, உங்களுக்கும் கண்டிப்பா பிடிக்கும். நன்றி அக்கா கருத்துக்கு!
  ~~
  /எங்க வீட்லயும் சாம்பார் ருக்கு வரவேற்பு கிடையாது ..//ஓஹ்! இங்க சாம்பார் தனியா, சோறு தனியான்னா ஓக்கே, இப்படி கலந்த சாம்பார் சாதம்னா இவருக்குப் பிடிக்காது ஏஞ்சல் அக்கா! BBB செய்து பாருங்க, ஷரன்-ஷரன் அப்பா ரெண்டு பேரும் A1-னு சொல்லப் போறாங்க! :)
  வடகம் கோவையில் இருந்து வாங்கிவந்ததேதான்! :)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்~
  ~~
  வானதி, உங்களைப் போல வொர்க்கிங் வுமன்ஸுக்கு இது ஒரு ஈஸி ஒன் பாட் மீல்! ப்ரோடீன், காய்கள், சாதம் எல்லாம் சேர்த்து சத்தா சமைச்சிரலாம். :)
  நன்றி கருத்துக்கு!
  ~~
  அம்முலு, செய்து பார்த்து சொல்லுங்கோ, நன்றி!
  ~~
  சரண்யா, ஆமாங்க..கேப்ஸிகம் கலர்ஃபுல் & டேஸ்ட் என்ஹான்ஸர்! :)
  கருத்துக்கும் நன்றி!
  ~~
  சுபா, சீக்கிரம் செய்து பாருங்க,நன்றி!
  ~~
  ஸாதிகாக்கா, நன்றீ!
  ~~
  /ஊரிலிருந்து எடுத்து வந்த பொடி என்னாச்சு?/ ஊரிலிருந்து எடுத்து வந்ததுதான் சித்ராக்கா சக்தி சாம்பார் பொடி! :) எங்க வீடுகளில் மிஷினில் கொடுத்து பொடி அரைச்ச காலமெல்லாம் மலையேறிப் போச்..இப்ப அங்கயும் எல்லாம் சக்தி-அன்னபூர்ணா-ஆச்சி ---தான்! :)

  மேரக்காய் என்பது சௌசௌ-தான். பெங்களூர் கத்தரிக்காய் என்றூம் சொல்வாங்களே..ஆங்கிலத்தில் chayote! பேர்தான் உங்களுக்குப் புதுசா இருக்கும், காய் தெரிஞ்சிருக்கும். இந்த லிங்க் பாருங்க, படத்தை பாத்தா "ச்சே, இதானா அது?" என்பீங்க! ;):)
  https://www.google.com/search?q=chow+chow+vegetable&hl=en&safe=active&client=ubuntu&hs=xw9&channel=fs&source=lnms&tbm=isch&sa=X&ei=onAuUfaUApH22QXE1oDQDA&sqi=2&ved=0CAcQ_AUoAQ&biw=1598&bih=675
  ~~
  மீனாக்ஷி, லாஸ்ட் பிக்சர் என் ஆத்துக்காரரை வெறுப்பேத்த ஐ போன்ல எடுத்து அனுப்பினது! ஹிஹி! இன்ஃபாக்ட், அந்த படம்தான் இந்த பதிவையே உருவாக்கினது. :) ட்ரை பண்ணிப் பாருங்க, நன்றி!
  ~~

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails