புதிய பெயரில் ஏதாவது ரெசிப்பி கண்ணில் பட்டால் என் கை துறுதுறுக்கத் தொடங்கி, அதை செய்தும் பார்த்துவிடுவது வழக்கம். ரசவாங்கி, பொடிக்கறி, ஆமவடை இந்த வரிசையில் சேர்ந்து "தவல வடை/தவலை வடை" என்ற பேரிலேயே என் கருத்தைக் கவர்ந்த ரெசிப்பி இது! :)) சாதாரண வடையில் ஏதாவது ஒரு வகை பருப்பு மட்டிலும் உபயோகிப்போம், ஆனால் இந்த தவல வடையில் அரிசி, து.பருப்பு, க.பருப்பு, உ.பருப்பு, பாசிப் பருப்பு என பலவிதப் பொருட்களும் சேர்ந்திருக்கின்றன. செய்முறையைப் பார்க்கலாம் வாங்க.
இங்கே நான் செய்திருப்பது 21/4 பேருக்கான அளவு (ஜீனோ ஆல்ஸோ இன்க்ளூடட் யு ஸீ! ;) அவருக்கு இப்படியான "பொரிச்ச" உணவுவகைகள் ரொம்பப் பிடிக்கும்! :) )
இது தஞ்சாவூர் பக்கம் ஃபேமஸான மாலை சிற்றுண்டி என அறிந்தேன். சிலர் இதில் ஊறவைத்த ஜவ்வரிசியும் சேர்த்துச் செய்கிறார்கள். இந்த ரெசிப்பி என்னைக் கவர்ந்த இடம் இங்கே!
தேவையான பொருட்கள்
ஊறவைக்க வேண்டியவை
துவரம் பருப்பு -1/4கப்பிற்கும் கொஞ்சூண்டு குறைவாக
கடலைப் பருப்பு-1/4கப்பிற்கும் கொஞ்சூண்டு குறைவாக
உளுந்துப் பருப்பு-1/8கப்பிற்கு கொஞ்சூண்டு அதிகமாக
பாசிப் பருப்பு-1/8கப்
புழுங்கல் அரிசி-1/4கப்பிற்கும் கொஞ்சூண்டு குறைவாக
பச்சரிசி-1/4கப்பிற்கும் கொஞ்சூண்டு குறைவாக [நான் பாஸ்மதி அரிசி உபயோகித்திருக்கிறேன்.]
குறிப்பு: 1/4கப் என்பது 50கிராம் அளவு. நான் அதற்கும் கொஞ்சம் குறைவாகவே பொருட்கள் எடுத்தேன்.
முதலில் அரைக்க வேண்டியவை
வரமிளகாய்-3
பச்சை மிளகாய்-2
பெருங்காயப் பொடி-1/4டீஸ்பூன்
உப்பு
தாளிக்க
தேங்காயெண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
உளுந்து பருப்பு-1டீஸ்பூன்
வடைமாவில் சேர்க்க
இஞ்சி-சிறுதுண்டு
பச்சைமிளகாய்-1
கறிவேப்பிலை-கொஞ்சம்
பல்லுப் பல்லாக நறுக்கிய தேங்காய்-1டேபிள்ஸ்பூன்
வடை பொரிக்கத் தேவையான எண்ணெய்
செய்முறை
அரிசிகளை ஒன்றாக களைந்து ஊறவைக்கவும்.
து.பருப்பு, க.பருப்பு இரண்டையும் ஒன்றாக களைந்து ஊறவைக்கவும்.
பாசிப்பருப்பு, உளுந்துப் பருப்பு இரண்டையும் தனித்தனியே களைந்து ஊறவக்கவும்.
எல்லாப் பொருட்களும் குறைந்தது 2 மணி நேரங்களாவது ஊறவேண்டும்.
மிக்ஸியில் வரமிளகாய், இரண்டு பச்சை மிளகாய், பெருங்காயப்பொடி, உப்பு இவற்றை முதலில் சேர்த்து கொறகொறப்பாக அரைக்கவும். பிறகு அதனுடன் ஊறிய அரிசியை வடிகட்டி சேர்த்து அரைக்கவும்.
அரிசி ஓரளவு அரைபட்டதும் ஊறிய து.பருப்பு + க.பருப்பை தண்ணீர் வடித்துவிட்டு சேர்த்து கொறகொறப்பாக அரைத்தெடுக்கவும்.
உளுந்துப் பருப்பை தனியாக மிக்ஸியில் எடுத்து நைஸாக அரைத்து (இட்லிக்கு அரைப்பது போல) வடை மாவுக் கலவையுடன் சேர்க்கவும்.
ஊறிய பாசிப் பருப்பையும் தண்ணீர் வடித்துவிட்டு வடைமாவில் சேர்க்கவும்.
தாளிப்புக் கரண்டியில் தேங்காயெண்ணெய் காயவைத்து கடுகு-உளுந்து தாளித்து வடைமாவில் ஊற்றவும். பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பச்சைமிளகாய், தேங்காய்த்துண்டுகளையும் சேர்த்து பத்து நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும்.வடைக்கு எண்ணெய் காயவைக்கவும். வடை மாவை கரண்டியால் நன்றாக கலக்கி, சூடான எண்ணெயில் சிறிய வடைகளாகப் போடவும். பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
சூடான தவல வடை ரெடி! தேங்காய் சட்னியுடன் சுடச்சுட சாப்பிட ஜோராக இருக்கும்.
ஜோராகத்தான் இருக்கு... (படமும் பதிவும் உட்பட)
ReplyDeleteநன்றி சகோ... செய்திடுவோம்...
எனக்கும் ரொம்ப பிடிச்ச தவல வடை...சூப்பராக இருக்கு...கொஞ்சம் பார்சல் அனுப்புங்க...
ReplyDeleteஓ... மகி!...
ReplyDeleteஇதுதான் அந்த தவல வடையா?
ப்ச்... இவ்வளவு காலமா தெரியாம வேஸ்ட் பண்ணீட்டன் வாழ்க்கையை...:)
சரி... செய்து பார்த்திடுவதுதான் இம்முறை எப்படியும். அருமையாக இருக்கு. கண்ணைக்கவருதே கலரே!
மிக்க நன்றி மகி பதிவிற்கும் பகிர்விற்கும்!
thavala vadai superba irukku pakumpothe sappidanumnu thonuthu ..aanal ivvalo velaiyaa irukke mahi.. ungalukku porumai jaasthinu ninailkkiren ..parcel anuppidunga plz ...koduthu vechavarunga unga hussu.:-)
ReplyDeleteவாட் ஈஸ் //கொஞ்சூண்டு// !! ;)
ReplyDeleteசொன்னால் மட்டுமே ட்ரை பண்ணுவேன். ;)
@தனபாலன் சார், நன்றிங்க கருத்துக்கு!
ReplyDelete~~
@கீதா, நெக்ஸ்ட் டைம் செய்யும்போது கண்டிப்பா அனுப்பறேன்! :) நன்றி கீதா!
~~
@இளமதி, //ப்ச்... இவ்வளவு காலமா தெரியாம வேஸ்ட் பண்ணீட்டன் வாழ்க்கையை...:)// அதானே? சீக்கிரமா தவலைவடை செய்து சாப்பிட்டு வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டுபுடிச்சு எனக்கும் சொல்லுங்க! ;))))
நன்றிங்க கருத்துக்கு!
~~
@கொயினி, ஆமாம்...வேலை கொஞ்சம் அதிகம்னுதான் ரொம்ப யோசிச்சு யோசிச்சு, அட்லாஸ்ட் ஒரு டிரை பண்ணிரலாம்னு செய்து பார்த்தேன். நீங்களும் செய்து பாருங்க! ;)))
நன்றி!
~~
@இமா, //வாட் ஈஸ் //கொஞ்சூண்டு// !! ;)// கொஞ்சூண்டு இஸ் லிட்டில் பிட்! ;))) அதாவது ஒண்ணு ரெண்டு டீஸ்பூன்!! இப்ப டிரை பண்ணி சொல்லணும் நீங்க! டீல்? :)
தேங்க்ஸ் பார் தி கமெண்ட் இமா!
~~
tempting thavalai vada... romba nalla vanthu irukku..
ReplyDeleteEvent: Dish Name Starts with U
மகி இது தவலை வடையா?தவலை போண்டாவா?அதுசரி..இந்த தவலை எனற பெயயர் எப்படி வந்தது?
ReplyDeleteஊறிய பாசிபருப்பு, தேங்காய் துண்டு சேர்ப்பது புதுசா இருக்கே.. இது ரெண்டும் சேர்க்காமல் தவல வடை செய்திருக்கிறேன்.. இதை போல் ஒரு முறை செய்து பார்க்க வேண்டும். நல்லாயிருக்கு மகி.
ReplyDeleteஇதே மாவில் நாங்கள் அடை செய்வோம்,அதை தவலை அடைன்னு சொல்வோம்..வடைபோல் இனி செய்துடுவோம்..
ReplyDeleteகுண்டுகுண்டா அழகா வந்திருக்கு தவலை வடை. இதை கேள்விப்பட்டிருக்கேன்,ஆனால் செய்ததில்லை.இதேமாதிரி தவலை அடைன்னு ஒன்னு செய்வோம்.
ReplyDeleteஅப்படின்னா அந்த 1/4 பேர் இந்நேரம் போண்டா, பூரில்லாம்கூட டேஸ்ட் பண்ணியிருப்பார்!
@அகிலா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
ReplyDelete~~
@ஸாதிகாக்கா, //இது தவலை வடையா?தவலை போண்டாவா?// நீங்க வடையா நினைச்சுகிட்டுப் பார்த்தா அது தவலை வடை, போண்டாவா நினைச்சுகிட்டுப் பார்த்தா அது தவலை போண்டா! ;))))) [எப்பூடி? எஸ்கேப் ஆகிட்டம்ல?! ஹிஹிஹ்ஹி...]
//..இந்த தவலை எனற பெயயர் எப்படி வந்தது?// ரெசிப்பிக்கு முதல்லயே சொல்லிருக்கேன், இது தஞ்சாவூர் ரெசிப்பி என்று. கோயமுத்தூர்க்காரிக்கு தஞ்சை ரெசிப்பியின் பெயர்க் காரணம் தெரிய 0% வாய்ப்புக் கூட இல்லை! தெரிந்தவர்கள் யாராவது சொன்னா, உங்களோட சேர்ந்து நானும் தெரிஞ்சுப்பேன் அக்கா! :))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!
~~
@ராதாராணி, //ஊறிய பாசிபருப்பு, தேங்காய் துண்டு சேர்ப்பது புதுசா இருக்கே..//இந்த இரண்டு பொருளுமே கடிச்சு சாப்பிட ருசியா இருக்கும், அடுத்த முறை சேர்த்து செய்து பாருங்க. :) சிலர் ஊறிய பாசிப்பருப்புக்கு பதிலாக ஊறிய ஜவ்வரிசி சேர்த்தும் செய்யறாங்க. நன்றிங்க!
~~
@மேனகா, அடை மாவையே கொஞ்சம் கெட்டியா அரைச்சு முதல்ல வடை, அப்புறம் அடை செய்துருங்க! :)) நன்றி மேனகா!
~~
@சித்ராக்கா, நீங்களும் தவலை அடை செய்வீங்களா? எனக்கு இந்தப் பெயர் ரொம்ப புதுசு..ரெசிப்பியும் புடிச்சிருந்தது, அதான் செய்து பார்த்தேன். :)
//அந்த 1/4 பேர் இந்நேரம் போண்டா, பூரில்லாம்கூட டேஸ்ட் பண்ணியிருப்பார்!// அதெல்லாம்! ப்ரேக்ஃபாஸ்ட் பூரின்னா அவருக்கும் 2 பூரி சேர்த்துத்தான் செய்வது. 3 வது பூரி குடுத்தா பத்திரமா ஒளிச்சு வைச்சு நிதானமாச் சாப்பிடுவாராக்கும்! ;))) போண்டா-வடைன்னா கிச்சன்ல என் பக்கத்திலயே வெய்ட் பண்ணுவார். சுடச் சுட எடுத்து, ஆறவைச்சு பிச்சுத் தருவேன். சாப்ட்டுட்டு ஹாலுக்குப் போய் என்னவரிடமும் கம்பெனி கொடுப்பார். ஜீனோ-வா கொக்கா?! :)))
நன்றி சித்ராக்கா!
~~
/////ப்ரேக்ஃபாஸ்ட் பூரின்னா அவருக்கும் 2 பூரி சேர்த்துத்தான் செய்வது. 3 வது பூரி குடுத்தா பத்திரமா ஒளிச்சு வைச்சு நிதானமாச் சாப்பிடுவாராக்கும்! ;))) போண்டா-வடைன்னா கிச்சன்ல என் பக்கத்திலயே வெய்ட் பண்ணுவார். சுடச் சுட எடுத்து, ஆறவைச்சு பிச்சுத் தருவேன். சாப்ட்டுட்டு ஹாலுக்குப் போய் என்னவரிடமும் கம்பெனி கொடுப்பார்//////// கேட்கவே சந்தோஷமா இருக்கு.
ReplyDeleteஅதிலும், "சுடச் சுட எடுத்து, ஆறவைச்சு பிச்சுத் தருவேன்"____இந்த வரி மனதில் பதிந்தேவிட்டது.
//கேட்கவே சந்தோஷமா இருக்கு.// :) உங்க கருத்தைப் பார்த்து எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு! :) தேங்க்யூ!
ReplyDeleteதவலைவடை கண்டிப்பா செய்கிறேன். எங்க வீட்டில(ஊரில)இருப்பவருக்கும் பொரிச்ச ஐட்டம் என்றால் ரெம்பபிடிக்கும். இன்னும் அரைத்துவைச்ச சாம்பார் என்றால் ஒருபிடிபிடிப்பார். நன்றி மகி.
ReplyDelete// அரைத்துவைச்ச சாம்பார் என்றால் ஒருபிடிபிடிப்பார். // அடடே! சைவப் பிரியரா இருப்பார் போலவே! :)) எங்காளு சிக்கன் பிரியாணி -மட்டன் இதெல்லாம்னா ஒரு பிடியென்ன பலபிடி பிடிப்பார்! :))) கூடவே வெஜிடபிள்ஸும் பிரியம்! கோஸ்-கேரட்-ப்ரோக்கலி-பீட்ரூட் இப்படி என்ன காய் செய்தாலும் அவருக்கும் சேர்த்துத்தான் செய்ய வேண்டியிருக்கு இப்போ!! அவ்வ்வ்வ்வ்வ்! :)
ReplyDeleteதவலைவடை செய்து பாருங்க அம்முலு! கருத்துக்கு நன்றிகள்!