Monday, July 15, 2013

ஆனியன் பஃப்ஸ்

கோவையில் பெரும்பாலானா பேக்கரிகளில் மாலை நேரங்களில் சூடான பஃப்ஸ் பல சுவைகளில் கிடைக்கும்.  வெஜ் பஃப்ஸ், காலிஃப்ளவர் பஃப்ஸ், எக் பஃப்ஸ், ஆனியன் பஃப்ஸ் இப்படி பலசுவைகள், நான்வெஜ் பஃப்ஸும் உண்டு. பலநாட்களாக இந்த வெங்காய பஃப்ஸ் செய்ய நினைத்திருந்தேன். இங்கே ரெடிமேட் பஃப் பேஸ்ட்ரி ஷீட்ஸ் கிடைப்பதால் இது ஜஸ்ட் அரை மணி நேர வேலைதான். ஸ்டஃபிங்-ம் வெறும் ஆனியன் என்பதால் அதுவும் ஐந்து நிமிஷத்தில் தயாராகிவிடும்.

தேவையான பொருட்கள்















பஃப் பேஸ்ட்ரி ஷீட்-1 [நான் சதுர வடிவிலான சிறிய பேஸ்ட்ரி ஷீட்ஸ் உபயோகித்திருக்கிறேன். மேலே படத்திலுள்ள பெரிய பேஸ்ட்ரி ஷீட்என்றால் தேவைக்கேற்ப சிறிய துண்டுகளாக நறுக்கி உபயோகிக்கவும்]
உலர்ந்த மாவு-சிறிது
பால்-1டேபிள்ஸ்பூன்
வெங்காயம்-1
சோம்பு-1/2டீஸ்பூன்
கறிவேப்பில, கொத்துமல்லி இலை -சிறிது
கறிமசாலாதூள்-3/4டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை
பேஸ்ட்ரி ஷீட்-ஐ ப்ரீஸரில் இருந்து வைத்து அறை வெப்பநிலைக்கு கொண்டுவரவும்.

வெங்காயத்தை கனமான நீளத்துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து சோம்பு தாளித்து, கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயத்துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு, கறிமசாலாதூள் சேர்த்து வெங்காயம் முக்கால் பாகம் வதங்கும் வரை வதக்கி கொத்துமல்லி இலை தூவி ஆறவைக்கவும்.
பேஸ்ட்ரி ஷீட்டை விருப்பமான வடிவில் நறுக்கி..

மாவு தூவிக்கொண்டு, சப்பாத்திக் கட்டையால் லேசாகத் தேய்த்து..
ஒவ்வொரு ஷீட்டிலும் வெங்காயக் கலவையை வைத்து, ஓரங்களை தண்ணீர் தடவி ஒட்டவும்.
சீல் செய்த பஃப்ஸ்கள் மீது பாலைத் தடவி, 400F ப்ரீஹீட் செய்த அவன் - ல் சுமார் 20 நிமிடங்கள் அல்லது பஃப்ஸ் பொன்னிறமாகும் வரை bake செய்து எடுக்கவும்.
சூடான சுவையான மொறு மொறு ஆனியன் பஃப்ஸ் ரெடி! 

16 comments:

  1. வெங்காயம் வைத்து பஃப்ஸ்...! சூப்பர்...!

    திண்டுக்கல்லுக்கு ஒரு டஜன் பார்சல்...! ஹிஹி...

    நன்றி சகோதரி...

    ReplyDelete
  2. Mahi,

    Looks yummy! Your style of writing is awesome!

    -Ezhilarasi Pazhanivel

    ReplyDelete
  3. ரொம்ப சூப்பர் எனக்கு பிடிச்ச அயிட்டம், ஊரில் பேக்கரியில் வாங்கி சாப்பிடுவோம், இங்கு சிக்கன் மற்றும் வெஜ்ஜில் தான் கிடைக்கும்..

    ReplyDelete
  4. பஃப் பேஸ்ட்ரி ஷீட் இல்லாமல் வீட்டிலேயே செய்வது எப்படி மகி?வெகு சுலபமாக செய்து காட்டி இருக்கீங்க.

    ReplyDelete
  5. சூப்பர்ர்ர் பப்ஸ்!!

    ReplyDelete
  6. என்கிட்டே puff பேஸ்ட்ரி மாவு இருக்கு ..நாளைக்கே செய்யபோறேன் :))
    btw ..பெயர் மாற்றக்காரணம் ....fb /pinterest / tumblr எல்லாத்திலையும் அக்கவுண்ட் ஓபன் பண்ணினேன் cherub என்ற ஐடியில் ..:))).

    ReplyDelete
  7. ஆனியன் பஃப்ஸ்____எளிதாக செய்யக்கூடியதாக உள்ளது. வீட்டில் பஃப்ஸ் ஷீட்ஸும் இருக்கு. ஒருநாளைக்கு செய்திடுறேன்.

    ReplyDelete
  8. easy puffs ...thanks mahi ...

    ReplyDelete
  9. அதென்ன பேஸ்ட்ரி ஷீட்? அதில்லைஎன்றால் இது செய்ய முடியாதா?
    உங்கள் பஃப் வாசனை பதிவுலகம் பூராவும் மணக்கிறது.

    ReplyDelete
  10. @தனபாலன் சார், பார்சல்தானே? அனுப்பிட்டாப் போச்சு! :) நன்றீங்க!
    ~~
    @எழிலரசி, வருகைக்கும் ரசித்துக் கருத்து தந்ததுக்கும் மனமார்ந்த நன்றிங்க!
    ~~
    @ஜலீலாக்கா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! பேஸ்ட்ரி ஷீட் கிடைக்கும்னா வாங்கி வீட்டில டிரை பண்ணிருங்களேன்! :)
    ~~
    @சங்கீதா, நன்றிங்க!
    ~~
    @ஸாதிகாக்கா, //பஃப் பேஸ்ட்ரி ஷீட் இல்லாமல் வீட்டிலேயே செய்வது எப்படி மகி?/ ஆஹா!! பஃப்ஸ்ல மெயின் இங்க்ரிடியன்ட்டே இல்லாம எப்படி பஃப்ஸ் செய்ய முடியும் அக்கா? :)

    பஃப் பேஸ்ட்ரி ஷீட் என்பது மைதாமாவை பிசைந்து, சதுரமாகத் தேய்த்து, ஒரு பெரிய அளவு வெண்ணைத் துண்டை சதுரமாவின் நடுவில் வைத்து மடித்து, ப்ரிட்ஜில் கொஞ்ச நேரம் வைத்து, மறுபடி தேய்த்து, மறுபடி ப்ரிட்ஜில் வைத்து, தேய்த்து,வைத்து...என ஒரு 5-6 முறை செய்தால் பஃப்ஸ்ல இருக்க லேயர்ஸ் வரும் ஸாதிகாக்கா! இந்த ஷீட்டை வேண்டிய அளவுகளில் நறுக்கி ஃப்ரீஸரில் வைச்சுக்கலாம். :)))))

    கொஞ்சம் நீளமான வேலை அதிகமுள்ள வேலைதான்..ஆனால் சென்னைல இருக்க ஃபுட் ப்ளாகர்ஸ் நிறையப் பேர் இந்த ஷீட்டை வீட்டிலேயே செய்யறாங்க, யு ஸீ?! ;) இங்கே இவை ரெடிமேடாக ப்ரீஸர் செக்ஷன்ல கிடைக்கும், க்விக் & ஈஸி! உங்களுக்கென்ன..தெருமுனைல இருக்க பேக்கரிக்குப் போனா சுடச்சுட விதவித பஃப்ஸ் கிடைக்குமே..வீட்டில செய்து பார்க்க ஆர்வமா இருந்தாச் சொல்லுங்க, இணையத்திலிருந்து லிங்க் எடுத்துத் தாரேன்! :)
    நன்றி அக்கா!
    ~~
    @மேனகா, நன்றி!
    ~~
    @வானதி, நன்றி!
    ~~
    @ஏஞ்சல் அக்கா, பஃப்ஸ் செய்தாச்சா? எப்படி இருந்துது? கருத்துக்கும் புதுப்பெயர் விளக்கத்துக்கும் நன்றி அக்கா!
    ~~
    @சித்ராக்கா, கட்டாயம் செய்து பாருங்க. ஈவினிங் ஸ்னாக்ஸுக்கு சூப்பரா இருக்கும்! :)
    நன்றி!
    ~~
    @கொயினி, நன்றிங்க!
    ~~
    @ராஜி மேடம், //அதென்ன பேஸ்ட்ரி ஷீட்? அதில்லைஎன்றால் இது செய்ய முடியாதா?// ஸாதிகாக்காவுக்கு சொன்ன விளக்கத்திலேயே உங்க கேள்விக்கும் பதில் கிடைத்திருக்கும். :) இங்கே அமெரிக்க சூப்பர் மார்க்கட்களில் ஃப்ரோஸன் டெஸர்ட் செக்‌ஷன்ல பாருங்க, பெப்பரிட்ஜ் ஃபார்ம் ரெடிமேட் பஃப் பேஸ்ட்ரி ஷீட்ஸ் கிடைக்கும். கருத்துக்கு நன்றிங்க!
    ~~

    ReplyDelete
  11. ஸ்கூல் ஃபங்க்ஷன்சுக்கு கொண்டு போக சுலபமாக இருக்கும். சமைக்கக் கிளம்பும் போது நினைப்பு வராதாம். ;(

    ReplyDelete
  12. //சமைக்கக் கிளம்பும் போது நினைப்பு வராதாம். ;(// ஓ!! ஸ்கூல்ல எப்பம்;) ஃபங்க்‌ஷன்ஸ் வருதுன்னு சொல்லுங்க இமா, நான் ஞாபகப்படுத்திடறேன், டோண்ட் வொரி! :)

    கருத்துக்கு நன்றிகள்!

    ReplyDelete
  13. மகி நான் ஆனியன் ப்ஃப்ஸ் செய்து பார்த்தேன்.சூப்பரா இருந்தது. பகிர்விற்கு நன்றிகள்.

    ReplyDelete
  14. அம்முலு, பஃப்ஸ் செய்து பார்த்ததுக்கும், மறக்காமல் வந்து இங்கே சொன்னதற்கும் நன்றிங்க! உங்களுக்குப் பிடிச்சிருந்தது என்பது ரொம்ப சந்தோஷம்! :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails