தேவையான பொருட்கள்
சுத்தம் செய்த வெந்தயக் கீரை -1/2கப்
பாஸ்மதி அரிசி-1கப்
பச்சைப் பட்டாணி -1/4கப்
வெங்காயம்-1
தக்காளி-1
பச்சைமிளகாய் -2 (அ) 3 [காரத்திற்கேற்ப]
இஞ்சி- சிறுதுண்டு
பூண்டு-2பற்கள்
தேங்காய் துருவல்-1டேபிள்ஸ்பூன்
முந்திரி,திராட்சை- கொஞ்சம்
சர்க்கரை-1/2டீஸ்பூன்
எண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
நெய்-1டேபிள்ஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
பொடித்துக்கொள்ள
பட்டை-சிறு துண்டு
கிராம்பு-2
ஏலக்காய்-1
செய்முறை
அரிசியை 2-3 முறை அலசி, 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
கீரையை மண் போக கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.
பச்சைமிளகாயை நீளமாக கீறி வைக்கவும்.
இஞ்சியைப் பொடியாக நறுக்கியும், பூண்டை ஒன்றிரண்டாகத் தட்டியும் வைக்கவும்.
பட்டை கிராம்பு ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய்+நெய் காயவைத்து முந்திரி-திராட்சை சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு இவற்றை சேர்த்து வதக்கி, பட்டை-கிராம்பு-ஏலம் பொடியைச் சேர்த்து வதக்கவும்.
இதற்கிடையில் கீரையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் வதங்கியதும் பட்டாணி மற்றும் வெந்தயக் கீரையைச் சேர்த்து சர்க்கரையையும் போட்டு வதக்கவும்.
கீரை வதங்கியதும் தக்காளி-தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கவும்.
பிறகு ஊறிய பாஸ்மதி அரிசியைச் சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து 11/2கப் தண்ணீர் விடவும்.
குக்கரை மூடி மிதமான தீயில் 7 நிமிடங்கள் சமைக்கவும். அதற்குள் விசில் வந்துவிடும், வராவிட்டாலும் பாதகமில்லை, ஏழு நிமிடங்கள் கழித்து குக்கரை அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். அரிசி ஊறி இருப்பதால் விரைவில் வெந்துவிடும். [இந்த முறை ஒரு கப் அரிசி அளவுக்கு...அரிசி அதிகம் சேர்த்தால் குக்கர் ஒரு விசில் வரும் வரை அடுப்பில் வைத்து பிறகு இறக்கவும்.]குக்கரின் ப்ரெஷ்ஷர் முழுவதும் அடங்கிய பிறகு திறந்து சாதம் உடையாமல் கிளறிவிட்டு பரிமாறவும்.
இந்தப் புலாவ் அப்படியே சாப்பிடவும் அருமையாக இருக்கும். எனக்கு பச்சடி, சைட் டிஷ் எல்லாம் தேவையில்லாததால் செய்யவில்லை. உங்கள் விருப்பப்படி வெள்ளரி தயிர் பச்சடி, கேரட் தயிர் பச்சடி இவற்றுடன் சாப்பிடலாம்.
Recipe Courtesy : HERE
பின் குறிப்பு : வெந்தயக்கீரை வீட்டில் வளர்ந்ததுதான், அது பற்றியும் இதேபதிவில் இணைக்கலாமென நினைத்தேன், (வழக்கம் போல) சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறன் இல்லாததால் பதிவு நீண்டுவிடவே வெந்தயக்கீரை வளர்ப்பு பற்றி தனிப்பதிவு ஒன்று விரைவில் வெளியிடப்படும். :)
Recipe Courtesy : HERE
பின் குறிப்பு : வெந்தயக்கீரை வீட்டில் வளர்ந்ததுதான், அது பற்றியும் இதேபதிவில் இணைக்கலாமென நினைத்தேன், (வழக்கம் போல) சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறன் இல்லாததால் பதிவு நீண்டுவிடவே வெந்தயக்கீரை வளர்ப்பு பற்றி தனிப்பதிவு ஒன்று விரைவில் வெளியிடப்படும். :)
வெந்தயக்கீரை உங்க வீட்டு அறுவடையோ! ஏன்னா, இதேமாதிரி அறுவடை இங்கேயும் நடந்தது.
ReplyDeleteகாமாக்ஷி அம்மாவின் குறிப்பா!முதல் படமே செய்யத் தூண்டுகிறது. அடுத்த வாரம் செய்ய முயற்சிக்கிறேன்.
படங்களும் செய்முறையும் அருமை. பாராட்டுக்கள்... நன்றி...
ReplyDeleteவெந்தயக் கீரை கசக்காதா?
ReplyDeleteஅந்த சந்தேகம் என்னுள் பல நாட்களாய்.
thank u mahi .
ReplyDeleteமேத்தி ரொட்டி சாப்பிட்டு இருக்கேன்.இப்ப மேத்தி புலாவா?சூப்பர்ப்.
ReplyDeleteதோட்டம் கலக்குது. ;)))
ReplyDeleteரொம்ப சூப்பராக இருக்கு...முந்திரி, திரட்சை எல்லாம் சேர்த்து ரொம்ப நல்லா இருக்கும்...
ReplyDeleteபுலாவ் செம சூப்பரா இருக்கு..
ReplyDeleteரொம்ப அருமை உடலுக்கு மிகவும் நல்லது கு்ஸ்கா போல் மேத்தி சேர்த்தும் செய்யலாம்.
ReplyDeleteதேவையான பொருட்கள் அதிகம் சேர்ப்பதால் கசப்பு சுவை தெரியாது.. செய்து பார்க்கிறேன் மகி.
ReplyDeleteMm superb pulao mahi.......
ReplyDeleteவெந்தயக்கீரை புலாவ் பார்க்க நன்றாக இருக்கு. நல்லகுறிப்பு மகி.இந்தக்கீரை மட்டும்தான் வரவில்லை எனக்கு. நன்றி.
ReplyDeleteபடமும்,பகிர்வும் ரொம்பவே சூப்பர். இளம் கீரை. நான் கீரை அதிகம் சேர்ப்பேன். அதுதான் வித்தியாஸம். வாஸனை மூக்கைத் துளைக்கிறது.சாப்பிட வரேன்.
ReplyDeleteaha! vendya keerai vasam masalvudan mookai thulaikudhe! :-) seekram onga gardenku kootitu ponga.
ReplyDeleteசித்ராக்கா, //வெந்தயக்கீரை உங்க வீட்டு அறுவடையோ! ஏன்னா, இதேமாதிரி அறுவடை இங்கேயும் நடந்தது.// ஆஹா! பாம்பின் கால் பாம்பறியும் என்ற பழமொழி சரியாத்தான் இருக்குது! :))) கரெக்ட்டாப் புடிச்சிட்டீங்க. கீரைவளர்ப்பும் இதே பதிவில் போடலாம் என நினைத்தேன், சில பல காரணங்களால் அது ஒரு தனிப்பதிவாகிருச்சு.
ReplyDeleteஉங்க வீட்டுக்கீரையிலும் செய்து பாருங்க, சூப்பரா இருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!
~~
தனபாலன் சார், வீட்டில் சொல்லி செய்யச் சொல்லுங்க. உடலுக்கும் நல்லது, ருசியும் நன்றாக இருக்கும். நன்றி!
~~
ராஜி மேடம், //வெந்தயக் கீரை கசக்காதா? அந்த சந்தேகம் என்னுள் பல நாட்களாய்.// கசக்கவே கசக்காது என பொய் சொல்லமாட்டேன், ஆனால் சாப்பிட முடியாத அளவு கசக்காது என உறுதியாய் சொல்லலாம். கடைகளில் கிடைக்கும் வெ.கீரை வாங்கி ஒரு முறை சாப்பிட்டுப் பாருங்க, உங்களுக்கே தெரிந்துவிடும்.
எனக்கு வெந்தயக் கீரை ரொம்பப் பிடிக்கும். அதில் இருக்கும் ஹெல்த் ஃபெனிஃபிட்ஸ் பற்றி படித்துப் பாருங்க, ஆட்டோமேடிக்-ஆ சாப்பிடுவீங்க. ;)
கசப்பும் ஒரு சுவைதானே? பாவக்காய் சாப்பிடறோம், வெந்தயக்கீரை சாப்பிட மாட்டோமா? நம்பி சாப்பிட்டுப் பாருங்க, அப்புறம் அடிக்கடி செய்வீங்க! :))
~~
அனானி, நன்றீங்க!
~~
ஸாதிகாக்கா, புலாவ் செய்து பார்த்து சொல்லுங்க, அருமையாய் இருக்கும். நன்றி அக்கா!
~~
இமா டீச்சர், //தோட்டம் கலக்குது. ;)))// ஆனாலும் உங்க குறும்புக்கு அளவே இல்லை! ;) :) தோட்டத்தின் படம் ஒண்ணு கூட வரல, ஆனா கலக்குது-ந்னு சொல்லீட்டீங்க?! ஹஹஹ!! நன்றிங்கோ!
~~
கீதா, ஆமாம் ருசியான புலாவ்! செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி!
~~
மேனகா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
ஜலீலாக்கா, நான் இன்னும் குஸ்கா ஒரு முறை கூட செய்ததோ, சுவைத்ததோ இல்லை! ;) உங்க ரெசிப்பியைப் பார்க்கும்போதெல்லாம் செய்ய நினைப்பேன், இன்னும் நேரம் வரலை! நன்றி அக்கா கருத்துக்கு!
~~
ராதாராணி, கண்டிப்பாக செய்து பாருங்க. சூப்பரா இருக்கும். நன்றிங்க!
~~
கொயினி, நன்றிங்க!
~~
அம்முலு, வெந்தயம் சுலபமா வளருமே!! உங்க வீட்டில என்னாச்சு? மறுபடி டிரை பண்ணிப்பாருங்க.
நன்றி அம்முலு கருத்துக்கு!
~~
காமாட்சிம்மா, உங்களை இங்கே பார்ப்பது மிக்க சந்தோஷம்மா! நலமா இருக்கீங்களா?
நான் அளவு தெரியாமல் கீரையை தொட்டியில் இருந்து பறித்தேன், அதனால கொஞ்சமா ஆகிவிட்டது! ;) அடுத்த முறை நீங்க சொன்னது போல நிறையக் கீரை சேர்த்து செய்து பார்க்கிறேன் மா! நன்றி!
~~
மீரா, வாங்க சாப்பிடலாம்! :)
தோட்டம் அடுத்த பதிவில்...நன்றி மீரா!
~
ஆஆஹாஅ !!!! ரொம்ப அருமையா கலர்புல்லா வந்திருக்கு மகி ..எங்க வீட்ல அடுத்த செட் அறுவடை நாளைக்கு :)) ஐ மீன் நாளைக்கு மேத்தி புலாவ் :))
ReplyDelete..எனக்கு அடிக்கடி சாபிடுவதாலோ என்னவோ இந்த கீரை கசப்பு தெரிவதேயில்லை :))
நன்றிங்க! எனக்கு கீரைகூட்டுதான் செய்யத்தெரியும். கீரைபுலாவ் செய்துபார்க்கிறேன்.
ReplyDelete