கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி "அடி பின்னீட்டீங்க, நன்றி!" என நன்றி சொன்னேன், இப்போது ஐந்தே மாதங்களில் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லும் தருணம் வந்துவிட்டது. ஆமாம், ஞாயிறு இரவு ப்ளாக் ஹிட்ஸ் நான்கு லட்சத்தை கடந்துவிட்டது! :))) கவனமாக உட்கார்ந்து கவனித்தும் அந்த "4,00,000" என்ற எண்ணைக் கேமராவில் பதிக்க முடியவில்லை! ஹிஹ்ஹிஹி...
தினசரியோ அல்லது நேரம் கிடைக்கும்போதோ என் வலைப்பூவுக்கு வந்து என் மொக்கையை, சமையல் குறிப்புகளை, புகைப்படங்களை ரசித்துச் செல்லும் அனைவருக்கும் என் இனிய நன்றிகள்! 2 லட்சம், 3 லட்சம் என்பதெல்லாம் வெறும் எண்களே என்றாலும், ஆர்வம் குறையாமல் வலைப்பூவை நான் ஆக்டிவ்-ஆக வைத்திருக்க உதவும் கிரியா ஊக்கிகள் அவை என்றால் அது மிகையாகாது. இதனை சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்கும் தனித்தனியே நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நன்றி அனைவருக்கும்! தஹி-பப்டி சாட் எடுத்துக்கோங்க! :)
வட இந்திய "சாட் ஐட்டங்கள்" செய்து பல நாட்கள், இல்லையில்லை, வருஷங்களே ஆகிவிட்டது. அவ்வப்போது வெளியே உணவகங்களுக்குச் செல்கையில் சாப்பிடுவதோடு நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. வீட்டில் செய்யவேண்டும் என நினைத்து நினைத்து ஒருவழியாக செய்தும் ஆச்சு! இந்த முறை (சிறு)பூரி (கோல் கப்பா) செய்வதற்கு பதிலாக பப்டி செய்தேன். செய்முறையைப் பார்க்கலாம் வாங்க.
பப்டி- தேவையான பொருட்கள்
மைதா-11/2கப்
எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
ஓமம்-1/2டீஸ்பூன்
தண்ணீர்-1/2கப் +1 டேபிள்ஸ்பூன்
உப்பு
செய்முறை
மாவு, உப்பு, ஓமம் இவற்றுடன் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து விரல்களால் நன்றாக கலந்துகொள்ளவும்.
தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும்.
பிசைந்த மாவை அரைமணி நேரம் காற்று புகாமல் மூடி வைக்கவும்.நான்கு சம அளவு உருண்டைகளாக உருட்டி, மெல்லிய சப்பாத்திகளாக இடவும்.
முள்கரண்டியால் சப்பாத்தியின் எல்லா இடங்களிலும் குத்திவிட்டு, பிஸ்ஸா கட்டர் அல்லது கத்தியால் துண்டுகள் போடவும்.
[துண்டுகள் போடுவதற்கு பதில், குக்கீ கட்டர்/பாட்டில் மூடியால் வட்டமாக வெட்டியும் எடுக்கலாம், ஆனால் அப்படி செய்கையில், வட்டம் தவிர மீதி சப்பாத்தி மீதியாகும், அதை மறுபடி எடுத்து தேய்த்து மறுபடி சிறு வட்டம் வெட்டி...என வேலை கொஞ்சம் நீளும்! ;) உங்க வசதிப்படி செய்துக்கலாம்! :)]
மிதமான சூட்டில் எண்ணெய் காயவைத்து நறுக்கிய பப்டி-களைப் பொரித்தெடுக்கவும்.
எண்ணெய் வடியவிட்டு காற்று புகாத டப்பாக்களில் போட்டு வைக்கவும். இவை வாரம் -பத்து நாட்கள் வரை நன்றாக இருக்கும்.
ஸ்வீட் சட்னி- க்ரீன் சட்னிகளும் மொத்தமாகச் செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம், அவையும் வாரம் -பத்துநாட்கள் தாங்கும்.
ஸ்வீட் சட்னி - தேவையான பொருட்கள்
பேரீட்சை பழம் - 6
உலர் திராட்சை-10
கெட்டியான புளிக்கரைசல்-1/4கப்
வெல்லத்தூள் அல்லது சர்க்கரை -2 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள்-1/2டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-1/2டீஸ்பூன்
உப்பு
செய்முறை
அனைத்துப் பொருட்களுடன் 11/2 அல்லது 2 கப் தண்ணீர் சேர்த்து ப்ரெஷ்ஷர் குக்கரில் ஒரு விசில் வரும்வரை வேகவைக்கவும்.
ப்ரெஷ்ஷர் அடங்கி, ஆறியதும் குக்கரைத் திறந்து சட்னியை மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
ஸ்வீட் சட்னி தயார்.
~~~
க்ரீன் சட்னி - தேவையான பொருட்கள்
புதினா-1/2கப்
கொத்துமல்லி இலைகள் -1/2கப்
பச்சைமிளகாய்-3 [அல்லது காரத்துக்கேற்ப]
சீரகம்-1/2டீஸ்பூன்
புளி - சிறிது
உப்பு
எலுமிச்சை சாறு- அரைப் பழத்தில் இருந்து
செய்முறை
எலுமிச்சைச் சாறு தவிர மற்ற பொருட்களை மிக்ஸியில் மைய அரைக்கவும். இறுதியாக எலுமிச்சை சாறு கலந்து வைக்கவும்.
க்ரீன் சட்னி தயார்.
~~~
தஹி-பப்டி சாட் - தேவையான பொருட்கள்
பப்டி - தேவையான அளவு [ஒரு ப்ளேட்டுக்கு 6 அல்லது 7 பப்டி சரியாக இருக்கும்.]
தயிர்-1/2கப்
வேகவைத்த கொண்டைக்கடலை
வேகவைத்த உருளைக் கிழங்கு [இங்கே சேர்க்கப்படவில்லை! ;)]
நறுக்கிய வெங்காயம்
நறுக்கிய தக்காளி
நறுக்கிய கொத்துமல்லித் தழை
ஸ்வீட் சட்னி
க்ரீன் சட்னி
செய்முறை
தயிருடன் கொஞ்சம் தண்ணீர், ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்துகொண்டு, மேலாக ஒரு சிட்டிகை மிளகாய்ப்பொடி தூவி வைக்கவும்.
சாட்-ஐட்டங்களில் தட்டில் இந்த ஆர்டரில்தான் பொருட்களை வைத்து சாப்பிட வேண்டும் என்ற வரைமுறை எல்லாம் இல்லை. அவரவர் விருப்பப்படி தேவையான பொருட்களை தட்டில் வைத்து வெளுத்துக் கட்டலாம்! ;)
இங்கே நாங்கள் தட்டில் முதலில் பப்டி-ஐ வைத்து, வெங்காயம்-தக்காளி தூவி, கொண்டைக் கடலை நாலைந்து தூவி, இனிப்பு-பச்சை சட்னிகளைக் கொஞ்சம் தெளித்து, மேலாக தயிர் விட்டு, கடைசியாக கொத்துமல்லி இலை தூவி இருக்கிறோம். [ஆமாங்க, பேஸிக் ப்ரிப்பரேஷன் பை மீ, ப்ரசென்டேஷன் பை என்னவர்! ;) ]
நீங்கள் உங்கள் விருப்பப்படி பொருட்களை வைத்து சாப்பிடலாம். முதலில் தட்டில் வைக்க வேண்டியது பப்டி-யை! அதை மட்டும் மாத்திராதீங்க, தட்ஸ் ஆல்! :)
நம்ம இப்படி கலர் கலரா காரசாரமாச் சாப்பிடுறோம். ஆர்வமாகப் பார்க்கும் எங்க வீட்டுக் குட்டிப்பையனுக்கும் எதாவது குடுக்கணுமில்ல?!
நம்ம இப்படி கலர் கலரா காரசாரமாச் சாப்பிடுறோம். ஆர்வமாகப் பார்க்கும் எங்க வீட்டுக் குட்டிப்பையனுக்கும் எதாவது குடுக்கணுமில்ல?!
மகி நல்வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். இன்னும் நிறைய ஹிட்ஸ் தரவேண்டும்.
