Wednesday, May 22, 2013

டிட்பிட்ஸ்..

சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் கோர்த்து ஒரு பதிவு. மேலே படத்தில் உள்ளதுதான் இங்கே "கசகசா- poppy seed"என்ற பெயரில் கிடைக்கிறது. என் நினைவுப்பதிவுகளைப் புரட்டினால், கசகசா வெள்ளை நிறத்தில் இருந்த மாதிரி ஞாபகம். இண்டியன் ஸ்டோரில் வெள்ளை கசகசா கிடைக்கிறது என்கிறார்கள், ஆனா எனக்கு கரெக்ட்டா அங்கே போகும்போதெல்லாம் மறந்து போகிறது. ஸோ...இந்தப் படத்தில் உள்ள கசகசா-வை வாங்கலாமா...சமையலுக்கு உபயோகிக்கலாமா? என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்களேன்? 
~~
ஒரு நாள் கையில் கிடைத்த காய்களை எல்லாம் வெட்டி, ஒரு ஸ்டிர்ஃபிரை செய்து சப்பாத்தியும் போட்டு, தட்டிலும் வைச்சு, சாப்பிடவும் உட்கார்ந்து ஒரு வாய் சாப்பிட்டதும் எதோ வித்யாசம் தெரிந்தது..என்னவென்று கண்டுபிடிக்க இன்னுமொரு வாய் சாப்பிட்டதும்தான் தெரிந்தது, காயில் நான் உப்பே போடவில்லை என்பது!!! :)))))  இதுக்கப்புறம் என்ன செய்யறது?!! காய்களில் இயற்கையாவே உப்பு இருக்குமாமே..அதை சுவைத்துப் பார்ப்போமே..காயின் ஒரிஜினல் ருசியும் தெரிந்த மாதிரி இருக்கும் என்றெல்லாம் சமாதானம் சொல்லிக்கொண்டு சாப்பிட்டு முடிச்சுட்டேன். ஹிஹிஹி...
ஸோ...இந்த மாதிரி டிரை காய்கள்ல உப்பு போட மறந்துட்டா என்ன செய்து அட்ஜஸ்ட் பண்ணுவது? சஜஸன் ப்ளீஸ்!!
~~
மார்ச் கடைசியில் நட்ட டேலியாக்கள்..மஞ்சள் பூ முதலில் மலர்ந்திருக்கிறது. மற்ற நிறங்கள் ஆன் த வே!
இந்தம்மா அடுத்த கலர்..இலைகளுக்குள் ஒளிஞ்சிகிட்டிருக்காங்க. :)
 என்னவர் எல்லாப் பூக்களுக்கும் பேர் வைச்சு கூப்பிட்டுகிட்டு இருக்கார். இவங்க இலைக்குள்ள மறைந்திருந்ததால் இன்னும் பேரு வைக்கலை! ;) மஞ்சளும் இந்த நிறமும் நாங்க வாங்கி வந்த டேலியாக்கள். தோழி தந்தவை வேறு நிறங்கள். இப்பத்தான் மொட்டுக்கள் அரும்பியிருக்கின்றன. பூத்ததும் இங்கேயும் வரும். 
~~
அப்பார்ட்மெண்டில் சிலபல மாற்றங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். டாகி வாக் - புனரமைக்கப்பட்டு, விரிவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. புதுசாக 2 க்ரில் வைத்திருக்கிறார்கள். டாகி வாக்-ல புற்கள் சதுரம் சதுரமாகக் கொண்டுவந்து பதிக்கப்பட்டது பார்க்க சுவாரசியமாக இருந்தது. :) 
~~
முழுவட்டமாக பஸிஃபிக் கடலில் இறங்கிக்கொண்டிருக்கும் கதிரவன். நேரில் பார்த்தபொழுது இன்னும் மிக அற்புதமாக இருந்தது.  தினம்தோறும் வானம் நிகழ்த்தும் இந்த வண்ணக் கலவரம் நாங்கள் இதே இடத்தில் இருப்பதற்கு இன்னுமொரு காரணம். :) 
~~

உருளைக் கிழங்கு பொடிமாஸ் - கேரட் பொரியல்- சோறு- கீரை மசியல்.  தட்டு கலர்ஃபுல்லா இருக்கவே படமெடுத்து வைச்சேன்,  திவ்யமாச் சாப்பிடுங்க.
நன்றி!
:)  

22 comments:

  1. படங்கள் அருமை...

    முடிவில் பசிக்குது...!

    ReplyDelete
  2. .காயின் ஒரிஜினல் ருசியும் தெரிந்த மாதிரி இருக்கும் என்றெல்லாம் சமாதானம் சொல்லிக்கொண்டு சாப்பிட்டு முடிச்சுட்டேன்.

    காய்களின் மேலே லேசாக உப்புத்தூள் தூவினால் போதுமே..!

    முழுவட்டமாக பஸிஃபிக் கடலில் இறங்கிக்கொண்டிருக்கும் கதிரவன் வண்ணக்கலவரம் ரசிக்கவைத்தது ...

    ReplyDelete
  3. 1. வாங்கலாம்ம்ம்.

    இலைங்கைல இது கண்டதே இல்லை. அங்க உங்கட 'சப்ஜா'வைத்தான் 'கசகசா' என்போம். ;) இது வாங்கி பேஸ்ட்ரில மேல தூவுவேன். பயமில்லாமல் சமைக்கலாம்.

    2. இராஜராஜேஸ்வரி அக்கா சொன்னது போல மேலால லேசா தூவி புரட்டினால் போதும். (உங்களுக்கு மனசு சமாதானமாகாது. ஹ்ம்! 1 தே.க சீனி தூவி... ஹிஹி.) ;)))
    ம்... சீரியசா ஒரு ஐடியா சொல்றேன். இல்ல இரண்டு.
    1. பொரித்த மோர்மிளகாயை (அதுல உப்பு நிறைய இருக்கும்ல உங்கூர்லயும்!!) கையால் பொடியாக்கி தூவிட்டு சாப்பிடலாம். 2. ஊறுகாய் தொட்டுட்டு சாப்பிடலாம்.

    3. பர்ட் ஃபீடர் ஏன்பா சிவப்பா இருக்கு!! ;)

    4. என்ஜாய் டாகி & வாக்கி. ;)

    5. மகியோட அந்திவானம் படங்கள் எதுவானாலும் அழகு.

    6. ம்... குட் கர்ல். ;))

    ReplyDelete
  4. Enaku antha plate ippadi chennai pakkama anupangalen mahi... Romba arumaiyaana clicks.... Kasakasa use panneengala ?

    ReplyDelete
  5. கருப்பு கசகசா கேள்விப்பட்டதே இல்லை.

    உப்பே போடாமல் சாப்பிட்டு இருக்கீங்க மகி..உங்களுக்கு தாராளமனசுதான்.

    டேலியா மற்ற கலர் மலர்களை எப்ப கண்ணில் காட்டப்போறீங்க?

    உங்கள் அப்பார்ட்மெண்டில் செய்த மாற்றங்களை புகைப்படம் எடுத்து பகிர்ந்திருப்பது சுவாரஸ்யம்.

    உண்மையில் கடைசில் உள்ள படம் கலர்ஃபுல்தான்.கண்டிப்பாக டேஸ்ட்புல்லாகவும் இருக்கும்.

    ReplyDelete
  6. மகி... அருத்த கலக்கல் பதிவோ....

    கடலில் கலக்கும் கதிரவன் கலவரம்
    கண்ணில் கலந்து கருத்தில் கரையுதே...

    அருமையாக இருக்கு உங்க கைவண்ணங்கள்.

    மாலைக்கருக்கல் போட்டோ...
    டேலியா மஞ்சாப்பூ...:).

    தட்டில போட்டு சப்பாத்தி ஸ்டிர்ஃபிரை,
    உருளைக் கிழங்கு பொடிமாஸ் - கேரட் பொரியல்- சோறு- கீரை மசியல்....
    ஹ்ம்.......
    இப்பிடிஉங்கை கைவரிசை எல்லாம் சூப்பர்...:).

    கசகசாவைபத்தி அவ்வளவு எனக்கு தெரியாது. போனவாரம்தான் காமாக்ஷி அம்மாகிட்ட இதைபத்தி கேட்டு அறிஞ்சேன்.
    பொரியலில் உப்பு சேர்க்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். நினைச்சிட்டே சாப்பிடவேண்டியதுதான்....

    அட்டகாசம் அசத்தல் பதிவு மகி. வாழ்த்துக்கள்!!...

    இமா ரீச்சரின் ரீச்சரை கூப்பிடணும் மகி... ஏன்னா இதைப் பாருங்கோ...
    ///இலைங்கைல இது கண்டதே இல்லை///

    என்ன கொடுமை சரவணா....:))).

    ReplyDelete
  7. Mahi, black poppy seeds are used in baking, for Indian cooking we use only white poppy seeds..

    ReplyDelete
  8. காய்கறிகளில் இயற்கையாகவே கலந்திருக்கும் உப்புக்கள் என்பார்கள்...
    அந்தி வானம் படம் அழகு!

    ReplyDelete
  9. ஏதோ நித்திரைக் கலக்கத்தில எழுதினால்.. மேல இருக்கிறவங்களையெல்லாம் கூப்பிடுகினம். ;)))

    ReplyDelete
  10. கருப்பு கஸகஸாவை இப்போதான் பார்க்கிறேன். ஒருவேளை கவனிக்காமல் விட்டிருக்கலாம்.இதை தேங்காயுடன் சேர்த்து அரைக்கும்போது நிறம் மாறிடாதா!

    உப்பு போட மறந்த காய்கள் வாணலிலேயே இருந்தால் மீண்டும் லேஸாக சூடுபடுத்தி சிறிது உப்பு போட்டு ஒரு கிளறு,அவ்வளவுதான்.சப்பாத்தியில் வைத்து ருசித்தபிறகு...ம்...விரதம்னு நெனச்சிட வேண்டியதுதான்.

    டேலியா பூவின் நிறங்கள் அழகாக உள்ளது. ஜீனோவின் மேற் பார்வையில்தான் புனரமைப்பா! மாலைப் பொழுது மிகமிக‌ அழகாக உள்ளது.

    கலர்ஃபுல்லான சாப்பாட்டுத் தட்டு.நல்லா சாப்பிடுங்க மகி.

    ReplyDelete
  11. I always buy black poppy seeds. I do not use those to cook.
    Sprinkle some salt over curries.

    ReplyDelete
  12. /// ஆனா எனக்கு கரெக்ட்டா அங்கே போகும்போதெல்லாம் மறந்து போகிறது. ஸோ...இந்தப் படத்தில் உள்ள கசகசா-வை வாங்கலாமா...சமையலுக்கு உபயோகிக்கலாமா? என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்களேன்? ///

    எண்டைக்கோ ஒருநாள் சாகத்தானே போகிறோம்:).. அது இண்டைக்காக கூட இருக்கலாம்:)) ஏன் பயப்பிடுறீங்க:) சமையுங்கோ:)).. ஹையோ அதாரது கல்லெடுக்கிறதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ... மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))

    ReplyDelete
  13. //ஒரு நாள் கையில் கிடைத்த காய்களை எல்லாம் வெட்டி, ஒரு ஸ்டிர்ஃபிரை செய்து சப்பாத்தியும் போட்டு, தட்டிலும் வைச்சு, சாப்பிடவும் உட்கார்ந்து ஒரு வாய் சாப்பிட்டதும் எதோ வித்யாசம் தெரிந்தது..என்னவென்று கண்டுபிடிக்க இன்னுமொரு வாய் சாப்பிட்டதும்தான் தெரிந்தது,//

    சரியான ரியூப் லைட்:) ரியூப் லைட்:)).. ஹையோ என் வாய்தேன் நேக்கு எடிரி:))

    ReplyDelete
  14. //ஸோ...இந்த மாதிரி டிரை காய்கள்ல உப்பு போட மறந்துட்டா என்ன செய்து அட்ஜஸ்ட் பண்ணுவது? சஜஸன் ப்ளீஸ்!!///

    கண்ணை மூடிக்கொண்டு சாப்பிட்டுவிட்டு.... பின்பும் கண்ணை மூடிக்கொண்டு ஒரு மேசைக்கரண்டி உப்பை வாயில போட்டு தண்ணி குடிச்சிடோணும்:)).. அவயயிற்றினுள் போய் ஒன்று சேரட்டுமே:)).. எப்பூடி என் சஜஸன்?:) இனியும் இப்பூடிக் கேட்பீங்க???????:)

    ReplyDelete
  15. // என்னவர் எல்லாப் பூக்களுக்கும் பேர் வைச்சு கூப்பிட்டுகிட்டு இருக்கார். இவங்க இலைக்குள்ள மறைந்திருந்ததால் இன்னும் பேரு வைக்கலை! ;) ///

    இது உண்மையிலயே மிகவும் அழகான பூ.. இதுக்கு மகி என்று மட்டும் வச்சிடவாணாம் எனச் சொல்லிடுங்கோஓஓஓஓஓஓஒ:))... ஹையோ வழிவிடுங்கப்பா:))

    ReplyDelete
  16. //உருளைக் கிழங்கு பொடிமாஸ் - கேரட் பொரியல்- சோறு- கீரை மசியல். தட்டு கலர்ஃபுல்லா இருக்கவே படமெடுத்து வைச்சேன், திவ்யமாச் சாப்பிடுங்க.
    நன்றி!
    :) //

    அவிச்ச முட்டையும் ஒன்று தாங்கோ:)

    ReplyDelete
  17. தனபாலன், நன்றீங்க! பசிக்கையில் எடுத்து சாப்பிடத்தானே போட்டோவே வைச்சிருக்கேன், எடுத்துச் சாப்புடுங்க! :)
    ~~
    //காய்களின் மேலே லேசாக உப்புத்தூள் தூவினால் போதுமே..!// இராஜேஸ்வரி மேடம், எனக்கு நாக்கு கொஞ்சம் நீளம்ங்க..குழம்பு ரசத்திலும் கூட சமைக்கும்போது போடும் உப்புதான், அதற்குப்பிறகு அட்ஜஸ்ட்மெண்ட் எல்லாம் பண்ணினால் புடிக்காது! ;) உப்புச் சுவை தனியாத் தெரிவது மாதிரி ஒரு ஃபீலிங்! ஹிஹி!! இது தட்டுக்கே வந்துருச்சே, அதான் அப்படியே சாப்பிட்டேன்! :)
    வண்ணக்கலவரத்தை ரசித்து கருத்தும் தந்தமைக்கு மிக்க நன்றீங்க!
    ~~
    1.//இது வாங்கி பேஸ்ட்ரில மேல தூவுவேன். பயமில்லாமல் சமைக்கலாம். // ஆங்!! பேஸ்ட்ரியோ?!! நோ வே இமா! நான் பேஸ்ட்ரி எல்லாம் செய்யறதேயில்லை. :) இந்திய சமையலுக்கு வெள்ளை கசகசாதானாம்!
    2.உங்கட சீனி ஐடியாவுக்கு ஒரு கர்ர்ர்ர்ர்ர்ர்! சீரியஸ் ஐடியாக்கள் நல்லா இருக்கு, ஆனா எனக்கு மோர்மிளகாய்-ஊறுகா ரெண்டுமே அவ்வளவா புடிக்காதே! இப்ப என்ன செய்வீங்க?!;) சாப்பிடுமுன் பார்த்தா உங்க மோர்மிளகா டிப்ஸ் ஃபாலோ செய்யறேன் இமா.
    3. பர்ட் ஃபீடர் வீடு வடிவில் இருக்கு. வீட்டின் கூரை பொருத்தமா சிவப்பு வண்ணத்தில இருக்கு. வீடு மரக்கலரில் தான் இருக்கு, சரியாப் பாருங்க. ;)
    4. வி டிட்!! :) நேத்து டாகி வாக் ஓபன் பண்ணிட்டாங்க. ஜீனோ முயல் மாதிரி துள்ளி துள்ளி ஓடினார்! :)
    5. தேங்க்யூ! :)
    6. தேங்க்யூ டீச்சர்! :)))
    ~~
    சொய்ய்ய்ய்ய்ங்!! தட்டைத் தள்ளிட்டேன் சங்கீதா! சென்னை வந்துச்சா? ;) :)
    கசகசா இன்னும் வாங்கவே இல்லங்க..படம் மட்டும்தான் எடுத்துட்டு வந்தேன், தெரியாம வாங்கி என்ன செய்வதுன்னு வாங்கலை.
    கருத்துக்கு நன்றி!
    ~~
    //டேலியா மற்ற கலர் மலர்களை எப்ப கண்ணில் காட்டப்போறீங்க?// உங்களுக்காகவே அடுத்த கலர் பூவை சேர்த்திட்டேன், பார்த்தீங்களா ஸாதிகாக்கா? :)
    கருப்பு கசகசா நானும் இப்பத்தான் பார்க்கிறேன், அதான் என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்கலாமே என இங்கே கேட்டேன்.
    //உப்பே போடாமல் சாப்பிட்டு இருக்கீங்க மகி..உங்களுக்கு தாராளமனசுதான்.// எனக்கு தாராளமனசு என்று சொன்ன உங்களுக்குத்தான் தாராள மனசு! ;) வேற வழியில்லாம அப்படியே சாப்பிட்டேன், ஹிஹிஹ்! ;) :)
    கருத்துக்கு மிக்க நன்றி ஸாதிகா அக்கா!
    ~~
    //பொரியலில் உப்பு சேர்க்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். நினைச்சிட்டே சாப்பிடவேண்டியதுதான்.... // ஆமாம் இளமதி! :)
    ஒவ்வொரு படத்தையும் ரசித்து கருத்து சொல்லிருக்கீங்க,,மிக்க மிக்க நன்றிகள்!
    இமா ரீச்சர் தூக்க கலக்கத்தில தட்டிட்டாங்களாமே, போனாப் போகுதுன்னு விட்டுடலாம்! :)
    ~~
    ஹேமா, தகவலுக்கு நன்றிங்க! நான் இந்திய சமையலுக்குதான் தேடினேன். வெள்ளை கசகசாவே வாங்கிக்கறேன்! :)
    ~~
    கே.பி.ஜனா சார், நீங்க சொல்வது சரிதான்! ஆனா நாம ஆரம்பத்தில இருந்தே உப்பு காரம் மசாலா என்று சேர்த்து காய்களோட இயற்கை ருசி தெரியாமலே சாப்பிட்டு பழகிட்டமே! ஒரு நாள் இப்படி சாப்பிட்டேன், வேறு வழி இல்லாம! :)
    சூரியனை ரசித்ததுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றிங்க!
    ~~

    ReplyDelete
  18. //தேங்காயுடன் சேர்த்து அரைக்கும்போது நிறம் மாறிடாதா!//அரைக்கக் கூடாதாமே! அப்புறமென்ன சித்ராக்கா? :) வெள்ளை கசகசாவே வாங்கிக்கலாம்!
    //.சப்பாத்தியில் வைத்து ருசித்தபிறகு...ம்...விரதம்னு நெனச்சிட வேண்டியதுதான்.// எக்ஸாட்லி!! :)
    //ஜீனோவின் மேற் பார்வையில்தான் புனரமைப்பா!// ஹஹாஅ! ஆமாங்க..அவர் தான் சூப்பர் வைசர்! கண்ணில் பட்ட ஆட்களை எல்லாம் (அவங்க மஞ்சக் கலர் கோட் போட்டு பளிச்சுன்னு தெரிவாங்க) பவ்-பவ் என்று குரைச்சு அதட்டி உருட்டி வேலை வாங்குவார்! ;)
    //கலர்ஃபுல்லான சாப்பாட்டுத் தட்டு.நல்லா சாப்பிடுங்க மகி.// நீங்க சொன்ன பிறகு கேக்காம இருக்க முடியுமா? நல்ல்ல்ல்ல்ல்லாவே சாப்பிடறேன்! :)))
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சித்ராக்கா!
    ~~
    வானதி, சும்மா மேலால தூவலாம்னு சொல்றீங்க. ம்ம்ம்..பார்க்கிறேன், அடுத்த முறை கடைக்கு போகையில் நினைவிருந்தால்! :)
    நன்றி வானதி!
    ~~
    //ஏன் பயப்பிடுறீங்க:) சமையுங்கோ:)).. ஹையோ அதாரது கல்லெடுக்கிறதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ... மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))
    // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! பெரிய கருங்கல்லா வீசிருக்கேன், கதவடைச்சிட்டு ஒளிஞ்சாலும் உள்ளே வந்து தாக்கும். ஆங்!!!! ஒரு விஷயம் தெரியலைன்னு கேட்டா என்னா ஒரு காமெடி..ஹாஹாஹா அதிரா! :)

    //சரியான ரியூப் லைட்:) ரியூப் லைட்:)).. ஹையோ என் வாய்தேன் நேக்கு எடிரி:))//ம்ம்..சொல்லுங்கோ, சொல்லுங்கோ! பூனைக்கொரு காலம் வந்தா எனக்கும் ஒரு காலம் வராமலா போயிரும்?! ;)

    //எப்பூடி என் சஜஸன்?:) இனியும் இப்பூடிக் கேட்பீங்க???????:)// அட, அட, டஅ, டஅ,!! புல்லா அரிச்சுப் போச்சு, உங்க சஜஸன் படிச்சு! பேசாம கோதுமை மா, தண்ணி ரெண்டையும் முழுங்கிட்டு, எல்லாக் காய்களையும் முழுங்கிட்டு, கடேசியா உப்பு-காரமும் முழுங்கிப் புட்டு ஒரு கிளாஸ் தண்ணியக் குடிச்சிடறேன் அதிராவ். அதுக்குப் பிறகு வரும் பின்விளைவுகளுக்கெல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாம் பிரித்தானியா பூஸாரே பொறுப்பு என கடிதம் எழுதி வைச்சிட்டுதான்!!! டீல்??! :)))

    //இது உண்மையிலயே மிகவும் அழகான பூ.. இதுக்கு மகி என்று மட்டும் வச்சிடவாணாம் எனச் சொல்லிடுங்கோஓஓஓஓஓஓஒ:))... ஹையோ வழிவிடுங்கப்பா:))// வழி எதுக்கு தேடறீங்க? இப்படி ஒரு அருமையான யோசனை சொலிருக்கேங்க, கட்டாயம் உங்களுக்கு ஒரு டேலியா பூங்கொத்துத்தான் அனுப்போணும்! உங்களுக்கு தோணிய ஐடியா என்னவருக்கு தோணலையே...என்ர பேரை இன்னும் ஒரு பூவுக்குக் கூட வைக்காமத்தானேஇருக்கார்? கர்ர்ர்ர்! :) ;)

    //அவிச்ச முட்டையும் ஒன்று தாங்கோ:)// தட்டில் வைச்சா வாணாமென்கிறீங்க..வைக்கலன்னா தாங்கோ என்கிறீங்க!! ஒண்ணுமே புரிஞ்சிக்க முடிலையே..இதுக்கெல்லாம் பயப்பட மாட்டோம், கருங்கல் கூட அ.கோ.மு.-வும் சேர்த்து கட்டிதான் வீசிருக்கேன், கேட்ச் இட் யா!! ;)

    தேங்க்ஸ் ஃபார் தி எனர்ஜடிக் கமெண்ட்ஸ் அதிராவ்! தூங்கி எழுந்த உடனே சுறுசுறுப்பா எல்லாக் கமெண்ட்டுக்கும் பதில் சொல்ல வைச்சிட்டது உங்க பஞ்ச:) கருத்துக்கள்!
    நன்றீ, நன்றி!
    ~~

    ReplyDelete
  19. நான் ரொம்பவே லேட். எல்லோரும் எழுதினதை படிச்சுட்டே போயிண்டிருக்கேன் பதிவு நன்றாக உள்ளது. மஹி எழுதுவதற்கு கேட்கணுமா என்று நினைத்துக் கொண்டேன். கசகசா மருத்துவ ரீதியாக சிரிது சாப்பிடுவதில் ,சமையலில் சேர்ப்பதில் கெடுதல் ஒன்றுமில்லை. ரவைமாதிரி பழுப்பு நிறம், வெண்மை நிறம் இரண்டுதான் தெரியும். கசகசவும்,தேங்காயும் அரைத்து பாயஸம் வைத்தால்கூட ருசியாக இருக்கும். கேட்ட,ருசித்ததுதான் இது. சமையலுக்கு ருசி கூட்டும் பிடித்தவர்களுக்கு. முருக்கு,முதலானவைகளிலும்,காரா சேவிலும் கரகரப்பைத் தருகிரது. போதுமா என் புராணம்? அன்புடன்

    ReplyDelete
  20. சத்தியமா இண்டைக்குதான் தெரியுமெனக்கு வெள்ளையில கசகசா இருப்பது. நான் சில தடவைகள் சர்பத் செய்யவும்.. ஒரே ஒரு தடவை குருமா கறி செய்யவும் இதே கறுப்பு கசகசாவையே பாவித்தேன்ன்...

    ReplyDelete
  21. கருப்பு கசகசா இன்று தான் கேள்விபடுறேன்..
    சாப்பாட்டு தட்டு அப்படியே எனக்கு தான்..படங்கள் பகிர்வும் அருமை மகி.

    ReplyDelete
  22. //ஜீனோ முயல் மாதிரி துள்ளி துள்ளி ஓடினார்!// ம். ;))

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails