மழையின் துளியில் லயம் இருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குதுமலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது
தூவானம் தூவும்.. அதில் ஏதேதோ கானம்..
ஆராரோ பாடும்.. அதில் ஆனந்தம் கூடும்!
........
கோடைக் கதிரவனின் வெப்பத்தில் பூமிப்பெண் கசகசவென்று வியர்த்து வடிந்துகொண்டிருந்த சமயம்..கடந்த வாரம் ஒரு நாள் மேகமூட்டமாய் இருந்த வானம், பின்மதியத்தில் பூமிப் பெண்ணுக்குப் பன்னீராய்ச் சாரல் தெளித்து தென்றல் சாமரம் வீசியது! சில நிமிடங்கள் மட்டுமே இந்த சிசுருஷை நடந்தாலும் பூக்களால் சிரிக்கும் பூமாதேவி தன் மகிழ்வைத் தெரிவிக்க மறக்கவில்லை. அந்த அழகை கேமராவில் சிறைப்பிடித்தேன்.
செம்பருத்தி, செம்பருத்தி..
பூவைப் போல பெண்ணொருத்தி.. :)
இந்த செம்பருத்திப் பெண் தினமும் சில பூக்கள் மலரத் தவறுவதில்லை. முழுவதும் நனையும் அளவுக்குக் கூடச் சாரலடிக்காமல் இருந்தாலும் விழுந்த ஓரிரு துளிகளிலும் ஓர் அழகு!
ரோசாப்பூ...சின்ன ரோசாப்பூ!
கொத்துக் கொத்தாய் பூத்துச் சிரிக்கிறது சிவப்பு ரோஜா! கொத்தில் ஒரு மொட்டை மட்டும் விட்டுவிட்டு மற்றவற்றை நீக்கிவிட்டால் பெரிய ரோஜாமலர்கள் கிடைக்கும் என்று தோட்டம் போட்ட அனுபவஸ்தர்கள் சொன்னாலும் அங்ஙனம் செய்ய எனக்கு மனம் வருவதில்லை.ரோஜாப்பெண்ணின் மொட்டுப்பிள்ளைகளைக் கிள்ளியெறிய எனக்கு உரிமையும் இல்லை, அது சரியென்று என் மனம் ஒப்பவுமில்லை. பூ சிறிதாய் இருந்தாலென்ன, அதுவும் ஓரு அழகுதான்! நீங்க என்ன சொல்றீங்க?
இயற்கையைத் தொல்லை செய்யாமல் அதனோடு ஒன்றி ரசிப்போமே! :)
ஒரு மலர்..
இந்த ஜெரேனியம் மலர்கள், கொத்துக் கொத்தாய் மலரும்,
~~
ஜீனோ: பால்கனில கேமராவோடு சுத்திட்டு வந்து உட்கார்ந்தாங்க, அக்கடா-ன்னு நானும் வந்து படுத்தேன், ஆனா இன்னும் கேமரா ஆஃப் ஆகலை போலிருக்கு...கிர்ர்ர்ர்ர், கர்ர்ர்ர்ர்-ன்னு ஏதேதோ சத்தமெல்லாம் கேக்குது...ஹ்ம்ம்ம்!அட போங்கப்பா..நீங்க போட்டோ எடுத்தாலும் சரி, எடுக்காம ஜூம் பண்ணிகிட்டே இருந்தாலும் சரி..நான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணறேன்.
யாரது என்ர மஞ்சக் கலர் பொம்மைய கண்கொட்டாமப் பாக்குறது? அது ஜீனோவுது..நீங்கள்லாம் பூக்களை ரசிங்க, ஜீனோ இஸ் வெறி;) பொஸஸிவ் அபவுட் ஹிஸ் டாய்ஸ்! யாருக்கும்ம்ம்ம்ம்ம் தரமாட்டேன்!! :)
~~
பதிவின் முதலில் வந்த வரிகள் இந்தப் பாடலில் இருந்து...
சின்னத்தம்பி-பெரியதம்பி எங்க ஊருப்பக்கம் எடுக்கப்பட்ட படம்.. நரசீபுரம் அருகில் உள்ள "வைதேகி சுனை" என்ற அழகான இடம் இந்தப் படத்தில் பல இடங்களில் வரும். அழகான நதியா, இனிமையான இசை, சின்னக் குயில் சித்ராவின் அற்புதமான குரலில்.... மழையை ரசிக்க ஒரு பர்ஃபெக்ட் பாட்டு! :)
~~
இத்தனை நாட்கள் மறந்து போகாமல், மறைந்தும் போகாமல் தொடர்ந்து எழுத ஆர்வத்தையும், வாய்ப்பையும், ஊக்கத்தையும் கொடுக்கும் இறைவனுக்கும், ஆதரவு தரும் அன்பான வாசகர்கள் மற்றும் நட்புக்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை என் 350வது பதிவான இப்பதிவில் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.
நன்றி!
~~
ரசனையான பதிவு..முதல் வரியை படித்ததும் கவிதையோட பதிவு தொடங்குது போலன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன். இந்த பாட்டை உண்மையில் இப்போதான் கேட்குறேன் மகி..:) ஜீனோ அழகா இருக்கார். முகத்தை காட்டிட்டாரே ..
ReplyDeleteயப்பப்பா..கண்ணைக் பறிக்கிறதே புஷ்பங்கள்...
ReplyDelete350! வாவ்! வாழ்த்துக்கள் மகி.
ReplyDeleteபாடல் சூப்பர்.
படங்கள் சூப்பர். ம்.. நடுவுல சொல்லி இருக்கிற கருத்தை ஆமோதிக்காட்டா எப்புடி! ஆமாம், ஆமாம். ;))
ஹாய் ஜீனோ! அத்தைமடி மெத்தையடியா! லக்கி யூ. கலக்குங்க. ;)
m azhagaana padhivu mahi ....pookkal palich palich .....rose killi podaadheenga appadiye vidunga ...adhudhaan azhagu . 350 vadhu padhivu mahi ithu vaalthukkal.enakku unga ezhuththu nadai pidikkum.innum melum melum palate happyaana padhivugalaaga podunga . Hi jeeno thanga camera off aagumnu edhirpaarkkaadhepa ...appuram engalukku boradikkum. :-) nice post.
ReplyDeleteஅன்பு மகி!...
ReplyDeleteமனமது மகிழ மகியின் பதிவுகள்
தினமொன் றாயினும் திகட்டா அழகுகள்
விரிந்த மலர்களும் வியந்தே மேலும்
சொரிந்திடும் உங்கள் புகழது ஓங்கவே!
அழகுப்பதிவுகள் தருவது அனைத்தும் அற்புதம்!
என்றும் எப்பொழுதும் இங்கும்கூட அருமையான பதிவு மகி!
அனைத்தையும் ரசித்தேன்!
350 பதிவுகளைத்தொட்ட உங்கள் வளர்ச்சி மேலும் மேலும் பல நூறுகளைக் காண்டு உயர்ந்திட உளமார வாழ்த்துகிறேன்!
our special greetings to your 350 post..
ReplyDeletegeno is nice...cute flower photos..
thank you mahima.
Super flowers.
ReplyDeleteஉங்களுடைய 350வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மலரும் அழகு.மங்கையின் pet dog ம் அழகு.
ReplyDelete350 பதிவு. வாழ்த்துக்கள் மகி.
ReplyDeleteவாவ் என்ன ஒரு அழகு செம்பருத்தி. அப்படத்தில் ரோஜாமரத்தில் செம்பருத்தி பூத்ததுபோல் உள்ளது. பூக்கள் எல்லாமே அழகு.
//ரோஜாப்பெண்ணின் மொட்டுப்பிள்ளைகளைக் கிள்ளியெறிய எனக்கு உரிமையும் இல்லை, அது சரியென்று என் மனம் ஒப்பவுமில்லை. பூ சிறிதாய் இருந்தாலென்ன, அதுவும் ஓரு அழகுதான்! நீங்க என்ன சொல்றீங்க?//100% சரி.
எனக்கும் விருப்பமில்லை.
ஜீனோ!!! அவருகென்ன நல்லதொரு ரிலாக்ஸ்.அழகு.
சமீபத்தில் பார்த்த நல்லதொரு(பாடல்)படம் மகி. நதியா ஒருகாலத்தில் கலக்கிய நடிகை.
நல்ல ரசனைமிக்கதொரு பதிவு.
இயற்கையைத் தொல்லை செய்யாமல் அதனோடு ஒன்றி ரசிப்போமே! :)/
ReplyDeleteஅதே அதே அஃதே!!! எனது விருப்பமும் கருத்தும்அதேதான் .
350 இக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
350 ..3500 ஆக வாழ்த்துகிறேன் .
.மகி மழையை பார்த்ததும் சிவா குடையோட வந்திட்டார் பாருங்க :))
..ஜீனோ :))) ஜீனோக்கும் யெல்லோகலர் TOYS தான் ஆசையா :))உங்களை மாதிரியே ஹா :)))
350th postkku vazhththukkal...pukkal ellaame azhagu...adhilum andha Hibiscus rosa-sinensis rombave azhagaa irukku..:)
ReplyDeleteVisit : http://blogintamil.blogspot.in/2013/07/3.html
ReplyDeleteவாழ்த்துக்கள்...
350 வது பதிவுக்கு வாழ்த்துகள் மகி!
ReplyDelete"கொத்தில் ஒரு மொட்டை மட்டும் விட்டுவிட்டு மற்றவற்றை நீக்கிவிட்டால் பெரிய ரோஜாமலர்கள் கிடைக்கும்"_________எல்லோர் வீட்டிலும் எப்படி கொத்துகொத்தாக, பெரியபெரிய பூக்களாகப் பூத்துக் குலுங்குகிறது. யாரும் கிள்ளிவிடுகிறார்களா என்ன,தெரியவில்லை.
செம்பருத்தியும்,ஜெரேனியம் பூவும் அழகா இருக்கு.
நாலுநாள் கழிச்சு வந்து பாக்குறதுக்குள்ளயும் யாரோ வெயிட் போட்டிருக்கறமாதிரி தெரியுதே.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சித்ராக்கா!
ReplyDelete//எல்லோர் வீட்டிலும் எப்படி கொத்துகொத்தாக, பெரியபெரிய பூக்களாகப் பூத்துக் குலுங்குகிறது. யாரும் கிள்ளிவிடுகிறார்களா என்ன,தெரியவில்லை.// ரோஜாவில் பெரிய பூக்கள் பூக்கும் செடிகளும் இருக்கே, அவையாய் இருக்கலாம். :) இங்கும் பல தனி வீடுகளில் பெரிய பெரிய ரோஜாக்கள் பூத்திருக்கும். நான் சும்மா 99காசுக்கு வாங்கி வளர்க்கிறேன்! ;)
//நாலுநாள் கழிச்சு வந்து பாக்குறதுக்குள்ளயும் யாரோ வெயிட் போட்டிருக்கறமாதிரி தெரியுதே.// ஆஹா!! யாரைப் பாத்து என்ன சொல்லிப்புட்டீங்க? அவரை இப்பல்லாம் டெய்லி ஒரு நேரம் சாப்பிட வைக்கறதே பெரிய வேலையா இருக்கு! இதில வெயிட் போடறது வேறயா? அவ்வ்வ்வ்வ்....ஜீனோ என் மடியில உட்கார்ந்திருக்க பொஸிஷன் கேமராவில் அப்படி வந்திருக்கு, ஏமாந்துராதீங்க! :)
தனபாலன் சார், வருகைக்கும் தகவலுக்கும் நன்றிகள்!
ReplyDelete~~
ப்ரியா, ஹைபிஸ்கஸ் ரோஸா சைனென்ஸிஸ்--கலக்கறீங்க போங்க! :) மத்த பூவுக்கும் பொட்டானிகல் பேரெல்லாம் சொன்னீங்கனா சூப்பரா இருக்கும்! ;) வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிப்பா!
~~
ஏஞ்சல் அக்கா, //ஜீனோக்கும் யெல்லோகலர் TOYS தான் ஆசையா :))உங்களை மாதிரியே ஹா :)))// ஆமாம்! அவருக்கு லேட்டஸ்ட்டா வாங்கியது அந்த பொம்மைதான். ஸோ ஃபார் அதான் அவருக்கு ஃபேவரிட்! :))
வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி அக்கா!
~~
அம்முலு, //அப்படத்தில் ரோஜாமரத்தில் செம்பருத்தி பூத்ததுபோல் உள்ளது// :) புதினாமரம் போல ரோஜா மரமா?! :)) ரெண்டு செடிகளும் அருகருகே இருப்பதால் அப்படி தெரியுது.
நதியா எனக்கும் மிகப் பிடித்த நடிகை. படமும் பார்த்துட்டீங்களா?! பிடிச்சிருந்ததா? அதெல்லாம் எங்க பாட்டி ஊருதான் அம்முலு! ;)
வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
வானதி, நன்றி!
~~
சிவா, வெகுநாள் கழித்து வந்து பூக்களை ரசித்தமைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சிவா!
~~
இளமதி, கவிதை பாடி வாழ்த்திய கவிதாயினிக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
~~
கொயினி, உங்க கருத்து எப்பவுமே மனதுக்கு மகிழ்ச்சி தரும் வகையில்தான் இருக்கும், இதுவும் அப்படியே! :) நன்றி கொயினி!
ஜீனோ நீங்க சொன்னத கேட்டுக்கறாராம். இனிமே போட்டோவுக்கு அழகா போஸ் குடுப்பேன் என்றும் சொல்லச் சொன்னார்!
நன்றி கொயினி!
~~
இமா, //ம்.. நடுவுல சொல்லி இருக்கிற கருத்தை ஆமோதிக்காட்டா எப்புடி! ஆமாம், ஆமாம். ;))// ம்..நீங்க சொன்னா சரிதான் இமா! ;)))
//ஹாய் ஜீனோ! அத்தைமடி மெத்தையடியா!// கர்ர்ர்ர்ர்ர்ர்...நான் ஜீனோவுக்கு அத்தையா?! ;)
வருகைக்கும் கருத்து மற்றும் வாழ்த்துக்கும் நன்றி இமா!
~~
ஸாதிகாக்கா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
ராதாராணி, //இந்த பாட்டை உண்மையில் இப்போதான் கேட்குறேன் மகி..:) // ஆஹா! இதுவரை கேட்டதே இல்லையாங்க?! ம்ம்...இட்ஸ் ஓகே, பெட்டர் லேட் தேன் நெவர்! :)) வாய்ப்புக் கிடைத்தா படமும் பாருங்க. :)
ஜீனோ முகத்தை தெளிவாக் காட்டலையே! ப்ளர்ர்ர்ர்ர்-ஆன படம் அது!! ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
another interesting post mahi. The flowers are so refreshing for eyes! Geranium - first time seeing this flower. the bunch looks awesome! does it have any smell?
ReplyDeleteLove to Geno. He is so cute and //possesive about his toys// ha.ha....
that place shown in the song, still has the same greenery now Mahi?
மீரா, ஜெரேனியம் வாசமில்லா மலர்! :) சிவப்பு, வெள்ளை, பிங்க் என பலநிறங்களில் இருக்குங்க. கொத்துக் கொத்தா பூத்திருப்பது அழகா இருக்கும்.
ReplyDeleteஜீனோவோட விளையாட்டு என்ன தெரியுமா? அவர் பொம்மையை கவ்விக்கொண்டு நம்மகிட்ட வருவார். நம்ம அதை அவர்ட்ட இருந்து பிடுங்க முயற்சிக்கணும், அவர் தரமாட்டார்! அதான் எங்க விளையாட்டு! :))
இப்போது நரசீபுரம் பக்கமெல்லாம் படத்தில் இருக்குமளவு இல்லாட்டியும் பசுமை இன்னும் மீதம் இருக்குதுங்க. வைதேகி சுனை ஃபேமஸான பிக்னிக் ஸ்பாட் ஆனது இந்தப் படம் & வைதேகி காத்திருந்தாள் - இவற்றுக்கு அப்புறம்தான்! :)
நன்றி மீரா!