Thursday, September 19, 2013

கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு & கத்தரிக்காய் சாம்பார்

--------------------------
இது கத்தரிக்காயைப் பொரிச்சு ஒரு ஶ்ரீலங்கா ஸ்பெஷல் குழம்பாக்கும்! இதுக்கு இங்கத்தைய பெரிய கத்தரிக்காய்தான் சரி.. ( ஒபஜின்) .. இரண்டாகப் பிளந்துபோட்டு , மூன்று துண்டாக வெட்டுங்கோ.. அதாவது பெரிய பெரிய பீஸாக...

நன்கு பொரித்தெடுங்கோ, பின்னர் உங்கட முறையில் தாளிதம் அனைத்தும் சேர்த்து வெங்காயம் மிளகாய் வதக்கி, கறித்தூள் போட்டு வதக்கி, பழப்புளி கரைத்து விடோணும்.. கொஞ்சம் புளித்தன்மையாக 
இருப்பின்தான் சுவை அதிகம்.

பின்னர், அளவுக்கு தண்ணி, விரும்பினால் கொஞ்சம் பால் சேர்த்து கொதித்ததும், இக்கத்தரிக்காய்களைப் போட்டு இறக்குங்கோ..
--------------------------
என்று குத்துமதிப்பாகக் கிடைத்த ரெசிப்பியை, என் ருசிக்கேற்ப டெவலப் பண்ணி, சுவையான குழம்பாக மாற்றி, வெற்றிகரமாக போட்டோக்களும் எடுத்து இங்கே பகிர்கிறேன். கத்தரியை டீப் ஃபிரை செய்வதற்கு பதிலாக கொஞ்சம் எண்ணெய் நிறைய:) விட்டு ஷாலோ ஃபிரை செய்துவிட்டேன். விரும்பினால் கொஞ்சம் பால் சேர்த்து என ரெசிப்பி தந்தவர் குறிப்பிட்டதால், நானாகவே கெட்டியான பசும்பாலைச் சேர்த்துச் செய்திருக்கிறேன்! ;)

Authentic Sri Lankan Recipe-வேண்டுவோர், நல்லெண்ணெயில் கத்தரிக்காயை முறுகலாகப் பொரித்தும், தேங்காய்ப்பால் சேர்த்தும், கெட்டியான குழம்பாகச் செய்துகொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். கருத்துப் பெட்டியில் ஒரு நட்பு பல்வேறு டிப்ஸ்கள் கொடுத்திருக்காங்க, அதையும் கவனித்துக்கொள்ளவும். :)
--------------------------------
தேவையான பொருட்கள்
பெரிய கத்தரிக்காய் -2
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-1
புளிக்கரைசல்-1/4கப்
கறிப்பொடி-2டீஸ்பூன் [நான் தோழி கொடுத்த கலவை மிளகாய்ப்பொடி உபயோகித்திருக்கிறேன், நீங்க வசதிப்படி சாம்பார் பொடி (அ) மிளகாய்த்தூள்+மல்லித்தூள் (அ) கறிமசாலாத்தூள் சேர்த்துக்கலாம்.]
ஹாஃப் & ஹாஃப் மில்க்/ கெட்டியான பசும்பால்-3டேபிள்ஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/4டீஸ்பூன்
வெந்தயம்-5
மஞ்சள்தூள்-1/8டீஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
சர்க்கரை-1/4டீஸ்பூன்
உப்பு 
எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்  

செய்முறை
கத்தரிக்காயைக் கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கவும். 
வெங்காயம்-பச்சை மிளகாயையும் நறுக்கி வைக்கவும். 
கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, நறுக்கிய கத்தரித் துண்டுகளைச் சேர்க்கவும்.
மிதமான தீயில் கத்தரிக்காயை முறுவலாக வறுத்து, தனியே எடுத்து வைக்கவும். 
அதே கடாயில் வெந்தயம்-சீரகம் சேர்க்கவும். அவை பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம்-மிளகாய் சேர்த்து வதக்கவும். 