ReplyDeleteஉங்க தஹி பப்டி பார்க்க செய்ய ஆவலைத்தூண்டுகிறது. படங்களை பார்க்க நிறைய வேலைப்பாடு போல இருக்கு. டைம் கிடைக்கும் போது கண்டிப்பா செய்கிறேன். ஜீனோவின் பார்வையிலேயே ஆர்வம் தெரிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.
ஜீனோவிற்கு கொடுத்து விட்டர்கள் என்று நினைக்கிறேன். ஆர்வத்துடன் இன்னும் வேண்டும் என்பது போல் பார்க்கிறதே.
ReplyDeleteஇந்த இனிப்பு சட்னி பேல் பூரிக்குக் கூட உபயோகிக்கலாம் தானே!
//படங்களை பார்க்க நிறைய வேலைப்பாடு போல இருக்கு. டைம் கிடைக்கும் போது கண்டிப்பா செய்கிறேன்.// அம்முலு, அப்படியெல்லாம் இல்லங்க! பார்க்க வேலை போல தெரிந்தாலும், ப்ளான் பண்ணினால் க்விக்-ஆக முடிக்கலாம்.
ReplyDeleteபப்டி ஒரு நாள் செய்துவைத்துருங்க. சட்னிகள் செய்ய அரைமணி கூட ஆகாது, இந்த 3 ஐட்டமும் செய்தால் ஃப்ரிஜ்ஜிலும் வைச்சுக்கலாம். மத்த பொருட்கள் எல்லாமே ஈஸிதான். தேவைப்படும்போது கடலை & உருளைக் கிழங்கு வேகவச்சா பத்தே நிமிஷத்தில சாட் பார்ட்டி கொடுத்து அசத்திரலாம்! :)
வாழ்த்துக்கும், ஜீனோவை ரசித்து கருத்து தந்தமைக்கும் நன்றிகள் அம்முலு!
~~
ராஜி மேடம், //ஜீனோவிற்கு கொடுத்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.// இல்லைங்க, படம் எடுத்ததும்தான் அந்த பவுலை அவனுக்குக் கொடுத்தோம், அதற்குள்ளாகவே அவருக்கு பவுல்ல இன் ட்ரஸ்டிங் விஷயம் இருக்கு என தெரிந்துவிட்டது. அதான் அப்படி ஒரு ஆர்வம்! :)
//இந்த இனிப்பு சட்னி பேல் பூரிக்குக் கூட உபயோகிக்கலாம் தானே!// ஆமாம்! அதே சட்னிதான்...நார்த் இண்டிய சாட் வகை உணவுகள் எல்லாவற்றுக்குமே இந்த சட்னிகளை உபயோகிக்கலாம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
பப்டி செய்முறைக்கு நன்றி...
ReplyDelete4,00,000....!!! மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
வாழ்த்துகள் மகி. மேலும்மேலும் பல லட்சங்களாகப் பெருக வாழ்த்துகள்.
ReplyDeleteஃபோட்டோ எடுக்கிறேன் பேர்வழின்னு ஜீனோவை இப்படி காக்க வச்சிட்டீங்களே! ஹும்,நம்ம ஊரு சாப்பாட்டை நல்லா பழக்கம் பண்ணிவிட்டிருக்கீங்க. அது அவர் பார்க்கும் பார்வையிலேயே தெரியுது.
தெளிவான படங்களுடன், விளக்கமான குறிப்பு, தஹி-பப்டி சாட் நல்லாருக்கு.
congrats mahi
ReplyDeleteதஹி பப்டி சூப்பரா இருக்கு..:)
ReplyDeleteநீங்க என்ன சாமானியரா... அசத்தல் பதிவுகளைத்தரும் ராணியாச்சே...
உங்களுக்கு ஹிட் ச்சும்மா ஜெட் வேகத்தில ஏறிடும்...:)
இன்னும் இன்னும் சிறக்க நல் வாழ்த்துக்கள் மகி!
அருமையான படங்களுடன் இம்முறை உங்கள் பதிவும் சூப்பர்!
ஜீனோ தன் கண்களாலேயே சாப்பிட்டிருப்பார்... அவ்வளவு ஆர்வமா பார்க்கிறார்..:)
மகி இன்னும் பல லட்ச ஹிட்ஸ்களை சந்திக்க வாழ்த்துக்கள். சாட் நல்லா இருக்கு. ஜீனோ உனக்கு சட்னி இல்லியாப்பா ....முதல்ல உன் பங்கை பவுலில் ஊற்றசொல்லுப்பா......யம்மியா இருக்கும்.நன்றி மகி.
ReplyDeleteவாழ்த்துக்கள் மகி. நான்கு மாதம் கழித்து போன வாரம் தான் இந்தியாவிலிருந்து - திரும்பி வந்தேன். சொல்லாமல் கொள்ளாமல் தீடீரென்று இந்தியா சென்று விட்டோமே, மகி-க்கு ஒரு ஹாய் & சாரி சொல்லலாம் என்று வந்தால், "4,00,000 ஹிட்ஸ்" பதிவு. சூப்பர் மகி. வாழ்த்துக்கள். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteதஹி பப்டி சாட்- என் all time favorite. looks very yummy. will try soon.
drooling recipe...yummy
ReplyDeleteதனபாலன் சார், வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்!
ReplyDelete~~
//ஹும்,நம்ம ஊரு சாப்பாட்டை நல்லா பழக்கம் பண்ணிவிட்டிருக்கீங்க. அது அவர் பார்க்கும் பார்வையிலேயே தெரியுது.// :) ஆமாம் சித்ராக்கா! வீட்டில சமைக்கிற சாப்பாடுன்னா ஆர்வமா சாப்பிடறார், வேற என்ன செய்யறது! ;) :)
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்!
~~
நன்றி சாரு!
~~
இளமதி, நான் பாட்டுக்கு மனம் போன போக்கில் எழுதி பதிவுகளை வெளியிடுகிறேன். நீங்களெல்லாரும் தரும் ஆதரவு ரொம்ப உற்சாகமா இருக்கு.
**சும்மாவே ஆடும் பேய்க்கு கொட்டு முழக்கம் வேறா** [பழமொழி உபயம் : இமா ரீச்சர்] என்பது எவ்வளவு கரெக்ட்டுன்னு இப்பதான் புரியுது! ஹாஹஹா!! ;) :)
ஜீனோ கண்ணாலயும் சாப்பிட்டு பிறகு ருசித்தும் பார்த்தார்! ஹி லைக்ட் இட்! :)
நன்றி இளமதி!
~~
கொயினி, //ஜீனோ உனக்கு சட்னி இல்லியாப்பா ....முதல்ல உன் பங்கை பவுலில் ஊற்றசொல்லுப்பா......யம்மியா இருக்கும்.// நீங்க சொன்னதுக்காக நெக்ஸ்ட் டைம் சட்னியோட குடுத்தேன், க்ரீன் சட்னிய அப்படியே ஒதுக்கி வைச்சிட்டார்! அவ்வ்வ்வ்! ;)
வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி கொயினி!
~~
சுபா, நாலு மாசம் ஊரில என்ஜாய் பண்ணிட்டு வந்திருக்கீங்க, சூப்பர்! :)
பப்டி சாட் செய்து பாருங்க, வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிங்க!
~~
ஷாமா, கருத்துக்கு நன்றிகள்!
~~
ஹா!! பப்டி கமண்ட் போடுற சாக்குல என்னை யாரோ வாரி இருக்காங்க போல இருக்கே! ;)
ReplyDeleteஜீனோவை முழுசாவே வெஜிடேரியன் ஆக்குற ப்ளானா? ;))
//கமண்ட் போடுற சாக்குல என்னை யாரோ வாரி இருக்காங்க போல இருக்கே! ;)// ச்சே, ச்சே, அப்படில்லாம் இல்லைங்க இமா! பழமொழி எங்க கிடைச்சாலும் அலேக்-கா கவ்விட்டு வந்து அங்கங்க யூஸ் பண்ணிக்குவேன். கிடைச்ச இடத்தை சொல்லிடறதும் நல்லதில்லையா? அதனால சொல்லிருக்கேன். தட்ஸ் ஆல்! :)
ReplyDeleteஜீனோ முழுசா வெஜிடேரியன் எல்லாம் ஆகமாட்டார். சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் சிக்கன் பிரியாணி, சிக்கன் ஃப்ரை என வெட்டிகிட்டுதான் இருக்கார். :)
நேரம் கிடைக்கும் போது செய்து பார்க்கணும் நன்றி
ReplyDelete