:)
பேசுவது படத்திலுள்ளவர்! அவர் சூரியனா சந்திரனா...கண்டுபுடிங்க பார்ப்போம்!
:)
~~~
சிலதினங்கள் முன்பாக மூன்றாம் பிறையைப் படமெடுத்துப் பகிர்ந்திருந்தேன், அப்பதிவில் மூன்றாம் பிறை முழுநிலவாவதைப் படமெடுக்க முடிந்தால் இணைக்கிறேன் எனச் சொல்லியிருந்தேன். வார இறுதியில் வந்ததால் முழுமதியைப் படமெடுக்க இயலாமல் போனது. அதனால் இந்தப் படங்களில் இருப்பது சந்திரன் என நீங்கள் நினைத்து ஏமாறக்கூடாது என்பதற்காய், சூரியன் தானாக முன்வந்து "நான் அவனில்லை!" என டைட்டில்லயே சொல்லிட்டார்! :)))
[போடுவதே மொக்கை..அதுல கூச்சமென்ன? நல்லா பத்தி பத்தியாப் பக்கம் பக்கமாப் போடுவம்ல? ஹிஹிஹிஹி...]
அந்தி நேரத் தென்றல் காற்று சில்லென்று வீசிய ஒரு மாலைப் பொழுதில் மேகங்கள் மஞ்சள் கொற்றக்குடை பிடிக்க, பெருமையுடன் பூமியுலா முடித்து கடலில் இறங்கும் சூரியன்..கடலின் நீலம் கீழ்ப்பகுதி உடலெங்கும் ஆதிக்கம் செலுத்த, தன்னுடல் கொண்ட பொன்வண்ணம் மேற்பாதி உடலுக்கும், அதன் மேலே பரந்து விரிந்த வானத்திரைக்கும், மேகக் குடைக்கும் வண்ணம் செலுத்த அர்த்தநாரீஸ்வரனாய் மோனப் புன்னகையுடன்...
சில நிமிடங்களில்..
மஞ்சள் நிறம் கருநீலமாகக் குவளைப்பூவில் குழைத்த வண்ணமாக மாற..
சற்றே அருருருருருருகில் சென்று படமெடுக்க முயன்றபோது கிடைத்த ஒரு படமிது! சந்திரனின் அழகுக்குத் தானும் சற்றும் குறைவில்லை என்று நிரூபித்த சூரியன்! :)
~~~
படங்களுடன் என் கிறுக்கலை ரசித்த நட்புக்கள் "கறுக்-மொறுக்" எனக் கடிச்சு ருசிக்க அவல் மிக்ஸர்!
பயப்படாமச் சாப்பிடலாம், டயட் வர்ஷன் தான்! :)
இல்லை..உங்க பதிவைப் படித்து பசி எடுத்துவிட்டது என்போருக்காக...
பீர்க்கங்காய் பொரியல்-முருங்கைக்கீரை பொரியல்-சோறு & காளான் குழம்பு
என்ஸாய்! ஹேவ் எ நைஸ் வீக் அஹெட்!
:)