வெங்காயம் ஓரளவு வதங்கியதும் கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, கறிப்பொடி சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். 
புளிக்கரைசல் பச்சைவாசம் போக கொதித்து வற்றியதும் பொரித்த கத்தரிக்காய் துண்டுகளைக் குழம்பில் சேர்க்கவும். குழம்பு கெட்டியாக இருந்தால் கால் கப் கொதிநீரும் சேர்க்கலாம். 
சில நிமிடங்கள் கழித்து, தீயைக் குறைத்துக்கொண்டு பாலைச் சேர்க்கவும். 
நன்றாக கலந்து விட்டு குழம்பு சூடானதும், சர்க்கரையைச் சேர்த்து அடுப்பை ஆஃப் செய்யவும். குழம்பு அடுப்பின் சூட்டிலேயே சில நிமிடங்கள் இருக்கட்டும். 
ஐந்து நிமிடங்கள் கழித்து குழம்பை வேறு பாத்திரத்துக்கு மாற்றவும். சுவையான கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு ரெடி.  
பொங்கலும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும் சூப்பர் காம்பினேஷன்! தேங்க்ஸ் பூஸக்கா ஃபார் தி ரெசிப்பி! :) 
 கோ-இன்சிடென்டலாக நானும் காலை உணவுக்கு வெண்பொங்கல்தான் செய்திருந்தேன்! :) அது என்ன கோ-இன்சிடென்ஸ், யாரந்த பூஸக்கா:) என அறிய விரும்புவோர் இங்கே கையை வையுங்கோ! மறக்காமல் அந்தப் பதிவின் கருத்துக்களையும் படிக்கணும். :) 
~~~
கத்தரிக்காய் சாம்பார்
தேவையான பொருட்கள்
பெரிய கத்தரிக்காய்-1 (அ) சின்னக் கத்தரிக்காய்கள் -4
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-1
கறிவேப்பிலை, கொத்துமல்லி- கொஞ்சம்
துவரம் பருப்பு-1/4கப்
தக்காளி-1
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
சாம்பார்பொடி-1டீஸ்பூன் 
உப்பு
எண்ணெய்
செய்முறை
பருப்புடன் தக்காளி,  2 துளி எண்ணெய், கொஞ்சம் மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைத்து எடுக்கவும். 
கத்தரிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். 
வெங்காயம், பச்சைமிளகாய் நறுக்கி கொள்ளவும். 
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 
பிறகு கத்தரிக்காய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். 
வெந்த பருப்பு & தக்காளியை கரைத்து கத்தரிக்காயுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
ஒரு கொதி வந்ததும் சாம்பார்பொடி, தேவையான உப்பு சேர்த்து குறைவான  தீயில் 4-5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். 
கொத்துமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும். 
 
காரம் குறைவான, புளி சேர்க்காத, சுவையான சாம்பார் தயார். சாதம், இட்லி தோசை இவற்றுக்கு பொருத்தமாக இருக்கும்.  

17 comments:

  1. குத்துமதிப்பாக நாங்களும் செய்து பார்க்கிறோம்... ஹிஹி... படங்களுடன் செய்முறை விளக்கங்கள் அருமை... நன்றி...

    ReplyDelete
  2. //குத்துமதிப்பாக நாங்களும் செய்து பார்க்கிறோம்... ஹிஹி... // தனபாலன் சார், நான் அளவுகளைக் கொடுத்துட்டேனே, இனி குத்து-மதிப்பு எல்லாம் வேண்டாம்! :) உங்க வீட்டில ரெசிப்பிய பார்க்கச் சொல்லுங்க, அவங்க உங்க ருசிக்கு ஏத்த மாதிரி சூப்பரா ரெடி பண்ணித் தருவாங்க! :))
    உடன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  3. அடடா அடடா சூப்பர் மகி... கலக்கிட்டேள்:). ஆனா கத்தரிக்காயை குறுக்க வெட்டிட்டீங்க... அப்படியே பாதியாக பிளந்திட்டு.. மூன்று துண்டாக்கினால் போதும்.. பெரிதாக இருப்பதுதான் இதன் ஸ்டைலே..

    அடுத்து இலங்கையில் எனில் தேங்காய்ப்பால்ல்.. இங்கு எனில் பசுப்பால்ல்.. ஆனா அம்மா எல்லாம் எந்தப் பாலும் சேர்க்காமல்தான் வைப்பா.

    ReplyDelete
  4. கத்தரிக்காய் சாம்பாறும் வாயூற வைக்குது. இன்று எல்லாமே கத்தரி ஐட்டமோ?:)

    ReplyDelete
  5. awwwww :)) looks yummy .this goes well with uppumaa too :))

    ReplyDelete
  6. Super. I add vaazaikai too. Love it.

    ReplyDelete
  7. எனக்குக் கத்தரிக்காய் எப்படிச் சமைத்தாலும் பிடிக்கும். இரண்டு குறிப்புகளும் பிடிச்சிருக்கு. அதிராவின் குறிப்பு தெரிஞ்சதுதான். கத்தரிக்காய் வாங்கி வைச்சிருக்கிறன். சாம்பார் செய்துபார்க்கிறேன்.
    நன்றி மகி & அதீஸ்.

    ReplyDelete
  8. 2 ரெசிபிகளும் சூப்பர்ர்ர்ர்

    ReplyDelete
  9. கத்தரிக்காயில் என்ன வைக்கிறதெண்டாலும் எனக்கும் பிடிக்கும்.
    சாம்பார் வித்தியாசமாக இருக்கு மகி!

    நல்ல குறிப்புகள்! பகிர்வு செய்த உங்களுக்கும் அதிராவுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  10. நல்லாயிருக்கும் போலிருக்கு!

    ReplyDelete
  11. ஆகா எங்க செய்முறைக்குழம்பு. நன்றாக இருக்கு மகி. சாம்பார் செய்துபார்க்கிறேன். உங்களுக்கும்,அதிராவுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  12. sri lankans do not use cow milk. they use coconut milk. the curry should be bit thicker. fry the brinjal till it turns brown for better results. also use nallennai. using other oil does not give good taste.

    ReplyDelete
  13. அனானி, உங்க விளக்கத்திற்கு நன்றி! :)
    இந்தமுறை நான் தேங்காய்ப்பால் சேர்க்கலை, கத்தரிக்காயை நல்லெண்ணெயில் முறுகலாகப் பொரிக்கவும் இல்லை. அடுத்த முறை நீங்க சொன்னபடி செய்து பார்க்கிறேன். இப்படி செய்த ரெசிப்பியே கொஞ்சம் ரிச்-ஆகத் தெரிந்தது எனக்கு. நீங்க சொன்னது இன்னும் கொஞ்சம் ஓவர் ருசியாக இருக்குமென நினைக்கிறேன். இருந்தாலும் ஒரு முறை முயன்று பார்த்துடுவோம்! ;):)

    ReplyDelete
  14. அம்முலு, சாம்பார் செய்து பாருங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!
    ~~
    ஜனா சார், நல்லாதானிருக்கும். கட்டாயம் செய்து ருசித்துப் பாருங்க! நன்றி!
    ~~
    இளமதி, நீங்களும் கத்தரிக்காய் ரசிகைதானா! செய்து பார்த்துச் சொல்லுங்க, நன்றி!
    ~~
    மேனகா, நன்றி!
    ~~
    இமா, செய்து பார்த்துச் சொல்லுங்க. நீங்க சொன்னதில் இருந்தே கத்தரிக்காய் பொரிக்கறதில ஆர்வமா இருந்தேன், கரெக்ட்டா அதிரா ரெசிப்பி பார்க்கவும் துணிந்து ஷாலோ ஃப்ரை பன்ணிட்டேன், இனி டீப் ஃபிரைதான் அடுத்தது! ;) :)
    நன்றி இமா!
    ~~
    வானதி, வாழைக்காயியும் பொரிச்சா சேர்ப்பீங்க? நெக்ஸ்ட் டைம் செய்து பார்க்கிறேன், நன்றி வானதி!
    ~~
    ஏஞ்சல் அக்கா, உப்புமாவுக்கா?? யு மீன் வெள்ளை ரவை உப்புமா? டிரை பண்ணிருவோம்! :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    அதிரா, //இன்று எல்லாமே கத்தரி ஐட்டமோ?:)// ஆமாம், 3 காய் காய்ச்சது. அதில 2 ரெசிப்பி ரெடி பண்ணியாச்சு, அதான்! :)

    //ஆனா அம்மா எல்லாம் எந்தப் பாலும் சேர்க்காமல்தான் வைப்பா.//ஓ!! அப்ப புளிப்பு கொஞ்சம் தூக்கலாத் தெரியாதோ அதிரா? ம்ம்ம்ம்...அதுவும் நல்லாத்தான் இருக்கும்.

    //ஆனா கத்தரிக்காயை குறுக்க வெட்டிட்டீங்க... அப்படியே பாதியாக பிளந்திட்டு.. மூன்று துண்டாக்கினால் போதும்.. பெரிதாக இருப்பதுதான் இதன் ஸ்டைலே..// அவ்வ்வ்வ்வ்...இப்பவும் உங்க விளக்கப்படிதான் கத்தரிய நறுக்கியிருக்க மாதிரி இருக்கு. என்ன சொல்றீங்க என புரிலை, ஒருக்கா நீங்க நறுக்கியதை படமெடுத்துப் போடுங்கோ, அப்ப தெளிவாகிருவேன்! :) ;)
    குழம்பு சூப்பரா இருந்தது அதிரா. ரெசிப்பிக்கு மிக்க நன்றிகள்!
    ~~

    ReplyDelete
  15. Anonymous again. Thank you.

    We generally use the long brinjals. But this brinjal suits better. You can shallow fry it too. Just fry it till it turns brown.

    http://kathdedon.files.wordpress.com/2010/07/baby-indian-eggplants.jpg

    Cut them into four or six pieces, lengthwise. tada.

    This curry goes well with white rice, idli, thosai, briyani rice, string hoppers, hoppers, upma, cous cous, pasta (mix the curry to boiled pasta and microwave/bake it with cheese), semiya (mix the boiled semiya and let it absorb the curry, adding cheese is optional). I use the think curry and cheese singles to make sandwiches too.

    Fried raw banana to this curry also gives a good taste.

    ReplyDelete
  16. கத்திரிக்காயை எப்படி சமைத்தாலும் பிடிக்கும்,அதுவும் மகி வீட்டில் விளைந்த கத்திரிக்காய், அதன் சுவையும்,கைப்பக்குவமும் சேர்ந்து அபாரம்.படங்கள் சூப்பர்.இன்னோவேடிவ் ஐடியா அருமை.

    ReplyDelete
  17. அனானி, மீள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. நீங்க கொடுத்திருக்கும் லிங்க் நம்ம ஊர் சின்னக் கத்தரிக்காய்தானே? அதில் இப்படி பொரிச்ச இன்னொரு ஶ்ரீலங்கன் ரெசிப்பி வாழைக்காய் சேர்த்து செய்திருக்கேன், குழம்பு வைச்சதில்லை.
    குழம்புடன் பொருந்து உங்க விளக்கமான காம்பினேஷன்ஸ் கேட்கவே நல்லா இருக்கு. :) நன்றிங்க.
    ~~
    ஆசியா அக்கா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிக்கா! கத்தரிக்கா வருஷம் முழுவதும் கிடைச்சாலும் கடையில் வாங்கும் கத்தரி கார்த்திகை மாசம்தான் ருசி! 'கார்த்திகை மாசம் கத்தரிக்காய்ல காம்பெல்லாம் நெய் வழியும்" அப்படின்னு எங்கம்மா சொல்லுவாங்க! :)))
    ~~

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails