Monday, October 7, 2013

புகைப்படத் தொகுப்பு - தொட்டிச் செடிகள்

மூன்று வண்ணங்களில் வாங்கிவந்த ஜெரேனியம் (geranium) மலர்ச்செடிகளில் உயிர்பிடித்து, புதிதாகப் பூத்த ஒரு மலர்க்கொத்து..
சற்றே பின்னால் நகர்ந்து நின்று ஒரு லாங் ஷாட்! :)
~~
டாலர் ஷாப்பில் வாங்கிவந்த 99காசு ரோசாப்பூ!  இந்தத் தொட்டியும், ஜெரேனியம் தொட்டியும் ஒரு நாள் மாடியிலிருந்து தரைக்கு தொப்பென வீழ்ந்துவிட்டன. ஏதோ சத்தம் கேட்டது, ஆனால் இதுவரை இப்படி நிகழாத காரணத்தால் நானும் கவனிக்கவில்லை. மாலையில் கீழ்வீட்டு பால்கனியில் இருந்த தொட்டிகளைப் பார்த்துவிட்டு, "கீழ் வீட்டுக்காரப் பையனும்  நம்மைப்போலவே தொட்டிகள் வாங்கி வைச்சிருக்காரே" என ஆச்சரியப்பட்டு(!?!) விட்டு வந்துவிட்டேன். ஹிஹி...
பிறகு சிறிது நேரம் கழித்து மண்டைக்குள் பல்பு எரிய, பால்கனிக் கதவைத் திறந்து பார்க்கிறேன், இங்கே தொட்டிகளைக் காணோம்! ;)))) தரையில் விழுந்து கிடந்ததை யாரோ எடுத்து கீழ்வீட்டுச் சுவரில் வைத்திருக்கிறார்கள். பிறகென்ன! மறுபடி கீழே போய் நம்ம ப்ராப்பர்டியைக் கலெக்ட் பண்ணிட்டு வந்து மறுநடவு செய்தேன். வருமா என்ற சந்தேகத்துடன்தான்! நல்லவேளையாக இரண்டு செடிகளுமே ஓகே-வாக இருக்கின்றன.
~~
சிலநாட்களாகவே எல்லாச் செடிகளிலும் கருப்பு எறும்பு போன்ற பூச்சிகள் இருந்துகொண்டே இருக்கின்றன. எறும்புகளுடனே செடிகளும் வளர்ந்துகொண்டிருக்கின்றன..

~~
இது மணத்தக்காளிப் பூ! சிறு தக்காளிச் செடியை மணத்தக்காளிச் செடியுடன் குழப்பிக்கொள்ளும் ஆட்கள் படத்தை பெரிதாக்கி, செடியின் இலைகள் மற்றும் பூக்கள்-காய்கள் இவற்றை அடையாளம் கண்டுகொள்ள உதவியாக இருக்குமே என்ற ஒரு நல்லெண்ணத்தில்... ஹிஹி..
~~
தக்காளி/மிளகாய்ச் செடியும் நானும்..
ஆகஸ்ட்டில் ஹோம் டிப்போவில் வாங்கி வந்த தக்காளி-மிளகாய் இரண்டு நாற்றுக்களுமே சரிப்படவில்லை! மிளகாய் வந்த புதிதிலிருந்தே பூச்சிகளுடன் இருந்தது. சில நாற்றுக்கள் மட்டும் எறும்புடன் சந்தோஷமாகவே வளர்ந்து ஓரிரண்டு பிஞ்சுகள் விட்டிருக்கின்றன. 
படத்தில் மேலே இருக்கும் இலையின் பின்பகுதியைப் பாருங்கள்..வெள்ளைப் புள்ளிகள், எறும்புகள்..கூடவே பூக்களும், பிஞ்சும்! :) 

தக்காளிக்கும் எனக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்தான்! இந்த முறை வாங்கிவந்த செடி ஆரோக்கியமாக கொழு-கொழுவென்று தழைந்தது. ஆச்சரியத்துடன், சப்போர்ட்டுக்கு குச்சிகள் நட்டு ஏதோ எனக்குத் தெரிந்த அளவில் வேலிகள் கூட கட்டிவைத்தேன்.
வழக்கம்போல, திடீரென செடி தானாக வாடத் துவங்கியது..இலைகள் சுருண்டுகொண்டு வரளத்துவங்கின..
இப்போது பரிதாபத்துக்குரிய நிலையில் டக்காளி! கர்ர்ர்ர்ர்ர்ர்! வந்தா வா-போனாப் போ என விட்டாச்சு போங்க! 
~~
வாசலிலே பூசணிப்பூ வைச்சதென்ன...

யெல்லோ ஸ்க்வாஷ் நாற்றில் பூக்கள்(மட்டும்) வரத்துவங்கி இருக்கின்றன. மலர்ந்த மலர்கள் அப்படியே வாடிப்போய்க்கொண்டுதான் இருக்கின்றன. செடி சிறிதாக இருப்பதால் இன்னும் சற்று வளரும் வரை காய் பிடிக்காமலிருப்பது நலம்தான் என நானும் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறேன்.
~~ 
படங்கள் பார்த்து ரசித்தாச்சு..காலிஃப்ளவர் தோசை & புதினா-தக்காளி சட்னி ரெடியாய் இருக்கு, சாப்பிட்டுட்டுப் போங்க!

லன்ச் டைம்ல வந்து படிக்கும் ஆட்களுக்கு கேல் (Kale) பொரியல், அரசாணிக்காய்(மஞ்சள் பூசணி) பொரியல், சோறு, மோர்க்குழம்பு..
என்ஜாய்!

23 comments:

  1. //"கீழ் வீட்டுக்காரப் பையனும் நம்மைப்போலவே தொட்டிகள் வாங்கி வைச்சிருக்காரே"//
    அவ்வ்வ்!! ;))

    ReplyDelete
  2. //தக்காளி/மிளகாய்ச் செடியும் நானும்..// எந்தப் படத்துலயும் நானுமைக் காணோமே! ஒருவேளை... படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கணுமோ!! ;)

    ReplyDelete
  3. //எந்தப் படத்துலயும் நானுமைக் காணோமே! ஒருவேளை... படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கணுமோ!! ;)// ஆமாம் இமா! படத்தைப் பெரிதாக்கி, படத்துக்குப் பின்னால எட்ட்ட்ட்ட்ட்டிப் பாருங்க, கேமராவுடன் "நானும்" இருப்பேன்! :)))
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!
    ~~
    தனபாலன் சார், ரசித்து கருத்து தந்ததுக்கு மிக்க நன்றி!
    ~~

    ReplyDelete
  4. ஆஹா என்ன அழகு...

    செடியில் பூச்சி அல்லது எறும்பு வராமல் இருக்க வசம்பை இழைத்து நீரில் கரைத்து தெளித்தால் வராது என டிப்ஸில் படித்திருக்கேன் மகி,செய்து பாருங்கள்...

    ReplyDelete
  5. டிப்ஸுக்கு நன்றி மேனகா! வசம்புக்கு இங்க எங்க போக! ஊரில இருந்து கொண்டுவரச் சொல்லி டிரை பண்ணறேன். சோப்புத் தண்ணி தெளிச்சாலும் போகும் என்கிறாங்க. நாந்தான் அதைச் செய்யாம பூச்சிகளையும் சேர்த்து "ரசிட்டுட்டு" இருக்கேன், ஹிஹ்ஹ்ஹி! :)))

    ReplyDelete
  6. படங்கள் வெகுவே அழகு....
    ஆஹா! கீழ் வீட்டுக்காரங்க உங்க மாதிரியே தொட்டி வாங்கி வெச்சிருக்காங்கன்னு நினைச்சீங்களா!!!!.....:))



    ReplyDelete
  7. பச்சை மிளகாய் அரைத்து தண்ணீருடன் கலந்து தெளிக்கிறார் ஒரு தோழி..ஒரே ஒரு புழு தவிர மற்ற பூச்சிகள் வருவதில்லை என்றார். முயற்சித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  8. I like those cute roses, I can see those ants too, try out the soap solution, it might work..

    ReplyDelete
  9. கண்கொள்ளாக்காட்சிகள்..!

    ReplyDelete
  10. அச்சச்சோ.. எல்லாமே சூப்பர்!..
    ஆமா கீழே விழுந்த பூந்தொட்டி நல்ல வேளை யார் தலையையும் பதம் பார்க்கலையா... தப்பிச்சுக்கிட்டீங்க..:).

    எல்லாமே அருமை! ம் ம். நடத்துங்க...:)

    ReplyDelete
  11. செடிய பேடியோவுக்குள்ள வைக்காம மேலேயா வப்பீங்க? நல்லவேளை, யாரும் அடிபடாததால தப்பீச்சீங்க.

    எங்க வீட்ல எத்த‌ன தடவ பிடுங்கிப்போட்டாலும் குட்டிகுட்டி தக்காளி செடிகள் இன்னும் வந்துகொண்டேதான் இருக்கின்றன.வேணும்னா அனுப்பிவிடுகிறேன்.இலைக்குப் பின்னால வெள்ளை&சிவப்பு (எறும்பா அது) நிற பூச்சிகள் நிறைய வருது.வந்துச்சுன்னா கொத்தோட இலைகளைக் காலி பண்ணிடுவேன்.

    'ஓரிரண்டு பிஞ்சுகள் விட்டிருக்கின்றன'_____ கடைல இருந்து எவ்வளவு வாங்கி வந்தாலும் வீட்டில் காய்க்கும்போது வரும் சந்தோஷமே தனிதான்.

    ஜெரேனியம் பூ,ரோஜா மொட்டு&பூ,எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்க்வாஷ் பூவும் சூப்பரா இருக்கு.ம்.. மறந்திட்டேனே,மணத்தக்காளிப் பூவையும் சேர்த்துக்கோங்கோ.

    ReplyDelete
  12. அனைத்து பூக்களும் கொள்ளை அழகு.. சாம்பலை தெளித்து விட்டால் எறும்பு வராது..உங்க பதிவை பார்த்து நான் போட்ட தோட்டம் புதினா தள தளன்னு வளர்ந்திருக்கு. மல்லி வரவே இல்லை. வெண்டை , மற்ற காய்கள் நன்கு வந்த உடன் பதிவை போடனும் மகி..:)

    ReplyDelete
  13. வாவ் அழகான் கலர் மகி. நான் இவற்றில் தொங்கும் ஜெரேனியம் வாங்கி window sill ல் வைப்பேன்.அழகா இருக்கும். இந்த பூச்சிகள் பாடு ரெம்ப கஷ்டம்
    எனக்கும் ஒருவர் சொன்னார்.க்ளீனிங் செய்யும் வினிகரை வாங்கி தண்ணீருடன் கலந்து அடிக்கச் சொல்லி .செய்து பார்த்தேன்.பலனளித்தது. இதுதான் ம.தக்காளிப்பூவா? வற்றல் மட்டுமே தெரிந்த எனக்கு. உங்க பதிவின் மூலமாத்தான் பூ,காய்,பழம் பார்க்கமுடிந்தது மகி.காலிப்ளவர் தோசை,லன்ச் எல்லாம் நன்றாக இருக்கு.

    ReplyDelete
  14. ///இது மணத்தக்காளிப் பூ! சிறு தக்காளிச் செடியை மணத்தக்காளிச் செடியுடன் குழப்பிக்கொள்ளும் ஆட்கள் படத்தை பெரிதாக்கி, செடியின் இலைகள் மற்றும் பூக்கள்-காய்கள் இவற்றை அடையாளம் கண்டுகொள்ள உதவியாக இருக்குமே என்ற ஒரு நல்லெண்ணத்தில்... ஹிஹி..////////////// நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ மீ ஒத்துக்க மாட்டேன்ன்ன்ன்ன் அதெப்படி சாடியில் மணத்தக்காளி இவ்ளோ அழகா பூக்கலாம்ம்ம்ம்ம்ம்:)

    ReplyDelete
  15. ரோஜாப் பூக்கள் அயகோ அயகூஊஊஊஊஊஉ.. இங்கும் ரோஸ் மட்டும் சூப்பரா வரும்.. ஆனா நமக்குத்தான் நட விருப்பமில்லையே....

    ReplyDelete
  16. மஞ்சள் பூசணி எங்களுக்கும் உப்படி சாடியில் பூத்தது ஆனா காய்க்கவில்லை... உங்களின் ரிசல்ட் என்னவென மறக்காமல் பின்பு சொல்லிடுங்க...

    ReplyDelete
  17. அதென்னது கேல்.. அரசாணிக்காய் என புதுப் புதுப் பெயரெல்லாம் சொல்றீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

    ReplyDelete
  18. அமர்க்களமான பதிவு! மொதல்லெ போய் உங்கள் குலதெய்வத்துக்கு நன்றி சொல்லுங்க -- பால்கனியிலிருந்து விழுந்த தொட்டி ஊரைக் கூட்டிக் கோர்ட் கேஸ் வரை போகாமல் நீங்கள் தப்பித்ததுக்காக!

    எங்க ஊர்ப்பக்கம் 99 காசுக்கு எந்தச் செடியுமே கிடைக்காது. மஞ்சள் ரோஜா மிக அழகு!

    மத்தபடி, சில துணுக்குக் கருத்துகள்:

    1. எறும்பு என்ற உயிரினம் பள்ளிக்கூடம் போகவில்லை, தெரியுமோ! அதனால் அதுக்குச் 'சாக்பீஸ்' என்ற சுண்ணம்புக்கட்டி பெரீய எதிரி. எறும்பு அண்டவேண்டாத இடத்தைச் சுற்றி இந்தச் சாக்பீஸ்/crayon கோடுகள் வரைந்துவிடவும். அங்கே தண்ணீர்ப் பசை இருக்கக்கூடாது. எனவே அடிக்கடிப் புதுக்கோடுகள் வரையணும்! அல்லது ... இன்னொரு முறை: காப்பித்தூள் தூவுதல் ... இது எறும்புகளைக் கொல்லாமல் விரட்டியடிக்கும். செடிகளின் மண்ணுக்குப் போடவேண்டாம், தொட்டியைச் சுற்றித் தூவினாலும் போதும்.

    2. தரைப்புழு (slugs) நத்தை போன்றவற்றை விரட்டியடிக்க ... தொட்டியைச் சுற்றி ரோஸ்மேரி (Rosemary) இலைகளைப் போட்டுப் பாருங்கள்.

    3. இன்னொன்றும் செய்யலாம். தரைப்புழுக்கள் தொட்டியில் ஏறாமல் தடுக்க ஏதாவது ஒரு சின்ன வலையை, தொட்டியைச் சுற்றிக் கட்டிவிடவும்.

    பிற பின்னர்.




    ReplyDelete
  19. அய்யய்யோ ! படங்களை விட கடைசியில் பரிமாறிய 2 ப்லேட்ஸ் தான் அருமை. ஒரு சமயம் சாப்பாடு தட்டை கண்ணில் காட்டாமல் இருந்திருந்தால் தோட்டத்தை ரசித்திருப்பேனோ! என்றாலும் வயிறாற சாப்பிட்டு விட்டு தோட்டம் பக்கம் ஒரு நடை போய் வந்தேன் மிக அழகு.

    ReplyDelete
  20. Loved all those clicks, Mahi...a treat to the sore eyes. Both the flowers
    & food is mesmerizing. Califlower dosa, eh...am gonna self invite myself to ur place.

    ReplyDelete
  21. @ஆதி, ஆமாங்க! :) அப்பப்ப என் மூளை கொஞ்சம் வேலை நிறுத்தம் செய்யும் அல்லது ஓவர்டைம் வொர்க் பண்ணும், அந்த மாதிரி டைமில இப்படி காமெடியா நினைச்சுக்கிறது வழக்கம்தான்! ஹி.ஹி..ஹ்ஹி!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!
    ~~
    @கிரேஸ், //பச்சை மிளகாய் அரைத்து தண்ணீருடன் கலந்து // ஆஹா! காரசாரமான ஐடியாவா இருக்கே! :0 செய்து பார்க்கிறேன்ங்க, நன்றி!
    ~~
    @ஹேமா, சோப் சொல்யூஷன் டிரை பண்ணிப் பார்க்கிறேன், நன்றிங்க!
    ~~
    @இராஜராஜேஸ்வரி மேடம், நன்றிங்க!
    ~~
    @இளமதி, //யார் தலையையும் பதம் பார்க்கலையா... தப்பிச்சுக்கிட்டீங்க..:).// ஒய் திஸ் கொல வெறி? அவ்வ்வ்வ்வ்வ்வ்.....நானே நினைச்சுக்கூடப் பார்க்காத பாயின்ட்டை எல்லாம் கப்புனு புடிச்சு கேக்கறீங்க? ;)))) :)

    இங்கே பில்டிங்கில் இருந்து கீழே 3 அடி தூரத்துக்கு செடிகள்தானிருக்கும், அங்கேதான் தொட்டி விழுந்தது! :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    @சித்ராக்கா, //செடிய பேடியோவுக்குள்ள வைக்காம மேலேயா வப்பீங்க?// அது...முதல்ல சமர்த்தா பேடியோ உள்ளே தரைலதான் வைச்சிருந்தோம், மேலே வைக்கக்கூடாதுனு முதல்லயே சொல்லியிருந்தாங்க. பிறகு நாளாக ஆக தொட்டிகள் எண்ணிக்கை அதிகரிப்பு, பேடியோல இடப்பற்றாக்குறை, அபார்ட்மெண்டில் பக்கத்து வீட்டுக்காரங்க பேடியோசுவர் மேல வைச்சிருந்த செடிகள் எல்லாம் சேர்ந்து நாங்களும் சில தொட்டிகளை அழகா:) சுவர் மேல வைச்சாச்சு! :))))) இளமதிக்கு சொன்ன பதிலைப் பாருங்க, வி ஆர் எஸ்கேப்ட்! ;)

    உங்களுக்கும் தக்காளிக்கும் நல்ல ராசி போல இருக்கு! என்ஸாய்! :) நான் கடைலயே வாங்கிக்கறேன்! :)

    பூச்சிகளையும் இப்ப ரசிக்க ஆரம்பிச்சாச்சு சித்ராக்கா! பாவம்தானே அவங்களும்? செடிகளுக்கு சீரியஸ் தொந்தரவுகள் வந்தா மட்டும் ஆக்‌ஷன் எடுக்கிரேன், என்னன்னா தண்ணி ஊற்றும்போது "mist" option-ல nozzle-ஐ செட் பண்ணி, தண்ணிய வேகமா அடிச்சு எறும்பு-பூச்சிகளை கழுவி விடறது! ஐ யம் எ அஹிம்சாவாதி, யு ஸீ?! ;))))

    மலர்களை ரசிச்சு கருத்து தந்ததுக்கும் மிக்க நன்றிகள்!
    ~~

    ReplyDelete
  22. @ராதாராணி, என் பதிவு உங்களுக்கு இன்ஸ்பிரேஷனா இருக்கு என்பதே அரைகிலோ ஹல்வா சாப்பிட்ட மாதிரி சந்தோஷமா இருக்குங்க! :)))) மிக்க நன்றி!
    சீக்கிரம் செடிகள் வந்து உங்க வலைப்பூவில் படங்களை ரசிக்க ஆவலுடன் காத்திருக்கேன். ஆல் த பெஸ்ட்! ஹேப்பி கார்டனிங்! :)
    ~~
    @அம்முலு, நீங்க வினிகர் ஸ்ப்ரே பண்ண சொல்லறீங்க, பண்ணீருவோம்! :)
    ம.தக்காளி பூ பார்த்ததில்லையா? அவ்வ்வ்வ்...பாத்திருப்பீங்க, இதுதான் அது என தெரிந்திருக்காது என நினைக்கிறேன். :)
    ஜெரேனியத்தில் மற்ற 2 கலரும் வந்திருந்தால் இன்னும் சந்தோஷப் பட்டிருப்பேன், ஆனா "பிங்க்" என்பதும் ஒரு ஸ்பெஷல் சந்தோஷம் இப்ப! ;):)
    நன்றி அம்முலு!
    ~~
    @அதிரா, //அதெப்படி சாடியில் மணத்தக்காளி இவ்ளோ அழகா பூக்கலாம்ம்ம்ம்ம்ம்:)// ஒன் மினிட்! செடிகிட்ட கேட்டுட்டு வந்து சொல்றேன்! ;)

    அதிராவுக்கு ரோசா புடிக்காதா? ஆச்சரியமா இருக்கே!!

    ம.பூசணி இங்கும் இதுவரை பூ மட்டும்தான் வந்திருக்கு அதிரா. காய் வந்ததும் கண்டிப்பா அப்டேட் பண்ணுகிறேன்.

    மஞ்சள் பூசணி என்று சொல்வதைத்தான் அரசாணிக்காய்னு எங்கூரில சொல்லுவோம். ம.பூசணி என்பது எனக்குப் புதிது! ;)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிராவ்! :0
    ~~
    @ரசிகை, //உங்கள் குலதெய்வத்துக்கு நன்றி சொல்லுங்க -- பால்கனியிலிருந்து விழுந்த தொட்டி ஊரைக் கூட்டிக் கோர்ட் கேஸ் வரை போகாமல்// கீழே விழுந்த செடி முளைச்சதுன்னு சந்தோஷத்தில் இருக்கையில் இப்படி பீதியக் கிளப்புறீங்களே!! :)

    எறும்புக்கு உங்க காமெடி டிப்ஸ் சூப்பருங்க! :) தேங்க்யூ! இந்த ஊர் எறும்பு ஸ்கூல் போனாலும் போயிருக்குமோன்னு டவுட்லயே இருந்தேன், இப்ப ஆல் டவுட்ஸ் க்ளியர்ட்! :)

    நாங்க மாடில இருப்பதால் நத்தைகள் தொந்தரவில்லை!(டச் வுட்!:))

    விரிவான, பயனுள்ள கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்!
    ~~
    @ஆசியாக்கா, தெம்பா சாப்பிட்டு, சுத்திப்பார்த்து, கருத்தும் தந்ததுக்கு நன்றி அக்கா!
    ~~
    @மலர், வாங்க, வாங்க! வெகு நாள் கழித்து உங்களைப் பார்ப்பது மகிழ்ச்சி! தோட்டத்தை ரசித்து கருத்து தந்ததுக்கு நன்றிங்க!
    ~~

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails