Wednesday, July 10, 2013

வசந்தத்தின் இறுதி..

கோடை துவங்கியதன் பின்னால் டேலியாக்கள்  மலர்வதும் குறைந்து இப்போது செடிகள் இறுதிநிலைக்கு வந்துவிட்டன. மலர்கள் உச்சகட்ட சந்தோஷத்தில் பூத்துச் சிரித்துக் கொண்டிருந்த  ஜூன் முதல் வாரத்தில் எடுத்த படங்கள் இவை!!
இந்த பிங்க் லேடி:) நேரில் பார்க்கும்போது இருப்பதை விட காமெராவில் பார்க்கையில் கண்ணைப் பறிக்கும் அழகுடன் ப்ரெட்டி லேடி:)யாக இருக்கிறாள்!
மஞ்சள் மலர்கள் இந்த வருஷம் தோட்டத்தை டாமினேட் செய்துவிட்டன. பிங்க் நிற டேலியா அந்த அளவுக்கு பூக்கள் வரவில்லை.
இந்த சிவப்பு ரோஜாக்கள் 2011ஆம் ஆண்டு டாலர் ஷாப்பில் 99காசுக்கு வாங்கியது.  வீடு மாறியபோதும், பத்திரமாகக் கொண்டுவந்து கட்டிக் காப்பாற்றி வருகிறேன். :)
இருவண்ண டேலியாக்கள் நாளாக ஆக அளவில் சிறுத்து மினி டேலியாக்களாக மாறிவிட்டிருந்தன..

செண்டுமல்லி, டென்னிஸ் பந்து அளவில் வந்த முதல் பூ நாட்களோட ஓட கோல்ஃப் பந்து அளவுக்கு வந்தது.. :)
இது நான் ஃபார்மர்ஸ் மார்க்கட்டில் இருந்து வாங்கிவந்த கத்தரி நாற்று..படத்தில் காய்கள் எவ்வளவு நீளமாக இருக்கின்றன என்று பாருங்கள்..
இது பூச்சி அரிப்பிற்கு முன் செழிப்பாக வளர்ந்திருந்த கத்தரி..

தொடர்ந்து ஒரு வாரம் பத்துநாட்கள் தினமும் காலையில் செடியை பரிசோதித்து, பூச்சி அரித்த இலைகளைக் கிள்ளி எறிந்து, தண்ணீரை ஊற்றி கழுவிவிட்டு ஒரு வாறாக கத்தரியைக் காப்பாற்றியிருக்கிறேன் என நினைக்கிறேன். செடி இருந்த இடத்தையும் மாற்றி வைத்திருக்கிறேன்.   கத்தரிக்காய்களுடன் அடுத்த பதிவில் உங்களை சந்திப்பேன் என நம்புகிறேன்! :)))

15 comments:

  1. தோட்டம் அழகா இருக்கு மகி. வாடின பூக்களை வெட்டிர மாட்டீங்களா?

    கத்தரி செழிப்பா இருக்கு. விரைவில் இரண்டாவது காய் அறுவடை செய்ய என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கலர்ஃபுல்லான தோட்டம் பார்க்கவே கண்ணைப் பறிக்குது.நீங்க சொல்லும் செண்டுமல்லியை நாங்க சாமந்திப்பூ னு சொல்லுவோம்.

    "கத்தரிக்காய்களுடன் அடுத்த பதிவில் உங்களை சந்திப்பேன்"____‍ வாங்கவாங்க,காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  3. வீட்டுத்தோட்டம் கலர்புல்லா கண்ணுக்கு குளுமையா இருக்கு மகி.. //இந்த சிவப்பு ரோஜாக்கள் 2011ஆம் ஆண்டு டாலர் ஷாப்பில் 99காசுக்கு வாங்கியது. வீடு மாறியபோதும், பத்திரமாகக் கொண்டுவந்து கட்டிக் காப்பாற்றி வருகிறேன். :)//
    சிவப்பு ரோஜா செடி இங்கே 50 ரூபாய்.. அதுவும் வாங்கி வந்து அப்ப இருந்த மொட்டு மட்டும் பெரிதாக பூத்தது. பிறகு பட்டன் ரோஸ் மாதிரி பூக்கிறது. ரோஸ் பெர்ட்டிலிட்டி போட்டா கொஞ்சம் பெரிதாக பூக்கும். என்னிடம் உள்ள பூ கருஞ் சிவப்பு மகி.. ஆனா மணம் மட்டும் நல்லா இருக்கும். பெயர் தெரியாத ஒரு பூ மஞ்சள் கலந்த வெண்மையில் மொட்டு விட்டிருக்கிறது. இரண்டு நாளா காத்திருக்கிறேன்.. மொட்டுத்தான் பெரிசா வருகிறது.. இன்று மலருதான்னு பார்க்கிறேன்..பதிவில போடுறேன் பூ பேர் உங்களுக்கு தெரியுதான்னு சொல்லுங்க.

    ReplyDelete
  4. வாவ் சூப்பர் மகி அழகாக இருக்கு உங்க தோட்டம். பேர்பிள் டாலியா அழகா இருக்கு. கலர்புல்லான பதிவு.

    ReplyDelete
  5. @ராதாராணி, //சிவப்பு ரோஜா செடி இங்கே 50 ரூபாய்.. அதுவும் வாங்கி வந்து அப்ப இருந்த மொட்டு மட்டும் பெரிதாக பூத்தது. // ஊரில நான் ரோஜா வளர்த்தப்பவும் அப்படியேதாங்க.

    ரோஜா மொட்டு வரும்போது ஒன்றுக்கு மேற்பட்ட மொக்கு இருந்தா ஒண்ண மட்டும் விட்டுட்டு மத்ததை கிள்ளிப் போட்டுட்டா, பூ பெருசா வருமாம். நீங்க டிரை பண்ணிப் பாருங்க. [இது எனக்கு ஒரு கார்டனர் சொன்ன டிப்ஸ், ஆனா நான் ஃபாலோ பண்ணறதில்லை! ;)]

    //பதிவில போடுறேன் பூ பேர் உங்களுக்கு தெரியுதான்னு சொல்லுங்க.// போடுங்க, பார்த்துரலாம்! :)
    கருத்துக்கு நன்றிங்க!
    ~~
    இராஜராஜேஸ்வரி மேடம், நன்றிங்க!
    ~~
    சித்ராக்கா, சாமந்திப்பூ கேள்விப்பட்டிருக்கேன், ஆனா அதுதான் இது என இப்பதான் தெரியும்! :)
    கத்தரி வரும் என்ற உங்க நம்பிக்கைக்கும் நன்றி, சீக்கிரமா வாரேன் கத்தரியோட!;) :)
    நன்றி சித்ராக்கா!
    ~~
    இமா, // வாடின பூக்களை வெட்டிர மாட்டீங்களா?// வெட்டிருவேன், ஆனா முழுக்க வாடினபிறகுதான் வெட்டுவேன். :)

    //இரண்டாவது காய் அறுவடை செய்ய என் வாழ்த்துக்கள்.// ஏன் "காய்"நு ஒத்தைப்படைல சொல்றீங்க? காய்கள்ள்ள்ள்ள்னு பன்மைல சொன்னா என்னவாம்??! ;)))))
    நன்றி இமா!
    ~~

    ReplyDelete
  6. @அம்முலு, தோட்டத்தை ரசித்தமைக்கு நன்றிங்க! பர்ப்பிள் பூ தான் உங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு போன பதிவிலயே சொன்னீங்களே? :) அதை நினைச்சுட்டேதான் இந்த போஸ்ட் போட்டேன்! :))) நன்றி அம்முலு!

    ReplyDelete
  7. mahi ivvalo siriya idathileye azhagaa thottan vechirikeenga rompa superba irukku paarkka alagaavum arrange paniyirukeenga ..ungaloda interest theriyuthu....innumerable man tharaiyoda thottan kidaithaal siriya sediment prodigal vaippeenga illaiya..seekirame siriya thottan irukku Veda vaangi alagaana thottam pod vaakthukal .

    ReplyDelete
  8. அழகான தோட்டத்துக்கு வாழ்த்துக்கள் மகி!!

    ReplyDelete
  9. @கொயினி, வழக்கம் போல உங்க ஃபோன்ல இருந்து கமெண்ட் டைப் பண்ணிருக்கீங்கன்னு நினைக்கிறேன். பாதி புரியலை! :) எங்கூர்ல ரியல் எஸ்டேட் போற உயரத்தை நினைச்சாலே வயித்தில புளியக் கரைக்குது, ஆனா உங்க வாழ்த்து மனசில பாலை வார்க்குதுப்பா! :) சீக்கிரமா உங்க வாழ்த்து பலிக்கட்டும்! :))) கருத்துக்கு நன்றி கொயினி!
    ~~
    @மேனகா, நன்றி!
    ~~

    ReplyDelete
  10. super photos Mahi..ingaiyum athae niolamai than...but I got sunflowers ,looks like they love the sun :), and my res peppers are coming up well too...:)

    ReplyDelete
  11. உங்களுடைய தொட்ட ஆர்வம் நீங்கள் எடுத்திருக்கும் போட்டோக்களிலேயே தெரிகிறது.
    அருமையான் விளக்கங்களுடன் போட்டோக்கள்.

    ReplyDelete
  12. Wow, you have a nice garden Mahi, very beautiful..

    ReplyDelete
  13. @சுமி, உங்க சூரியகாந்திகளையும் படமெடுத்துப் போடுங்க. நான் அடுத்து குடைமிளகாய் செடி தேடல்லதான் இறங்கப்போறேன். :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    @ராஜி மேடம், வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    @ஹேமா, நன்றி! :)
    ~~

    ReplyDelete
  14. அழாகான பூஞ்செடிகள் .கத்தரிக்காய் கிலோ என்ன விலை ?...:)உங்கள மாதிரி பொறுமையாய் இதை எல்லாம் செய்ய முடியாதுப்பா :)அதனாலே தான் கேட்டேன் .அருமையான பகிர்வு .வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails